ஞாயிறு, 9 நவம்பர், 2014

இதுக்கு என்ன பதில் சொல்லட்டும் மோடி சாப்??

  மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில் என்கிறார் மாவோ. பாருங்க நான் அரசியல் எழுதவேண்டாம் னு நினைகிறேன். மோடிவிட மாட்டேன்கிறார்.          சுகாதார துறையிடம் இருந்து எங்கள் பள்ளிக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. தூய்மை இந்தியா பற்றி ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்துமாறு அதில் குறிப்பிட பட்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தும் பொறுப்பு எங்கள் பள்ளியில் என்னிடம் தான் ஒப்படைக்க படும். எதோ ஆயகலைகள் அறுபத்தி நாளிலும் நம்ம அப்பட்டகர் என்றெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இப்படியான ஒரு போட்டியை அறிவித்து, அதை நடத்தி, பரிசு பெற்றவர்களை தெரிவிக்கும் வரை அதில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கும் மாணவக் கண்மணிகள் டிசைன் டிசைனாய் போட்டி நடத்தும் டீச்சரை சூழ்ந்து கொண்டு நூறு கேள்விக்கும் குறையாமல் சந்தேகம் கேட்பார்கள். a four சீட்டுல வரையணுமா? சார்ட்டில் வரணுமா? கலர் பென்சிலா? ச்கெட்சா?? ஆயில் பெய்ன்ட் ஆ? ரிசல்ட் எப்போ வரும் இப்படி வகைதொகையின்றி கேட்டபடி இருப்பார்கள்.  கஸ்தூரி என்னை பார்த்து "நீ social behaviourல இன்னும் கே.ஜி படிக்கிற பிள்ளை மாதிரியே இருக்கிற" என சொல்லவதை என் தலைமை ஆசிரியர் ரொம்ப நாசுக்க "மைதிலி மிஸ் பிள்ளைகூட பிள்ளையா பழகுவாங்க" என சொல்லி போட்டி நடத்தும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவார். 

    இந்த முறை வழக்கம் போல தலைப்புகளை கரும்பலகையில் எழுதிப்போட்டு உங்க பெற்றோர் அல்லதுமூத்தோர் உதவியோடு போட்டி தயாராகுங்கள் என்று என் மாணாக்கரிடம் கூறினேன். மறுநாள் இதுபோன்ற போட்டிகளில் ஆர்வமோடு பங்கெடுக்கும் ஜனனியின் அம்மா என்னை சந்திக்க வந்தார். நச்சுனு ஒரு கேள்வி கேட்டார்.

நாட்டை நாங்க தூய்மை இந்தியாவா வைச்சுகிறோம். ஆனா வளர்ந்த நாடுகளின். குப்பைதொட்டியா  இந்தியாவை  பயன்படுத்த அனுமதிருக்கிறார்களே, அதையும் மாற்றுவார்கள் மோடி ?? என்றார்.


நானும் "இது மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பில் அனுமதிக்க பட்டுதாயிற்றே  ?" என்றேன் அப்பாவியா?

அப்போ மோடி அவர்களையும் பார்த்து இனி எங்க நாட்டில் குப்பை கொட்டாதீங்க. நாங்க இப்போ தான் சுத்தபடித்துறோம்னு சொல்லிட்டாரா?? என்றார் ஐயமாக .


மோடி சாப் அப்படி ஏதாவது அறிவிச்சிருகாரா? அவர் துடப்பதோட பிஸியா இருக்கார். தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

30 கருத்துகள்:

 1. //தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!?..//

  காலையிலேயே - பதிவு களை கட்டி விட்டது!...
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. ///நாட்டை நாங்க தூய்மை இந்தியாவா வைச்சுகிறோம். ஆனா வளர்ந்த நாடுகளின். குப்பைதொட்டியா இந்தியாவை பயன்படுத்த அனுமதிருக்கிறார்களே, அதையும் மாற்றுவார்கள் மோடி ?? என்றார்.////
  நியாயமான கேள்விதான் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள சகோதரி,

  மரம்தான் மரம்தான்....எல்லாம் மரம்தான்...மனிதன் மறந்தான்.... என்கிறார் வைரமுத்து.
  காற்றுக்காக ஜன்னலைத் திறந்தேன்...காற்றே ஜன்னலைச் சாத்தியது
  என்கிறார் மேத்தா.
  பிரமர் மோடி அவர்கள் தூய்மைத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்...இந்தியாவைத் தூய்மைத் படுத்த எண்ணித் தொடங்கி இருக்கிறார்...வாழ்த்தி வரவேற்போம்... நல்லது நடக்கட்டும்.
  நம்ம வீட்டைக் கூட்டிச் சுத்தப்படுத்தி பக்கத்து வீட்டிக்கருகில் கொண்டு போய்க் குப்பையைப் போடுவதைப் போல...அயல் நாட்டுக்காரன் நம் நாட்டில் போடக்கூடாது என்கிறீர்கள்...வாஸ்வதவம் தான்...உலகப் பொருளாதார வியாபாரத்தில் மையம் கொண்டுவிட்டோமே!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. /நாட்டை நாங்க தூய்மை இந்தியாவா வைச்சுகிறோம். ஆனா வளர்ந்த நாடுகளின். குப்பைதொட்டியா இந்தியாவை பயன்படுத்த அனுமதிருக்கிறார்களே, அதையும் மாற்றுவார்கள் மோடி ?? என்றார்.///

  நச் என்ற கேள்வி... இதை தைரியமுள்ள ஆண்மகன் அவர் நிருபரோ அல்லது ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்களோ அல்லது எதிர் கட்சி தலைவர்களோ மோடியை நேரில் பார்த்து கேட்பார்களா?

  பதிலளிநீக்கு
 5. இந்த மாதிரியான பதிவுகளைதான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்......

  பதிலளிநீக்கு
 6. ///எதோ ஆயகலைகள் அறுபத்தி நாளிலும் நம்ம அப்பட்டகர் என்றெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.///

  நான் என்னவோ நீங்க பெரிய அப்பட்டகர் என்றல்லாவா நினைத்து இருந்தேன்....ஹும்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 7. ///கஸ்தூரி என்னை பார்த்து "நீ social behaviourல இன்னும் கே.ஜி படிக்கிற பிள்ளை மாதிரியே இருக்கிற"//


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 8. மோடி சாப் ஆட்சியில் இருக்க வேண்டாமா ?வளர்ந்த நாடுகளைப் பகைத்துக் கொள்ள முடியுமா ?இந்த அற்ப காரணத்திற்காக வனவாசம் போக முடியுமா :)
  த ம +1

  பதிலளிநீக்கு
 9. இது அரசியல் இல்ல மைதிலி. நாடு கேட்கும் நல்லதொரு கேள்வி.
  இந்த கமல் வேறு -புரிந்தோ புரியாமலோ- ஏரியைச் சுத்தப்படுத்தக் கிளம்பிட்டார். நல்லதுதுான்...ஆனா... கடுகுபோறது தெரியுமாம் பூசணிக்கா போறது தெரியாதாம்.. மோடிஜி இதுக்கெல்லாமா பதில் சொல்லுவார்? மக்கள்தான்...!

  பதிலளிநீக்கு
 10. கலக்கல் பதிவு.நச்சென்ற கேள்வி.கேள்வி கேட்டவருக்கும், பதிவிட்டவருக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கேள்விதான் ஆனால் ஊமையன் சொல்றது செவிடன் காதுல கேட்கவா போகுது.....

  பதிலளிநீக்கு
 12. நல்ல கேள்விதான்
  இந்தக் கேள்வியை மோடியையோ மன்மோகனையோ தைரியமா கேக்க முடியும்?. அவங்க டில்லியில இருக்காங்க கண்டுக்க மாட்டங்க. இதே போன்ற கேள்வியை லோக்கல்ல இருக்கவங்க கிட்ட கேக்க முடியாது.
  குப்பை மேலாண்மையில் நாம் ரொம்பவே வீக். வீடு சுத்தமா இருக்க வீதியல எந்த அளவுக்கும் குப்பை கொட்டத் தயங்க மாட்டோம். தேவை இல்லாமல் பொருட்கள் வாங்குவதைக் குறைத்தாலே குப்பைகள் குறைந்து விடும். ஆனால் பொருட்கள் வாங்குவதை குறைத்தால் பொருளாதார வீழ்ச்சி வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகிவிடும். விவசாயத்தை நம்பி இருக்க முடியல அதனாலே அந்நிய முதலீடு தொழில் வளர்ச்சி தேவைப் படுது இதனால குப்பைகள் அதிகமாகி விடுகிறது .சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது.
  இப்போதைய சூழ்நிலையில் எதையும் தடுக்க முடியாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.
  //கவர் பிளந்த மரத் துளையில்
  கால் நுழைத்துக் கொண்டு
  ஆப்பதனை அசைத்திட்ட
  குரங்கதனைப் போலே //
  என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல கேள்வி! அவர் கட்சியில உள்ள குப்பைகளையே அவரால் பெருக்க முடியாது! நீங்க கேக்கறதெல்லாம் செய்வாரா தெரியலையே!

  பதிலளிநீக்கு
 14. என் வீட்டில் குப்பை போடுவது நான் தான். என் குப்பையை நாந்தான் க்ளீன் பண்ணனும் சரியா? இதை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். சரியா? இதையே குடும்பக் குப்பை, வீதிக் குப்பை, ஊர் குப்பை, நாட்டுக்குப்பைனு பாருங்க. நம்ம குப்பையை நம்மதான் க்ளீன் பண்ணணும். மோடி எதுக்கு என் குப்பையை க்ளீன் பண்ணனும்? அவர் வீட்டுக் குப்பையை அவர் க்ளின் பண்ணட்டும். நான் என் குப்பையை பார்த்துக்கிறேன்.

  நான் பார்ப்பான்/சத்திரியன்..நான் உயர் சாதி. நான் என் குப்பையை தொடமாட்டேன். சூத்திரன் தான் என் குப்பையை க்ளீன் பண்ணணும் என்கிற சிந்தனைகள் நம்மிடம் வளர்த்ததால்/இருந்ததால்தான் இன்னைக்கு இந்த நிலைமை! இந்த கீழ்த்தரமான சிந்தனைகள் இன்னும் பல உயர்சாதி முட்டாள்களிடம் இருப்பதால்தான் இந்தியா நாசமாப்போனது.

  இதை தட்டிக்கேட்ட பெரியார் வில்லன். இன்னைக்கு அதைப்பத்தி பச்சையாகப் பேசும் அடாவடி வருண் வில்லன்! அடக்கிவாசிக்கும், நல்லவனாக வேடம்போடும் பெரிய மனிதர்கள் "அப்பாவிகள்" "சாதுக்கள்"!! இதெல்லாம் அறியாமையின் உச்சம்!

  உன் குப்பையை நீ பார்த்துக்கொண்டால் அதன் பிறகு நாட்டில் எங்கே இருக்கும் குப்பை???

  கொஞ்சம் யோசிங்க! நம்ம எல்லோருக்கும் 6 அறிவு. Are we not cleaning ourselves everyday? When it is our trash, it wont be that bad. The problem comes only someone needs to clean your trash. THINK!!!

  உங்களையும் மற்றவர்போல் நினைங்க. உங்களை உயர்த்தி வைத்து மற்றவர்களை (உங்க கழிவு/குப்பைகளை அள்ளுறவங்க) கீழே வைத்துப் பார்ப்பதும் அறிவீனம், மூடத்தனம்.

  கொஞ்சம் யோசிங்க! we are all equal. Right? Not just in "theory"! Not just in papers! Understand what is equality really means. Your trash is equally bad as anybody's trash. You clean your trash. If everybody does that the whole world will be clean. But we are all ignorant. Yeah and you and me too sometimes. !!

  -------------------------------------------

  உங்க கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அடுத்தகட்ட குப்பைக்கு வர்ரேன்..

  இப்போதைக்கு யு எஸ்ல எல்லா ஃபார்மஸ்யூடிக்கல் வேலைகள், கம்பெணிகள் எல்லாமே மூடப்படுகின்றன.

  விளைவு? இங்கே உள்ள கெமிஸ்ட்ஸ் களுக்கு வேலை இல்லாமல்ப்போகிறது.

  இருந்தும் இதை ஏன் அமெரிக்கா செய்கிறது?

  ஏர் பொல்லுஷன், வாட்டர் பொல்லுஷன் எல்லாம் அதிகமாவது பிரச்சினை. ஒரு பொருளை உருவாக்கும்போது வரும் கழிவுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தக் கழிவுகளை ஒழுங்கா டிஸ்போஸ் பண்ண ஆகும் செலவு பொருள் தயாரிப்பதைவிட பல மடங்காகிறது.

  அதனால் என்ன செய்றாங்கனா..

  இங்கே உள்ள கெமிஸ்ட்களுக்கு வேலை போவதை எல்லாம் பத்தி கவலைப் படாமல், எல்லா கம்பெணிகளும் சைனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு நாடு கடத்தப் படுது. அன்கே உள்ள கெமிஸ்ட்களுக்கு "பொற்காலம்"!!

  இதனால் இந்தியாவில் உள்ள கெமிஸ்ட்களுக்கு இப்போ எளிதில் வேலை கிடைக்கிது. இந்தியா பொருளாதாரம் முன்னேறுது.

  ஆனால்,

  இந்திய ஏர் பொல்லுஷன், வாட்டர் பொல்லுஷன் எல்லாம் அதிகமாகி நாடு சுடுகாடைநோக்கி மெதுவாக சென்று விரைவில் "சுடுகாடாகும்".

  The problem with Indians is that they dont think the consequences in a LONG time-frame. They think about today and tomorrow. that's why we have population problems. அதைப் பத்தி எவனுமே கவலைப்படுவதில்லை. கூட்டம் அதிகமானால் எனக்கு வியாபாரம் நல்லா நடக்குதுமு யோசிக்கிற சின்னப்புத்தி!

  We WILL HAVE serious pollution problem in the future. There will be more cancer patients, more genetic disordered children and that of in the future.

  Can we stop it??

  Are we ready to take an BIG DOWNFALL in our economical growth???

  If modi dares to take such a risk, he will LOSE in next election as he will look like an inefficient PM! It is much more complicated that what we think. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ் உண்மையை இப்படி அப்பட்டமாக தோல் உறித்து சொல்லுறீங்க...ஒரு வேளை இதைபடித்த நம் தலைவர்கள் மனமாறிவிட்டால் அப்புறம் நம் நாட்டில்(அமெரிக்கா) உள்ள கழிவுகளை கொட்ட இடம் கிடைக்காது, அப்புறம் நம்ம பாடு திண்டாட்டம்

   நீக்கு
  2. //என் வீட்டில் குப்பை போடுவது நான் தான். என் குப்பையை நாந்தான் க்ளீன் பண்ணனும் சரியா? இதை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். சரியா? இதையே குடும்பக் குப்பை, வீதிக் குப்பை, ஊர் குப்பை, நாட்டுக்குப்பைனு பாருங்க. நம்ம குப்பையை நம்மதான் க்ளீன் பண்ணணும். மோடி எதுக்கு என் குப்பையை க்ளீன் பண்ணனும்? அவர் வீட்டுக் குப்பையை அவர் க்ளின் பண்ணட்டும். நான் என் குப்பையை பார்த்துக்கிறேன்மோடி//

   மோடி கிலீன் பண்ணுவது நாட்டு குப்பையை. உங்கள் வீட்டு குப்பையை அல்ல. நீங்களும் இந்தியாவின் குடிமகன் என்பதால் உங்களையும் கீலீன் பண்ண அழைக்கிறார்.
   //
   மோடி எதுக்கு என் குப்பையை க்ளீன் பண்ணனும்?
   //
   உங்கள் வீடு தேடி வந்து க்ளீன் பண்ணினார?


   //இதையே குடும்பக் குப்பை, வீதிக் குப்பை, ஊர் குப்பை, நாட்டுக்குப்பைனு பாருங்க. நம்ம குப்பையை நம்மதான் க்ளீன் பண்ணணும்.//
   மோடி என்ன பாகிஸ்தான் நாட்டுக்காரரா? இல்லைதானே அதுதான் சுத்தம் செய்ய கிளம்பிவிட்டார்

   //நம்ம குப்பையை நம்மதான் க்ளீன் பண்ணணும்.//
   ஆனா மோடி பண்ணக்கூடாதா?

   நீக்கு
  3. ****மோடி கிலீன் பண்ணுவது நாட்டு குப்பையை. உங்கள் வீட்டு குப்பையை அல்ல.***

   அப்படிங்களா? நாடு டெய்லி குப்பை கொண்டு வந்து கொட்டும்னு எனக்குத் தெரியாது. :))))

   இன்னும் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு உங்களை மாதிரி அறிவாளிகளிடம் இருந்து!!!

   மடமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் என் கண்ணைத் திறந்ததற்கு மிக்க நன்றி ட்ரோக்பா! :)))

   உங்களைப் போல் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அதிகமாகணும். என்னைப்போல் அறிவுகெட்ட முண்டங்கள நாடுகடத்தப்பட வேண்டும்! அதையெல்லாம் புரிந்துகொண்டுதான் நான் முன்னெச்சரிக்கையாக என்னை நானே நாடுகடத்திவிட்டேன்! :))) At least I could do something to make your country clean. I am sure you would agree with me. Right?

   Please do ignore my response as IT IS NOTHING BUT NONSENSE!

   Take care!

   நீக்கு
  4. மன்னிக்கவேண்டும் வருண். நான் எந்த இடத்திலும் தங்களுக்கு எதிரான தனி மனித தாக்குதலை தொடங்கவில்லையே. நான் எனது கருத்தை பதிந்தேன் அவ்வளவுதான். அது தவறாகக்கூட இருக்கலாம். தாங்கள் விரும்பினால் என் தவறை சுட்டிக்காட்டலாம்.


   நாடு குப்பையை கொட்டாது ஆனால் நாட்டு மக்கள் வீதியில் போது இடங்களில் குப்பை போடிருக்கிறார்கள். அந்த குப்பையை மோடி அகற்ற விரும்புகிறார். அவ்வளவுதான்.

   நீக்கு
 15. நல்லதொரு கேள்வி அம்மு.இனியாவது சிந்தித்து செயல் படட்டும் கேள்வி கேட்டால் தானே நியாயம் பிறக்கும். சிந்திக்க தூண்டும். அம்மு நச்சின்னு நாலுவார்த்தை. நல்ல சிந்தனைம்மா இருவருக்கும் என் பாராட்டுக்களும் ! வாழ்த்துக்களும் ...!

  பதிலளிநீக்கு
 16. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 17. அரசியலின் காகிதக் குப்பையில் புரள்பவருக்கு
  சாலையின் சருகுகளும்
  காகிதங்களும் தான் குப்பைகள்
  அதை மட்டும் தான் அகற்ற வேண்டும்
  நீங்களோ நானோ யாரோ குறை கூறினால்
  காது கேளாது
  பற்றையில் ஒளிந்திருக்கும்
  பகடைக்காய் வேடர்களுக்கு...

  பதிலளிநீக்கு
 18. "//தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்//" - இந்த கேள்விக்கான விடையை கண்டுப்பிடிக்கிறதுக்கு, நீங்களே ஒரு கட்சியை ஆரம்பிச்சட்டதா கேள்விப்பட்டேன். அந்த கட்சிக்கு மது சார் தான் கொள்கைப்பரப்பு செயலாளராமே!!!

  பதிலளிநீக்கு
 19. நெற்றியடிக் கேள்வி! தமிழ்நாட்டு பா.ஜ.க-வினர் முடிந்தால் இதற்குப் பதில் சொல்லட்டும்!

  பதிலளிநீக்கு
 20. நல்ல கேள்விதான்.
  வளர்ந்த நாடுகள் வளரும் நாட்டைக் குப்பையாக்குவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது..அதை எதிர்க்க நம் தலைவர்களுக்கு மிகுதியான நாட்டுப்பற்றும் சூழல் பற்றும் வேண்டும்..

  பதிலளிநீக்கு
 21. நல்ல கேள்வி தான் தோழி..
  ஆனால்...... அரசியல் குப்பைகளை என்றுமே கிளீன் பண்ண முடியாது.

  பதிலளிநீக்கு
 22. மிக நல்ல இடுகை! கேள்வியும்! நம் நாடு காலாவதியான மருந்துகளுக்கும், மேலை நாட்டில் உப்யோகிக்கக் கூடாது என்று சொல்லப்படும் மருந்துகளும் இங்கு வெகு எளிதாகக் கிடைக்கச் செய்து குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு இருக்கின்றது! இது மருந்துகளுக்கு மட்டுமல்ல...மற்ற பல பொருட்களுக்கும்!

  இதில் எந்தக் குப்பைஅயை அகற்ற முயற்சி!?

  பதிலளிநீக்கு