மணப்பாறைக்கு எப்போது போனாலும் பிள்ளைகளை என் அத்தைகள், அண்ணிகள் பொறுப்பேற்றுக்கொள்ள நான் என் அப்பத்தாவிற்கு குழந்தையாகிவிடுவேன். தாத்தாவின் ஈஸிசேரில் அமர்ந்தபடி மின்சாரம் போனதுகூட தெரியாதபடி படித்தபடி இருப்பேன். தன் புடவை தலைப்பால் என் வியர்வை துடைத்து, தட்டில் உணவிட்டு ஊட்டிவிடவா எனும் அப்பத்தா, விடியவிடிய ஏதேனும் படித்த இருக்கும் நாட்களில் உடம்பை கெடுத்துக்கொள்ளாதே என வருந்தும் அப்பத்தா, எப்போது வீட்டு சென்றாலும்
ஓடிவந்து அணைத்து முத்தமிடும் அப்பத்தா, இரண்டாவது பெண்ணாய் மகியை பெற்றபோது படித்த சிலரே இதுவும் பெண்ணா என கேட்டு நோகடிக்க, அட விடுய்யா, உனக்கும் பிரசவம் பார்த்த டாக்டர் அம்மாவுக்கு எண்பது வயசு. என்ன டிப்பு டாப்பா இருந்துச்சு! என உற்சாகம் கொடுத்த அப்பத்தா, நான் தலை சாய்க்க நினைக்கும் போதெல்லாம் தன் மடியை தலையனையாக்கிய அப்பத்தா, என் சின்ன வயதில் நான் வீட்டுபாடம் முடிக்க என் முதல் மாணவியாகி, பள்ளிகூடத்தையே பார்க்காமல் என்னிடம் படித்த drumstick, brinjal, crow, peacock போன்ற வார்த்தைகளை அழகாய் உச்சரித்து என் மகள்களை வியப்பில் ஆழ்த்திய, போதும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடந்த ஞாயிறு பிரியாவிடை பெற்றுவிட்டார். இப்போது தமிழன் சகா கேட்டிருக்கும் கேள்விகள் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள உதவுகின்றன. (தமிழன் சகாவிற்கு; மன்னிக்கவும் என்னால் பத்து பேருக்கு அனுப்பமுடியவில்லை. மேலும் இந்த பதிவை நீங்களே லிங்க் செய்தால் எனக்கு உதவியாய் இருக்கும்)
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
சாதிக்க அத்தனை காலம் எடுத்துக்கொள்ள மாட்டேன் என நம்புகிறேன், நூறு வயது என்னளவில் தண்டனை என்றே தோன்றுகிறது # பொல்லாத முதுமை.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
இயல்பை தொலைக்காமல் இருக்கும் இயல்பை.
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
என் குடும்பம் என் கண்ணாடிபிம்பம். எனவே அவர்களுக்காக நான் புன்னகைத்தபடியே தான் இருக்கவேண்டியுள்ளது:) (குறள் எண்597)
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
என் மகள்கள் படம் வரைந்து ஓயும்வரை ஏதேனும் படிப்பேன். புயல் சின்னம் தோன்றினால் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களோடு stone, paper, scissor விளையாடுவேன்.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
ஆண்கள் உடலால் தான் வலிமையானவர்கள், நாம் தான் மனதளவில் வலிமையானவர்கள். உன் கணவரை கண் கலங்காமல் வைத்துக்கொள்.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
ஈழத்தில் என் தமிழ் உடன்பிறப்புகள் படும் துயரை.(கண் தானத்திற்கு அட்டை வைத்திருக்கிறேன். என் கண்கள் கண்டிப்பாய் அந்த நாளை காணும்)
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
எனக்கு பத்துவயதிலேயே என் தந்தை எனக்கு நியமித்த என் friend, philosopher, guide, ஆம் புத்தகங்கள். அதிலும் பெரும்பாலும் திருக்குறள் (குறள் 341,198)
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
நாம் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்வேன்.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
கணவனை இழந்த பெண்களின் ஆயுட்காலத்தை விட மனைவியை இழந்த கணவனின் ஆயுட்காலம் குறைவு என்கின்றன ஆய்வுகள். என் முதிய நண்பனான என் தாத்தாவிடம் சொன்னேன். மனத்தை திடப்படுத்து தாத்தா, உன்னைவிட்டால் இந்த வீட்டில் எனக்கு ஆதரவு யார்?( அவர் ஈகோவை திருப்தி படுத்தி, அவர்க்கு கீழ்பணிய இன்னும் ஆள் இருக்கிறது என்கிற
மனோத்தத்துவ உத்தி)
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
பார்க்க http://makizhnirai.blogspot.com/2014/06/game-starts.html
உணர்வுபூர்வமான பதிவு.மனதைத் தொடுகின்றதும்மா
பதிலளிநீக்குநன்றி டீச்சர் !
நீக்குகேள்வியும் பதிலும் அருமை...
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குசிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீ ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி அழவும், சிரிக்கவும் வைத்தால் எப்படி பா? ஒரே நேரத்தில் 100வயசு மாதிரியும், இருபது வயசு மாதிரியும் தெரியிது.. நல்லா இரு.
பதிலளிநீக்குதங்கள் ஆசிகள் அண்ணா! பார்ட் டூ பாருங்க ப்ளீஸ் :)
நீக்குமதுரைத் தமிழனின் வேண்டுகோளுக்கு இணங்கி உங்கள் கடமையை
பதிலளிநீக்குநாம் கண்டு பெருமை கொள்ளும் வண்ணம் நிறைவேற்றி விட்டீர்கள் தோழி
எஞ்சி இருப்போர்களின் பட்டியலில் நானும் உள்ளேனே என் செய்வேன் :))))
பகிர்வு போடணும் நாளைக்குப் பார்க்கலாம் :)) வாழ்த்துக்கள் தோழி .
நன்றி.உங்கள் பதில்களை பார்க்க ஆவலாய் இருக்கிறேன் ரூபிகா மேடம்
நீக்குசுய பரிசோதனை செய்து கொண்டு உள்ளேன்
பதிலளிநீக்குஅனைவருக்குமான அவசியமான கேள்விகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
விரைவில் தங்கள் பதில்களை ஆவலோடு எதிர் பார்க்கிறேன் :)
நீக்குநன்றி அய்யா த.ம விற்கும் சேர்த்து:)
அன்புத் தோழி, உங்கள் மனவலி புரிகிறது..என் ஆழ்ந்த இரங்கல்கள். எப்படிப்பட்ட அன்புள்ளம்! அவர் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.
பதிலளிநீக்குhugs to you dear Mythily.
ரொம்ப ஆறுதலாய் இருக்கு தோழி. இதன் பார்ட் டூ பாருங்க (i felt ur hug dear:) thank u sooo much)
நீக்குஆஹா..பார்ட் டூ இருக்கா? இது எனக்குத் தெரியாம போச்சே..அப்பத்தா மட்டும் தான் தெரிஞ்சாங்க..
நீக்குஇருந்தாலும் பாத்துருவோம் ஒரு கை :)
வணக்கம் அக்கா
பதிலளிநீக்குமிகவும் நெகிழ வைக்கும் பதிவு அதே சமயம் உங்கள் விடைகள் மிகவும் அழகு. அப்பத்தா அவர்கள் பிரியாவிடை பெற்ற செய்தி என் குடும்பத்தினர்களின் கண்களைக் குளமாக்கத் தவறவில்லை. அப்பத்தா எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும் உங்கள் மனத்துயரம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்ததால் வந்த விளைவு அது. எல்லாம் கடந்து போகும் அக்கா. நீங்கள் வழக்கமான சூழலுக்கு திரும்ப வேண்டுமென்பதே இந்த தம்பியின் ஆசை. தாத்தா மட்டும் அல்ல மணப்பாறையில் உங்களின் வருகையை எதிர்பார்த்து நம் குடும்பமும் இருக்கிறது என்பதை மறந்த விட வேண்டாம். அடிக்கடி வர வேண்டும். சந்திப்போம் அக்கா.
மணப்பாறையில் உங்களின் வருகையை எதிர்பார்த்து நம் குடும்பமும் இருக்கிறது//
நீக்குஉங்கள் அன்புக்கு நான் மிகவும் கடமை பட்டிருக்கிறேன் சகோ :)
நிச்சயம் சந்திப்போம்:)
73 வயது இருந்ததே நான் எதிர்பார்த்திராத ஒன்று.
பதிலளிநீக்கு100 வயது வேண்டாம்.
100 பேர் என்னை நினைவு வைத்திருக்கும் வகையில்
உபயோகமாக ஏதும் செய்யவேண்டும்.
கடந்த மூன்று மாத காலமாக வெஸ்டர்ன் கிளாசிகல் நோட்ஸ் கற்று கொண்டு இருக்கிறேன். தமிழ் இசைக்கும், மேல் நாட்டு இசைக்கும் இடையே உள்ள தூரத்தை கடக்க முயலலாம் என்று இருக்கிறேன்.
எனினும் பொழுதினை போக்குவதற்கான தந்திரம் தானோ எனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை எழும்போதே என்னையே பார்த்து சிரித்துக்கொள்கிறேன். இன்று என்னதான் வெட்டி முறிக்கப்போகிராயோ ? என்ற எண்ணம் இந்த உதவாக்கரை மனதில் எழுகிறது . உண்மை.
எனக்கு திருமணம் ஆன உடனேயே பவர் கட் ஆகிவிட்டது. அலுவலகத்து பவர் எல்லாம் உடான்ஸ். அந்த சேரில் இருந்து விடை பெற்றவுடன் எல்லா பவரும் பவுடர் ஆகிப்போனது.
கல்லால் அடித்த அடி வலிக்காது. சொல்லால் அடித்த அடி இன்னும் வலிக்கும். தன்னை நம்பி வந்தவளை மென்மையாகப் பார்த்துக்கொள்.
நமது வீதிகளில் சாக்கடை நீர் புரண்டு ஓடுவதை, தேங்கி நிற்பதை தவிர்க்க முயலுவேன்.
அட்வைஸ் என்பது இந்தக் காலத்தில் கேட்டுப் பெறுவது அல்ல.
நான் அட்வைஸ் பெரும் இடம் என்னில் பாதியாகவே இருக்கிறது.
do not get worried over things on which u do not have control என 1977 ல் எனது நண்பர் சொன்னது நினைவுக்கு
வருகிறது.
அண்மையில் என் நண்பரின் மனைவி காலமானாள். யார் எப்போது சென்றாலும் அன்னம் அளித்த அன்னை எனத்திகழ்ந்த அவள் கால்களில் ரோசா மலரைச் சாற்றினேன். அஞ்சலி செலுத்திய பின், எனது நண்பரின் கண்களை , ஒரு 20 வினாடிகள் நோக்கினேன். விதி வலியது. சொல்லாது சொன்னேன் .
இசை கேட்பேன். அல்லது இசை அமைப்பேன்.
சுப்பு தாத்தா.
நீக்குஉங்களின் அனுபவ பதில்கள் மிகவும் சிந்திக்க வைக்கிறது....பாராட்டுக்கள். நான் முதலில் கேள்விகள் தயாரித்த போது விளையாட்டுத்தனாமாக கேட்டு அதற்கு நகைச்சுவையாக பதில் எழுதினேன். ஆனால் எழுதி முடித்தவுடன் எனக்கே நான் கேட்ட கேள்விகள் சிந்திக்க வைக்க கூடிய கேள்விகளாக என் மனதில் பட்டதால் ஏன் இதை தொடர் பதிவாக போட்டு மற்றவர்களின் கருத்தை கேட்க கூடாது என்று தோன்றியது... அதற்குகேற்றவாறு பதில்கள் மிக அருமையாக வந்திருக்கிறது....... வாழ்க வளமுடன்
சூரி சார் நான் பார்த்துபார்த்து வியப்பது உங்களை தான். என்ன ஒரு தேடல்!! என்ன ஒரு நினைவாற்றல்!! எனக்கும் உங்கள் வயது வரை கண் பழுதாகாமல் இருந்தால்( க்ளைகோமா ஜீன்) உங்களை போலவே கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தான் என் அவா:)
நீக்குசுப்பு தாத்தா, நீங்கள் நூறாண்டு இருக்க வேண்டும்..நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும்.
நீக்குஉங்கள் தேடலும் சுறுசுறுப்பும் வியக்க வைக்கிறது.
சுப்பு தாத்தா you are a FANTABULOUS person !!!
நீக்குஉங்கள் கிட்ட நான் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு !!!!
ஆழ்ந்த வருத்தங்கள் உங்கள் அன்பு பாட்டியின் பிரியாவிடைக்கு... உங்களின் துயர நேரத்தில் உங்களை பதிவிட அழைத்தற்கு மன்னிக்கவும்... உங்களின் பதில்களில் உங்களின் புத்திசாலித்தனம் பிரகாசமாக ஜொலிக்கிறது பாராட்டுக்கள் & நன்றி
பதிலளிநீக்குஉண்மையில் இந்த பணி என்னை கொஞ்சம் மடைமாற்றிகொள்ள உதவியது , மிக்க நன்றி சகா உங்க friendsல என்னையும் சேர்த்துகிட்டதுக்கு :)
நீக்கு///5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
பதிலளிநீக்குஆண்கள் உடலால் தான் வலிமையானவர்கள்,////
ஆண்கள் உடல் வலிமைமிக்கவர்கள் என்பது அந்தகாலம்
///நாம் தான் மனதளவில் வலிமையானவர்கள்.///
எல்லா காலமும்
//உன் கணவரை கண் கலங்காமல் வைத்துக்கொள்.///
கல்யாணம் ஆனால் பூரிக்கட்டையை மட்டும் கையில் எடுக்க வேண்டாம் என்றுதானே மறைமுகமாக சொல்லி வருகிறீர்கள்
ஹா...ஹ...ஹா... புரிந்தால் சரி:))))
நீக்குகுறள் 341,198...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
//குறள் 341,198///
நீக்குஹலோ தி.தனபாலன் & மைதிலி நம்பரை சொன்னால் என் போல உள்ள மரமண்டைக்கு என்னவென்று தெரியும் அதனால் அது என்ன குறள் என்பதையும் அதுக்கான விளக்கத்தையும் தரவும். இல்லையென்றால் நீங்கள் கோட் வோர்டில் என்னை திட்டுவதாகததான் எடுத்து கொள்ள வேண்டி இருக்கும்
நன்றி டி.டி அண்ணா!@டி.டி.அண்ணா
நீக்குஇதுக்கு ஒரு பதிவு போடவைச்சுட்டீங்களே சகா:)@ தமிழன் சகா
தங்கள் அப்பத்தாவின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களின் இந்த பதிவை படிக்கும்போது, என் பாட்டியின் ஞாபகம் வந்து சில மனித்துளிகள் என்னை கட்டிப்போட்டு விட்டது.
பதிலளிநீக்குபாட்டிகள் தேவதைகள் தான் இல்லையா ?
நீக்குநன்றி சகோ.
தங்களின் பதில்கள் அனைத்தும் சிந்திக்க வைக்கிறது சகோ. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் :)
நீக்குஅப்பத்தாவின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். உங்கள் கேள்வி,பதில் நன்றாக,அழகாக எழுதியிருக்கிறீங்க.நன்றி.
பதிலளிநீக்குஅன்புத் தோழி!
பதிலளிநீக்குஅருமை என்பதைவிட இன்னும் என்ன வார்த்தை மேலானது என்று யோசிக்கின்றேன்...
இத்தனை கேள்விகளையும் எமக்கு ஏற்படும் ஒவ்வொரு சூழலிலும் மறவாது
இதற்கான பதிலினை நாமே தேடித் தருவோமானால் அதுவே மிகுந்த பலனைத்தரும் என்பது என் கருத்து.
சிறந்த ஒரு உளவியல் பதிவு!
என் அன்பு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!
அன்பானவர்களை இழக்கும் பொழுது தான்
பதிலளிநீக்குஅன்பின் உண்மையான ஆழத்தை நம்மால் உணர முடியும்.
உங்களின் பாட்டி உங்களிடம் எவ்வளவு அன்பைக் காட்டினார்களோ... அதைவிட
அதிகமாக நிங்கள் மற்றவர்களிடம் அன்பைக் காட்டி பாட்டியை மனத்திலேயே இருத்துங்கள்.
கேள்விகளுக்கு அருமையான பதில்கள். வாழ்த்துக்கள் தோழி.
த.ம. 7
பதிலளிநீக்குஅருமையான பதில்கள்! பலரிடம் கேள்விகள் கேட்டு சிறப்பான பதில்களை பதிவாக்கி தந்த மதுரை தமிழனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!
பதிலளிநீக்குஅப்பத்தாவின் அன்பு நெகிழ்த்துகிறது. மிக அற்புதமான வாசகத்தை காணக்கொடுத்துள்ளீர்கள். அவர்களுடைய இனிய நினைவுகளால் நிறைந்திருக்கட்டும் இனி வருங்காலம். தாத்தாவுக்கு சொன்ன ஆறுதல் வரிகள் மனந்தொட்டன.
பதிலளிநீக்குபத்துக் கேள்விகளுக்கான பதில்களிலும் உங்கள் தனித்த முத்திரை தெரிகிறது. பாராட்டுகள் மைதிலி.
.Losing such a loving and loveable Grandma is an
பதிலளிநீக்குirrepairable lose.It is inevitable in this earthly life.A few
incidents that you had mentioned about her touched my heart.No doubt
you are lucky to have such a great grandma. Even in the very answers
which proved that you are an iron lady, we noticed the great influence
of your great Grandma. we pray for her, Saho...She lives in our
memories....Saho...
not yet downloaded tamil software after the laptop got crashed down and repaired......so in english....please forgive us.....we will give you the answers for the questions.......lot of problems with our blogging.....once again kindly forgive us...
அருமையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரியாரே... தங்களது ஒன்பதாவது பதில் எனமனதை காயப்படுத்திவிட்டது என்றே சொல்வேன்.
பதிலளிநீக்குஇதேபோல் எனது பதிவில் ஒன்பதாவது பதில் தங்களுக்கு நெருடலாக இருந்தது என கருத்து அளித்துள்ளீர்கள் இரண்டுமே எனது வாழ்க்கையில் பந்தப்பட்டதே...
சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் தளத்தின் வழியாக வந்தேன்.
பதிலளிநீக்குபிரியாவிடை பெற்றுக் கொண்ட தங்கள் அப்பத்தா - இறைநிழலை எய்துவாராக!..
ஆழ்ந்த சோகத்திலும் - தனித்துவமான விடைகளைத் தந்தது தங்களின் மன உறுதியைக் காட்டுகின்றது. வாழ்க வளமுடன்!..
தாங்க முடியாத சோகத்திலும் இழப்பிலும் கூட எம்மை எண்ணி உற்சாகப் படுத்தும் வகையில் இதில் பங்கு பற்றி எம்மையும் கலந்து கொள்ளச் செய்து....
பதிலளிநீக்குஎன் மனதை நெகிழ வைக்கிறது. தோழி !
அப்பத்தாவின் மீதுள்ள அன்பும் கண் கலங்க வைக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்பு என்ன செய்வது தாங்கித் தானே ஆகவேண்டும். சரிம்மா கவலை கொள்ளாது அவருக்காக ஒரு கவிதை எழுதி போடுங்கள் சரியா. சரி அம்மு dont worry ok வா. உங்களுக்குரிய பதில் ரெடி சிரமத்தின் மத்தியில் ஒரு மாதிரி முடித்துவிட்டேன்.....
உங்கள் அப்பத்தாவின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குகேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் சிந்திக்க வைத்தன.......
முத்துக்கு முத்தாக
பதிலளிநீக்குபத்துக்குப்க பத்தாக
கேள்வி - பதில்
நன்றாக இருக்கிறதே!
இயல்பை தொலைக்காமல் இருக்கும் இயல்பை.
பதிலளிநீக்கு>>
அருமை. எல்லோருக்கும் தேவைப்படுவதும்கூட!!
பொல்லாத முதுமை.....///
பதிலளிநீக்குசரி தான்..
உங்கள் ஆச்சியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குமிக அழகான யோசிக்க வைத்த பதில்கள் அனைத்தும் ..வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குபிள்ளைகளுக்கு அட்வைஸ் ...அதுவும் மகள்களுக்கு உண்மையில் நீங்க சொன்னது சரியான உண்மை !!
நான் பதிவைப் படிக்கத் தொடங்கியபொழுது படத்தைச் சரியாகப் பார்க்கவில்லை. அப்பத்தா பற்றி நீங்கள் சொல்லத் தொடங்கியதும் ஏதோ சுவையான பதிவு போல என நினைத்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால், அவர் மறைந்து விட்டதாக நீங்கள் எழுதியிருந்தது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது. இத்தனை நாட்கள் கழித்துக் கருத்துரைக்கிறேன் எனும் பெயரில் அந்தத் துக்கத்தை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காய் வருந்துகிறேன்!
பதிலளிநீக்குஅவர் உடல் மறைந்தாலும் அவர் அன்பு, அறிவு, பண்பு, பழக்கவழக்கம், நடை, உடை, பாவனை என எல்லாம் மரபணு வழியாய்க் கடந்து உங்களிடமும் உங்கள் குழந்தைகளிடமும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளிடமும் வழிவழியாய் வந்து கொண்டுதான் இருக்கும். ஆம்! அவர்கள் உங்கள் குருதியில் கலந்திருக்கிறார்கள்! உங்களுக்குள் உறைந்திருக்கிறார்கள்! நினைவுகளாகவும் கனவுகளாகவும் வாழ்வின் இறுதி வரை பயணித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள். எல்லா உறவினர்களையும் நாம் எப்பொழுதும் அருகிலேயே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இதே உலகில் நமக்குத் தெரிந்த இடத்தில் அவர்கள் இருப்பது உறுதியாகத் தெரியும் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் நாம் கவலைப்படாமல் இருக்கிறோம், அவ்வளவுதான். அது போல உங்கள் அப்பத்தா இன்னும் இருக்கிறார் என நினைத்துக் கொள்ளுங்கள். என்ன ஒன்று, இதுவரை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய, பார்க்கக்கூடிய தொலைவில் இருந்தார்; இப்பொழுது உங்களுக்குத் தெரியாத, அணுக முடியாத ஓர் இடத்தில் இருக்கிறார், அவ்வளவுதான்! எனவே வேதனைப்படாதீர்கள்!
இப்படியெல்லாம் எவ்வளவுதான் ஆறுதல் வார்த்தைகளைக் கோட்டை கோட்டையாய் அடுக்கினாலும் இழப்பின் வேதனையை அவை ஒரு துளியும் குறைக்க உதவா என்பதை அறிவேன். காலம் மட்டும்தான் அதற்கு ஒரே மருந்து. அவ்வகையில் காலம் உங்களைப் பொறுத்த வரை விரைந்து கடக்கட்டும்!
இந்தத் துக்கமான நேரத்திலும் தமிழன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி நீங்கள் பதிவிட்டதும், இவ்வளவு அசத்தலான பதில்களை வழங்கியிருப்பதும் வியப்பூட்டுகிறது!
பதிலளிநீக்கு1, 6 ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் கண்டு மேலும் வியந்து போனேன். காரணம், இந்தப் பதிவுச் சங்கிலியில் என்னை யாராவது கோத்து விட்டிருந்தால், அந்தக் கேள்விகளுக்கான என் பதில்களும் அவையேதாம்.
"உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?" - இப்படிப்பட்ட கேள்விகள் நிறைய உள்ளன. 'கடவுள் திடீரென உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?', 'ஒருநாள் முதல்வர்/பிரதமர் ஆனால் முதலில் என்ன செய்வீர்கள்?', ''பாபா' படத்தில் ரசினி அவர்களுக்குக் கிடைத்தது போல் உங்களுக்கும் ஒரு வரம் கிடைத்தால் அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?' என இப்படி நிறையக் கேள்விகள் உண்டு. பொதுவாக, இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாரும் அவர்கள் துறை சார்ந்த கண்ணோட்டத்தில்தான் பதிலளித்துப் பார்த்திருக்கிறேன். அதாவது, இத்தகைய ஒரு கேள்வியைப் பெண்களிடம் கேட்டால் "பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவேன்" என்கிறார்கள். இதையே நடிகர்களிடம் கேட்டால் "கள்ளக் குறுவட்டை (pirated disks) ஒழிப்பேன்" என்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளிடம் கேட்டால் "மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பேன்" என்கிறார்கள். எனக்கு இப்படிப்பட்ட பதில்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் ஏன் இவர்கள் எல்லாரும் இப்படிக் குறுகிய கண்ணோட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் பிரச்சினைகளைத் தவிர உலகில் பெரிய பிரச்சினைகள் வேறு ஏதும் இல்லையா எனத் தோன்றும்.
முதன்முறையாக இப்படி ஒரு கேள்விக்குத் துளியும் தன்னலமில்லாத, அதுவும் ஈழப் பிரச்சினைக்கு விடிவு கேட்கிற பெண்ணாக உங்களைப் பார்க்கிறேன்! என் தம்பிக்கு அடுத்தபடியாக இந்த அளவுக்கு என்னோடு ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் மனிதர் தாங்கள்தாம்! மகிழ்ச்சி! பெருமகிழ்ச்சி! உங்கள் நட்புக் கிடைத்ததற்கு அளவில்லா மகிழ்ச்சி!