நூடில்ஸ்,பிட்சா என கலக்கிக்கொண்டிருந்த டீன் மொழியில் இப்போ இட்லி talk பரவி இருக்கு. நம்ம விஜய் இட்லியை வைத்து கம்யூனிசத்தை விளக்கினாரும் விளக்கினார். f.b எல்லாம் இப்போ இட்லி தான். குஷ்பு காங்கிரசில் இணைந்தபோது வந்த மற்றொரு இற்றை "பாழாய் போன சமூகம் ஒண்ணா இருந்த குஷ்புவையும் இட்லியையும் பிரித்து, குஷ்புவை காங்கிரசிலும், இட்லியை கம்யுனிஸ்ட் கட்சியிலும் சேர்த்துவிட்டது!
விஜய் சொன்ன மாதிரி(முருகதாஸ்) பசி அடங்கிய பின்னாடி சாப்பிடும் இட்லி இன்னொருதரோடதோ இல்லையோ ஆனா அப்படி சாப்பிடுகிற உணவால் புவி வெப்பமடையுது என்பது மட்டும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருகிறது! இப்போ போல் வீட்டுக்கு வீட்டு கிரைண்டர் இல்லாத காலத்தில் எங்கள் தெருவில், யார் வீட்டில் எல்லாம் கிரைண்டர் இருக்கோ அவர்கள் தான் தினசரி இட்லி செய்பவர்களாக இருந்தார்கள். எங்கள் தெருவில் பெரும்பாலான குழந்தைகளுக்கும் சேர்த்து இப்படி ஒன்றிரண்டு வீடுகளில் தினமும் இட்லி செய்து விடுவதுண்டு! அத்தைகள், சித்திகள், அண்ணிகள் வீடு பேதமில்லாமல் எந்த அடுப்படிக்குள்ளும் நுழைந்து தன் குழந்தைக்கு காலை உணவை உரிமையாக எடுத்துக்கொள்வார்கள்.
என் அப்பத்தா காலையில் காகத்திற்கு சோறு வைத்து, பின் மாட்டிற்கு கழுநீர் வைத்து, கோழிக்கு தானியம் தூவி விட்டு தான் தினத்தை தொடங்குவார். இரவு நாய்க்கு உணவு வைத்தபின் உறங்க செல்வார். வீட்டில் பிள்ளையார் எறும்பு எனும் கருப்பு எறும்பு இருப்பதை பார்த்தால் எறும்பு மருந்து தூவாமல் ஊறவைத்த பச்சரிசியில் சக்கரை கலந்து வீட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில்வரை அந்த அரிசியை தூவிக்கொண்டே போகும் வினோத வழக்கம் ஒன்றும் எங்கள் தெருவில் அப்போது இருந்தது. அப்படி இயற்கையோடு இணைந்து உயிர் சங்கிலி வளர்ந்ததெல்லாம் அந்த காலம். அப்போ மழை சரியாக பொழிந்தது. கோடையிலும் தண்ணீர் இருந்தது. மரத்திற்கு மரம் சிட்டுக்குருவிகள் இருந்தன. அணில்கள் இருந்தன. அவர்கள் செய்த புண்ணியதால் என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படியான வாழ்க்கைமுறையை இன்று நாம் வாழமுடியாது இல்லையா? இப்போ அளந்து அளந்து சமைக்கிறோம். ஆனாலும் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் சில நேரம் நிறையவே சாப்பிட்டு விடுகிறோம். அதனால் நாம் மட்டும் ஒபிசிட்டி தொல்லைக்கு ஆளாகவில்லை, நம் புவியையும் துன்புறுத்துகிறோம். நாம் சாப்பிட்ட உணவு வெப்பமாகி நாம் செயல்படத் தேவையான சக்தியை அளிக்கிறது இல்லையா? அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, அது செறித்து வெளியிடும் வெப்பமும் குளோபல் வார்மிங் எனும் பிரச்சனையை அதிகபடுத்துகிறது என்று ஆய்வுகள் சொல்வதாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழ் சில வருடங்களுக்கு முன் எச்சரித்திருந்தது. மேலும் இப்படி எடை அதிகமுள்ள நபர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவதால் அதிக எரிபொருள் எடுத்துகொண்டு அதிக புகை விடுகிறதாம். நம்ம எடையை குறைக்கிறோமோ இல்லையோ, இந்த புவி வெப்பமடைவதை குறைக்கவேனும் நம்மாலான உதவியாய் ஒரு வெட்டு வெட்டுவதையும், full கட்டு கட்டுவது குறைப்போம்.
(வெகுநாளாய் எழுத நினைத்த பதிவு. ஞானபிரகாசன் சகா வின் பதிவின் தாக்கத்தில் சோம்பல் உதறி எழுதியிருக்கிறேன். அதை படிக்க இங்க சொடுக்குங்க.) ஆறாவது ரூலா இதையும் சேர்த்துகோங்க பாஸ்)
ரெபரன்ஸ் (உசாத்துணை)
படத்திற்காக google லில் தேடியபோது இந்த லிங்க் ரெண்டும் கெடச்சது, மேலும் தகவலுக்கு இங்க பாருங்க)
"When it comes to food consumption, moving about in a heavy body is
like driving around in a gas guzzler. The heavier our bodies become the
harder and more unpleasant it is to move about in them and the more
dependent we become on our cars," say the researchers.
#http://www.infoniac.com/environment/latest-invention-machine-that-turns-plastic-back-into-oil.html
நல்ல பகிர்வு...
பதிலளிநீக்குசிட்டுக்குருவி, கிராமத்து வாழ்க்கை எல்லாம் போயே போச்சே சகோதரி...
வெப்பமடைதலை தவிர்க்க முயற்சிக்கலாம்...
உடல் வேலை இல்லாத வாழ்வில் சாப்பிடுவது எல்லாமே வெப்பத்தை அதிகரிக்கத்தான் செய்யும்...
சரியா சொன்னீங்க அண்ணா! மிக்க நன்றி!
நீக்குஉயிர் சங்கிலி வாழ்க்கை முறை இனியெப்போதும் கிட்டாத ஒன்று ... இன்னும் கொஞ்சம் பெரிசா எழுதிருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசியா சாப்பாட்டை பற்றி ஏதோ சொன்னிங்க , எனக்குத்தான் புரியல ...
பதிலளிநீக்குஅதிகம் சாப்பிட்டால், அதை செரித்து வெப்பமாக மற்றும் உடல் புவிவெப்பம் அடைய காரணமா இருக்கு, so அளவா சாப்டுங்கனு சொன்னேன்:) நன்றி சகோ!
நீக்குஅட.. அருமையான தகவல்தான்!..:)
பதிலளிநீக்குநன்றி தொழி!
நீக்குகுஷ்பு காங்கிரஸிலும், இட்லி கம்யூனிசத்திலும் என்று குஷ்பு இட்லியை இப்படி பிரிச்சுட்டீங்களே! ஆமா எப்படி சகோ, இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க,
பதிலளிநீக்கு"//பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் சில நேரம் நிறையவே சாப்பிட்டு விடுகிறோம். //" - உண்மை தான். இன்று நல்ல நாள் கிழமைகளில் கூட அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பலகராங்களை கொடுப்பதில்லை.
அருமையான பதிவு.
அந்த குஷ்பு இற்றை நான் விகடன் வலைபாயுதே பகுதியில் படித்தது சகோ:))) மிக்க நன்றி சகோ !
நீக்குபிள்ளையார் கோவில்வரை அந்த அரிசியை தூவிக்கொண்டே போகும் வினோத வழக்கம் !!
பதிலளிநீக்கு!!!அருமையான வழக்கம் ,,நாமும் நம்மாலான விதத்தில் புவி வெப்பமடைவத தடுக்க முயற்சிக்கணும் .. அருமையான வழக்கம் ,,நாமும் நம்மாலான விதத்தில் புவி வெப்பமடைவத தடுக்க முயற்சிக்கணும் நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க . ஸோ ஒரு மீல்ஸை குறைக்கணும் வீட்ல :) கணவர் மீல்ஸ்ல இருந்து குறைக்கிறேன்
ஹலோ !! எத்தனை பேர் இப்படி கிளம்பிருகீங்க:(( மீல்ஸ் அளவை குறைங்கன்னு சொன்ன இப்படியா அப்பாவி மனிதர் தட்டில் கைவைப்பது!! சார், ஏஞ்சலின் மேடத்தின் இந்த சதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது:))) ஹா..ஹ்ஹ்ஹ்ஹ! நன்றி தோழி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசொல்ல வேண்டிய விடயத்தை மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ!
நீக்குவிஜய்,குஷ்பு,இட்லி,காங்கிரஸ் கம்யூனிஸ்ட்,என இன்னும் இன்னுமாய் வருகிற பதிவு ஒரு நல்ல கட்டுரையாய் உருப்பெற்று வருகிறது,இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் கட்டுரை ஆக்கியிருக்கலாம்/
பதிலளிநீக்குஅது தான் அண்ணா என் பழக்கமே! இதற்கு மேல் நீளமா எழுதினா போர் அடிக்குமோ என்று ஒரு அச்சம் வேறு:) கருத்திற்கு நன்றி!
நீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குசொல்லிப் போனவிதம் அதைவிட அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அய்யா!
நீக்குஎந்தப் புகையும் பகை தான்...!@
பதிலளிநீக்குஅதே! அதே!
நீக்கு//நம்ம எடையை குறைக்கிறோமோ இல்லையோ, இந்த புவி வெப்பமடைவதை குறைக்கவேனும் நம்மாலான உதவியாய் ஒரு வெட்டு வெட்டுவதையும், full கட்டு கட்டுவது குறைப்போம்.//
பதிலளிநீக்குகுறைப்போம் சகோதரியாரே
ஆமா அண்ணா:)) மிக்க நன்றி!
நீக்குதம 2
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குநல்ல ஒரு பதிவு! சரி இட்லி சாப்டுட்டுத்தான் எழுதினீங்க போலருக்கு!! இல்ல நல்ல எனர்ஜட்டிக்கா இருக்கா அதான்..ஹஹஹஹ்
பதிலளிநீக்குகீதா: ஹை உங்க அப்பத்தா மாதிரியேதான் நாங்க இப்பவும் எங்க வீட்டுல...குரங்கு என்னக் கடிச்சுது இருந்தாலும் அது இப்ப வீட்டுக்கு தினம் வருது நம்ம பால்கனிக்கு அதுக்குனே கடலை, வாழைப்பழம் இப்படி ஏதாவது இருக்கும்....அதெ போல எறும்புக்கு என் பையன் சக்கரை, சாக்கலேட் இப்படிப் போடுவான்...கடி எறும்பே வந்தாலும்...அது இப்பவும் தொடர்கின்றது....இப்படி எல்லா சகாக்களோடும்....அப்பத்தாவை நினைத்து எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது....எவ்வளவு அருமையான ஒரு நல்ல உள்ளம் மிக்க நேசத்துடன் வாழ்ந்திருக்கின்றார்....
ஆனாலும் நீங்க ரொம்பஆஆஆஆ நல்லவுங்க சகா!! இன்னுமா குரங்கு வளக்குறீங்க:))) மிக்க நன்றி சகாஸ்!
நீக்குஅருமையான தகவல். ஊர் வாழ்க்கை முறை எழுதி, ஞாபகப்படுத்திட்டீங்களேஏ.
பதிலளிநீக்குஅப்படியா?? மிக்க சந்தோசம் தோழி!
நீக்குபுவி வெப்பமடைதல் பற்றிய கருத்துகள்..புதுமை..
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழி!
நீக்குஇயற்கையையோடு இயைந்து வாழும் கிராமங்களும் குறைந்துவிட்டன! பிள்ளையார் எறும்புக்கு பச்சரிசி மாவு தூவும் வழக்கம் எனக்கு புதியது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்!
நீக்கு
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் பதிவு போட்டு டென்சன் ஆகி உடம்பு சூடாகி வெப்பமயமாகிறது இந்த உலகம் அது மட்டுமல்லாமல் படிப்பவர்களாலும் வெப்பமயமாகிறது
so!! இப்படி பதிவு போடக்கூடாது என்கிறீர்களா:((((
நீக்குவாய்க்கு ருசியா மதுவிற்கு சமைச்சு போடுவதற்கு சோம்பேறி பட்டு இப்படி எல்லாம் அதிகம் சாப்பிடுவதால் வெப்பமயமாகிறது என்று நொண்டி சாக்கு சொல்லுவது சரியல்ல...
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா...கண்டுபிடுசுடீங்களா!! ஓகே ! இப்போவாவது நான்தான் சமைக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றியோ நன்றி((எப்புடி)
நீக்குஅருமையான பதிவு சகா! தனி மனிதர் ஒருவரின் உடம்பு பெருப்பதால் உலக வெப்பம் எப்படிக் கூடுகிறது என்பதை எவ்வளவு சுருக்கமாகவும் புரியும்படியும் - அதே நேரம், சுவையாகவும் விளக்கியிருக்கிறீர்கள்!! அது போக, 'கத்தி' படத்தைப் பயன்படுத்தி, நம் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இப்படிப்பட்ட நல்ல தகவல் சென்று சேர வைத்திருக்கிறீர்கள்! செம்மையான திட்டம்! தவிர, நான் எதிர்பாராத விதமாக என்னையும் அறிமுகப்படுத்தி, என் வலைப்பதிவுக்கும் இணைப்புக் கொடுத்து மகிழ்ச்சியூட்டி விட்டீர்கள்! (ஓ! அதனால்தான் வலைப்பூவின் பெயர் 'மகிழ்நிறை'யோ!) நன்றி!
பதிலளிநீக்கு** சுருக்கமாகவும் புரியும்படியும் - அதே நேரம், சுவையாகவும் விளக்கியிருக்கிறீர்கள்!!** ஒ!! மிக்க நன்றி சகா:)
நீக்கு**தவிர, நான் எதிர்பாராத விதமாக என்னையும் அறிமுகப்படுத்தி, ** ஆத்தி! சூரியனுக்கு டார்ச் அடிக்க முடியுமா என்ன!!!!
**வலைப்பூவின் பெயர் 'மகிழ்நிறை'யோ!** அதே! அதே! :))) மிக்க நன்றி சகா
//சூரியனுக்கு டார்ச் அடிக்க முடியுமா என்ன!!// - யப்பா!!!
நீக்குஆம் நாம் இட்டிலியைப் பெற நிறைய இழந்திருக்கிறோம்.
பதிலளிநீக்குநல்ல பதிவு சகோ!
நன்றி
மைன்ட் வாய்ஸ் வேற ஏதோ சொல்ற மாதிரி இருக்கே??? ஹ்ம்ம். புரியல:( மிக்க நன்றி அண்ணா!
நீக்குஇன்று எறும்புகளையும் ஊர்க்கோவில்களையும் மறந்துவிட்டோம்!!! அருமையான பகி்ர்வு.
பதிலளிநீக்குஆமாம் நேசன் அண்ணா!
நீக்குமிக்க நன்றி!
நேர்த்தியான பதிவு
பதிலளிநீக்குநான் தொனத்தி எடுக்கும் முன் நீங்களா முன் வந்து போட்ட முதல் கமெண்டிற்கு நன்றி:))
நீக்குநேற்றைய கருத்துரையில் ஒரு பதில் அளிக்க மறந்து விட்டேன். "ஆறாவது ரூலா இதையும் சேர்த்துகோங்க பாஸ்" என்றிருக்கிறீர்கள். "எதுவாக இருந்தாலும் அளவாகப் பயன்படுத்துங்கள், நுகருங்கள்" என்பதிலேயே இதுவும் அடங்கும் இல்லையா சகா?
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்கு‘அந்த இன்னொரு இட்லி யாரோடது!’ - தலைப்பைப் பார்த்தவுடன் வாழைப்பழக் கதை மாதரி தெரியுதே என்று உள்ளே சென்றால் குஷ்பு வந்துவிட இட்லி பொருத்தமானதுதான் என்று எண்ணியபடியே மேலே சென்றால் அடடா... அந்தக் காலத்தில் ஊர்களில் இயற்கையோடு இணைந்து எப்படி வாழ்ந்தார்கள் என்பதை.... அப்படியே அழகாக.... உணர்ந்ததை உள்ளவாறு சொல்லியவிதம்....பாராட்டுதலுக்குரியது. கிராமங்களில் சோளச் சோறு.... கம்மங்கூழ்.... இவற்றைச் சமைக்க உரலில் இட்டு... உலக்கையை மாறி மாறி பெண்கள் ’உஷ்...உஷ்’ என்றவாறு சிறிய சப்தம் எழுப்பி... குத்திக் குத்தி சமைக்கும் தாய்மார்கள் இப்பொழுது காணமுடியவில்லை என்பது பெரும் குறைதான். தாங்கள் சொல்லிய விதம் கிராமத்து வாசனை மாறாமல் இருந்தது... மிகமிக அருமை..
உலகம் வெப்பமயமாதலைப் பற்றி நன்றாக சொல்லி இருந்தீர்கள்.
நம்மாலான உதவியாய் ஒரு வெட்டு ( ’மரம்’ ) வெட்டுவதையும், full (‘சோற்றை’க்) கட்டு கட்டுவது குறைப்போம் என்று நன்றாகச் சொன்னீர்கள்.
நன்றி.
நல்வாழ்க்கை முறையைத் தொலைத்துவிட்டு அந்நியப்பட்டு போவதை மிகவும் அழகாகப் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆமா நான் போட்ட இட்லி (கருத்துரை) என்னாச்சு ?
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.....
பதிலளிநீக்குஒபிசிட்டி.. வரக்காரணமே தற்போதைய உணவுமுறைகளும், அதற்கான உடலுழைப்பு இல்லாததுமே. பாட்டி காலங்களையும் ஞாபகப்படுத்தி அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு