கோடையின் இறுதிநாள் வரை
கொடுந்தகிப்பை பொறுத்து காத்திருக்கும்
வேர் அழுந்த ஊன்றி
வெற்றுக்கிளைகளோடு ஒற்றை மரம்.....
எஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
என்றென்றும் தேக்கி வைக்கும்
அண்டிவரும் உயிர்களுக்காய்
அன்பு எனும் அரிய வரம்!
கூடு தொலைத்த குருவியொன்று
நாடிவந்து மலர்த்தக்கூடும்
வாடி நிற்கும் மரத்திற்காய்
வசந்தத்தின் மெல்லிதழை....
நெடுங்கனவை ஊடறுத்து
தொடும் நினைவின் விரல்களைப்போல
நெற்றி சுடும் ஞானம் தரும்
முற்றம் நிற்கும் வேப்பமரம் !!
கொடுந்தகிப்பை பொறுத்து காத்திருக்கும்
வேர் அழுந்த ஊன்றி
வெற்றுக்கிளைகளோடு ஒற்றை மரம்.....
எஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
என்றென்றும் தேக்கி வைக்கும்
அண்டிவரும் உயிர்களுக்காய்
அன்பு எனும் அரிய வரம்!
கூடு தொலைத்த குருவியொன்று
நாடிவந்து மலர்த்தக்கூடும்
வாடி நிற்கும் மரத்திற்காய்
வசந்தத்தின் மெல்லிதழை....
நெடுங்கனவை ஊடறுத்து
தொடும் நினைவின் விரல்களைப்போல
நெற்றி சுடும் ஞானம் தரும்
முற்றம் நிற்கும் வேப்பமரம் !!
ரசித்தேன் அரிய வரத்தை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
ஆனாலும் இம்புட்டு சுறுசுறுப்பு ஆகாது!!!
பதிலளிநீக்குஅண்ணா எனக்கு கண்ணை கட்டுது !!
நன்றி !நன்றி! நன்றி!
சின்னக் கவிதை எனினும்
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கிறது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
நன்றி சார். இதோ வரேன் !
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகூடு தொலைத்த குருவியொன்று
நாடிவந்து மலர்த்தக்கூடும்
வாடி நிற்கும் மரத்திற்காய்
வசந்தத்தின் மெல்லிதழை....
ஆகா.....ஆகா.... என்ன வரிகள்.... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் சகோ .ரசித்தமைக்கும் கருத்திற்கும் !
நீக்குநம்பிக்கையின் வேர்கள் !!! இங்கே வரிகளாக ஊருடுவுகின்றன
பதிலளிநீக்குஒ! ரசனையான கருத்து !
நீக்குநன்றி தமிழன் சகோ!
அவர் வலையுலகத்தையே கட்டுக்குள் தானே வைத்துள்ளார்
பதிலளிநீக்குகரக்டா சொன்னீங்க !
நீக்குவருகைக்கும் ,+ ஒண்ணுக்கும் நன்றி சார்!
/நெற்றி சுடும் ஞானம் தரும்
பதிலளிநீக்குமுற்றம் நிற்கும் வேப்பமரம் !!// இந்த இருவரிகளில் எவ்வளவு அழகு!!!உண்மை!
மிக அருமையான கவிதை மைதிலி!
வாங்க கிரேஸ் ! ரொம்ப நன்றி !!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான வரிகள். நம்பிக்கையோடு நடைபோடும் எந்த ஒரு பயணமும் தோற்பதில்லை. கவிதைக்குள் குட்டிக்கதையாய் தான் எனக்கு தெரிந்தது. தொடருங்கள் சகோதரி. நன்றி..
கரக்டா சொல்லிடீங்க !
நீக்குஅதுல ஒரு கதை இருக்கு !
நன்றி சகோ ஊன்றிபடித்தமைக்கு !
அருமைக்கவிதை.
பதிலளிநீக்குநன்றி நேசன் சகோ!
நீக்கு"//அண்டிவரும் உயிர்களுக்காய்
பதிலளிநீக்குஅன்பு எனும் அரிய வரம்!//"
ரசிக்க வைத்த வரிகள்.
வாழ்த்துக்கள் சகோ.
வாங்க சகோ.மிக்க நன்றி !
நீக்குஎஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
பதிலளிநீக்குஎன்றென்றும் தேக்கி வைக்கும்
அண்டிவரும் உயிர்களுக்காய்
அன்பு எனும் அரிய வரம்!
மிக மிக அருமை தோழி மரங்களுக்கு கூட எவ்வளவு அன்பு எத்தனை நம்பிக்கை. .ஓவொன்றும் அருமையான வரிகள் நன்றாகவே ரசித்தேன்....! வாழ்த்துக்கள் தோழி
நன்றி இனியா .ஒவ்வொரு முறையும் மனத்துக்கு நெருக்கமாகிரீர்கள்!
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குசகோதரியாரே
நன்றி
நன்றி அண்ணா !
நீக்குநம்பிக்கை பொதிந்த அழகான வரிகள். வாழ்த்துகள் தோழி.
பதிலளிநீக்குநன்றி முகில்!
நீக்குநம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை
பதிலளிநீக்குஆஹா ! ராஜியக்கா
நீக்குமுதல் கருத்துக்கு நன்றி அக்கா !
ரசித்தேன். அருமையான வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஆதி மேடம்!
நீக்குரசனையான கவிதை.வாழ்த்துக்கள்மா
பதிலளிநீக்குநன்றி டீச்சர்
நீக்குஎஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
பதிலளிநீக்குஎன்றென்றும் தேக்கி வைக்கும்
அண்டிவரும் உயிர்களுக்காய்
அன்பு எனும் அரிய வரம்!//
அன்பு எனும் இந்த அரிய வரம் நம் அகத்தில் இருந்து விட்டால் நம் அகம் (வீடு) சிறியதாக இருந்தாலும், பலரைத் தாங்கும் சக்தி உள்ளதாய் இருக்கும்! ஆறறிவு படைத்த நாமும் தேக்கி வைப்போம் இந்த அன்பு எனும் அரிய வரத்தை!!
அருமையான,சிந்திக்க வைக்கும் வரிகள்!
பாராட்டுக்கள்!
so நம்ம அகம் என்னும் வார்த்தையில் வீடு கட்டிடீங்களே ?
நீக்குநன்றி சகோ!
கவிதையின் முத்தாய்பான
பதிலளிநீக்குஇருவரிகள் மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி சார்,உங்கள மாதிரி பஞ்ச கொடுக்க முடியுமா?!
நீக்குநெற்றி சுடும் ஞானம் தரும்
பதிலளிநீக்குமுற்றம் நிற்கும் வேப்பமரம் !! - அடடே!
போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம்,
வேப்ப மரத்தடியில் என் தங்கைக்கு ஞானம்! மரபு மரபு மரபு ஓசை வருது... அதை இன்னும் உட்காந்து கத்துக்கிற பொறுமை இல்லதானே?
ஆஹா ! கண்டுபிடிச்சிடிங்களா ?
நீக்குகத்துக்குறேன் அண்ணா!
இதை எழுதி முடித்தவுடன்
உங்ககிட்ட அப்ரூவல் கிடைக்குமான்னு
ரொம்ப பதற்றமா இருந்துச்சு அண்ணா
ரொம்ப ரொம்ப நன்றி!
நம்பிக்கை தந்த கவிதை......
பதிலளிநீக்குபாராட்டுகள்.