விதுன் பார்த்த பேய்கனவு
விடாது துரத்துகிறதென்று
தேம்பிய பெப்பிக்குட்டியை
தேற்றினேன் ஒரு முத்தமிட்டு
அன்றிலிருந்து தொடங்கியது
ஒரு மாயவிளையாட்டு
கனவுகள் சமைத்து
கண்களுக்குள் ஊட்டும்படி
வேண்டிய மகளுக்காய்
விளையாட்டு ப்பூங்காவாய்
விளைந்தது முதல் கனவு
விதவிதமாய் மலர்களோடு
சுகந்தமாய் மறு கனவு
வெள்ளுடையும் விரித்த சிறகுகளுமாய்
நீலதேவதையோன்று பாடத்தொடங்குகையில்
தூங்கிப்போனோம் நானும்,பெப்பியும்
இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்தது
சிறகு முளைத்த சின்ன தேவதை
மற்றுமொரு கனவுத்தொழிற்சாலையாய்
எங்கள் படுக்கையறை -
-கஸ்தூரி
விடாது துரத்துகிறதென்று
தேம்பிய பெப்பிக்குட்டியை
தேற்றினேன் ஒரு முத்தமிட்டு
அன்றிலிருந்து தொடங்கியது
ஒரு மாயவிளையாட்டு
கனவுகள் சமைத்து
கண்களுக்குள் ஊட்டும்படி
வேண்டிய மகளுக்காய்
விளையாட்டு ப்பூங்காவாய்
விளைந்தது முதல் கனவு
விதவிதமாய் மலர்களோடு
சுகந்தமாய் மறு கனவு
வெள்ளுடையும் விரித்த சிறகுகளுமாய்
நீலதேவதையோன்று பாடத்தொடங்குகையில்
தூங்கிப்போனோம் நானும்,பெப்பியும்
இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்தது
சிறகு முளைத்த சின்ன தேவதை
மற்றுமொரு கனவுத்தொழிற்சாலையாய்
எங்கள் படுக்கையறை -
-கஸ்தூரி
உண்மையில்
பதிலளிநீக்குஒவ்வொரு குழந்தையும்
ஓராயிரம் கனவுகளோடும்
ஒருகோடி
சொல்விளையாட்டுகளோடும்தான்
உலகைப் பார்க்கிறது.
தொலைக்காட்சி விளம்பரமொன்றில் வந்துபோகும் சிலவினாடிகளே தெரியும் குழந்தையொன்றின் அறை என்னை வியப்பில் ஆழ்த்தும்.
ஆனால் நாம்தான் பள்ளியென்றும் பயிற்சியென்றும் அந்தக் குழந்தைகளை அலைக்கழித்து, கனவுகளைக் கொன்று தின்றுவிடுகிறோமே....
கனவுகள் சமைத்து
கண்களுக்குள் ஊட்டும்படி
வேண்டிய மகள் - அற்புதமான வரி
விளையாட்டு ப்பூங்காவாய்
விளைந்தது முதல் கனவு
விதவிதமாய் மலர்களோடு
சுகந்தமாய் மறு கனவு - தொடரும் அழகு
வெள்ளுடையும் விரித்த சிறகுகளுமாய்
நீலதேவதையோன்று பாடத்தொடங்குகையில்
தூங்கிப்போனோம் நானும்,பெப்பியும் - என்ன வரிகள்
உன் மகள் கொடுத்து வைத்தவள்
இன்றைய குழந்தைகளின் குழந்தைமையை
என்றைக்கு மீட்கப் போகிறோம் தங்கையே!
எனது அடுத்த கட்டுரை இதுதான்..
நீண்ட நாளாய் -
செருப்பிடைச் சிக்கிய சிறு பரலாய்
உறுத்திக் கிடந்த உணர்வை நீ
உசுப்பி விட்டாய், நன்றி. வாழ்க உன் கவிமனம்.
நன்றி அண்ணா .தாங்கள் அழகியல் கவிதைகளை குறைத்துக்கொள்ள அறிவுருத்திநீர்.ஆனால் இரண்டு கவிதைகளை வளர்த்துக்கொண்டும் ,ஒரு கவிதையோடு வாழ்ந்து கொண்டும் என்னால் இப்படி கவிதைகள் எழுதாமல் இருக்க்க முடியவில்லை அண்ணா
நீக்கு