செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மனசாட்சிக்கு பெயரிடுதல்

எட்டு வயதில் என் விரல் நீட்டச்சொல்லி 
தொட்ட விரலின் பெயர் வைத்தார் 
என் சித்தப்பா தன் மகளுக்கு !

பிடித்த பெயரெல்லாம் சீட்டெழுதி
எடுத்த பெயர் தான் சூட்டினோம் 
என் அத்தை மகனுக்கு!

நல்ல தமிழ் பெயருக்காய் 
தெள்ளுதமிழ் அகராதி பிடித்து
தேர்ந்தெடுத்தோம் என் மகளின் பெயர்!

இரண்டு சீர் வடமொழி பெயர் வேண்டுமேன கேட்க
இணையத்தில் தேடினோம் - என்
அண்ணன் மகள் பெயரை !

எந்நாளும் என்னுடனே இருந்து 
இதம் தந்தும், இம்சித்தும் கொண்டிருக்கும் 
மனசாட்சிக்கு ஒரு பெயர் தேடிக்களைத்த வேளையில் 

என் உச்சியில் குட்டுவைத்து 
மனசாட்சி சொன்னது 
தன் பெயரை தான் நான் சுமப்பதாய் !!!

36 கருத்துகள்:

  1. உயர்ந்த கவிதைகள் சாதாரணமாகப் புரியாதாம்! உன் கவிதை -இப்போது- அந்த உயர்ந்த இடத்தில் இருக்கிறது. எக்கி எக்கிப் பார்த்தும் பாதிதான் புரிந்தது போ! (இதில்,மூன்றாவது வரியின் “தான் மகளுக்கு“ மற்றும் முடிவுவரியின் “தான் பெயரை“ இரண்டு இடத்திலும் துணைக்காலை ஒடித்துப் படிக்கணுமோ?) உன் தமிழாசிரியர் யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.....சிக்கிடோமே.
      அவர் பாவம் அண்ணா, மனசாட்சி மாதிரி அவரும் அப்போப்போ கொட்டுவார் தான், புத்தி சமயத்தில் பூப்பறிக்க போயிடுது. கால நானே உடைச்சுட்டேன்.இனி கவனமா இருக்க முயற்சிக்கிறேன் (இது எத்தனாவது முறை மைதிலி. நங்.அதுவும் குட்டுதான் ). அவ்வளவு உயரம் வேண்டாம் அண்ணா அடுத்தமுறை நான் தெளிவா இருந்த என் பாட்டும் தெளிவா இருக்குமோ

      நீக்கு
  2. மனசாட்சியை சுமந்துக்கொண்டுதான் வாழ்கிறோம். மனசாட்சியின் படி வாழ்கிறோமா ? என்பதுதான் கேள்விக்குறியாகி நிற்கிறது.அருமையான வரிகள் .வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ தங்கள் வளமான கருத்துக்கும், வருகைக்கும் !

      நீக்கு
  3. பெயரில் உள்ளது அனைத்தும்.அருமைம்மா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சகோதரிக்கு வணக்கம்
    சிந்தையில் தோன்றிய சிறப்பான சிந்தனை ரசிக்க வைக்கிறது. மனச்சாட்சிக்கு பெயரிட போய் குட்டுப்பட்ட சோகத்தை என்னவென்று சொல்வது! இதோ நல்ல மனிதன் போகிறான் ஒருவரைச் சொல்வது அவரின் மனதை வைத்துத் தானே சொல்கிறார்கள்!. நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் வைகிரதுக்குனு இல்ல பலவிசயத்தில் அதுகிட்ட குட்டுப்பட்டால் தானே நம் பாதை தெளியும்.
      நன்றி சகோ தங்கள் வருகைக்கு!

      நீக்கு
  5. சோக்காக் கீதும்மே...! வாய்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா,உங்க 'அல்லாம் போட்டாச்சு போட்டாச்சு ' க்கு நான் பல blog ல பார்த்திருக்கேன்,. what to do? நான் தா.ம வில் இணைக்கலையே:(
      நன்றி முதல் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் !

      நீக்கு
  6. வணக்கம்

    அப்பாடி.... பெயர்வைக்கிறத்திலும்...இப்படியா சங்கதி....
    இறுதியில் சென்னது சரிதான்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் சகோ தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் !

      நீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி டி.டி அண்ணா தங்கள் வருஐக்கும் வாழ்த்துக்கும்!

      நீக்கு
  8. அழகாக சொல்லி இருக்கிறீர்கள் தோழி.

    ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்குகிறோம். சில நாட்களுக்கோ மதங்களுக்கோ அது உதவும். திட்டம் போட்டு பல நாட்கள் செலவழித்து ஒரு விடயத்தை செய்கிறோம் அதுவும் ஒரு சில வருடங்களுக்கோ தான். பெயர் அப்படியா காலமெல்லாம் சுமக்க வேண்டும் அல்லவா. கவனமாக தானே தெரிவு செய்ய வேண்டும்.

    குட்டு பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் பட வேண்டும் என்பார்கள்
    மனச் சாட்சியிடம் தானே பறவாய் இல்லை.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா தோழி, அதுதான் அதே தான். நான் சொல்லவந்ததும்.
      நன்றி தோழி தங்களை போல இலக்கண சுத்தாமாய் எல்லாம் எழுத தெரியாந்துங்கோ! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழி !

      நீக்கு
  9. அட அட என்னவொரு அருமையான சிந்தனை மைதிலி! மனசாட்சி பெருமையா முதுகில் ஒரு தட்டு தட்டட்டும்..வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரேஸ் நீங்க வாழ்த்தும் போதே மனசாட்சி தட்டிடுச்சு!
      நன்றி கிரேஸ்!

      நீக்கு
    2. மீண்டும் இன்று வாசித்து மகிழ்ந்தேன்..இன்னும் இனிமையாய் இருக்கிறது டியர்..

      நீக்கு
  10. மனசாட்சிக்கு பெயர் சூட்டுவிழா கொண்டாட்டம்.
    மனதுக்கு திண்டாட்டம்..!

    பதிலளிநீக்கு
  11. கடைசி வரி அருமை. உண்மையும் கூட வாழ்த்துக்கள் சகோதரி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ,ஓவியா வின் அழகு முகம் கண்ணிலேயே இருக்கிறது!

      நீக்கு
  12. மனசாட்சியின் குட்டு அருமையான குட்டு! மோதிர விரலால் குட்டு என்பது உயர்வாகச் சொல்லப்படுவது போல் மனசாட்சியே அந்த மோதிர விரலாய் இருக்கும் போது நாம் அனைவருமே புற மோதிர விரலைத்தான் தேடுகின்றோம்! இல்லையா சகோதரி!?

    அருமையாக எழுதுகின்றீர்கள்! தங்களது புத்திசாலித்தனம் பளிச்!

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா
      //Lunatics, Lovers & Poets//(சேக்ஸ்பியர்)
      அவ்ளோ தான் !

      நீக்கு
  13. கவிதை படித்து முடித்ததும் பிரமிப்பின் உச்சியில் நான்...

    எத்தனை அற்புதமான ஒரு விஷயம்.. நாம் எல்லோரும் மறக்கும் ஒரு விஷயம்.. பெயர் என்பது அழைப்பதற்காக மட்டுமல்ல...

    நம் நல்லவை கெட்டவை நம் குணநலன்கள் எல்லாம் கலந்தது தான்... மஞ்சு என்று அழைத்தால் ஓ அந்த பெண்மணியா வளவளன்னு பேசுவாங்களே. சிரிப்பாங்களே என்று நம் செயல்களை நினைவுக்கொண்டு நம் பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதை இப்போது உங்கள் வரிகளை படித்தபோது உணரமுடிந்தது. ஞானம் என்பது பெறும் இடத்தைப்பொறுத்து சொல்கிறோம் அது போதி மரம் என்று.. இங்கு என் புத்தியை தெளியவைத்த அற்புதமான வரிகள் கிடைத்ததுப்பா.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா, இது பெரிய வார்த்தை
      என் கண்கள் கலங்கிவிட்டன .
      மிகுந்த நன்றி உங்களுக்கும்
      குட்டிய மனசாட்சிக்கும்
      இல்லன்னா இப்படி ஒரு பெருமை கிடைச்சுருக்குமா?
      மீண்டும் மீண்டும் நன்றி !!

      நீக்கு
  14. மிக அருமையான ஒரு கவிதை! ஆரம்பித்ததும் முத்தாய்ப்பாய் முடித்தவிதமும் வெகு சிறப்பு! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் சார் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!

      நீக்கு
  15. என் தங்கை ராஜி சொல்லி இங்கு வந்தேன். நான் கருத்துச் சொல்ல எதும் பாக்கி வெக்காமல் என் மனசைப் படிச்ச மாதிரி என் ஃப்ரெண்ட் மன்ச்சூ (மஞ்சுபாஷிணி) அழகாச் சொல்லிட்டாங்க. அதை வழிமொழிந்து, உங்களின் கைகுலுக்கிப் பாராட்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப தேங்க்ஸ் பாலா அண்ணா, உங்கள ராஜி அக்கா மாதிரி பெரியஆளுங்க blog ல பார்த்திருக்கிறேன். நீங்க என்னை வாழ்த்த வந்ததுக்கும் , உங்கள இங்கே அழைத்துவந்த ராஜியக்காவிற்கும் மிகுந்த நன்றிகள் பல!

      நீக்கு
  16. என் மகனுக்கு 'மகிழ்நிறை'என்று பெயர் வைத்து உள்ளேன்... வைக்கலாமா ?

    பதிலளிநீக்கு