சனி, 6 ஜூன், 2020

பொன் மகள் வந்தாள்-திரை அனுபவம்

பாரதி கண்ட புதுமை பெண்!  அவரைத் தான் நம் சமூகம் உச்சி முகர்ந்து வாடி ராசாத்தி என சிவப்புக்கம்பளம்  வரவேற்கும் ஏதென்றால் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையில் தயக்கம் எதும் இல்லை நமக்கு!


 நம் வேரடியை அசைத்துப் பார்ப்பது உண்மையில் பெரியார் கண்ட புதுமைப் பெண்கள் தான் இல்லையா! பின்னே எப்படி நடக்கணும், எப்படி பார்க்கணும் என்றெல்லாம் வகுப்பெடுக்காமல், இந்த கர்ப்பப்பை தான் உனக்கான தடை, வேண்டாம் னா தூக்கி எறி என்றெல்லாம் அவர் சொன்னால் நமக்கு பதறிடாது! 

கோர்ட் சீனில் செருப்பை எறியும் காட்சியில் ஜோவின் எதிர்வினை பெரியாரின் நகல். இனி காட்சிக்கு காட்சி தீ பறக்கும், அனலடிக்கும் என்றெதிர் பார்த்தால், அந்த காட்சியில் இருந்த நிதானம் படம் முழுக்க பிரதானம். 

டீக்கடைக்காரரையும், வாட்ச்மேனையும் தவிர ஸ்க்ரீன் தெரியும் தலை அனைத்தும் பெருந்தலை! ஆனால் கதாபாத்திரம் அவர்களுக்கு நியாயம் செய்ததா?  பார்த்திபனைத் தவிற பிற கதாபாத்திரங்களுக்கு இவ்வளவு ஸ்டார் காஸ்ட் இந்த திரைக்கதைக்கு தேவைப்படவில்லை. வினோதினி போல நல்ல துணை நடிகர்கள் படத்தை அடுத்த இடத்துக்கு கொண்டு போயிருப்பார்கள். இவர்களை டீசரில் பார்த்து ரசிகர் வேறு எதிர்பார்த்து ஏமாற வழிசெய்கிறது.  இந்த குறையை தவிர  திரைக்கதையில் குறையில்லை. 

பல்வேறு வகையில் காதலையே சொல்லி கதறிவிட்ட தமிழ் சினிமா இது போலும் சமூகத்துக்குத் தேவையான மையக்கருத்தையும் விதவிதமாகத்தான் எடுக்கட்டுமே! இந்த படத்திலும் ஒரு காதல் இருக்கிறது. அது காட்டப்படவில்லை.  இரு நிகழ்வாக சொல்லிகடக்கப்டுகிறது.


படத்தை இன்னும் நெருப்பாய் எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி அவரவர்க்கு நிகழும் கொடுமைகளை அவரவர் பாணியில் தானே கையாள முடியும்? 
ஜோ வெண்பாவாக வருகிறார். ஆஷிஃபா, நந்தினிக்கு கண்ணீர் விடுகையில் வெண்பா, ஏஞ்சலுக்கும் சேர்த்தே அழுகிறார். பதறுகிறார். வினா எழுப்புகிறார். வாதாடுகிறார்.
ஜோதிகாவின் பாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன . அதுவும் “முயற்சி பண்ணி தோத்துட்டேன்னு சொல்ல இது விளையாட்டில்ல, ஜஸ்டிஸ்” எனும் வசனம் படத்தின் ஹைலைட்! 
பார்த்திபன் வழக்கம் போல தனது இடத்தை வித்தியாசமாக தக்கவைத்துக் கொள்கிறார். வினோதினியும். 
இந்தியக்குழந்தைகள் நான்கில் ஒருவர் குடும்ப உறவுகளாலோ, நட்புகளாலோ பாலியல் ரீதியாக சீண்டப்படுகிறார் என்று ஒரு புள்ளிவிவரம் படித்த நினைவு. படத்தில் சில வசதிபடைத்த பெற்றோர் தங்களில் பிள்ளைகளை வளர்க்க துப்பில்லாமல் கௌரவத்தை மட்டும் காப்பாற்றிக்கொள்ள படும் பாட்டையும், பணத்தை வாரியிறைப்பதையும், பாதகங்கள் செய்வதையும் சுற்றிவருகிறது. தியாகராஜன் எப்போதும் இப்படித்தான் விளக்கெண்ணையில் வெண்டைக்காயை ஊறவைத்தது போல் நடிப்பாரா!! இவருக்கு பதில் ஜெயப்பிரகாஷ் நல்லாபண்ணிருப்பாரோ!
பாலுமகேந்திராவுக்கு பின் ஊட்டியை வளைத்து வளைத்து காட்டியிருக்கிறார்கள்! அவ்ளோ பொழிவு, அவ்ளோ அழகு! இசை ஊட்டி போல குளுமையா இருக்கு. விவேக் வா செல்லம் பாடலில் ஸ்கோர் செய்கிறார். எல்லோர்க்கும் ஒரே குறைதான். சாட்சியங்கள் இல்லாமல் நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் என்பது தான். சாட்சியைவிட மக்களின் உணர்வே முக்கியம் என்கிற அயோத்தி தீர்ப்பு மேற்கோளாக கொள்ளலாமே!  

பெண் குழந்தை பெற்றோர், பெண்கள் விழிப்புணர்வுக்காக இந்த படத்தை பாருங்கள். ஆண் குழந்தைகளை பெற்றோர், ஆண்கள் படத்தின் இறுதி வரிவரை கட்டாயம் பாருங்கள்! ஆண் குழந்தைகளுக்கு  சக உயிரான பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என கற்பிக்க வேண்டிய காலமிது. இனி ஆண் தேவதைகளுக்கான காலம்! 
 

6 கருத்துகள்:

  1. நல்லதொரு விமர்சனம். பாராட்டுகள்....

    பொற்றோர் - பெற்றோர்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல படம்... எங்கள் குடும்பத்தில் அனைவரும் பார்த்து விட்டோம்...

    பதிலளிநீக்கு
  3. எல்லோர்க்கும் ஒரே குறைதான். சாட்சியங்கள் இல்லாமல் நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் என்பது தான்

    வெண்பாவே ஒரு சாட்சியாகத்தானே நிற்கிறார்.
    மேலும் தியாகராசன், நீதிபதிக்குப் பணம் தருகிறாரே அதுவே, அவர் குற்றவாளி என்பதற்குச் சாட்சிதானே.

    பதிலளிநீக்கு
  4. நல்ல படம் என்று கேள்விப்பட்டேன். உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் எங்கள் ஊரில் இப்படம் வருமா என்று தெரியவில்லை.

    துளசிதரன்

    மைத்து உங்க விமர்சனம் உங்கள் பாணியில் நல்லாருக்கு. பொதுவா பாசிட்டிவ் விமர்சனம் கதைக்கு...எப்போது பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சகா! உண்மையில் நான் மலைத்து நிற்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து விட்டு உடனே திறனாய்வு (விமர்சனம்) எழுதுவதாக நண்பனிடம் சொல்லியிருந்தேன். ஆனால் படத்தில் சோதிகாவின் கதைப்பாத்திரத்தில் இயக்குநர் வைத்திருக்கும் முடிவு வரையிலான திருப்பங்களையும் இன்ன பிற மருமங்களையும் பார்த்த பிறகு இவற்றில் எதையுமே உடைக்காமல் எப்படி எழுதுவது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. ஆனால் நீங்கள் இலைமறைகாயாக அதை எழுதியிருக்கும் விதம் வெகு அசத்தல்! வெண்பா, ஏஞ்சலுக்கும் சேர்த்தே அழுகிறார் எனும் உங்கள் வரி படத்தைப் பார்த்தவர்களுக்குத் தனி விதத்தில் புரியும். கலக்குகிறீர்கள் சகா!

    பதிலளிநீக்கு