செவ்வாய், 30 ஜூன், 2015

கொலையா?? தற்கொலையா??

        பொதுவாக ஒரு மொழி அழியும்போது, அதை பேசும் இனமும் அழிந்துபோகும். அதாவது தமிழ் அழிந்துபோனால், தமிழன் அழிந்து போவான். ஒட்டுமொத்தமாக அந்த இனமே செத்துபோகாது, ஆனால் அடையாளங்கள் அளிக்கப்பட்டு, ஒரு அகதி இனமாய், வேற்றொரு இனத்தோடு ஒண்டி வாழவேண்டியது தான்.

                     நான் தமிழே மூச்சாய், தமிழ் படிப்பதே வாழ்வாய், தமிழ் நெறியை தவமாய் நோர்ப்பவள் இல்லை. ஆனால்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

எனும் பாரதிதாசனின் வரிகளை படிக்கையில் உயிர்சிலிர்க்கும் உங்களை போல் ஒருத்தி! சமீபத்தில்  நான் படித்த செய்தியொன்று என் குருவித்தலைக்கு பெரும் குழப்பத்தை தந்ததது. உங்களில் யாருக்கேனும் விடைதெரிந்தால் சொல்லுங்கள். கணினிப் பயன்பாட்டை எளிமை செய்யும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய 55 தமிழ் எழுத்துருக்களை கண்டுபிடித்திருக்கிறதாம். அதன் பயன்பாட்டை தடை செய்யக்கோரி மதுரைக்காரர்  ஒருவர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.
            எனது சந்தேகம் என்னவென்றால் அவ்வாறான எழுத்துக்களுக்குத் தேவைதான் என்ன?? இப்போதே எளிமையாக தானே இந்த எழுத்துக்களை நான் தட்டச்சுகிறேன். கணினிப்பயன்பாட்டில் எளிமை என்கிறார்களே இவர்கள் ஒருவேளை தொடுதிரை கணினியில் கையால் வரைந்து எழுதுகிறார்களா? 
                  அப்படியே கஷ்டமென்றே வைத்துகொள்வோம் அதற்காக கணினி செயல்பாட்டை மாற்றாமல் தமிழ் எழுத்துக்களை மாற்றுகிறேன் எனும் இவர்கள் செருப்பு காலைக்கடித்தால்  விரலை வெட்டிக்கொள்வார்களா? இல்லை செருப்பை மாற்றுவார்களா?
                     எங்கெங்கோ எத்தனையோ தமிழர்களை நித்தம் நித்தம் வெட்டி சாய்க்க, வேடிக்கை பார்த்த இனம் தானே இவர்களுக்கு நிரந்தர எழுத்துரு ஒரு கேடா? இவர்கள் மொழியை அழித்தால் கூட கேள்வி கேட்க ஒரு அணியில் திரளும் வக்கற்றவர்கள் தானே எனும்  இளக்காரமா?? 
                      பலரும் பலவாறும் போராடிய பின்னும் கூடங்குளம் இயங்கவே செய்கிறது. அதுபோல இந்த புதிய எழுத்துருக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், இப்போ இப்படி நொந்துநொந்து தட்டும் இந்த வார்த்தைகளை பின்னாளில் என் வருங்கால தலைமுறை படிக்கமுடியும்? தெரிஞ்சவங்க சொல்லுங்க.

தலைப்புக்கு வலு சேர்க்க வேறு  மொழியார்வலர்களின் பதிவுகள் ஏதும் கிடைக்கிறதா என நேற்றெல்லாம் தேடினேன். என் கண்ணில் சிக்கவில்லை. அதனால் என்ன ஜோசப் விஜு அண்ணாவின் இந்த அட்டகாசமான பின்னூட்டம் அந்த கவலையை போக்கியிருக்கிறது.

பல்லாண்டுகால அந்நிய ஆதிக்கத்தில் தமிழ் மனம் அடிமை மனோபாவத்திற்குப் பழக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.

இனப்பிரக்ஞையும், மொழிப்பிரக்ஞையும், மனிதப் பிரக்ஞையும் அற்று எதற்கு என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருப்பதற்குப் பெயர் அடிமை மனோபாவம் தானே?

ஒருபுறம் இந்த மனோபாவத்தில் இருப்பது பெரும்பான்மை என்றால் சிறுபான்மை பண்டைப் பழம் பெருமைகளை மட்டுமே பேசித்திரிகிறது.

வேர் முக்கியம்தான். அதற்காக விளைவினைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்க முடியாது.

எனவே என்னைப் பொருத்தவரை இவ்விரு மனோபாவமுமே சரியில்லை.

ஆனால் இவற்றைவிடப் பேரபாயம் மொழியைத் திருத்துகிறேன் பேர்வழி என்று களமிறங்கும் இதுபோன்ற தொழில் நுட்பம் தெரிந்த ‘அறிவியல் வழித் தமிழாசிரியர்களிடம்’ (?) இருக்கிறது.

ஏனென்றால் அவர்கள் அறிவார்ந்தவர்கள்.

இன்றைய நாள் தமிழ் படித்து வெளிவரும் 99 சதவிகிதத் தமிழ்ப்பட்டதாரிகளிடையே இந்த அறிவியல் வழித் தமிழாசிரியர்களுக்குப் பதில் சொல்லும் அளவிற்குத் தமிழ் பற்றிய ஞானமோ தொழில் நுட்ப அறிவோ இல்லை.

மரபு வழித் தமிழ் கல்வி படித்த பெரும்பான்மை அறிஞர்களிடத்து மொழிபற்றிய அறிவு இருப்பினும் தொழில் நுட்பப் பயில்வு இல்லை. நுட்பம் சார்ந்து அவர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு விடை சொல்லத் தடுமாறிப்போகிறவர்களாகவே இருக்கிறார்கள் அவருள் பலரும்.

இரண்டும் இருக்கும் விதிவிலக்கான ஒருசிலரின் ஆதரவற்ற கூக்குரல்கள் வலிமையற்றவனின் முனகலாக அலட்சியப்படுத்தப்படுகின்றன.

எதிராளியற்ற களம். யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம் என்றிருக்கிறது இன்றைய தமிழ் மொழியின் நிலைமை!

சில மாதங்களுக்கு முன்பு ஜெ மோ இந்துவில் சொல்லியிருந்தார்,
ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு தமிழை எழுதிவிடலாம். 26 எழுத்துகளாகத் தமிழ் கற்பவர்களின் சிரமத்தை அது குறைத்துவிடும் என்று!

ஆங்கிலத்தில் Uppercase Letters, Lowercase Letters (கேப்பிடல் லெட்டர், ஸ்மால் லெட்டர் என்பதை ஒரு நல்ல ஆங்கில ஆசிரியர் இப்படிதான் சொல்ல வேண்டும் _இது மைதிலி சேர்த்த கருத்து) என்று 52 எழுத்துருக்கள் இருக்கின்றனவே. இரண்டிற்கும் இரண்டுவிதமான பயன்பாட்டை விசைப்பலகையிலும் அம்மொழி இன்னமும் பேணிவருகிறதே..!

ஏன் இந்தச் சிரமம்? ஒரே வடிவை பயன்படுத்துவதால் 26 எழுத்துகளாக இதைக் குறைக்கலாமே என்று அங்கு யாரும் ஆலோசனை செய்ததாகத் தெரியவில்லை. வீண் பேச்சுப் பேசிக் கொண்டிருக்காமல் அவர்கள் செய்தது தங்கள் மொழிக்கேற்றவாறான விசைப்பலகையை வடிவமைத்துக் கொண்டதுதான்.

கணினி பற்றிய நுட்பத்தை அவர்கள் வழியே பெற்ற நாம், அவர்களைப் போல நம் மொழியின் எழுத்துருவிற்கேற்ற விசைப்பலகையை அமைப்பதை விடுத்து, கணினியின் பயன்பாட்டு எளிமை என்றெல்லாம் புதிது புதிதாகச் சிந்திப்பது ஏன்? இவ்விடயத்தில் மேலைநாட்டினரை ஏன் நாம் பின்பற்றத் தயங்குகிறோம்?

தமிழைவிட அதிகம் எழுத்துக்களைக் கொண்டுள்ள மொழிகளிலும் இதுபோன்ற கூச்சல் கேட்டதாகத் தெரியவில்லை.
தமிழ் மொழிக்குக் கண்டுபிடித்திருக்கும் எழுத்துருக்கள் இன்று நாம் பயன்படுத்தும் எழுத்தின் வடிவத்தில் இல்லாத வேறு வடிவத்தில் மாற்றப்படும் என்றால் இன்றுவரை அச்சிடப்பட்ட தமிழ் நூல்களை என்ன ஆவது?

அவற்றைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறார்கள் இவர்கள்?
கணினிக்கு மட்டுமாய் தனியே வேறு தமிழ் எழுத்துருக்கள் என்றால் புத்தகத் தமிழைக் கற்கும் மாணவன் கணினித் தமிழைப் பின்னர் கற்கும் சிரமம் ஏற்பட்டுவிடாதா?

“தமிழ் எழுத்துருக்கள் மாறவே இல்லையா?
அவை மாறித்தானே வந்திருக்கின்றன.
காலத்தின் தேவை கருதி அம்மாற்றங்களை மொழி ஏற்றுக் கொள்ளவில்லையா? அதைப் போன்றே இப்படி நாங்கள் செய்யும் மாற்றத்தினையும் ஏன் ஏற்கக் கூடாது? என அறிவியல் வழித் தமிழாசிரியர்கள் (?) கேட்கக் கூடும்.

நான் ஐந்து வயதில் இருந்ததுபோல இப்பொழுதில்லை.
நான் மாறி இருக்கிறேன்.
ஆனால் இப்போதிருப்பதும் நான்தான்.

அது இயற்கையின் மாற்றம்.

அதற்காக, அப்போதிருந்ததுபோல நீ இப்போதில்லையே மாறித்தானே வந்திருக்கிறாய், மாறிய உன்னை இன்னும் அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றுவதில் என்ன தவறு? என்பதைப் போன்றது இவர்களின் கேள்வி.

மொழியை அறிவியலோடு தொடர்புபடுத்திச் சொல்பவர்கள் சொல்லட்டும்.

அதைவிட அதிகமாக அது நம் மரபையும் உணர்வையும் சார்ந்த விடயம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

இன்று வடமொழி தேவபாஷை என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே… அந்த சமஸ்கிருத மொழிச் சுவடிகள் பெருமளவில் கிடைத்தது தென்னிந்தியாவில்தான்.

ஆனால் அச்சுவடிகளில் எழுதப் பட்ட சமஸ்கிருத்தின் எழுத்துவடிவம் இன்று சமஸ்கிருதம் எழுதப்பயன்படுத்தும் நாகிரி அல்ல. அது கிரந்தம் என்னும் எழுத்து. நம் தமிழ் எழுத்துருவோடு பெரிதும் தொடர்புடையது. இன்றைய மலையாள மொழியின் எழுத்துருவைப் பெரிதும் ஒத்திருப்பது.

அதை மிக எளிதாய் அழித்தொழித்து இன்றைய இந்தி எழுத்தின் மயமாக்கியாயிற்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சுவடியிலிருந்து அச்சிடப்பட்ட பல தமிழ் நூல்களின் இடையில் எடுத்தாளப்படும் வடமொழி மேற்கோள்கள் இந்தக் கிரந்தத்தில்தான் இருக்கின்றன. இன்றைய சமஸ்கிருதப் பண்டிதன் அதைப் படிக்க முடியாது. எழுத்துரு மாறிவிட்டது. அவ்வெழுத்துருவில் எழுதப்பட்ட மேற்கோளைப் படிக்கமுடியவில்லை.

இது ஒரு நூலை அழித்தற்குச் சமானம்.

சமஸ்கிருத நூல்களில் கூடுமானவற்றை கிரந்தத்தில் இருந்து நாகிரிக்கு மாற்றிவிட்டார்கள். ( இன்னும் மாற்றபடாத சுவடிகள் நம் தஞ்சை சரஸ்வதிமஹாலிலேயே இருக்கின்றன.) மாற்றப்படாதனவும் மாற்றப்படும்.

அரசியல் அதிகாரம், மதப்புனிதம், பெருமளவிலான நிதி உதவி, எல்லாவற்றிற்கும் மேலாய்ப் போதிய அறிவும் கடும் உழைப்பும் கொண்ட தன்னார்வலர்கள் அம்மொழிக்கிருக்கிறார்கள்.

தமிழ் படிப்பதையே கேவலமாக எண்ணும் தமிழகத்தில் தமிழ் எழுத்துருவை மாற்றினால் பழம்நூல்களை புதிய எழுத்துருவில் மாற்றும் இம்மாபெரும் பணிக்கு நம்மிடம் என்ன இருக்கிறது….. யாரிருக்கிறார்கள்.? எல்லாவற்றையும் இப்படி மாற்றத்தான் முடியுமா?

பின், தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி இதனை மாற்றிவிட முடியும் என்று கற்பனை செய்தால், தமிழகம் கடந்து, தமிழைத் தம் நெஞ்சில் சுமந்து அதுவே தம் தனித்த அடையாளம் என்று உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களை நமதரசின் ஆணை கட்டுப்படுத்துமா?

விரும்பியவாறு கட்டவும் கலைக்கவும் மீண்டும் மாற்றவும் நம்மொழி ஒன்றும் மணல்வீடு இல்லை என்பதை உணர்வோர் உணரட்டும். (நன்றி விஜூ அண்ணா)

டிஸ்கி;
இணைப்புக் கொடுக்க மறந்துட்டேன். இக்பால் செல்வன் தன் கோடாங்கி பக்கத்தில் ஏற்கனவே இந்த திட்டத்துக்கு உதவும் வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கியை பற்றி குறிப்பிட்டிருந்தார். இப்போ அந்த பக்கத்தை காணோம். இதோ இங்க தட்டிப்பாருங்க. தமிழ் ஹிந்து வில் வந்த செய்தி.

27 கருத்துகள்:

  1. இப்படி ஒரு விசயமா? ஹ்ம்ம்
    // எங்கெங்கோ எத்தனையோ தமிழர்களை நித்தம் நித்தம் வெட்டி சாய்க்க, வேடிக்கை பார்த்த இனம் தானே இவர்களுக்கு நிரந்தர எழுத்துரு ஒரு கேடா? இதை இவர்கள் மொழியை அழித்தால் கூட கேள்வி கேட்க ஒரு அணியில் திரளும் வக்கற்றவர்கள் தானே எனும் இளக்காரமா?? // நச் கேள்விகள் டியர்.
    எதுக்கு மாத்தணும்? எனக்கும் புரிய மாட்டேனுது..மொழியை அழிக்கும் திசையில் நகரும் திட்டமா?
    //இப்போ இப்படி நொந்துநொந்து தட்டும் இந்த வார்த்தைகளை பின்னாளில் என் தலைமுறை படிக்கமுடியும்?// பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்..
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. அதிமேதாவிகளின் செயல் அல்லவா இது
    இருக்கும் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தாமல்
    புதிய எழுத்தா?
    தம+1

    பதிலளிநீக்கு
  3. கூடங்குளம் இயங்குகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரம் வேற.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் ஆதங்கம் நியாயமானதே
    அதன் முழு விவரம் தெரியாததால்
    மிகச் சரியாக என் கருத்தைப்
    பதிவு செய்ய இயலவில்லை

    பதிலளிநீக்கு
  5. தமிழில் சமஸ்கிருத எழுத்துக்கான ஒலிகளை புகுத்தும் சதி திட்டம், கடந்த சில வருடங்களாகவே இதை வெவ்வேறு வடிவங்களில் புகுத்த முனைகின்றனர். சர்மா என்ற பார்ப்பனர் தான் இதற்கு பெருந்தலை. சமஸ்கிருத கிரந்த எழுத்தை தமிழ் யூனிகோடில் சேர்க்க முயன்று அது பெரும் சர்ச்சையாகி பலரும் எதிர்க்க ஒதுங்கிக் கொண்டனர். இப்போது ஆளும் கட்சி ஆதரவோடு அதே பார்ப்பனக் கூட்டம் கணிதக் குறியீடு என்ற போர்வையில் சமஸ்கிருத ஒலிகளைச் சேர்க்க முனைகின்றனர். இந்தியாவிலேயே தமிழ் மட்டும் தான் மற்ற மொழிகளை எல்லாம் விட தனித்துவத்தோடு உள்ளது. இதனை அழித்துவிட்டால் சமஸ்கிருதத்தைக் கலந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு போல பிரித்து சிதைத்து சின்னாப்பின்னம் ஆக்குவதோடு மெல்ல மெல்ல சமஸ்கிருத இந்தியையும் கொண்டு வருவதன் நூற்றாண்டு கனவு சதி திட்டம் தான் இது. கொலை வாளை எடடா எனப் பாரதிதாசன் பாடியது போல தமிழர்கள் மிக விழிப்பாக கவனமாக இருக்க வேண்டும். ஒன்றிணைந்து போராடவும் முயல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. புதிய செய்தி.... தமிழை வளர்க்கிறேன் என்று அழித்துக் கொண்டிருக்கிறார்கள்....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  7. ஹிந்திகாரனுக்கு சாமரம் விச துடிக்கும் தமிழ் தலைவர்கள் இருக்கும் வரை தமிழ் இனி மெல்ல சாகும்.

    பதிலளிநீக்கு
  8. இது என்னங்க புதுசா இருக்கு...! வரட்டும் வரட்டும்... ஒரு கை பார்த்துடலாம் (இருவரையும் சேர்த்து)...!

    பதிலளிநீக்கு
  9. அவரவர்கள் வசதிக்கேற்றவாறு தமிழில் எழுத்துருவை உருவாக்கிவிடுகின்றனர். ஆங்கிலத்தைப் போல நிலையான எழுத்துரு (standard font) அமைக்கமுடியாமல், பெரும்பாலும் வணிக நோக்கில் இவ்வாறாக உருவாக்கப்படுகின்றன. இவை போன்றவற்றால் குழப்பமே மேலிடும்.

    பதிலளிநீக்கு
  10. வருத்தம் தரும் செய்திதான்! பிறமொழிகளைவிட தமிழ்மொழியில் எழுத்து வளமை அதிகம்! கணிணி செயல்பாட்டுக்கென தமிழ்மொழியை சிதைக்க வேண்டிய அவசியம் இல்லை!

    பதிலளிநீக்கு
  11. // கணினிப் பயன்பாட்டை எளிமை செய்யும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய 55 தமிழ் எழுத்துருக்களை கண்டுபிடித்திருக்கிறதாம் //

    இதன் விவரம் என்னவென்று தெரிந்தால், கருத்துரை எழுத வசதியாக இருக்கும். இதுபற்றிய இணைய முகவரி இருந்தால் தாருங்கள் சகோதரி.
    த.ம.10

    பதிலளிநீக்கு
  12. >>> இவர்கள் மொழியை அழித்தால் கூட கேள்வி கேட்க ஒரு அணியில் திரள்வதற்கும் வக்கற்றவர்கள் தானே எனும் இளக்காரமா? <<<

    இதுவாகத் தான் இருக்கும்!..

    பதிலளிநீக்கு
  13. சில நேரங்களில் முழுவதும் விவரம் தெரியாமலேயே எதிப்பு உருவாகின்றன கணினிகள் புழக்கத்துக்கு வரும்போதும் இப்படித்தான் எதிர்ப்புகள் இருந்தன. பயன் படுத்துவோரின் ஒத்துழைப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாது. இதற்கான தேவை என்ன என்றாவது தெரியுமா.?

    பதிலளிநீக்கு
  14. அத்தனையும் மிகச் சரியான கேள்விகள்! இதில் கொடுமை என்னவென்றால், இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அனைவருமே உண்மையாகவே தமிழ் மீது பற்றும் அக்கறையும் உள்ளவர்கள். 'ஆர்வக்கோளாறு' எனத் தமிழில் ஓர் அருமையான வார்த்தை உண்டு, இல்லையா? அந்த வார்த்தைக்குப் பொருளாக இவர்களின் பெயர்களை வருங்காலத் தமிழ்ப் பேரகரமுதலிகளில் சேர்க்க ஆவன செய்யுமாறு தமிழ்த் தலைவர்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வதைத் தவிர, இதற்கு வேறென்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  15. நல்ல கேள்வி.காலம் பதில் சொல்லும்
    ஓட்டுப் போட்டுட்டேனுங்கோ!

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோ.

    இந்தப் பதிவிற்குக் கூடுதல் நீளத்தை எதிர்பார்த்தேன். சட்டென முடிந்துவிட்டது

    அதனால் என்ன….. நான் தொடர்கிறேன்.:)

    பல்லாண்டுகால அந்நிய ஆதிக்கத்தில் தமிழ் மனம் அடிமை மனோபாவத்திற்குப் பழக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.

    இனப்பிரக்ஞையும், மொழிப்பிரக்ஞையும், மனிதப் பிரக்ஞையும் அற்று எதற்கு என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருப்பதற்குப் பெயர் அடிமை மனோபாவம் தானே?

    ஒருபுறம் இந்த மனோபாவத்தில் இருப்பது பெரும்பான்மை என்றால் சிறுபான்மை பண்டைப் பழம் பெருமைகளை மட்டுமே பேசித்திரிகிறது.

    வேர் முக்கியம்தான். அதற்காக விளைவினைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்க முடியாது.

    எனவே என்னைப் பொருத்தவரை இவ்விரு மனோபாவமுமே சரியில்லை.

    ஆனால் இவற்றைவிடப் பேரபாயம் மொழியைத் திருத்துகிறேன் பேர்வழி என்று களமிறங்கும் இதுபோன்ற தொழில் நுட்பம் தெரிந்த ‘அறிவியல் வழித் தமிழாசிரியர்களிடம்’ (?) இருக்கிறது.

    ஏனென்றால் அவர்கள் அறிவார்ந்தவர்கள்.

    இன்றைய நாள் தமிழ் படித்து வெளிவரும் 99 சதவிகிதத் தமிழ்ப்பட்டதாரிகளிடையே இந்த அறிவியல் வழித் தமிழாசிரியர்களுக்குப் பதில் சொல்லும் அளவிற்குத் தமிழ் பற்றிய ஞானமோ தொழில் நுட்ப அறிவோ இல்லை.

    மரபு வழித் தமிழ் கல்வி படித்த பெரும்பான்மை அறிஞர்களிடத்து மொழிபற்றிய அறிவு இருப்பினும் தொழில் நுட்பப் பயில்வு இல்லை. நுட்பம் சார்ந்து அவர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு விடை சொல்லத் தடுமாறிப்போகிறவர்களாகவே இருக்கிறார்கள் அவருள் பலரும்.

    இரண்டும் இருக்கும் விதிவிலக்கான ஒருசிலரின் ஆதரவற்ற கூக்குரல்கள் வலிமையற்றவனின் முனகலாக அலட்சியப்படுத்தப்படுகின்றன.

    எதிராளியற்ற களம். யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம் என்றிருக்கிறது இன்றைய தமிழ் மொழியின் நிலைமை!

    சில மாதங்களுக்கு முன்பு ஜெ மோ இந்துவில் சொல்லியிருந்தார்,
    ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு தமிழை எழுதிவிடலாம். 26 எழுத்துகளாகத் தமிழ் கற்பவர்களின் சிரமத்தை அது குறைத்துவிடும் என்று!

    ஆங்கிலத்தில் Uppercase Letters, Lowercase Letters என்று 52 எழுத்துருக்கள் இருக்கின்றனவே. இரண்டிற்கும் இரண்டுவிதமான பயன்பாட்டை விசைப்பலகையிலும் அம்மொழி இன்னமும் பேணிவருகிறதே..!

    ஏன் இந்தச் சிரமம்? ஒரே வடிவை பயன்படுத்துவதால் 26 எழுத்துகளாக இதைக் குறைக்கலாமே என்று அங்கு யாரும் ஆலோசனை செய்ததாகத் தெரியவில்லை. வீண் பேச்சுப் பேசிக் கொண்டிருக்காமல் அவர்கள் செய்தது தங்கள் மொழிக்கேற்றவாறான விசைப்பலகையை வடிவமைத்துக் கொண்டதுதான்.

    கணினி பற்றிய நுட்பத்தை அவர்கள் வழியே பெற்ற நாம், அவர்களைப் போல நம் மொழியின் எழுத்துருவிற்கேற்ற விசைப்பலகையை அமைப்பதை விடுத்து, கணினியின் பயன்பாட்டு எளிமை என்றெல்லாம் புதிது புதிதாகச் சிந்திப்பது ஏன்? இவ்விடயத்தில் மேலைநாட்டினரை ஏன் நாம் பின்பற்றத் தயங்குகிறோம்?

    தமிழைவிட அதிகம் எழுத்துக்களைக் கொண்டுள்ள மொழிகளிலும் இதுபோன்ற கூச்சல் கேட்டதாகத் தெரியவில்லை.

    ......................................................................தொடர்கிறேன்......

    பதிலளிநீக்கு
  17. வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையை உற்று நோக்கினால் எதிர்காலத்தில் இளைய தலைமுறையினரிடம் தமிழ் பேச்சு வழக்கே முற்றிலும் அழிந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது! இந்நிலையில் இது வேறா!!?

    பதிலளிநீக்கு
  18. தமிழ் மொழிக்குக் கண்டுபிடித்திருக்கும் எழுத்துருக்கள் இன்று நாம் பயன்படுத்தும் எழுத்தின் வடிவத்தில் இல்லாத வேறு வடிவத்தில் மாற்றப்படும் என்றால் இன்றுவரை அச்சிடப்பட்ட தமிழ் நூல்களை என்ன ஆவது?

    அவற்றைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறார்கள் இவர்கள்?
    கணினிக்கு மட்டுமாய் தனியே வேறு தமிழ் எழுத்துருக்கள் என்றால் புத்தகத் தமிழைக் கற்கும் மாணவன் கணினித் தமிழைப் பின்னர் கற்கும் சிரமம் ஏற்பட்டுவிடாதா?

    “தமிழ் எழுத்துருக்கள் மாறவே இல்லையா?
    அவை மாறித்தானே வந்திருக்கின்றன.
    காலத்தின் தேவை கருதி அம்மாற்றங்களை மொழி ஏற்றுக் கொள்ளவில்லையா? அதைப் போன்றே இப்படி நாங்கள் செய்யும் மாற்றத்தினையும் ஏன் ஏற்கக் கூடாது? என அறிவியல் வழித் தமிழாசிரியர்கள் (?) கேட்கக் கூடும்.

    நான் ஐந்து வயதில் இருந்ததுபோல இப்பொழுதில்லை.
    நான் மாறி இருக்கிறேன்.
    ஆனால் இப்போதிருப்பதும் நான்தான்.

    அது இயற்கையின் மாற்றம்.

    அதற்காக, அப்போதிருந்ததுபோல நீ இப்போதில்லையே மாறித்தானே வந்திருக்கிறாய், மாறிய உன்னை இன்னும் அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றுவதில் என்ன தவறு? என்பதைப் போன்றது இவர்களின் கேள்வி.

    மொழியை அறிவியலோடு தொடர்புபடுத்திச் சொல்பவர்கள் சொல்லட்டும்.

    அதைவிட அதிகமாக அது நம் மரபையும் உணர்வையும் சார்ந்த விடயம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

    இன்று வடமொழி தேவபாஷை என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே… அந்த சமஸ்கிருத மொழிச் சுவடிகள் பெருமளவில் கிடைத்தது தென்னிந்தியாவில்தான்.

    ஆனால் அச்சுவடிகளில் எழுதப் பட்ட சமஸ்கிருத்தின் எழுத்துவடிவம் இன்று சமஸ்கிருதம் எழுதப்பயன்படுத்தும் நாகிரி அல்ல. அது கிரந்தம் என்னும் எழுத்து. நம் தமிழ் எழுத்துருவோடு பெரிதும் தொடர்புடையது. இன்றைய மலையாள மொழியின் எழுத்துருவைப் பெரிதும் ஒத்திருப்பது.

    அதை மிக எளிதாய் அழித்தொழித்து இன்றைய இந்தி எழுத்தின் மயமாக்கியாயிற்று.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சுவடியிலிருந்து அச்சிடப்பட்ட பல தமிழ் நூல்களின் இடையில் எடுத்தாளப்படும் வடமொழி மேற்கோள்கள் இந்தக் கிரந்தத்தில்தான் இருக்கின்றன. இன்றைய சமஸ்கிருதப் பண்டிதன் அதைப் படிக்க முடியாது. எழுத்துரு மாறிவிட்டது. அவ்வெழுத்துருவில் எழுதப்பட்ட மேற்கோளைப் படிக்கமுடியவில்லை.

    இது ஒரு நூலை அழித்தற்குச் சமானம்.

    சமஸ்கிருத நூல்களில் கூடுமானவற்றை கிரந்தத்தில் இருந்து நாகிரிக்கு மாற்றிவிட்டார்கள். ( இன்னும் மாற்றபடாத சுவடிகள் நம் தஞ்சை சரஸ்வதிமஹாலிலேயே இருக்கின்றன.) மாற்றப்படாதனவும் மாற்றப்படும்.

    அரசியல் அதிகாரம், மதப்புனிதம், பெருமளவிலான நிதி உதவி, எல்லாவற்றிற்கும் மேலாய்ப் போதிய அறிவும் கடும் உழைப்பும் கொண்ட தன்னார்வலர்கள் அம்மொழிக்கிருக்கிறார்கள்.

    தமிழ் படிப்பதையே கேவலமாக எண்ணும் தமிழகத்தில் தமிழ் எழுத்துருவை மாற்றினால் பழம்நூல்களை புதிய எழுத்துருவில் மாற்றும் இம்மாபெரும் பணிக்கு நம்மிடம் என்ன இருக்கிறது….. யாரிருக்கிறார்கள்.? எல்லாவற்றையும் இப்படி மாற்றத்தான் முடியுமா?

    பின், தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி இதனை மாற்றிவிட முடியும் என்று கற்பனை செய்தால், தமிழகம் கடந்து, தமிழைத் தம் நெஞ்சில் சுமந்து அதுவே தம் தனித்த அடையாளம் என்று உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களை நமதரசின் ஆணை கட்டுப்படுத்துமா?

    விரும்பியவாறு கட்டவும் கலைக்கவும் மீண்டும் மாற்றவும் நம்மொழி ஒன்றும் மணல்வீடு இல்லை என்பதை உணர்வோர் உணரட்டும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றாகச் சொன்னீர்கள் ஐயா!

      “'தமிழ் எழுத்துருக்கள் மாறவே இல்லையா?
      அவை மாறித்தானே வந்திருக்கின்றன.
      காலத்தின் தேவை கருதி அம்மாற்றங்களை மொழி ஏற்றுக் கொள்ளவில்லையா? அதைப் போன்றே இப்படி நாங்கள் செய்யும் மாற்றத்தினையும் ஏன் ஏற்கக் கூடாது?' என அறிவியல் வழித் தமிழாசிரியர்கள் (?) கேட்கக் கூடும்" என்றீர்கள். கூடும் என்ன கூடும்? கேட்டே விட்டார்கள். என் பெருமதிப்பிற்குரிய இளந்தலைமுறைத் திரைப்பாடலாசிரியரான மதன் கார்க்கி அவர்கள் இதைக் கேட்கிறார். கணித்தமிழுக்காக இல்லாமல், தமிழ் கற்பதிலுள்ள சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் இப்படியோர் அபாய விளையாட்டில் அவரும் இறங்கியுள்ளார். இதற்கு நான் அளித்த பதில்:

      "தமிழ் எழுத்துமுறை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை அடைந்துதான் வந்திருக்கிறது. பழந்தமிழ் எழுத்துமுறையான வட்டெழுத்து முறைக்கும் இன்றைய தமிழ் எழுத்து முறையான சதுர எழுத்து முறைக்கும் ஒப்பிட்டால் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு வேறுபாடு உண்டுதான். மறுக்க முடியாது. ஆனால் ஒன்று! இத்தனை காலங்களில் தமிழ் மாற்றம் அடைந்தபொழுது தமிழர்கள் இருந்த நிலைமைக்கும், இன்றைய தமிழர்களின் நிலைமைக்கும் இடையே பெருத்த வேறுபாடு ஒன்று உள்ளது. அஃது என்னவென்றால், அந்தக் காலங்களில் தமிழ்நாட்டில் வாழ (அல்லது தமிழ்ச் சமூகம் ஒன்றில் வாழ) தமிழ் அறிந்திருத்தல் கட்டாயம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால்தான் தமிழ்நாட்டில் (அல்லது தமிழ்ச் சமூகத்தில்) வாழ முடியும் என்கிற நிலைமை இன்றைக்குக் கிடையாது. தொழிலோ, வேளாண்மையோ, வணிகமோ, அறிவியலோ, கலையோ, தொழில்நுட்பமோ, கல்வியோ, மருத்துவமோ எங்குமே எதிலுமே இன்று தமிழ் இங்கு கட்டாயத் தேவையாக இல்லை. எந்தத் துறையும் இன்று தமிழ் சார்ந்து இயங்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் தமிழ் எழுத்துமுறையை நாம் மாற்றினால் வெறும் கதை படிக்கவும், வலைப்பூ எழுதவும் மட்டுமே பயனாகும் இந்த மொழியை இப்படிப் பொழுதுபோக்குக்காக யாரும் அக்கறையோடு உட்கார்ந்து கற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள்.

      அப்படியே நாம் அடுத்த தலைமுறைக்கான தமிழ்க் கல்வியை உறுதி செய்துவிட்டு இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருந்தாலும், அதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. முன்பே சொன்னபடி, தமிழ் எழுத்துமுறை இன்று பயனாவதே தமிழ் நூல்களைப் படிக்கவும், தமிழ் நூல்கள் எழுதவும் மட்டும்தானே தவிர, குறிப்பாக எந்த ஒரு துறையும் எழுத்துத்தமிழ் சார்ந்து இயங்குவதில்லை என்னும் நிலையில் தமிழ் மொழியின் எழுத்துமுறையை நாம் மாற்றினால் ஏற்கெனவே இருக்கிற, இப்பொழுதைய முறையில் தமிழ் கற்றவர்கள் புதிய முறைக்கு மாறப் போவதில்லை என்பதால் ஏற்கெனவே இருக்கிற வாசகர்களைத் தமிழ் இழக்கும். புதிய தலைமுறையினர் இந்தப் புதிய எழுத்துமுறையை ஒரு மொழியறிவுக்காகக் கற்றுக் கொண்டாலும் அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் புதிய தலைமுறையிலும் புதிய வாசகர்கள் கிடைக்காமல் ஏற்கெனவே இருக்கிற வாசகர்களையும் இழந்து தமிழ் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல்தான் இதனால் ஏற்படும்.

      நீக்கு
  19. அதிகம் அறியாதவன்,
    எழுத்துருக்களெ உருவாக்க திரைப்பட பாடலாசிரியர் உதவுகிறார் என்பது தமிழுக்கு இழுக்கு.

    திரைப்படத்தில் சில தொழில்நுட்ப வார்த்தைகளை நுழைத்துவிட்டதால் அவரின் உதவியை நாடியிருந்தால் அதைவிட கீழ் வேறொன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  20. அடி ஆத்தி எல்லாம் சரியாத் தானே போயிட்டிருக்கம்மு. எதுக்கு இவங்களுக்கு இந்த வீண் வேலை. தமிழர்களாகிய எமக்குத் தான் போதாத காலம் என்றால் நம் மொழிக்கும் ஆப்பா இப்போ. எங்கு போய் முடியப் போகிறதோ. ரொம்ப வேதனை அம்மு! தமிழை அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வதே கடினமாக இருக்கும் இத்தருணத்தில் ம்..ம்..ம் கடவுள் தான் காப்பாற்றனும். நன்றிம்மா! இதை அறியத் தந்தமைக்கு. தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  21. ஹிந்து தமிழில் சில மாதங்களுக்கு முன் இந்த எழுத்துரு பற்றி வந்தது.....ஜெய மோகன் அவர்களும் எழுத்துரு மாற்றம் பற்றி எழுதி இருந்தார். இப்போது எழுத்தும் எழுத்துரு எளிதாகத்தானெ இருக்கிறது ...அதுவும் கணினியில் தட்டச்சும் போது கூட....இதோ அப்படித்தானே தட்டச்கிக் கொண்டிருக்கின்றொம்...இப்போது நாம் பயம்ன்படுத்தும் தமிழ் மொழியும், எழுத்துருவுமே பல காலக்கட்டங்களின் மாற்றங்களுக்கு உட்பட்டுத்தானே உருமாறி வந்துள்ளது....விசு ஆசான் அவர்கள் கூட ஒரு பதிவில் உவேசா அவர்களும்,ஃப்ரென்சு தேசத்திலிருந்து தமிழில் பரிமாறப்பட்டக் கடிதங்களைச் சான்று காட்டி எழுதியிருந்தார் அந்தக் காலகட்டத்தின் தமிழினை....

    இயற்கைச் சீற்றங்கள் வந்து ஒரு நாட்டையே மூழ்கடித்து, இனத்தையே மாற்றிவிடுவது என்பது என்பது வேறு....ஆனால் இது நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் சாவு மணி...யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வது போன்றது...தனக்குத் தானே குழி பறித்துக் கொள்வது போன்றது....

    பதிலளிநீக்கு
  22. புதிதாகக் கேள்விப்படுகிறேன்.காத்திருந்து கவனிப்போம்!

    பதிலளிநீக்கு
  23. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் !

    பதிலளிநீக்கு
  24. ஒரு செய்தியை நாம் தமிழர்கள் எண்ணங் கொள்ளல் வேண்டும் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழி என்பது ஒரு கோட்பாடு உள்ளது மொழியில் மாற்றம் செய்ய இவனுங் களுக்கு என்ன தகுதி இருக்கிறது மொழியை பற்றியும் நாட்டைப் பற்றியும் சிறுதும் அக்கறை இல்லாதவனுங்க சொல்லுவதை எல்லாம் சரி என்று சொல்லிவிட்டால் பிறகு தமிழன் என்ற அடையாளமே இல்லாமல் பொய் விடும் ...ஊமைத் தமிழனே சற்றுவிழி ....

    பதிலளிநீக்கு