செவ்வாய், 10 ஜூன், 2014

கவனிக்க வேண்டியதும், கவனிக்காததும்





பொதுவாய் நாம் எந்த பொருள் வாங்கினாலும் ப்ரிகாஷன் அச்சிடப்பட்டிருக்கும், அல்லது கையேடு ஒன்று அத்தோடு இருக்கும்.
குடி குடியை கெடுக்கும்
புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
போன்ற வாசகங்களை படிச்சிட்டும் எப்டி தான் குடிகிறாங்களோ என நீட்டிமுழக்கும் பலர் இதெல்லாம் கவனிச்சாங்களானு தெரியலை.
நான் எந்த பொருள் வாங்கினாலும் சுத்தி இருக்கிற காகிதத்தை வரிவிடாம படிச்சுடுவேன். அப்டி கிடைத்த இந்த விஷயங்கள் என் போல் வெட்டியாய் படிக்க பொழுது இல்லாத, பிஸியான பலருக்கு பயன்படலாம் எனும் நோக்கத்தில் இந்த பதிவு....







பிஸ்கட்கள்
     ஷுகர் ப்ரீ  மற்றும்  லைட் வகை பிஸ்கட்கள் குழந்தைக்களுக்கானது அல்ல என அச்சிடப்பட்டிருக்கும்.






சார்ஜர்
      செல்பேசியில் முழுமையாக சார்ஜ்செய்யப்பட்டவுடன் மின்சாரத்தை சேமிக்க சார்ஜரை (plug)கழற்றும் படிதான் செல்பேசியில் செய்தி தோன்றும். ஆனால் நாம் பலரும் செல்பேசியை மட்டும் தான் சார்ஜரில் நீக்குகிறோம்.
 

பாட்டில்
        தண்ணீர் மற்றும் ஜூஸ் பாட்டில்களில் குடித்து முடித்தவுடன் நசுக்கி குப்பைத்தொட்டியில் வீசவும் என்று படமோ, வாசகமோ இருக்கும் (அவசரத்துக்கு அதுலதானே பெட்ரோல் வாங்குவோம்)

டூத் பேஸ்ட்
       பட்டாணி அளவு போதுமானது என குறிப்பிடபட்டிருக்கும். (ஹாஸ்டல் நாட்களில் மாதக்கடைசியில் வேற வழியில்லாமல் அந்த அளவு பயன்படுத்துவோம்)




ரீசார்ஜ் கூப்பன்
    செல்பேசி ரீசார்ஜ் கூப்பனை நாணயத்தின் முனை கொண்டு சுரண்டவும் என இருக்கும் ஆனால் படித்த பலரும் கூட நகத்தால் சுரண்டுவதை பார்க்கமுடிகிறது.

நான்ஸ்டிக் பாத்திரங்கள்
   புதிய பாத்திரத்தை பயன்படுத்தும் முன் சிறிது சமையல் எண்ணெயை தடவி சோப் நீரில் கழுவ வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை எண்ணெய் தடவி கழுவிய பின் பயன்படுத்தவேண்டும்.

இண்டக்ஷன் ஸ்டவ்
    பயன்படுத்திய பின் உள்ளே fan சத்தம் நின்றபின் தான் ஸ்விட்சை நிறுத்த வேண்டும்.

மாத்திரைகள்
    இருபத்திநான்கு மணி நேரத்துக்கு இத்தனை கிராம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என எழுதி இருக்கும். பாராசிடமால் போன்ற மாத்திரைகளை 2800கிராம் தான் ஒரு நாளுக்குள் எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எவ்வளவு காய்ச்சல் என்றாலும் நாலு மணி நேரத்திற்குள் மற்றொரு டோஸ் பாராசிடமால் கொடுக்க கூடாது என்பன போன்ற அட்டையிலேயே அச்சிடப்படிருப்பனவற்றை  படித்து வைத்து கொள்வது நல்லது தானே.
 (இத்தனை நாள் படிச்சு இத தான் கிழிச்சிருக்கேன், மிச்ச சொச்சத்தை நீங்க கமென்ட் பகுதியில் கொட்டுங்க மக்களே)

56 கருத்துகள்:

  1. உண்மைதான் சகோதரியாரே
    பலநேரங்களில் அறிவுரைகளைப் படித்தும் பின்பற்றுவதில்லைதான்
    இனியேனும் முயற்சி செய்கிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இது உங்களை மாதிரி தல சொல்லும்போது சந்தோசமா இருக்கு :))

      நீக்கு
  2. பதில்கள்
    1. ரொம்ப நன்றி அண்ணா! எனக்கு தா ம பற்றி இன்னம் தெளிவு இல்லை, கத்துகிட்டு கண்டிப்பா நானும் ஓட்டு போடுறேன்:)

      நீக்கு
  3. வணக்கம்
    தண்ணீர் மற்றும் ஜூஸ் பாட்டில்களில் குடித்து முடித்தவுடன் நசுக்கி குப்பைத்தொட்டியில் வீசவும் என்று படமோ, வாசகமோ இருக்கும் (அவசரத்துக்கு அதுலதானே பெட்ரோல் வாங்குவோம்)

    சிக்கனப் படுத்தல் பற்றி நன்றாக எடுத்துரைத்துள்ளீர்கள்..எல்லோரும் இதைநடைமுறை வாழ்க்கையில் கையாண்டல் நன்றாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி.

    என்பக்கம் பதிவாக

    சிறகடிக்கும் நினைவலைகள்-3.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் சகோ, தா,ம விற்கும் சேர்த்து. கவிதை படித்தேன். சோகத்தில் உருக்கி இருக்கிறீர்கள்:)

      நீக்கு
  4. வணக்கம்

    த.ம2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி
    பயனுள்ள தகவல்கள். அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் இதையெல்லாம் கவனிக்க மறந்து விடுகிறோம். இது தான் சகோதரி பயனுள்ள வேலையே! இனி விழிப்போடு அறிவுரைகளைப் பயன்படுத்த இப்பதிவு அறிவுறுத்தும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி. (கமெண்ட் பகுதியில் கொட்டுங்க மக்களே விஜயகாந்து ரேஞ்ஜ் க்கு இருக்குது? இருந்தா கொட்டிட மாட்டோமா அக்கா வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம். விளையாட்டுக்கு தான் சகோதரி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹ..ஹ...
      உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?அப்பாவும் விஜயகாந்தும் நல்ல friends. என் அத்தையின் கல்யாணத்தில் அவ்வளவு ஆர்வமாய் கலந்து கொண்டார்.கட்சி தொடங்கிய புதிதில் அவரோடு இருந்த பெரும்பாலான ஆ.தி.மு.க நண்பர்கள் அப்பாவோட செட் தான். சின்ன கௌண்டர் படத்தில் அப்படியே அப்பாவின் மனரிசத்தை பின்பற்றி இருப்பார். பெரிய மருது படத்தில் பெயர் போடும்போதே நன்றியில் முதல் பேரை அப்பா பெயர்வரும். அவர்கள் நட்பை பற்றி சொல்ல ஒரு பதிவு அளவு மேட்டர் இருக்கு.
      ஏன் அக்கா சகோதரி என்று கண்ப்யுஸ் ஆகுறீங்க ? அக்கா நே கூப்பிடலாம் தம்பி.

      நீக்கு
  6. எச்சரிக்கை தகவல்கள் ஒப்புக்காக கண்ணிலே படாத அளவுக்கு உள்ளது. அப்படி இருந்தாலும் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை.
    யாராவது இப்படி ஞாபகப்படுத்தினால்தான் உண்டு
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அப்படி சின்ன எழுத்தில் போடுவதால் அவர்களுக்கு நல்ல லாபம் இல்லையா அண்ணா! நன்றி

      நீக்கு
  7. நல்ல அறிவுரைகள்தான் ஆனால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்களோ என்னவோ ஆனால் உங்கள் பதிவை படித்த பின் சில பேராவது அதை பின்பற்றுவார்கள் என நம்புவோம் பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. செல்போனில் யாரும் வார்னிங்க் போடுவதில்லை ஆனால் செல்போன் அதிகம் உபயோகித்தால் முளைக்கு பாதிப்பு என்று தெரிந்தும் அதை உபயோகிப்பவர்கள் அதிகம் .ஒரு வேளை மூளை அதிகம் இல்லாதவர்கள்தான் செல்போன் உபயோக்கிறார் போலிருக்கிறது என்ன நான் சொல்வது சரிதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இது வரை நாலு செல் போன் பயன் படுத்திருக்கேன். போன் full சார்ஜ் ஆனதும் "fully chargered, remove the charger from the socket to save energy" என்று வரும்,ஒரு வேலை ஸ்மார்ட் போனில் வராதோ என்னவோ? நாங்களே ஸ்மார்ட் என்பதால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தியத்தில்லை( ஆகா ,அவரே சும்மா போனாலும் நீ ஏன்ம்மா வாயை கிளருற?!)

      நீக்கு
  9. கண்டிப்பு மிக்க ஒரு ஆசிரியை சொன்னால் மறுபேச்சு உண்டா!!!!

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சே.சே..நான் கண்டிப்பான ஆசிரியர் இல்லை.
      அன்பான ஆசிரியர் சகோ!!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சார்!

      நீக்கு
  11. பிஸ்கட், சார்ஜர், டூத்பேஸ்ட் செய்திகள் புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்காவிற்கே புதுசா!! ஆஹா மைதிலி பரவால்லே!
      நன்றி அக்கா!

      நீக்கு
  12. விழிப்புணர்வு பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. //இண்டக்ஷன் ஸ்டவ்
    பயன்படுத்திய பின் உள்ளே fan சத்தம் நின்றபின் தான் ஸ்விட்சை நிறுத்த வேண்டும்.//

    Switch off பண்ணுனா தானே fan நிக்கும் ...அப்டி இல்லையா ...

    நானும் நெறைய படிப்பேன் . இந்தமாதிரி எச்சரிக்கை குறிப்புகளை பெரும்பாலும் complicated ஆன ஆங்கில வார்த்தைகளைக் கொண்டுதான் வடிவமைக்கிறார்கள் ...dictionary பார்த்து பார்த்து கண்ணு காண்ட்டாயிடுது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்ல சகா ஸ்டவில் அதற்கு பட்டன் இருக்கும். முதலில் அதை press பண்ணி off பண்ணீட்டு fan சந்ததம் நின்ன பின்னாடி சுவிட்ச் off பண்ணனும்.
      எனக்கு ஒரு கண்ணுல -5 மற்றதில் -6. காண்டக்ட் லென்ஸ் தான். இதுக்கு தான் ரொம்ப ஆர்வ கோளாறா இருக்ககூடாதோ?

      நீக்கு
  14. நல்ல விழிப்புணர்வு பதிவு! ஆனால் யார் இதை எல்லாம் கவனித்து பயன்படுத்துகின்றோம்?!!! டூத் பேஸ்ட்? கவனிக்க வேண்டும்....எக்ஸ்பயரி டேட் இதை கவனித்ததில்லை! பல பொருட்களிலும் வார்னிங்க் சிறிய எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும்...நல்ல ப்ராண்டட் ரெடிமேட் துணிகளில் கூட கொடுக்கப்பட்டிருக்கும்.....

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் கவனித்தால் பாதி பிரச்சனையை தடுக்கலாம் சகா! ஆமாம் சில வகை ஆடைகளில் இருக்கும், நன்றி சகா!

      நீக்கு
  15. அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளவை சகோதரியே இன்றுமுதல் நானும் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன் நன்றி.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,

      நீக்கு
  16. அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்...

    கைவசம் எந்த பொருளும் இல்லை.. அப்புறமா நேரம் கிடைக்கும் போது நிச்சியமாக பதிவிடுகிறேன்..நன்றி..

    பதிலளிநீக்கு
  17. அம்மா தாயே பின்னிட்டே போ. இதிலிருந்து எவ்வளவு சிக்கனமும் பக்குவமும் நிறைந்தவர் என் தோழி என்று புரிகிறது. பெண்களுக்கு பக்குவமும் சமயோசித புத்தியும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் . என் செல்லத்துக்கு அது நிறையவே இருக்கிறது தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி ! அந்தக் காலத்தில் நீரை செம்பில் கொடுத்து பாற்பார்களாமே பெண்ணை. ம் ..ம் ..ம்..ம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு.அதன் படி ஒழுகிறேன். மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்க்ஸ் டா செல்லம். கவிய கவியை விடாவா கலக்கல்?!
      நம்ம இளைய நிலா வந்துட்டாங்க பார்த்தீங்களா?

      நீக்கு
  18. நல்ல அறிவுரை தோழி..
    வண்ணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களும் கெடுதலே..அதனால் முடிந்த அளவு அவற்றையும் தவிர்க்கப் பார்ப்பேன்..
    red,quinine yellow, blue என்று ஏதாவது போட்டிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரி கிரேஸ் உடனே நன்றி சொல்லமுடியல:)
      சரியான முடிவுதான், நான் கூட புட் கலர் பயன்படுத்த மாட்டேன்:)

      நீக்கு
  19. நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. இங்கு இதனை முதலில் வாசித்து விடுவோம். இங்கு ஸ்டார் குறீயீடு இட்டு சின்ன எழுதுக்களில் உள்ளதை அவசியம் வாசிக்கனும். இதைப்பற்றி டிவி சானல்களில் டாக்குமெண்டரியாக, பத்திரிகைகளில் கட்டுரையாக வரும். பின்பற்றினால் நல்லது. நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பலருக்கும் பயன்படும் அற்புதமான பதிவு இது மைதிலி. எதையும் உபயோகிக்குமுன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்-ஐ வாசித்து அதன்படி செயல்படுவது மிகவும் அவசியம் என்பதை உணர்த்தும் பதிவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி கீதாக்கா! வல்லமையாளரா தேர்வானதற்கு வாழ்த்துகள்!

      நீக்கு
  21. இன்ஸ்ட்ரக்ஷன் புத்தகம் இல்லாட்டால் பதறிப் போயிருவேன் நான்.

    நல்ல பதிவு.இனிய பாராட்டுகள்.

    கோச்சுக்கலைன்னா..... கடைசி வரியில் சின்னதா ஒரு தட்டச்சுப்பிழை.
    //இத தான் கிழுச்சிருக்கேன்// இந்த ழு வை ழி ஆக்குங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி மேடம். என்னது கோச்சுகிறதா. நீங்க வேற நிலவன் அண்ணா எல்லாம் கழுவிக் கழுவி ஊத்திருக்கார்:)) உரிமையாவே திருத்துங்க மேடம்!!

      நீக்கு
  22. பயனுள்ள இதுவரை அறியாத
    அவசியம் அறிந்திருக்கவேண்டிய தகவல்களை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. சின்னச்சின்ன எழுத்துகளில் போட்டிருப்பதால் சின்னவிஷயம் என்று அலட்சியம் செய்கிறாகளோ என்னவோ..!

    கொட்டை எழுத்தில் பளிச் என போட்டால் பயனிருக்குமாயிருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க சகோ! நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      நீக்கு
  24. அருமை பா. நாம் எவ்வளவு பெரிய விடயங்களையெல்லாம் அலட்சியப் படுத்திக்கொண்டே சின்ன விடயங்களுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மண்டையில் அடித்தாற்போல எழுதிவிட்டாய். “குழந்தைகளுக்கு எவ்வளவு காய்ச்சல் என்றாலும் நாலு மணி நேரத்திற்குள் மற்றொரு டோஸ் பாராசிடமால் கொடுக்க கூடாது“ -இதை நான் கவனிதததே இல்லை. சாலைக் குறியீடுகளைக் கவனிக்காமல் மீறுவதால்தான் எத்தனை உயிரிழப்புகள் அலட்சியம்தான் நமது பெரும் வியாதி பா. அருமை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா, மருத்துவர்களுக்கு சொல்ல நேரமோ, மனமோ இல்லாத தருணங்கள் பல. குழந்தை மருத்துவர்கள் கூட சில நேரம் மருந்து கம்பெனிகள் அச்சடித்துத் தரும் சீட்டில் காலை, மதியம், இரவு என மருந்துகளை எழுதி தந்துவிடுகிறார்கள். பத்து மணிக்கு மருத்துவமனை சென்று பதினோரு மணிபோல் ஒரு டோஸ் மருந்தும், பன்னிரண்டு மணிக்கே மதிய உணவளித்து மற்றொரு டோஸ் மருந்தும் கொடுக்கும் பலரை பார்த்து பதறி இருக்கிறேன். பின் கஸ்தூரியின் செல்ல நண்பரும், உங்களை போன்ற ஒரு அன்பு அண்ணாவும் ஆனா கார்த்திக் (பார்மசிஸ்ட்) அவர்கள் சொன்ன அறிவுரையின் பேரில் மகிக்கோ, நிறைக்கோ இப்படி ஒரு வரிகூட விடாமல் படித்த பிறகே மருந்து கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். மருத்துவ அரசியல் என்றொரு புத்தகம் என் தம்பியின் தோழன் கொடுத்தது. நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள் டாக்டர்களை பார்த்தாலே திகீர்னு இருக்கும்.

      நீக்கு
    2. இன்னொரு விசயம் தோழி, எதற்கெடுத்தாலும் ஆண்டிபயொடிக் கொடுக்கும் பழக்கம் அதிகம் இருக்கிறது..என் இளைய மகன் குழந்தையாய் இருந்தபொழுது எதற்கோ மருத்துவரிடம் சென்றிருந்தோம்..ஆண்டிபயொடிக் எழுதினார்..நான் அவரிடம் கேட்டேன், "கண்டிப்பாக கொடுக்க வேண்டுமா? கொடுக்காமல் சரியாகாதா?" என்று. அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. "நீங்க கேட்டது நல்லதாப் போச்சு..பெரும்பான்மை பெற்றோர்கள் ஆண்டிபயொடிக் கொடுத்தால்தான் திருப்தி அடைகிறார்கள், அதனால் எழுதி விடுவோம். நீங்கள் கொடுக்கத் தேவையில்லை" என்றார். இதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வர வேண்டும். அமெரிக்காவில் மருத்துவர் பரிந்துரைத்தல் இல்லாமல் ஆண்டிபயொடிக் மருந்துக் கடைகளில் கிடைக்காது.
      அதுபோலவே , வயிற்றுப்போக்கு, வாந்திக்கு உடனே மருந்து கொடுக்க கூடாது. ஏதோ ஒரு ஒவ்வாமையால் ஏற்படும் இவை, அந்த ஒவ்வாத பொருளை வெளியேற்றவே ஏற்படுகின்றன. அதனால் நிறுத்த மருந்து உண்ண கூடாது..ஒரு மடக்கு என்றாலும் அரைமணிக்கொருமுறை திரவம் ஏதேனும் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தானாக சரியாகிவிடும்..இதுவும் அமெரிக்காவில் மருத்துவர் சொன்னது. ஒரு நாளைக்கு மேல் என்றால் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது..

      நீக்கு
  25. மிக மிக அருமையான, அத்தியாவசியமான குறிப்புகள்!

    மிக்க உதவியாக எல்லோருக்கும் இருந்திடக் கூடியதாகக்
    கூடவே உங்கள் டிப்ஸ்களும் பிரமாதம்!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாள் கழித்து வீடுவந்த தோழியே நலமா?:)
      வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி!

      நீக்கு
  26. I am the worst in this. Never like to read the instructions or what you agree on in an agreement (like when downloading a document) ever!

    If I need to assemble an entertainment center, I will try to do it myself without reading the details or looking at it superficially. Will look at the details when I have some difficulty later.

    So I am just the opposite of you, I guess! :)

    However I respect your approach.

    Please keep in mind. They do do all these warnings or whatsoever is just to cover themselves from any law-suit or of that sort too!

    Well, it is a habit. Once you start doing it, you are going to continue doing it as you wont feel comfortable otherwise! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. such an exploration will be a self-estimation of our energy. wont it bro:)
      me too do this if it is a game or an app:)
      more over it will give even more first hand information than those blah..blah.. information in manual.
      but i think these instructions fall under three categories like a sign board. that's informatory, cautionary and mandatory.
      so we may skip informatory and cautionary items
      but something is mandatory. if you have time enough to spend here plz read the reply i gave to muthunilavan anna .
      thank you so much for ur first visit and such a sincere comment: :-)

      நீக்கு
  27. பல சமயங்களில் இவற்றை யாரும் படிப்பது கூட இல்லை! :)))

    படித்து விட்டாலும் அது படி நடப்பதும் இல்லை!

    பதிலளிநீக்கு