ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வின்சியோடு ஒரு நாள்.

        
     
              அதிகாலை குளிர்போல் நடுக்கி எடுத்தது தனிமை உள்ளும்,புறமுமாய். கைகள் நீட்டி சோம்பல் முறிந்தபோது தட்டுபட்ட கைபேசி, f.b செக் செய்யலாம் என்றொரு சின்ன சுவாரஸ்யம் சேர்க்க, எடுத்தபோது ஒன்பது தவறிய அழைப்புகள். தீபாவா??? பேசியேகொல்லப்போகிறாள். ரெண்டுவார்த்தை பேசினாலே நேத்து குடிச்சியா என கண்டுபிடித்துவிடும் ராட்சஸி! சலிப்பின் ஊடே கால் ஹிஸ்டரி நாலுமுறை அம்மா, ஐந்துமுறை ஆகாஸ் என்றது. அவன் ஏமாற்றம் அவனுக்கே அவமானமாய் இருந்தது.சற்றுமுன் வரை தீபாவைப்பற்றி சலிப்பாய்த் தானே நினைத்தான். ஆனால் தீபா அவனை கை கழுவி விட்டாள் என்பதை ஏற்கவே முடியவில்லை. முகப்புத்தகத்திலும் அவனை அன்பிரண்டு செய்து இருந்தாள். வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்தான். “ஐயா! ராத்திரி தூங்க ரொம்ப நேரமாச்சோ! உடம்பு சுகந்தானே எதற்கும் பதில் சொல்லும் முன் எஜமானுக்கு கணக்குச் சொல்லும் கணக்குப் பிள்ளையாய் வீட்டு நிலவரம், வரவு செலவு, தங்கைகள் படிப்பு என சகலத்தையும் ஒப்புவித்து விட்டு, நேரா நேரத்திற்கு சாப்பிட,  தூங்க எண்ணெய் தேய்த்து குளிக்க, அறிவுறுத்தி போனை விட்டு வைத்து விட்டாள்.



              அம்மா அப்படித்தான். அப்பாவிற்கு பயப்படுவது போலவே அவன் சிறுவனாய் இருக்கும்போதே  அவனுக்குப் பயப்படுவாள். தங்கைகளை கூட  ஒரு மரியாதையான இடைவெளியிலேயே பழக விடுவாள். ஏழு மணிக்கே பள்ளி வாகனம் ஏறி அடுத்த ஊரில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு போய் விட்டு வீடு திரும்புகையில் இருட்டி விடும். ஊரில் நண்பர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விடுமுறை நாட்களில் கூட இவன் வயது பையன்கள் இவனிடம் விலகியே இருந்தனர். பாடம் சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் தானே படித்து பெற்ற சுமாரான மதிப்பெண்ணும், கிராமத்து ஆங்கில உச்சரிப்பும் பள்ளியிலும் இவனுக்கு பெரிய நண்பர் வட்டமில்லை. பள்ளியில் கழிவிரக்கத்தோடும், வீட்டை சுற்றி தலைக்கனம் என்ற பெயரெடுத்த இவன் எப்படிப்பட்டவன் என்பது இன்றுவரை இவனாலே தீர்மானிக்க முடியவில்லை.


    ஆபிஸிலும் அதிக நண்பர்கள் இல்லை. பணக்கார சர்க்கரை நோயாளியாய் எல்லாம் இருந்து யாருமற்றவன். இருநூற்றி நாற்பது எண்கள் சுமக்கும் போன் மெமரியில் இருபது எண்கள் கூட இல்லாத இருபது பிளஸ் வயதுக்காரன் ஞாயிறு விடுமுறை என்பது கூட இப்படி பத்து மணிக்கு எழுந்திருக்கும் ஒரே சலுகையோடு முடிந்து விடுகிறது. ஆகாஷ் சொல்லுடா ஆபிஸ் மாறுகையில் இருந்து போனே காணோம்” அதான் கோபமா என் போனையே எடுக்கலை. இல்லை தூங்கிட்டேன். சரி சொல்லு. அசோக் நகர் அத்தை வெளியூர்க்கு ஒரு விஷேசத்துக்கு போறதுக்குள் முன்னால  வின்சியை என் வீட்டுல விட்டுட்டு போனாங்க. எனக்கு அந்த புது பிராஜக்ட் முடிக்கனும். சண்டேனாலும் இன்னிக்கு பன்னென்டு மணி ஷிப்ட்டா நாளைக்கு காலைல வந்து பிக்கப் பண்ணிகிறேன். வின்சி இன்னிக்கு ஒரு நாள் உன் கூட இருக்கட்டுமே.

     ஒரு நாள் மட்டும் தன் அறையில் தங்கபோகும் ஒரு பெண். கண்களை ஒருமுறை பிளாட்டில் ஓட்டினான். யாருமற்ற பெருவெளியில் பாதையில் முதல் பூவாய் ஒரு புன்னகை மலர்ந்தது. என்னடா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற. அது உன்னை ஒரு தொந்தரவும் பண்ணாது. தயிர் சாதம்,பால், பிஸ்கட் ஏதோ ஒண்ணு. சிட்அவுட்ல கூட கட்டி வை. சத்தமா கூட குரைக்காது.
ஹ்ம்ம். வின்சி ஒரு நாய்! சரிடா கொண்டு வா. ஆனால் அவன் முடிக்கும் முன் ஆகாஷ் தொடர்பைத் துண்டித்திருந்தான்.

     ஆகாஷ் கிளம்பியவுடன் குரைக்க தொடங்கியது வின்சி. பக்கத்து வீட்டு புரபசர் கடிந்து கொண்டார். ஷட் ஆப் அவன் போட்ட சத்தத்தில் வால் சுருட்டி மூலையில் ஒட்டிக் கொண்டது. மூலையில் நின்று கொண்டு அவனையே பார்த்தபடி இருந்து கண்கள் பளபளத்தன. அவன் டி.வியை வெறித்தபடி இருந்தான். வெறுமை அவனை விரட்டி விரட்டிப் பருக பிரிட்ஜை திறந்து தன் டம்ளரை நிறைத்துக் கொண்டான். முதல் பெக்கின் முடிவில் தீபாவின் ஆபீஸ் எண் நினைவு வந்தது, அழைத்தான். குடிச்சுட்டு கலாட்டா பண்ணிறியா? கெட் லாஸ்ட் இடியட்,  உங்க கூட இன்னும் ஒரு செகண்ட் கூட செலவு பண்ணுறது வேஸ்ட் வைத்து விட்டான். அடுத்த சாத்தான் நொடியில் வின்சியை கடந்து, அறையின் சுவரில் மோதி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது செல்பேசி.

     தலை கவிழ்ந்தே அமர்ந்திருந்தான். இந்த சூழலை எப்படிக் கையாள்வதென்றே தெரியவில்லை. கிடார் இசைத்தபடியோ, புத்தகம் படித்தபடியோ கழிக்கும் பக்கத்து அறை  நண்பர்களை நினைக்கும் போது அவன் மீதும், அவன் வளர்ப்பு,  படிப்பின் மீதும் ஆற்றாமை பொங்கியது.

     சே! எனக்கு மட்டும் இப்படி! நான் மட்டும், நான் மட்டும்,  தலை கவிழ்ந்து அழுதுக் கொண்டிருந்தவன் அப்போது தான் வின்சியின் பயம் நிறைந்த கண்கள் நினைவுக்கு வந்தது. திரும்பிப் பார்த்தான்.

     அது பயம் விலகி அவனை பாவமாய் பார்த்தபடி இருந்தது. ஆவன் கண்களைப் படித்தது போல மௌனமாய் அவனை நெருங்கி ஆதூரமாய் பார்த்தது. அவன் மடிக்குத் தாவி சுருண்டி கொண்டது. அவனது தலைவலி குறையத் தொடங்கியது. கொஞ்சம் தயிர் சாதம் கொடுத்தான். சாப்பிட்டது. அவனது கால்களுக்குள் நுழைந்து விளையாட்டுக் காட்டியது. மாலையாகியிருந்தது. விளையாட்டை குறைத்துக் கொண்டு ஏதோ அசௌகரியமாய் நடந்து கொண்டது. கதவை சுரண்டிக் காட்டியது. கழுத்தில் செயினை மாட்டி வெளியே அழைத்துப் போனான். சுற்று சுவர் தாண்டியதும் எதிர்பட்ட நெட்டுலிங்க மரத்திற்கு அருகே இயற்கை அழைப்பு பதிலளித்து விட்டு சமத்தாய் அவனோடு ஒன்றிக் கொண்டது. அருகில் இருந்து பார்க்கில் குழந்தைகள் சத்தத்தை ஆவலோடு பார்த்தது வின்சி.

     வாட்ச்மேன் வந்து விரட்டி பூட்டும் வரை விளையாடிய குழந்தைகளை பார்த்தபடி இருந்து விட்டு அறைக்குத் திரும்பும் முன் வின்சி ஐஸ்கிரீம் வண்டியைப் பார்த்து துள்ளியது. வின்சிக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான். ஓ! வின்சி வீட்டில் ஒரு கல்லூரி மாணவி இருக்க வேண்டும்! இதழ் கோடியில் ஒரு புன்னகை இழைத்தபடி தூங்கிப் போனான்.

     அழைப்பு மணி சத்தத்தில் விழித்தபோது தான் கவனித்தான். அவன் வயிற்றோடு ஒட்டிப் படுத்திருந்த வின்சியை. செல்பேசியை எடுத்து மணி பார்த்தான். நேற்று தூக்கியெறிந்தபின் அதனை ஆன் செய்யவேயில்லை. ஸ்கிரீன் தெறித்திருந்தது. அழைப்பு மணி பொறுமையற்று மீண்டும் ஒலிக்க ஆகாஷ் வந்திருந்தான். மணி எட்டாச்சே இன்னிக்கு ஆபீஸ் இல்லையா! நான் வின்சியை கூப்பிட்டுக்கலாம்னு ஆறு மணியில் இருந்து கால் பண்ணினேன்.

     ஆகா! கேப் இன்னும் அரை மணியில் வந்து விடும். வின்சியை அவன் அழைத்துக் கொள்ள, அவசர கதியில் கிளம்பி அறை பூட்டி, கேப் பிடித்து எட்டு மணிக்கு வீடு திரும்பி பிளாட்டை திறந்தது போது தான்  கண்ணில் பட்டது வின்சிக்கு அவன் உணவு கொடுத்த தட்டு. குளிர்ந்த நீரை டம்ளரில் நிரப்பிக் கொண்டு சோபாவில் சாயும் போது மின்னலைப் போல் நினைவை வெட்டியது வின்சி அவனிடமிருந்து கை மாறிய போது பார்த்த சோகப் பார்வை. செல்பேசியை எடுத்தான்.“ஆகாஷ் உன் அத்தை வீடு எங்கயிருக்கு?”

44 கருத்துகள்:

  1. வணக்கம்
    கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக உள்ளது... நல்ல கற்பனைத்திறன் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ உங்க வருகைக்கும் ,கருத்துக்கும்:)

      நீக்கு
  2. இபடியும் சில தாய்மார்கள் அன்பிற்கு ஏங்கி தனிமைப்படுத்தப்படும்
    குழந்தைகளின் நிலைகண்ணீருக்கு உரியது வென்சியின் அந்த ஒரு
    பார்வை மாற்றீருக்கிறது அருமை டீச்சர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்மார்கள், கல்விமுறை, தனித்திறமை வளர்த்துக்கொள்ளாத, தனிமையை கையாளதெரியாத தனிமனிதன் எல்லாமே காரணம்னு நினைக்கிறன் டீச்சர்:)) pet வளர்பவர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியேற அதுவே காரணமாகி விடுகிறது இல்லையா டீச்சர்:) மிக்க நன்றி!

      நீக்கு

    2. என்னை கேட்டால் ஒவ்வொருத்தவரும் நாய் வளர்க்க வேண்டும் என்பேன் அதனால் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது

      நீக்கு
  3. பதில்கள்
    1. அவன் வாழ்கை தொடரும்....வின்சியோடு நட்பு தொடரும்.....தனிமை தொடராதுன்னு தான் நினைக்கிறேன் டி.டி.அண்ணா:)

      நீக்கு
  4. தனிமையின் கனம்.....
    தலை வலியாய்...
    தவிப்பு ஒருயிர்...
    அன்பு பரிமாற்றம்...
    மன அனலை அணைக்கும்.

    சிறுகதை..நிதர்சனமாய்..அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட!!! சுடச்சுட ஒரு கவிதையையும் போட்டுவிட்டீர்கள் போல!!!! மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  5. அன்புச் சகோதரி,

    ‘ வின்சியோடு ஒரு நாள் ’ விறுவிறுப்போடு சொல்லப்பட்ட கதை... வின்சி யார் என்ற சஸ்பென்ஸ் பாதிவரை நகர்த்திவிட்டது... வின்சி ஒரு நாய்! நன்றாக இருந்தது. தனிமையை பற்றி... அதன் கொடுமை... வலிபற்றி அலசிய விதம் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கடைசி கேள்விக்குக் காரணம் ,வின்சி வீட்டில் ஒரு கல்லூரி மாணவி இருக்க வேண்டும்! என்பாத்து தானே ?
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் பாஸ் அந்த பையன்.... அவனுக்கு வின்சி ஞாபகம் மட்டும் தான் வந்துச்சு, அதுக்குமேல ஏதாவது நடந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல:))))

      நீக்கு
  7. விறுவிறுப்பாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் இருந்தது கதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா சூப்பர்மா..ஒரு நாயின் ஏக்கம், அன்பு,என் மனதிலும் வின்ஸி ஒட்டிக்கொண்டாள்.

    பதிலளிநீக்கு
  9. மைதிலியின் வித்தியாசமான எழுத்துக்கு
    வாழ்த்துகளுடன், த.ம.7.
    விமர்சனத்தோடு நாளை வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவலோடு காத்திருக்கிறேன் அண்ணா! அட்வான்ஸ் தம நல்ல சேதிதான் சொல்லுது:)

      நீக்கு
    2. மலேசியா சென்ற புது மாப்பிள்ளை ஹனிமுன் முடித்து வந்துவிட்டார் போல

      நீக்கு
  10. ****ஒரு நாள் மட்டும் தன் அறையில் தங்கபோகும் ஒரு பெண்.****

    ****ஓ! வின்சி வீட்டில் ஒரு கல்லூரி மாணவி இருக்க வேண்டும்! ****

    ஆனாலும் ரொம்பத்தான் அலையிகிறாரு உங்க "ஹீரோ"! கஷ்டம்தான் ..இவரை நண்பராக பெற்றவர்கள் நிலைமை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண்:)) ( உங்க ஸ்டைல சொன்னேன்:)
      மாலதி டீச்சருக்கு நான் கொடுத்திருக்கிற ரிப்ளை பாருங்க....பாவம் சின்னப்பையனோட சின்ன சின்ன வீக்னெஸ் எல்லாம் பெருசு படுத்தாதீங்க பாஸ்:) எல்லா பசங்களும் எல்லா நேரமும் எல்லா பெண்களிடமும் வழிவதில்லை,,,,,அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா:)
      **ஆனாலும் ரொம்பத்தான் அலையிகிறாரு உங்க "ஹீரோ"! கஷ்டம்தான் ..இவரை நண்பராக பெற்றவர்கள் நிலைமை! :(***
      ஹா.....ஹா....ஹ...

      நீக்கு
  11. ஆரம்பம் முதல் முடிவு வித்யாசமான வரிகளை கொண்ட கதை ! அருமை சகோ ! இறுதி கேள்விக்கான காரணம் கல்லூரி மாணவியெனில்... அவனின் தனிமை துயரம் தொடரவே செய்யும் !!!!!!!!!!!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட் சாம் அண்ணா ,,,அதேயே தான் நானும் பகவான்ஜி பாஸ் கிட்ட சொல்லிருக்கேன்,,,பாருங்களேன்:) மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  12. எழுத்தும் நடையும் கதையும் அருமையாக இருந்தது சொல்வதை எளிமையாக அழகாக சொல்லி இருக்கீங்க அதனால இந்த கதையை கலாய்க்காமல் பாராட்டி செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலதி டீச்சர் கொஞ்சம் என் கையை கில்லுங்களேன்.... இதெல்லாம் கனவா?? நனவா??? அப்போ இந்த கதை நெஜமாவே கொஞ்சம் worth தான் போல:))) நன்றி mr.லைட் சகா!!

      நீக்கு
  13. வின்சியைப் பற்றியே கதையை சொல்லிவிட்டு, வின்சியின் படத்தை போடாமல் விட்டுவிட்டீர்களே..
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா ஒரு சஸ்பென்சா இருக்கட்டுமேன்னு தான்:)) நன்றி சகோ:)

      நீக்கு
  14. மகிழ்நிறையே தந்தாய்ம ணிக்கதை நன்றே
    மகிழ்வில்லை நெஞ்சை பிழியும் தனிமை
    வின்சி வருகையும் நட்புமே நிம்மதிதான்
    இன்னும் எழுது கதை!

    ஆஹா அருமையான முயற்சியே இப்படி களை கட்டுகிறதே தொடரட்டும் இனிய பயணம். வாழ்த்துக்கள் அம்மு!

    பதிலளிநீக்கு
  15. அருமை! தொடர்ந்து கதை எழுதலாமே!

    பதிலளிநீக்கு
  16. பரவாயில்லை கன்வெர்டர் நன்றாகவே வேலை செய்திருக்கிறது...
    நடுவில் சில வார்த்தைகள் மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்..
    த ம பதினொன்று

    பதிலளிநீக்கு
  17. நல்ல அழகான கதை! சொல்லியிருக்கும் விதமும் அருமை! அது சரி அப்போ ஹீரோக்கு காதல பத்த வைச்சுட்டீங்க?!!!

    பதிலளிநீக்கு
  18. நல்ல கதை!
    தெளிவான நடை!
    விடை = அருமை! அழகு! அற்புதம்!
    (A + A + A )

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  19. நல்ல முயற்சி! இன்னும் தொடர்ந்து எழுதிப் பழகினீர்களானால், கதையின் நேரடித்தன்மை குறைந்து, கதை சொல்லும் இலாவகம் கை வரும். தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  20. அன்பு தமிழ் உறவே!
    ஆருயிர் நல் வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    பதிலளிநீக்கு