செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தேர்தல் நவராத்திரி !

படிக்கு படி ஏறியிறங்கும்
கொலு பொம்மைகள்
சிப்பாய் ,தளபதி,செயல்வீரன்,சீமாட்டி

எல்லாம் தலையாட்டும்
புன்னகைத்தபடி இருக்கும்

வீற்றிருக்கும் பொம்மைகள் முன்
வில்லுப்பாட்டும் நடக்கும்

பண்டிகை நாட்களில்
பவனி வரும் -பின்
வசதியாய் உறங்கிவிடும்

நாம் சுண்டல் கொறித்தபடி
வேடிக்கை பார்க்கவும்-பின்
சொந்த அலுவலில் மூழ்கிபோகவும்

வந்து விடுகிறது நமக்கும்
 ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தேர்தல் நவராத்திரி !  -கஸ்தூரி

7 கருத்துகள்:

 1. ம்... ?
  பொத்தாம் பொதுவாக தேர்தலில் நிற்பவர்கள் அயோக்கியர்கள்,
  அரசியல்வாதி எல்லாம் திருடர்கள் என்று சொல்வதும், அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்தான் அரசியல் என்று சொ்ல்வதும் எளிது... அதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள்... ஆனால், இது சரியல்ல...தேடித்தான் ஆகவேண்டும்... அரசியல் தெளிவில்லாமல் ஷேர்மார்க்கெட் மட்டுமல்லாமல் இலக்கியமும் சரியாக அமையாதுப்பா... பேசுவோம்..

  பதிலளிநீக்கு
 2. நல்ல அரசியல்வாதிகள் இந்த பளபள பொம்மைகளுக்கு நடுவே அடையாளம் காண முடியாமல் போகிறார்கள் என்பது தான் என் வருத்தமும் அண்ணா

  பதிலளிநீக்கு
 3. என்ன புத்தகம் படிக்கிறாய்?
  ஓர் அரசியல்-தத்துவ நூல், பிறகு ஒரு இலக்கியம் என்று படிப்பதுதான் அடிப்படை.
  “வால்காவிலிருந்து கங்கை வரை” படிச்சிட்டியா?

  பதிலளிநீக்கு
 4. தமிழருவி மணியனையும் ,ஞானியையும் படித்ததன் விழைவாக இருக்கலாம் எங்கே போகிறோம் நாம்,சுஜாதாவின் பதவிக்காக ,ஞானியின் அரசியல் கட்டுரைகள்,இப்படி .ஆனால் நான் படிக்க ஆசை பட்ட நூலை(வால்கா) பரிந்துரை செதிருகிரீர்கள் .படிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.காமராஜர் தோல்வியும்,கக்கன் இருதிகாலமும்,ஈழத்தின் சோகமும்,கூடங்குலமும் என்னும் பலவும் என்னை எழுத தூண்டின.ஈ.வெ.ராவும் சே குவேராவும் அரசியல்வாதிள் என்றுஅல்ல அரசியல் போராளிகள் என்று தானே குறிப்பிடுகிறோம்.இப்படி பிறரை காயபடுத்த கூடாது என்று தான் நான் புறம் பாட வருவதில்லை அண்ணா.adjustment is better than argument,when u won the argument u will lose the friendship மாதிரியான டெல் கரனே நூல்களை படித்ததன் விழைவு.தங்கை ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருள்க .

  பதிலளிநீக்கு
 5. தேர்தல் & தலைவர்கள் பற்றிய நல்ல கவிதை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் நமக்கு என்னவோ நவராத்திரிதான் ஆனால் அரசியல் தலைவர்களுக்கோ அது சிவராத்திரிங்க.. ஆமாம் எதுகு 2 வலைதளம் சொல்லுவதை எல்லாம் ஒரே தளத்தில் சொல்லாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி முதன் முறையாய் கவிதையை பாராட்டியமைக்கு. இது தான் என் தளம் மற்றொன்று என் கணவர் கஸ்தூரி ரெங்கன் அவர்களது தளம். உள்ளூர் நண்பர்களான நிலவன் அண்ணா ,பாண்டியன் போன்றோர் கூட முன்பு உங்களை போன்றே குழம்பியதுண்டு. we exchanged our names for pen name. seems funny!?

   நீக்கு
 6. தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் பொம்மை வேடம் போடுகிறார்கள் ,ஜெயித்தபின் மக்களை பொம்மைகளாக்கி விடுகிறார்கள் !

  பதிலளிநீக்கு