தொடங்குகையில் தான் மழை
தொடர்வதெல்லாம் உன் நினைவுகள்
கரைவது சர்க்கரையா? உன் புன்னகையா?
சாளரத்திரை அகற்றி
கோப்பைத்தேநீரில் தொட்டுத் தொட்டு
விழுங்குவேன் நம் பகிர்வுகளை !
மின்ரத்தின் நிகழ்தகவாய்
மீட்டேடுபேன் உன் விழியும்,மொழியும்
பேசிய கவிதைகளை-பின்
மார்கழி காலையாய் சிலுசிலுக்கும்
மழை நனைத்த சாலையும்
நீ நனைத்த மனசும்!!
நீ நேரில் பெற்றவை விட
நினைவில் பெற்றவை அதிகம் என்
உனக்கு தெரியுமா?
யாரோ யாருக்கோ எழுதி
யாரோ படிக்கையில்
யாரையோ நினைவு படுத்தினாலோ
யாரோவாக தனை உணர்ந்தாலோ
முற்று பெறுகிறது இக்கவிதை!
மார்கழி காலையாய் சிலுசிலுக்கும்
பதிலளிநீக்குமழை நனைத்த சாலையும்
நீ நனைத்த மனசும்!! -- இதயத்தில் ஒட்டிய ஈர வரிகள்.
மிகப்பெரிய மகிழ்ச்சி (அகப்பாடல்கள்) முதல் சினிமாக்காதலர்கள் வரை தன்னை அதில் பொருத்திப்பார்க்கும் உளவியல்தான் அடிப்படை. இதில் துக்கத்தையும் சேர்க்கலாம் (என்னத்தையாவது பேசி சிரிச்சிக்கிட்டே போயி துக்க வீடு வந்ததும் வேகமா ஓடி ஒப்பாரி வச்சி அழுது மூக்கச் சிந்துற கிழவிகள் இன்னும் உண்டு - பொதுச் சோகத்தைத் தன் சோகமாக்கிய கிழவி) இந்தப் பகிர்தலில்தான் உலகமே ஈரம் காயாமல் கிடக்கிறது. தலைப்பும் நச்சுன்னு இருக்குப்பா. தொடரட்டும் மழையும் கவிதையும்.
(என்னத்தையாவது பேசி சிரிச்சிக்கிட்டே போயி துக்க வீடு வந்ததும் வேகமா ஓடி ஒப்பாரி வச்சி அழுது மூக்கச் சிந்துற கிழவிகள் இன்னும் உண்டு - பொதுச் சோகத்தைத் தன் சோகமாக்கிய கிழவி)
நீக்குகருத்தை காட்சிப்படுத்த அண்ணனிடம் தான் கற்கவேண்டும்!
ஹை! தலைப்பு நல்லாருக்குன்னு அண்ணன் சொல்லிடாரே :)))))
படங்களும் கவிதை வரிகளும் வெகு சிறப்பு ! வாழ்த்துக்கள் தோழி .
பதிலளிநீக்குநன்றி தோழி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் !
நீக்குஅப்புறம் அந்த குட்டி பாப்பா க்யூட் பாப்பா!
ஜில்லென்ற வரிகள்...
பதிலளிநீக்கு/ நினைவில் பெற்றவை அதிகம் /
வாழ்த்துக்கள்...
நன்றி DDஅண்ணா ! ஆனால் இன்னும் தமிழ்வெளி வொர்க் அவுட் ஆகல :(((
நீக்குஎன்ன வேலைண்டைன் தின கவிதையா அசத்துங்க
பதிலளிநீக்குரொம்ப டாங்க்ஸ் கோ !
நீக்குவெளியில் பெய்யும் மழையில் நனைவது உடல்
பதிலளிநீக்குஆனால் உள்ளே பெய்யும்
காதல் மழையில் நனைவது
என் மனசுதான்
இரண்டும் சுகமாகவே இருக்கிறது
ஒய்? தமிழன் சகோ ஒய்?
நீக்குஉங்களுக்கு தான் அரசியல், நகைச்சுவைன்னு நிறைய இருக்கே?
இப்படி நீங்க கவிதைவேற எழுத கிளம்பினால் என் பிழைப்பு என்ன ஆகுறது! சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !
வணக்கம்
பதிலளிநீக்குதித்திக்கும் கவி வரிகள்.... இரசித்தேன்.
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!
நீக்குகதகதப்புக்காக தயாராகும் தேநீரில்
பதிலளிநீக்குகரைவது சர்க்கரையா? உன் புன்னகையா?
அருமையான கற்பனையும் வரிகளும். வாழ்த்துக்கள் தோழி....!
நன்றி தோழி! வாழ்த்தியது காவியகவியால்லவா ?
நீக்கு//கதகதப்புக்காக தயாராகும் தேநீரில்
பதிலளிநீக்குகரைவது சர்க்கரையா? உன் புன்னகையா?// அட அட சர்க்கரை சேர்த்ததைவிட இனிக்குமே..
// மார்கழி காலையாய் சிலுசிலுக்கும்
மழை நனைத்த சாலையும்
நீ நனைத்த மனசும்!! // குளிர்ச்சியை உணர முடிகிறது தோழி!
// நீ நேரில் பெற்றவை விட
நினைவில் பெற்றவை அதிகம் என்
உனக்கு தெரியுமா?// இதப் படிச்சு தெரிஞ்சுப்பாங்க :)
கவிதை அருமையோ அருமை! வாழ்த்துகள் தோழி!
ஒ! வரிக்கு வரி ரசிச்சுருக்கீங்களே!
நீக்குதென்மதுரத்தமிழே நன்றி!
+1க்கும் நன்றி கிரேஸ்!
நீக்குகாதலர் தினக்கவிதை அருமை சகோ.
பதிலளிநீக்கு"அந்த யாருக்கோ,யாரோ" - எல்லாம் உங்களுடைய மலரும் நினைவுகள் தானே?
ஹல்லோ சகோ,,,, ஏன் இப்போ பாடக்கூடாதா?
நீக்குஹா ....ஹா....ஹா ....நன்றி சகோ.
(எப்படிதான் பார்த்தவுடனே கண்டுபிடிக்கிறாங்களோ?)
மார்கழி காலையாய் சிலுசிலுக்கும்
பதிலளிநீக்குமழை நனைத்த சாலையும்
நீ நனைத்த மனசும்!!
அருமையாக காதல், மழைத்துளிகளுடனே கலந்து சொட்டச் சொட்ட இப்பையொரு மழை பெய்தால் யார் தான் காதலிக்க மாட்டார்கள்!
அருமை! மிகவும் ரசித்தோம்!
துளசிதரன், கீதா
ரொம்ப சந்தோசம்ங்க தம்பதி சகிதம்
நீக்குகாதலர் தினத்தில் பாராட்டியமைக்கு !
"யாரோ யாருக்கோ எழுதி
பதிலளிநீக்குயாரோ படிக்கையில்
யாரையோ நினைவு படுத்தினாலோ
யாரோவாக தனை உணர்ந்தாலோ
முற்று பெறுகிறது இக்கவிதை!"
நான்கே வரிகளுக்குள் எத்தனை அர்த்தம். அந்த வரிகளை மட்டும் 4 தடவை வாசித்திருப்பேன். அசத்தலான கவிதை தொகுப்பு..... மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்....
நன்றி சகோ!
நீக்குதங்கள் வாலண்டைன்ஸ் டே பதிவு அருமையாக,
சமூக பொறுப்போடு இருந்தது.
மழையாய் கொட்டிய கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சார், ரசனையான கருத்துக்கு !
நீக்குஉண்மை.....நினைவுகளின் வீழ்ச்சியாய் மழைத்தோரணங்கள்.அருமை.
பதிலளிநீக்குநன்றி டீச்சர்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !
நீக்கு
பதிலளிநீக்குயாரோ யாருக்கோ எழுதி
யாரோ படிக்கையில்
யாரையோ நினைவு படுத்தினாலோ
யாரோவாக தனை உணர்ந்தாலோ
முற்று பெறுகிறது இக்கவிதை!//
மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம் சார் தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் !
நீக்குகவிதையை முடித்துவைக்கும் வரிகள் காதலை நீட்டிக்கும் அதிசயம். வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுகள் மைதிலி.
பதிலளிநீக்குநன்றி மேடம் ! நீங்க தான் உலக லெவல் ல கலக்குரிங்களே!
நீக்குமழை நனைத்த சாலையும்... நீ நனைத்த மனசும்... சூப்பர்ப்! எனக்கு மழையும் பிடிக்கும், அது சார்ந்த கவிதை, கதைகளும் பிடிக்கும். இங்கும் மனசு ஜில்லென்றாகிட்டது மைதிலி! அசத்தறீங்க!
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா வருகைக்கும், பாராட்டிற்கும்!
நீக்குமிக அருமையாய், மனதில் மழையாய் இனித்தது கவிதை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு