புதன், 21 ஆகஸ்ட், 2013

ஞாபகம் வருதே !ஞாபகம் வருதே !


                                                 இன்று என் பழையவீட்டை பார்த்து வர விருப்பம் மேலெழும்பியது.கருக்கலில் புறப்பட்டு விட்டேன் .முன்பிருந்த இடம் நகர நெரிசலின்றி அமைதி பூசியிருக்கும் .ஆனால் அங்கும் நெருக்கடி மிகுந்த போது அமைதிவேண்டிதான் இவ்விடம் விட்டு நகர்ந்தேன்.முதுமை பிராயத்தில் இயல்பாய்  எழும் பெரு விருப்பாய்  என் இளமை காலத்தில் வாழ்ந்த இடத்தை பார்க்க வேண்டும் என சிலநாட்களாய் ஏனோ வெகு விருப்பம்.
                  வானம் வெளுப்பதற்கு முன்பே கிளம்பிவிட்டேன் .வழக்கமான சந்தில் வளைகயில் நகரின் அசுர வளர்ச்சி பயத்தை கிளப்பியது.அதோ தெரிகிறதே அந்த இடம் தானா?குழம்பியவாரேதான் உள் நுழைந்தேன் .அதோ வேப்பமரம்!!.என் மண் வீடு இருந்த இடத்தில் இன்று பெரிய காரை வீடு!!.ஏதேதோ சிந்தனையில் உலன்றவாறு நின்றுகொண்டிருக்கும்போதே என் தலையில் பலமாய் ஒரு அடி.யாரோ கட்டையால் தாக்கிஇருந்தனர் .நான்  மயங்க தொடங்கினேன்.என் காதுகளில் அவர்கள் கூக்குரல் தேய்ந்து ஒலித்தது ''பாம்பு  ,பாம்பு "          
                                                   -கஸ்தூரி      
பி.கு
        இது காமெடி போல இருக்கலாம்.ஆனா உண்மையாவே நாம் மற்ற உயிர்களிடமிருந்து இப்படி தான் வாழ்விடங்களை பறிக்கிறோம்.

5 கருத்துகள்:

 1. அம்மாடியோவ்!...உன்ன என்னசொல்றதுன்னே தெரியலப்பா...!
  ஓவியர்களில் சிலருக்கு லைன் டிராயிங் தெரியும், கலர்பெயிண்டிங் வராது, ஃபிகரிங் வர்ரவங்களுக்கு லெட்டரிங் வராது என்பார்கள் (நானும் கொஞ்சநாள் ஓவியனாக வயிற்றைக் கழுவினேன்) பேச்சாளர்களுக்கு எழுத வராது, எழுத்தாளர்களுக்குப் பேச வராது. கவிஞர்களுக்குக் கதை வராது, கதையாளிகளுக்குக் கவிதை தெரியாது என்றெல்லாம் பிரிததுச் சொல்வார்கள (ஜே.கே. இதயெல்லாம் கடந்து, பிரமாதமாக எழுதுவார், ஆவேசமாப் பேசுவார்)விதிவிலக்குகளில் நீ! உனக்கு கவிதையும் வருது, உன் வீட்டுக்காரரைப்போல கதையும் இயல்பா வருது.. அந்த ராட்சசன் கதைபோல வேறொன்றையும் கஸ்தூரி இன்றுவரை எழுதவிலலை... எழுத எழுத பேனா கூர்மையாகும்... தொடர்ந்து தாக்கு...

  பதிலளிநீக்கு
 2. உன் கற்பனை தந்த மகிழ்வில் சொலலவந்ததை மறந்துட்டேன்.. கந்தர்வன் சொல்வார்... வீட்டுக்குள்ள குரங்கு வந்திருச்சின்னு சொல்றீங்களே! அது இடத்துல வீட்டக் கட்டிக்கிட்டு, அது தன் இடத்த வந்து பாத்தா ஏன் திட்ரீங்க? ம்ம்ம்... Not only Great men, and also great men and women are think alike! KEEP IT UP அண்ணனின் அன்பு வாழ்த்துகள!

  பதிலளிநீக்கு
 3. தங்கள் கருத்துகளால் தான் என் எழுத்து கூர்மையடைகிறது அண்ணா.அன்னையின் கைத்தட்டல் கேட்டு நடக்கத்தொடங்கும் குழந்தை போல் நன்றி அண்ணா .

  பதிலளிநீக்கு
 4. மற்ற உயிர்களின் வாழ்விடங்களை மட்டுமே பறிக்கிறோம்? நமக்கு உயிர் ஊட்டுகிற விளை நிலங்களை கூடவல்லவா கட்டிடமா மாறிக்கிட்டிருக்கு.. நல்லொதொரு சிந்தனை..! தொடர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்களுக்கும் ,வருகைக்கும் நன்றி !

   நீக்கு