ஞாயிறு, 1 ஜூன், 2014

வாழ்க்கையோடு ஒரு உடன்படிக்கை! (game starts)

 நான் மிஸ் பண்ணுன, என்னை மிஸ் பண்ணுன இனிய நண்பர்களே!! நலமா?(எங்க அதான் வந்துட்டியே:( அப்பிடின்லாம் சொல்லக்கூடாது )

                                               I'M BACK!!


இரவின் இருள்நிறக்கோப்பையில்
இசை நிரப்பி
புத்தகம் நுகர்ந்து, போதையில்
தலை சுற்ற
எத்தனை துயரும், வலியும்
எதிர்க்கொள்வேன்
வாழ்க்கையே வா விளையாடிப்பார்க்கலாம் !!

உன் விஷமங்கள் எல்லாம்
ஒரு மந்திரச்சொடுக்கில் மாற்றிவிடும்
வித்தை அறிந்தவள் நான்
கரைபொருளாகவும், கரைப்பானாகவும்
கண்கட்டு வித்தை காட்டும் இசைக்கு
காது கொடுத்துப்பார்
இறந்திறந்து மீளும் வழியறிவாய்
என்னை போலவே!!

வீழ்ந்தவனின் புன்னகை
வீழ்த்தியவனை நிலைக்குலைக்கும் -என்ற
புத்தியை புத்தகச்சங்கு
புகட்டியிருக்கிறது எனக்கு
நான் நீட்டிய நட்புக்கரத்தை
தவறாது பற்றிக்கொள் வாழ்க்கையே
நட்புக்கு பரிசாய் தருகிறேன்
இசை சரிகை சுற்றிய இனிப்பு புத்தகம் ஒன்று!!

44 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி அண்ணா! வாழ்த்தி வழியனுப்பியதை போலவே வந்தவுடன் சொன்ன நல்வரவிற்கு உங்கள் தங்கையின் நன்றிகள் பல பல......

      நீக்கு
  2. புத்தகங்கள் வாழவைக்கும்/

    பதிலளிநீக்கு
  3. வித்தைகள் இனி தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டி.டி.அண்ணா .உங்கள் போன்ற சகோக்கள் வழிகாட்ட வித்தைகள் தொடர்வதில் என்ன தடை.

      நீக்கு
  4. வருக வருக சகோதரி. என்ன விடுமுறை எல்லாம் நன்றாக முடிந்ததா?
    குட்டீஸ் என்ன சொல்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை நல்ல படியாய் கழிந்தன சகோ. குட்டீஸ் நலம். என் மருமகள்கள் நலமா? உங்க ப்ளாக் பக்கம் ஆசையா வந்தேன். ஆன்மிகம் எழுதியிருந்த படியால் புரியாத ஏரியாவில் கருத்து போடவில்லை. மன்னியுங்கள் சகோ.

      நீக்கு
    2. அடடா, பரவாயில்லை.
      நீங்கள் ஆங்கில ஆசிரியை தானே சகோ.

      இங்கே ஆரம்ப நிலை வகுப்புகளில் ஆங்கிலம் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

      http://oviyavinpage.blogspot.com.au/2014/05/3.html

      நீக்கு
  5. வரவேண்டும் வரவேண்டும் தங்கள் வரவு நல்வரவாகட்டும் ! தோழி நலம் தானே? ரொம்ப மிஸ் பண்ணினேன். இழந்த உற்சாகம் மீண்டும் பெற்றது போல் மகிழ்ச்சியே தங்கள் வரவால். வந்தவுடனேயே அசத்தலா எப்படி அசத்திவிட்டீர்கள். அருமை அருமை...!
    உன் விஷமங்கள் எல்லாம்
    ஒரு மந்திரச்சொடுக்கில் மாற்றிவிடும்
    வித்தை அறிந்தவள் நான்
    கரைபொருளாகவும், கரைப்பானாகவும்
    கண்கட்டு வித்தை காட்டும் இசைக்கு
    காது கொடுத்துப்பார்
    இறந்திறந்து மீளும் வழியறிவாய்
    என்னை போலவே!! ஆஹா அத்தனையும் முத்துக்கள்.

    எத்துணை ஆற்றல் மிகுந்தாய் பெண்ணே
    என் செல்லப் பெண்ணே சிந்தையில் என்னடி
    சேர்த்து வைத்தாய் சிக்கனமாகவே சிரிக்கின்றாய்
    மொத்தமாய் என்னை கரைக்கின்றாய் நீ வாழ்க என்றும் நீடூழி.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தைக்கு இல்லை உண்மையாவே நிறைய மிஸ் பண்ணினேன் இனியா உங்களை போன்றவர்களை. பிரிவிற்கு பின் சந்திக்கையில் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு. அன்பும் ரெண்டு மடங்கு ஆகிடுச்சு செல்லம். நன்றி நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி
    தங்களின் வருகையால் மனம் உற்சாகமாய் துள்ளுகிறதை உணரமுடிகிறது. நலம் தானே சகோதரி? எவ்வளவு ஆழமான வரிகள். இசைக்கும் இசையில் மனம் இளகிப் போனவர்கள் நிறைய உண்டு. ஆனால் இது போன்ற செறிவான கவிதையை ஈன்றவர்கள் உங்களைப் போன்ற சிலராய் தான் இருக்க முடியும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள். குட்டீஸ்ங்க ந்லமாக இருக்கிறார்களா சகோதரி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..சகோ . தொலைபேசிய போதும் வலைபேசாதது வருத்தமாகவே இருந்தது. மிக்க நன்றி சகோ. குட்டிஸ் எல்லாம் நலமே தங்கள் ஆசியால்.

      நீக்கு
  7. வீழ்ந்தவனின் புன்னகை
    வீழ்த்தியவனை நிலைக்குலைக்கும்.# அருமையான வரிகள்,,, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இசை சரிகை சுற்றிய இனிப்பு புத்தகம்! உவமை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ் சார் ரசித்து கருத்திட்டமைக்கு.

      நீக்கு
  9. ஊரில் இருந்து வ்ந்து பதிவு போட்ட உங்களை பார்க்க ஒடோடி வந்தால் இப்படி கவிதையைப் போட்டு கொன்னுட்டீங்களே....இது உங்களுக்கே நியாமா இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரம்பரை நோய் தப்பமுடியலை தமிழ் சார்(பேர் தெரியலை வேற எப்பிடி மென்ஷன் பண்ணுறது). மன்னிச்சு...

      நீக்கு
  10. மனைவி பூரிக்கட்டையால் அடிச்சால் சகோதரிகளும் தோழிகளும் கவிதையால் அடிக்கிறாங்கப்பா.. என்ன கொடுமைடா மதுரைத்தமிழா

    பதிலளிநீக்கு
  11. சாவது தோழியின் கவிதையால் என்பதால் சாவை மகிழ்வோடு ஏதிர் கொள்கிறேன். அதாவது நீங்கள் எழுதிய கவிதையை படிக்கிறேன்.. ஒருவேளை கவிதை எனக்கு புரிந்து நான் பிழைச்சுகிடந்தால் கருத்து சொல்லுறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை பிடிக்காட்டியும் கருத்து போட்டமைக்கு நன்றி தமிழன் சகோ!!!

      நீக்கு
    2. கவிதை பிடிக்கவில்லை என்று நான் சொல்லவே இல்லையே??

      நீக்கு
    3. அப்போ முதல் முறை சகாவுக்கு பிடிக்கிற அளவுக்கு ஒரு கவிதை எழுதிட்டேன் போலவே!!!

      நீக்கு
    4. சில கவிதைகள் மிக எளிமையாக இருக்கும் சில கவிதைகள் மிக ஆழமாக இருக்கும் அதை ஆழ்ந்து படித்தால்தான் அதன் முழு அர்த்தமும் புரியும்.. ஆனால் இப்போது உள்ள மனநிலையில் ஆழ்ந்து படிக்க நேரமும் இல்லை மனமுமில்லை என்பதுதான் என்நிலை...ஒரு செய்தியையோ விமர்சனமோ எழுதுவது மிக எளிது ஆனால் நல்ல கவிதைகளை படைப்பது என்பது ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கு படும் கஷ்டம் போலத்தான் உங்களின் கவிதை மட்டுமல்ல உங்களைப் போல எழுதுபவர்களின் அனைத்துகவிதையும் மிக அருமையாகவே இருக்கிறது அதற்கு எனது பாராட்டுக்கள்

      எனக்கு கிண்டல் கேலி செய்வது பிடிக்கும் அதனால்தான் எனது கருத்துகள் பல சமயங்களில் கிண்டலாகவே வெளிப்படும்.

      நீக்கு
    5. சொல்லாமலே புரியுது, but சொன்ன விதமும் நல்ல இருக்கு,still என்ன டௌட் ன கலாய்கிற சில பேருக்கு பதிலுக்கு பல்ப் கொடுத்தா பிடிக்காது. சார் எப்படின்னு சொல்லீட்டா எனக்கு தயக்கமில்லாமல் கலாய்க்க முடியும் :)

      நீக்கு
    6. நீங்க என்னை கழுவி கழுவி ஊத்தினாலும் கலங்கமாட்டேன் ஹீ.ஹீ.ஹீ

      நீக்கு
  12. இந்த சிறிய கவிதையால் ஏராளமான விஷயங்களை சிந்திக்க வைத்து விட்டீர்கள் .
    அற்புதமான வார்த்தைப் பிரயோகங்கள்
    குறிப்பாக
    //வீழ்ந்தவனின் புன்னகை
    வீழ்த்தியவனை நிலைக்குலைக்கும்//
    வைர வரிகள் .
    உண்மையில் இது ஒரு கவிதை சிற்பம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவிதை சிற்பம்//ஆஹா மோதிரக்கையால் பாராட்டு. நன்றி முரளி சார். நீங்க எங்க ஊருக்கு வந்தபோது வெளியூர் சென்றுவிட்டதை நினைத்து என் கணவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு பயிற்சியினை தராமலா போகப்போகிறீர்கள். அப்போ தங்களை பார்க்கலாம் அல்லவா?. நன்றி சார்.

      நீக்கு
  13. நலம்தானே நீங்கள்+குடும்பத்தினர். விடுமுறை மகிழ்ச்சியாக கழித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அருமையான வரிகளுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பிரியா மேடம். விடுமுறை நன்றாக கழிந்தது. நீங்கள் நலமா தோழி!!

      நீக்கு
  14. nநலமா?!! சகோதரி! விடுமுறை எஞ்சாய் பண்ணீங்களா!??

    வீழ்ந்தவனின் புன்னகை
    வீழ்த்தியவனை நிலைக்குலைக்கும் -என்ற
    புத்தியை புத்தகச்சங்கு
    புகட்டியிருக்கிறது எனக்கு//

    நல்ல அர்த்தம் பொதிந்த வரிகள் சகோதரி!!!! விடுமுறை தந்த உற்சாகமோ? இத்தனை அழகிய வார்த்தைகள் விளையாடும் கவிதை!

    ம்ம்ம்ம் ஜமாயுங்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல என்ஜாய் பண்ணினோம். வரிக்கு வரி ரசித்தமைக்கு நன்றி சகா!

      நீக்கு
  15. இசை சரிகை சுற்றிய இனிப்புப் புத்தகம்தான் சரியான தலைப்பு. (கவிதையை வெண்ணெய் உருக்கி, எழுதி, தலைப்பை நீர்மோர்போல் ஊற்றுவதே உன் வழக்கமாப்போச்சு) வரிக்குவரி அர்த்தமும் அழகும் நிறைந்த கவிதை டா!ஒவ்வொரு வரிக்கும் நான் ஒரு பக்க அர்த்தம் சொல்வேன்
    உதாரணம் - வீழ்ந்தவனின் புன்னகை - கர்ணன், ஏகலைவன் கதைகள்..
    மொத்தத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைப் புத்தகங்களில் மடைமாற்றியிருக்கிறாய்... இந்த வித்தை தெரிந்தால் ஏது தொல்லை? வந்ததம் வந்தாய்.. அருமையான கவிதையோடு வந்தாய் வார்த்தைகள் இல்லை மா.. அதிகம் சொன்னால் அண்ணன் இப்படித்தான் புகழ்வான் என்பாய் என்ன புத்தகம் படித்தாய் என்ன இசை கேட்டாய் என்பதை அப்பறம் சொல்லு!
    (விடுதலை பெற்ற இரண்டாம் நாள் புதுக் கார் வாங்கி ஊர் சுற்றியதில் இணையத்தில் அதிகம் எழுத முடியலைப்பா.. திடீர்னு வீட்டுக்கு வந்து நிற்பேன்.. திட்டாதே மதுக் கிட்ட இன்னும் சொல்லல.. நேர்ல வர்ரேன்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ! புது காரா? உங்களுக்கு ஒரு trend சொல்றேன் அண்ணா. இப்போ கார் வாங்கினதுக்கு தனியா நீங்க ட்ரீட் தரணுமே:))உங்களை நான் திட்டுறதாவது. நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட வருவீங்களே! உண்மையில் இதுபோலும் வார்த்தைகளை தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன அண்ணா. மிக்க நன்றி!

      நீக்கு
  16. தங்கள் கவிதையை முரளிதரன் பககத்தில் பார்த்தேன்.
    மிக மிக நன்று சகோதரி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையும் ,வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சி! நன்றி தோழி!

      நீக்கு
  17. //இறந்திறந்து மீளும் வழியறிவாய்
    என்னை போலவே!!//

    நம்பிக்கை......

    விடுமுறை முடிந்து பதிவுலகில் மீண்டும் தடம் பதித்த உங்களுக்கு நல்வரவு.

    பதிலளிநீக்கு
  18. ஓ...
    இதற்கு நான கருத்திட வில்லையா..!
    இனிப்புப் புத்தகம் ஒற்றைக் கவிதையில் கிடைத்திருக்கிறது.
    ஒவ்வொரு வார்த்தையாய்ப் படிக்கப் படிக்க புதுப்பொருள் காட்டியபடி புத்தகம் விரிகிறது.
    மன்னிக்கவும்
    பின்னூட்டமிட நேரமில்லை!
    நன்றி

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் அக்கா! தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல்முறையாக வந்துள்ளேன்.. அருமையான பகிர்வு! உங்களி்ன் பேச்சைப் போலவே உங்கள் எழுத்தும் இனிமையாக எனது மனதைத் தைக்கிறது.. இனி என்றும் தொடர்வேன்.. நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு