வியாழன், 20 நவம்பர், 2014

நாசாவிலுமா தூங்குமூஞ்சி ஆபிசர் !!

    

  ஒரு ஆண்டுக்கு முன் ரிப்போர்டரில் தூங்கி கொண்டே நாசாவில் சம்பளம் வாங்க ஆசையா?? என்றொரு தலைப்பில் ஒரு துணுக்கு ஒன்று படித்தேன். நம்ம ஊர்ஆபிஸ் ஜோக் கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.



     துணுக்கு இப்படி இருந்தது. அந்த செய்தியை பார்த்துவிட்டு ஆசை ஆசையாய் நாசாவிற்கு போனவர்கள் எல்லாம் ஜீன்ஸ் சை காணோம் ஜெர்கினை காணோம்னு விழுந்தடித்து எஸ் ஆகிவிட்டார்களாம். பின்ன விண்வெளி தட்ப வெப்பத்தில் கொஞ்சமும் புவி ஈர்ப்பு விசை இல்லாமல் மிதந்தபடி தூங்க வேண்டும் என்பது தானே கண்டிசன். மனிதனின் தசைகள் மற்றும் எழும்பு அந்த சூழலில் எப்படி செயல்படும் என உற்றுநோக்கத்தான் இந்த ஆய்வு! படித்து முடித்தவுடன் சிரித்துவிட்டு மறந்து விட்டேன்.

Andrew Iwanicki

   சற்றேறக்குறைய ஒரு வருடம் ஓடி விட்டபின் எதேட்சையாக போன வாரம்  தமிழ் ஹிந்து படித்துக்கொண்டு இருந்தேன். அப்போ தான் தெரிந்தது நாசாவின்  அந்த தூண்டிலில் சிக்கியது ஆண்ட்ரு இவானிக்கி என்பவர் தானாம். எழுபது நாட்கள் படுத்தபடி இருப்பதற்கு பதினோரு லட்சம் சம்பளமாம். விண்வெளியில் சூழலில்  இப்படி படுத்திருக்க  ஐந்து நாட்கள் தலைவலி முதலான பல கஷ்டத்திற்கு பின் இப்போ அந்த சூழலுக்கு ஆண்ட்ரு இவனிச்கியின்  உடல் பழகிவிட்டதாம். தண்ணீர் மட்டும் குடிக்கமுடியவில்லை. புத்தகம் படித்தும், டி.வி பார்த்தும் என பொழுதைப் போக்குகிறாராம். பொதுவா இது போல பதிவுகள் எல்லாம் நம்ம தில்லையகம் சகாஸ் தான் எழுதுவாங்க. ஏனோ என்னை எழுதவைத்துவிட்டார் இந்த இவானிக்கி.

47 கருத்துகள்:

  1. தமிழ் மணத்தில் இணைச்சாச்சு..!
    ஏதோ நம்மால் ஆன உதவி!( உபத்திரவம்?)
    இவன் சிக்கிவிட்டான் என்று இவன்சிக்கியை நினைத்திருக்கும் நாசா?
    ( எல்லாம் நம்ம பகவான்ஜியின் நட்பால் ஆன பாதிப்பு)
    அது சரி கண்ணதாசா ஜேசுதாசா?
    ( இவானிக்கியா? இவனிச்கியா??)
    சரி என்னமோ போங்க வந்ததுக்கு அட்டன்டென்ஸ் குடுத்தாச்சு!
    ஓட்டும் போட்டாச்சு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சுவையான செய்திதான். (உன் கண்ணுல பட்டு, கையில வந்தா அதுவே சுவையான செய்தியா மாறிடுதோ?) சின்னதா இருந்தாலும் சிரிப்பும் சிறப்பும் கலந்து தர்ர ரகசியததைக் கைவசப் படுததியிருக்கேப்பா..
      (கவனிச்சியா மைதிலி.. விஜூவின் நடை மாற்றத்தை?
      ஆங்கிலக் கலப்பைச் சொல்லல.. அழகான வழக்குத் தமிழை. வாழ்க!

      நீக்கு
    2. @VIJU ANNA
      ஆண்ட்ரு வின் பேரை எப்படி உச்சரிப்பது என கூகுளை கேட்கலாம் தான். ஆனால் லகின்வர் தேடிய போதே லாகின்வார், லோகின்வார், என பல பெயர் சொன்னது:(( so எதுக்கு வம்பு என்று ஆங்கிலத்திலும் கொடுத்துவிட்டேன். இப்படி வடிவேல் வசனங்கள் எல்லாம் பேசி கலக்குறிங்களே! நான் பிழைப்புக்கு எங்க போறது:(( இது ஞாயமாரே!!

      நீக்கு
    3. @நிலவன் அண்ணா
      **சின்னதா இருந்தாலும் சிரிப்பும் சிறப்பும் கலந்து தர்ர ரகசியததைக் கைவசப் படுததியிருக்கேப்பா.**
      அப்படியா!! மிக்க நன்றி அண்ணா!! விஜூ அண்ணா இப்போ பக்கா blogger ஆகிட்டார். தம என்ன , ஸ்லாங் என்ன, ஹுமர் என்ன....ஒன்னும் சொல்லமுடியல:))) இப்போ காமெடி யா தரை லோக்கலா இறங்கி கலக்குறார் இல்ல!! அதுவும் இல்லாம இன்னொரு விஷயம் புரியுது, முதலில் ஸ்கூல் ல சேர்ந்த புது மாணவன் போல அடக்கி வாசிச்சார், இப்போ சீனியர் ஆகி நம்மளை ராகிங் பண்ணுறார்:)) அதாவது நண்பர்களிடம் தானே இப்படி பேசமுடியும் என்று சொல்லவந்தேன். இல்லையா அண்ணா?? :)) (இந்த கேள்வி விஜூ, நிலவன் ரெண்டு அண்ணனுக்கும் தான்)

      நீக்கு
    4. விஜு ஆசானின் நடை இப்போது பல குரலில்/பல வழக்கு/சிரிப்பு எல்லாமே பேசுகின்றது!

      மைதிலி சகோதரி உங்கள் இந்த பதில் அருமை!

      நீக்கு
  2. தூங்கினாலும் இது ஆக்கப்பூர்வ தூக்கம் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. ஆக மொத்தம் தில்லை அகத்தாரை உசுப்பி விட்டாச்சு....
    (பாவம் இப்பத்தான் காந்திக்கு பதில் சொல்லி்ட்டு களைச்சுப்போயி இருக்காங்க...அவ்வ்வ்வ்வ்)

    பதிலளிநீக்கு
  4. இது நல்ல வேலையா இருக்கே :) ஒரு மூட்டை புக்ஸ் எடுத்துக்கிட்டு சந்தோசமா போய்டுவேன் ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ டியர், அது ரொம்ப ரிஸ்கான வேலை!! நீங்க பாட்டுக்கு கிளம்பிடாந்திங்க, அப்புறம் வினோத் அண்ணாவுக்கு யார் பதில் சொல்றது!!

      நீக்கு
  5. வாழ்க்கையில் எழுபது நாட்களை வேஸ்ட் பண்ணியதற்கு நஷ்ட ஈடு பதினொரு லட்சம் தானா?! க்ளினிக்கல் ட்ரயல், கேஸ் ஸ்டடி ரிசேர்ச் எல்லாம் செய்ய இப்படித்தான் ஆள் பிடிக்கிறாங்க. நம்மாள முடியாததை இன்னொருவர் செய்கிறார்னா வாழ்த்திட்டுப் போக வேண்டியதுதான். "வாழ்க" என்று! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருணை இனிமே தோழர்னு கூப்பிடலாம்னு தோணுது. அநீதிகளை கண்டு கோபம் வந்தால் நீயும் என் தோழனே எனும் சே வரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள்:) இவ்வளவு மனிதநேயம் உள்ள கோபம்<<but வருண் சமயங்களில் அதை வெளிபடுத்த (உங்க ப்லாக் ல மட்டும்) பயன்படுத்தும் வார்த்தைகள் என்னை கொஞ்சம் தள்ளி நிற்க வைக்குது, அது உங்க ப்லாக். அதில் நீங்க எப்டி வேணும்னாலும் எழுதலாம், அதை நான் சொல்லகூடாது என்றாலும், உங்க போன பதிவின் (கதையின்) கரு நல்ல முற்போக்கு சிந்தனை வருண். It is not my idea to hurt you Varun. uz vanna try to explain my inconvenience. if those words hurt you, pardon me.

      நீக்கு
    2. அடடா! கதைனு எழுதும்போது ஒரு சில நேரங்களில் "பொலிட்டிகல்லி இண்கரெக்ட்" வார்த்தைகளை, ஏன் வாக்கியங்களையும் பிரயோகம் பண்ண வேண்டி வருகிறது. அதுவும் நான் எழுதுபவைகளில் இது எப்போதுமே (அந்தக் காலத்தில் இருந்து) சாதாரணமாக வருகிறதுதான். அதனால ஒரு சில கதைகளில் தயங்கி யாருமே கருத்துச் சொல்லாமல்க்கூட போயிடுவாங்க. :)

      பின்னூட்டம் என்பது நமக்கு எதார்த்தமாக வரணும் மைதிலி. அது ஒரு பாரமாக, கம்மிட்மெண்டாக ஆகிவிடக்கூடாதுனு நான் நினைப்பதுண்டு. ஒரு சில பதிவுகளில் பல காரணக்களுக்காக பின்னூட்டமிடத் தோணாது. அதில் இவ்வகையும் ஒண்ணு. எதார்த்தமாக வரலைனா, கடந்து போயிடலாம். :) நீங்க அதுக்காக ஃபீல்ப் பண்ண வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். "வரம்பு" என்பதே ஒரு "ஆர்பிட்ரரி கோடு"தானே? அதை எங்கே போடுவது சரி என்பது பல நேரங்களில் படைப்பாளிக்குத் தெரியாது. ஆனால் வாசகர்களால் உணரமுடியும். :)

      எனக்கு என்னிடம் உள்ள நிறைகளைவிட குறைகள் நல்லாவே தெரியும். ஆனால் அவைகளை சரி செய்வதுதான் பிரச்சினைக்குரிய ஒண்ணு. அதனால் உங்க "தர்ம சங்கடம்" தெளிவாகப் புரிகிறது. டேக் இட் ஈசி, மைதிலி. நானும் இதுபோல் சூழல்களில் உருவாகும் வாசகர்களின் தர்ம சங்கடங்களை எளிதா எடுத்துக்க கத்துக் கொண்டேன். :))

      தினமும் சாவைப்பார்க்கும் மருத்துவருக்கு சாவெல்லாம் சாதாரணம் ஆகிவிடுவதுபோல், எழுதுபவர்கள், எழுதும் மொழியில் "வரம்பு மீறுவதை" உணராமல்ப் போய்விடுவார்கள்னு நெனைக்கிறேன். :))) Take it easy.

      Sorry for the digression. :)

      நீக்கு
    3. இவ்ளோ பொறுப்பா, பொறுமையா ரிப்ளே பண்ணினதுக்கு thanks:))
      **எனக்கு என்னிடம் உள்ள நிறைகளைவிட குறைகள் நல்லாவே தெரியும். ஆனால் அவைகளை சரி செய்வதுதான் பிரச்சினைக்குரிய ஒண்ணு. ** மாத்திக்கிறதுகான அவசியம் இல்லைன்னு கூட நீங்க நினைத்திருக்கலாம். becoz its the nature of a man to adjust or adapt when he needs something very badly. And surprisingly you never yield to temptations:)) think of your well wishers and sincere readers like me once again:))

      நீக்கு
  6. படுத்துக்கிட்டே சம்பாதிப்பதுன்னா இது தானா..? உடல் ஓவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு தன்னைத்தான் மாற்றிக் கொள்கிறது அல்லவா...பின் மறுபடியும் மாறும் போதும் அவஸ்தை தான்...

    பதிலளிநீக்கு
  7. ஓகே,ஓகே, இனிமே ஆபிஸ்ல தூங்கிக்கிட்டே வேலை பார்க்கலாம்னு சொல்றீங்க.
    ஆமா, நீங்க எப்படி?

    பதிலளிநீக்கு
  8. எழுபது நாட்கள் உடல் எடை குறைந்த நிலையில் உறங்கிப் பழகிய பின்னர் அவர் இந்த பூமியில் மீண்டும் வாழப் பழக பலநாள் பிடிக்கும். பாவம் அவருக்கென்ன பணப்பிரச்சனையோ? மனப்பிரச்சனையோ? குடும்பப்பிரச்சனையோ? மனிதர் இங்கு வந்து படுத்துக்கொண்டார்! தகவலுக்கு நன்றி மைதிலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **மனப்பிரச்சனையோ? குடும்பப்பிரச்சனையோ? மனிதர் இங்கு வந்து படுத்துக்கொண்டார்!** பாவம் தான் இல்லையா அக்கா:((

      நீக்கு
  9. பணிநிமித்தம் இவ்வாறான நிலைக்கு அவர்கள் ஆட்படுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. மேம்போக்காகப் பார்த்தால் நமக்கு ஏதோ வித்தியாசமாக இருக்கும். இருந்தாலும் சற்றே சிரமமான பணிதான்.

    பதிலளிநீக்கு
  10. ஹஹ்ஹாஹ்ஹ்ஹஹ் அட ஆமாம் ல! எப்படி இவானிக்கி எங்களிடம் இருந்து தப்பினார்!ஹ்ஹஹ பரவாயில்லை எங்கள் சகோதரி அதை எழுதியதில் மிகவும் சந்தோஷமே! இனி ஒரு டீல் போட்டுக்கலாம்க....இது எப்புடி?!!!.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **ஹஹ்ஹாஹ்ஹ்ஹஹ் அட ஆமாம் ல! ** நீங்க இப்படி சிரித்தது ரொம்ப சந்தோசம் :)) ஓகே டீல் சகாஸ்:))

      நீக்கு
  11. அச்சச்சோ! தண்ணீர் குடிக்க முடியலனா......நல்லதில்லை அல்லவா.....//பதினோரு லட்சம் சம்பளமாம்// இத வாங்கி உடம்ப கெடுத்துக்கறாங்க பாருங்க....என்னத்த சொல்ல....

    அது சரி இந்த மாதிரி கினி பிக் டெஸ்டிங்க் //மனிதனின் தசைகள் மற்றும் எழும்பு அந்த சூழலில் எப்படி செயல்படும் என உற்றுநோக்கத்தான் இந்த ஆய்வு! // ஓ.கே. இது எல்லா மனிதருக்கும் சேம் ரியாக்ஷன் தானா? ஒரு மனிதரை டெஸ்ட் செய்தால் போதுமா? பறக்கப் போவருக்குத்தானே டெஸ்ட் அவசியம்....என்னவோ போங்க ஒண்ணுமே புரியல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ** பறக்கப் போவருக்குத்தானே டெஸ்ட் அவசியம்....என்னவோ போங்க ஒண்ணுமே புரியல...** அதானே!!! அதுக்கு தான் சொன்னேன். நீங்க எழுதிருந்தா இன்னும் டீடைல எழுதிருபீங்க:))

      நீக்கு
  12. பதினோரு லட்சம் கண்ணுக்குள்ளேயே தெரிந்து கொண்டு இருந்திருக்குமோ...?

    பதிலளிநீக்கு
  13. பதினோரு லட்சமா..! எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா, ஜம்பு சார், வருண் பதில்களை படித்துபாருங்கள் அண்ணா!! பாவம் தானே அவர்:((

      நீக்கு
  14. நாசாவில் தூங்கிக் கொண்டு இருந்த ஆண்ட்ரு இவானிக்கியை தட்டி எழுப்பி ஒரு பதிவை போட்டு விட்டீர்கள். உங்கள் வகுப்பினில் தூங்கி விழும் பிள்ளைகளை என்ன செய்வீர்கள்?

    த.ம.4 (நான் உங்கள் வலைத்தளத்தில் சேர்ந்து கொள்ள வசதியாக, Google Connect என்ற Widget ஐ வைக்கவும். கூகிள் ப்ளஸ்சில் என்னால் காபி பேஸ்ட் முறையில் கருத்துரை எழுத இயலாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாணவர்கள் நிஜமாகவே என் வகுப்பில் தூங்கியதில்லை அண்ணா! full என்டர்டைமென்ட் இருக்கும் கிறதால:))
      அது என்ன வசதி என்று நம்ம வீட்டு அப்படக்கரை கேட்டிருகிறேன் அண்ணா:)) மிக்க நன்றி!!

      நீக்கு
  15. அட கடவுளே இனி படுத்திருந்து எப்பிடி காசு சம்பாதிக்கிறது என்று வேறு கனவு காணப் போகிறார்களே அம்மு.ஹா ஹா நல்ல தகவல் அம்மு நன்றிடா. வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன. யாரையோ... தாக்குறது மாதிரி தெரியுதே....

      நீக்கு
    2. @ இனியாச்செல்லம்
      நன்றி டா! ஆமா இந்த கில்லர் அண்ணா எதுக்கு இப்போ திரி கிள்ளுராறு:)) எஸ்கேப் ஆகிடுங்க செல்லம் , மற்றொரு தொடர் பதிவுக்கு கூப்பிட போறாரு:))))

      நீக்கு
  16. வணக்கம்

    நல்ல வழியை சொல்லியுள்ளீர்கள்... ஆகா...ஆகா... இனி அலுவலகத்தில் தூங்க வேண்டியதுதான் அடி வந்தால் தங்களின் பதிவின் இணைப்பை கொடுத்திடுவேன் பாருங்கள் என்று... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை பேர் இப்படி கிளம்பிருக்கீங்க?? அவ்வவ்வ்வ்வ்
      நன்றி சகோ:))

      நீக்கு
  17. இவ்வளவு கஷ்டமான பணிக்கு சம்பளம் குறைவாகவே தெரிகிறது! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹல்லோ சார் கண்டிப்பா டைம் இருக்கும் போது வருகிறேன்:))

      நீக்கு
  19. சும்மா இருந்து பார்ப்பதில் உள்ள கடினம்
    சும்மா இருந்து பார்த்தால்தான் தெரியும் என்பார்கள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  20. த.ம.(7)
    (நாங்களும் கத்துக்கிட்டம்ல..?!கத்துக்குடுத்த ஆசிரியர் முரளி அய்யாவுக்கு நன்றி)

    பதிலளிநீக்கு
  21. " ஜீன்சைக் காணோம் ஜெர்க்கினைக் காணோம்"
    சூப்பருங்க.நினைச்சு நினைச்சு சிரிச்சேன்.

    பதிலளிநீக்கு