புதன், 12 பிப்ரவரி, 2014

பெருநகர மழை நாட்கள்!


சில சமயங்களில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. பெருநகர மழை என்றொரு வார்த்தை என் புத்திக்குள் இருந்து கொண்டு என் எல்லா கவிதைகளில்
தலை நீட்ட  தொடங்கியது சில காலமாய். பின் அதன் தொந்தரவு தாங்காது அதற்காகவே ஏதேனும் எழுதிவிடலாம் என தோன்றிய நாளில், காத்திருந்த தென்றலாய் பேனாவை தழுவிது இக்கவிதை!?


கை நீட்டி களித்திருக்க
உழவர் பெற்ற மக்கள் இல்லை
காகிதத்தில் கப்பல் விட
முற்றம் வைத்த வீடு இல்லை
ஓய்ந்தபின்பு பார்த்திருக்க
ஒளிர்பச்சை இலைகள் இல்லை


சாலை எங்கும் நீர் பெருக
சாக்கடையும் அடைத்துக்கொள்ள
வேலைநாளில் வந்துவிட்ட 
வேண்டாத விருந்தினர் போல்
வெறுப்புக்கும், சலிப்புக்கும்
ஆளாகிறது -பெருநகரில் என்
விருப்ப மழை நாட்கள் !!


மீள்பதிவு தான் மேலும் வருத்தத்துடன்......

30 கருத்துகள்:

  1. உள்ளம் குதூகலிக்கச் செய்யும் மழை - சில சமயங்களில் நம் வெறுப்பிற்கு பாத்திராமாகவும் ஆகித் தான் போகின்றன. அழகான கவிதை தோழி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. எல்லா இல்லைகளும் நம்மால் தான்...

    அதிக வெயில் அடித்தாலும் வெயிலை திட்டுவதும் இல்லை தானே...?

    பதிலளிநீக்கு
  3. நன்றாக ரசித்தேன் ! அருமையான யதார்த்தமான வரிகள். தொந்தரவு செய்து காரியத்தை செவ்வனே செய்து முடித்து விட்டது.

    நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இனியா தாங்கள் சந்தக்கவிதையில் கலக்குபவர் ஆயிற்றே!

      நீக்கு
  4. அருமை தோழி! பெருநகர மழை பற்றி அழகாகச் சொல்லிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரேஸ் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!

      நீக்கு
  5. உனக்கு மரபுக்கவிதையும், சந்தக் கவிதையும் இயல்பாவே வருதுன்னு சொன்னா “தங்கை கவிதையை அண்ணன் அப்படித்தானே பாராட்டுவீங்க“ என்று சொல்வாய். ஆனால், இது உண்மையிலேயே சந்தம் இழையோடும் ஓர்அழகிய மரபுக்கவிதைதான். இதன் நயங்களை எழுதச்சொன்னால் நான் இரண்டுபக்கமாவது எழுதுவேன்.கடைசி இரண்டு வரி மட்டும் கொஞ்சம் நீண்டுவிட்டது. அழகான, நகரனுபவ -மழைக்கு ஏங்கும்- எதார்த்தக் கவிதையும்கூட. பாராட்டுகள்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் அண்ணா கடைசி வரி நீண்டுவிட்டது.
      அடம்பிடித்து அதுவே ஜனித்த கவிதை!
      அண்ணனின் வழிகாட்டுதல் இருக்க, கவலை எதற்கு?

      நீக்கு
  6. இல்லை இல்லை என்று நீங்கள் சொல்வதில் இன்னுமொரு இல்லை சேர்த்து இருக்கலாம்.
    ""மழையில் நனைந்துவிளையாட நாம் இப்பொது சிறு குழந்தையாய் இல்லை""

    அந்த மழை வந்ததினால்தானே இப்படி ஒரு அற்புதமான கவிதை உங்களிடம் பிறந்திருக்கிறது..பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ""மழையில் நனைந்துவிளையாட
      மழலையாய் நாம் இன்று இல்லை""
      இந்த பிட்டு உங்ககிட்டதான் இருந்துச்சா ?
      அட !அவ்ளோ அழகா பொருந்துதுங்க அப்டின்னு சொன்னேன்!
      தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  7. மழை தரும் இன்பம் மறக்க முடியாத ஒன்றே .சில நகரங்களில்
    மழை வந்தால் நரகம் தான் .சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் .

    பதிலளிநீக்கு
  8. சகோதரிக்கு வணக்கம்
    அழகான தென்றல் கேசம் கோதிப்போகும் உணர்வு உங்கள் கவிதையில் தெரிகிறது. எதார்த்தம் கவிதை எங்கும் கரைபுரண்டு ஓடுவது அழகு. அற்புதம் சகோதரி. தொடர்ந்து கலக்குங்கள். பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ,வர வர தம்களை போன்றோர் படிக்கும் பதிவு என்ற எண்ணம்
      என்னை பதட்டம் அடையசெய்கிறது !கவனமா இருக்கனும்ல .
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  9. அனைவரிடத்திலும் உள்ள ஆதங்கம்
    அருமையான கவிதையாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் இப்பதான் உங்க பதிவை படிச்சேன்.
      (அரைவேக்காட்டு :(
      நன்றி சார் வருகைக்கும், வாழ்த்துக்கும் .

      நீக்கு
  10. அருமையான ஒரு மழைக்கவிதை. வாழ்த்துக்கள் சகோ.
    "//காகிதத்தில் கப்பல் விட
    முற்றம் வைத்த வீடு இல்லை//" - இந்த காலத்தில் தான் வீடுகள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்பு என்ற பெயரில் தீப்பெட்டி டப்பா அளவில் சுருங்கிவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம் தான் சகோ!
      நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

      நீக்கு
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

    பதிலளிநீக்கு
  12. DD அண்ணா மிக்க நன்றி.
    ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்கிறேன்.
    உண்மையான உதவும் கரம் நீங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை.இதமாய் மனதை வருடுகின்றதும்மா. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. ஒரு விஷயம் கவனிச்சீங்களோ மைதிலி...! இந்தப் பெருநகர மக்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கையில் வந்தால் மழை தேவதை...! அவளே வெளியில் செல்கையில் வந்தால் சனியன்! ஹைய்யோ... ஹைய்யோ...! எனக்கு மழையில் நனைவதும் பிடிக்கும், மழையும் பிடிக்கும். சாலைகளில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து தேங்குவது மட்டும் பிடிக்காது. உங்களின் கவிதை என் மனசுக்குள்ளும் ஒரு (மானசீக) மழையைப் பெய்ய வைத்துட்டுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் தான் அவசர வாழ்வினால் நம் நகரங்களை
      நரகங்கள் ஆகிவிட்டோம் ! பின் மழையை குறைகூறுகிறோம்!
      படிச்சுட்டே இங்க வரை வந்துடிங்களே! அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசம்ங்க !

      நீக்கு
  15. சகோ அருமையான கவிதை. எப்படி இப்படி முன்னாடியே கணித்துவிட்டீர்களோ...யார் காரணம் என்று சொல்லவே வேண்டாமே. எல்லோரும் பலவகைகளிலும் சொல்லித் தீர்த்தாயிற்று...ஆதங்கத்தை..

    கீதா: அருமை மைத்தூ. ஆனால் சோகம் அப்புது. ம்ம்ம் மழை ரொம்பப்பிடிக்கும். அதன் சத்தம் தாளம் போடுவது போலும், ரிதமிக்காக அந்தத் துளிகள் கீழே விழுந்து தண்ணீரில் ஒரு வட்டம் உருவாகுமே அது.நீர்க்குமிழிகள், சிறு சிறு ஓடைகளாக ஓடுமே வீட்டின் முன் உள்ள மண்ணில், நிலப்பரப்பில்...அப்போது நினைப்பதுண்டு ஒவ்வொரு ஓடலின் அளவைப் பொறுத்து "இது எறும்புகளுக்கு நைல் நதி, காவேரி என்றும்...சிறிய அளவில் தேங்கியிருப்பதை எறும்புகளுக்குக் கடல் என்றும் குளம் என்றும் கற்பனை செய்து....சிறுவயதில் மட்டுமல்ல மகனுடனும் சேர்ந்து பேசி ரசித்ததுண்டு.

    நனைவது என்றால் கொள்ளைப் பிரியம். எங்கள் கிராமத்தில் ஹும் இப்போது சென்னை நகரம்...சாரி நரகம் சாக்கடைத் தண்ணீருடன் வருவதை ரசிக்க முடியவில்லையே..

    நாம் தான் அதற்கும் காரணம். இங்குள்ளவர்கள் எல்லோரும் இயற்கைச் சீற்றம் என்று சொல்லுவது மனதிற்கு வருத்தமாகத்தான் உள்ளது..

    வரிகளை ரசித்தோம் நீங்கள் சொல்லியிருப்பது போல் வேதனையுடன்..

    பதிலளிநீக்கு
  16. எல்லாம் விரைவில் சீராக வேண்டும் என்கிற ப்ரார்த்தனையுடன்..

    பதிலளிநீக்கு