வெள்ளி, 7 நவம்பர், 2014

எனது வானுக்குக் கீழே!

 ஒரு ஒப்பந்தம்

              நண்பர்களே! நம்மில் பலருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு பருவத்தில் ஒருமுறையேனும் மேகங்களை நேரம் போவதறியாது பார்த்த அனுபவம் இருக்கும். ஒரே மேகம் ஒவ்வோரு  கண்களுக்கும் வெவ்வேறு வடிவம் காட்டும். பார்த்துக் கொண்டிருப்பவர்கே கூட முந்தைய நொடிக்கும் அடுத்த நொடிக்கும் வடிவம் மாறி வித்தை காட்டி விடும். அது போலவே ஒரு கதை அல்லது பாடல் என்பது அமைந்துவிடுகிறது. அது கொள்கலனின் வடிவம் கொள்ளும் திரவம் போல் அவரவர் மனம் கொடுக்கும் வடிவம் கொள்கிறது. பார்க்கும் எண் ஆறு என்பதும் ஒன்பது என்பதும் அவரவர் நிற்கும் இடத்தை பொறுத்தது தானே. 


                           அப்படி கதையின் இறுதியில் சொல்லப்படுகிற நீதியை விடவும் அதற்குள் புதைந்துகிடக்கிற வாழ்வின் எதார்த்தங்கள் சமயங்களில் என்னை வியப்பில் ஆழ்த்திவிடுவதுண்டு. அப்படி நான் படித்த, உணர்ந்த சில விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். புத்தகம் ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுத்தவர்கள், கரைகண்டவர்கள், மாதக்கணக்கில் கடலில் தங்கி வலைவீசிக் கொண்டிருப்பவர்கள் என பலரும் இதை படிக்கலாம் எனும் சாத்தியங்களோடு ஒன்றை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். நான் இன்னும் அந்த கடற்கரையில் கால் நனைத்தவள் மட்டுமே. என்றாலும் என் கால்களிலும் சில சிக்கியதுண்டு. அவற்றை கைவிரித்து உங்களிடம் காட்டும் முகத்து இதை எழுத்தத் தொடங்குகிறேன். நான் முத்துக்களை காட்டும் போது அவை கிளிஞ்சல்கள் எனவும் கிளிஞ்சல்கள் கண்டெடுக்கும் போது முத்துகள் எனவும் குழப்பிகொள்ளாதீர்கள். ஏனெனில் இது நீண்ட கடற்கரை உங்கள் கைகளில் இருப்பவை தான் என் கையிலும் இருக்கவேண்டும் எனும் அவசியமில்லையே!!!


இப்போ கதை 

உயர்ந்த மலையுச்சி. ஒரு பெரிய பெட்டி நிறைய கூலாங்கற்கள். அவற்றின் நடுவே எண்ணி மூன்றே மூன்று விலையுயர்ந்த வைரங்கள். அந்த பெட்டியை  தேவதையிடம் பெற்ற ஒருவன் கூலாங்கற்களை வீசி விட்டு வைரம் அடையும் நோக்கோடு, ஒவ்வொரு கல்லாக தூக்கியெறியத் தொடங்குகிறான். மணிக்கணக்கில் வீசியபடியே இருந்த அவன் சோர்ந்து போன வேளையில் தன்னை அறியாது கையில் சிக்கிய வைரத்தையும் எந்திர கதியில் எறிந்து விடுகிறான். என் பால்யத்தில் நான் படித்த இந்த கதைக்கு கூறப்பட்ட நீதி "எந்த செயலை செய்தாலும், ஈடுபாடும், பொறுமையும் அவசியம்" என்பதாக இருந்தது. ஆனால் இதை என் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டபோது என்னை அறியாது நான் கதையை இப்படி முடித்திருந்தேன். எந்திரகதியில் இப்படிதான் நாமும் அந்த மனிதனைப்போல் பயனற்ற பல கூலாங்கற்கள் போன்றவற்றோடு வாழ்கை எனும் வைரத்தையும் சேர்த்தே வீசிக்கொண்டிருக்கிறோம். இங்கே ஒரு ட்விட் நினைவுக்கு வருகிறது. எதற்காக பணம் சேர்க்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்றே அறியாமல் சப்வே சர்ப்ஸ் போலதான் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்கை:) 

                                                                                                         மீண்டும் கதைப்போம்.........


45 கருத்துகள்:

 1. வித்தியாசமான எதிர்பார்ப்பை கொடுத்து விட்டீர்கள் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. மேகங்களை நேரம் போவதறியாமல் பார்த்த அனுபவம்....
  எனக்கிருக்கிறது.
  எல்லார்க்கும் இருக்கும் என்பது புதிய செய்திதான்.
  எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்..
  இந்த வயதிலேயே இப்படியெல்லாம் சிந்திக்கக் கூடாதே..
  ம்ம்
  சரி நீங்கள் சிந்தித்துச் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறவிட்ட இடத்தில் இருந்து வெகுதூரம் ஓடிவிட்டு திரும்பி பார்ப்பது சரியா அண்ணா! அப்போ பார்த்துகிட்ட ஒடனே தொலைத்த பொருளை மீட்க கொஞ்சமேனும் வழியிருக்கு இல்லையா? so பாருங்க இப்போ கூட இப்படி ஓடிக்கிட்டு இருக்கோமோன்னு தோணினதும் பதினைஞ்சு நாள் ப்லாக் க்கு லீவ் விட்டுட்டு குட்டீஸ் கூட புத்தகங்களோட இளைப்பாறிட்டு வந்தேன். அவ்ளோ தான் அண்ணா! ஆமா கடைசியா நன்றி சொல்லிருகீங்களே எதுக்கு?? short டா முடிச்சதுக்கா:))))

   நீக்கு
 3. #பார்க்கும் எண் ஆறு என்பதும் ஒன்பது என்பதும் அவரவர் நிற்கும் இடத்தை பொறுத்தது தானே. #
  எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தெரிவது பூஜ்யம்தான் ..இது நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்கும் பொருந்துகிறதே :)
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தான் பாஸ்!! எந்த ball போட்டாலும் சிக்ஸர் தூக்குரீங்களே!!!!!!!

   நீக்கு
 4. கடவுளை நோக்கிக் கைகூப்பிய ஒரு குடும்பஸ்தன், ஆழ்வார் நாயன்மார்களெல்லாம் ஆண்டவனைப் பார்த்தார்களாமே? எனக்கும காட்சி கொடுக்க மாட்டாயா? என்று வருந்தி வருந்தி அழைத்தானாம்.
  இடையில் பிச்சைக்காரர் ஒருவர் வந்துவந்து யாசித்துப் பார்த்தார். இவரோ,
  “போப்பா...நானே கடவுளின் தரிசனத்திற்காக சாப்பிடாமல்கூடக் காத்திருக்கிறேன். அவர்வந்து நானும் சாப்பிடடபிறகு வா“ என்று சொல்லி அனுப்பினாராம். மீணடும் கடவுளிடம் பிரார்த்தனை தொடர்ந்தது..
  கடைசியாக கடவுளிடமிருந்து அசரீரி! “பக்தா... “
  இவ்ன் பரவசமானான்... ஆனால் ஆண்டவனே எனக்கும்ட்டும் ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்? காட்சிதரக்கூடாதா? இந்த ஏழையின் வீட்டுக்கு எழுந்தருளக் கூடாதா?“ கடவுள் சொன்னார் -
  “நான்தான் 2,3முறைவந்தேனே? நீதான் ஒவ்வொருமுறையும்
  பிறகு வா என்று சொல்லிவிட்டாய்! நான் என்ன செய்ய?”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கதான்... பக்கத்துல மைதிலி மைதிலின்னு ஒரு பொண்ணு துறுதுறுன்னு ஜாலியா அழகாக எழுதிக்கிட்டு, பேசிக்கிட்டு இருந்துச்சி... எங்க காணுமே? இது யாரு யாரோ ஓஷோக்கிழவி உட்காந்துகிட்டு என்னெமோ கதை சொல்லிக்கிட்டு இருக்கே? மைதிலிமமா... மைதிலிம்மா... அய்யா யாராச்சும் என் தங்கச்சி மைதிலிய பாத்தீங்களா? ரொம்ப நல்ல புள்ளைங்க.. காணமே?

   நீக்கு
  2. ஹா....ஹா...ஹா...அண்ணன் இருக்கும் வரை இந்த தங்கை எங்கே தொலைந்து விடுவாள்?? பேனாவை காயவிடாதே தாயி என்னும் அண்ணனின் சொல் எப்போதும் மனதுக்குள் ஒலித்தபடி இருப்பதால், வலைப்பூவிற்கு விடுப்புவிட்ட இந்த நாட்களில் கூட பேனாவிற்கு விடுப்பு விடவில்லை அண்ணா:)
   உங்கள்கிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்லுறேன் யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்க. நான் blog எழுதுவதற்கான நேரத்தை மகி மற்றும் நிறையின் நேரத்தில் இருந்துதான் களவாடுவது வழக்கம். கடந்த பதினைத்து நாளாய் என் செல்ல அண்ணியின் வெல்ல மகள் ப்ரதன்யா குட்டி(கஸ்தூரியின் தங்கை மகள்) நம் வீட்டுக்கு வந்துவிட களவாடிய அந்த நேரத்தை அவளுக்கு செலவழிக்க வேண்டியதை போயிற்று!! அவள் என்னைவிட பெரிய கள்ளி பின்ன புத்தகம் படிக்கவென நான் ஒதுக்கும் நேரத்தில் கொஞ்சத்தையும் என்னிடம் இருந்து கொஞ்சம் களவாடப் பார்த்தாள்!! எதை விட்டாலும் அதை விடுவேனா?? புத்தக நேரத்தை பாதுகாப்பதர்க்குள் உங்க பாடு என் பாடு என ஆகிவிட்டது:))))) தத்துவம் ரொம்ப அறுவையா இருக்கா அண்ணா:((((

   நீக்கு
 5. என்ன மைதிலி நீங்க இப்படி தத்துவம் எல்லாம் பேச ஆரம்பிச்சுடீங்க?!!! தொடர்ந்து "கதை"ங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா!! உங்களுக்கு சொல்லவேண்டிய அதே கருத்தை தான் விஜூ அண்ணாவிற்கு சொல்லிட்டேனே:(( as a friend why don't you do me favour ?? plz read the reply I gave for Viju anna:))

   say it frankly Varun. is it boring?
   waiting for your usual straight forward reply:)

   நீக்கு
  2. இதெல்லாம் அநியாயம், மைதிலி! நான் ஏதாவது "விதண்டாவாதப் பின்னூட்டம்" இட்டால்தான் அது "இயல்பானது" என்பதுபோல் ஒரு பிம்பம் உருவாக்கிட்டேன் போல இருக்கு. :)

   ரொம்ப நாளைக்கு (வருடங்களுக்கு?) முன்னால "பெண்களும் தத்துவமும்"னு ஒரு பதிவெழுதினேன் நான். அதில் நான் சொன்ன கருத்தென்னனா ஆண்கள்தான் பொதுவாக தத்துவம் பேசுவார்கள் என்பது. பெரிய பெரிய தத்துவ மேதைகள் எல்லாமே பொதுவாக ஆண்கள்தான். தத்துவப் பாடல்கள் அதிகமாக எழுதிய கண்ணதாசனும்கூட.

   பெண்கள் தத்துவம் பேசுவது அபூர்வம் என்பது என் தாழ்மையான எண்ணம். இப்போ "தத்துவ மேதாயிணி" மைதிலி அதற்கு விதிவிலக்கு போலனு தோணுச்சு. அதை அப்படியே சொன்னால் நான் ஏதோ உங்களுக்கு ஐஸ் வைப்பதுபோல இருக்குமேனுதான் அதை மனநாக்கிலேயே பேசிக்கிட்டேன். :) இப்போ என் வாயைப் புடுங்கி சொல்ல வச்சுட்டீங்களே இது நியாயமா? :)

   நீங்க போர் அடிக்க முயன்றாலும் அதில் ஒரு "எந்தூஷியாசம்" கலந்துதான் இருக்கும் இதுக்கு முன்னால யாரும் உங்களிடம் சொல்லியிருக்காங்களா? இல்லைனா நாந்தான் முதல் ஆளா?:)

   OK, I will also check out your response to Viju aNNA :)

   நீக்கு
  3. ****நான் ஏதாவது "விதண்டாவாதப் பின்னூட்டம்" இட்டால்தான் அது "இயல்பானது" என்பதுபோல் ஒரு பிம்பம் உருவாக்கிட்டேன் போல இருக்கு***
   ஹா....ஹா....ஹா....நான் நேர்மையான என்று சொன்னேன். நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க:))) வருண் சின்ன ரிப்ளை போட்ட அது பாராட்டா?? ஓ! இது தெரியாம நான் கூட ரொம்ப மொக்கையா எழுதிடேனொன்னு பீல் பண்ணினேன்!!

   **மனநாக்கிலேயே ** வாவ்!! என்ன அருமையான சொல்லாடல்!
   அப்புறம்..... ரொம்ப thanks வருண்:))

   நீக்கு
 6. எதற்காக பணம் சேர்க்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்றே அறியாமல் சப்வே சர்ப்ஸ் போலதான் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்கை

  உண்மைதான்... தொடருங்க... வாழ்த்துக்கள் சகோதரி,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா!!
   உங்ககிட்ட நான் ஏகப்பட்ட கடன் பட்டிருக்கிறேன். ஒரு நன்றி சொல்லணும் நிறைய மன்னிப்பு கேட்கணும். ஆமா அண்ணா நீங்க வலைச்சரத்தில் அறிமுகம் செய்தபோது என்னால் அங்குவந்து நன்றி சொல்லமுடியவில்லை. மிக்க நன்றி அண்ணா!

   அங்கு தொடர்ந்து வர முடியாமைக்கும், இந்த நன்றியை இத்தனை தாமதமாய் சொல்வதற்கும் என்னை மன்னியுங்கள் அண்ணா!

   நீக்கு
 7. இனிய வணக்கம் சகோதரி...
  தம்பதி சமேதராக உங்களை மதுரை பதிவர் திருவிழாவில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
  மேடையிலேயே இருந்ததால் பேசுவதற்கு நேரமில்லாது போய்விட்டது.
  =======================
  மேகங்களின் வடிவங்கள் அவரவர் மன எண்ணங்களுக்கு ஏற்றார் போல
  உருவம் கொடுக்கும் என்பது உண்மையே.... மாதமொருமுறை விமானப் பயணம் மேற்கொள்ளும் எனக்கு
  ஊருக்கு செல்லும்போது உறவுகளை சந்திக்கச் செல்கிறோம் என்ற ஆவலுடன் மேகங்களை பார்க்கையில்
  கிடைக்கும் வடிவத்துக்கும், ஊரில் இருந்து திரும்புகையில் கிடைக்கும் வடிவத்துக்கும் வித்தியாசம்
  இருக்கிறது.
  செய்தொழிலில் கவனமும் விடாமுயற்சியும் வெற்றிக்கான ஊக்கம் தளராது இருத்தலும்
  முழு ஈடுபாடும் அவசிய அவசியம் என்று ஆரம்பிக்கிறது கதை....
  ட்விட் முற்றிலும் உண்மை............எதைநோக்கிய பயணம் நமக்கானது என்று அறியாமலேயே பணத்தின் பின்னால்
  கால்களில் சக்கரம் கட்டி ஓடுகிறது வாழ்க்கை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா அண்ணா! என்னாலும் அதனால் தான் உங்களிடம் பேச முடியாமல்;போனது:(( மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 8. அருமையான கதை சகோதரியாரே
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. //நான் இன்னும் அந்த கடற்கரையில் கால் நனைத்தவள் மட்டுமே. என்றாலும் என் கால்களிலும் சில சிக்கியதுண்டு. அவற்றை கைவிரித்து உங்களிடம் காட்டும் முகத்து இதை எழுத்தத் தொடங்குகிறேன். நான் முத்துக்களை காட்டும் போது அவை கிளிஞ்சல்கள் எனவும் கிளிஞ்சல்கள் கண்டெடுக்கும் போது முத்துகள் எனவும் குழப்பிகொள்ளாதீர்கள். ஏனெனில் இது நீண்ட கடற்கரை உங்கள் கைகளில் இருப்பவை தான் என் கையிலும் இருக்கவேண்டும் எனும் அவசியமில்லையே!!!//

  என்னங்க நான் கதையளக்க போறேன் விருப்பம் உள்ளவங்க படிங்க மத்தவங்க எல்லாம் அப்படியாக்க ஒடி போயிடுங்க என்று சொல்வதை விட்டு இப்படி கதையளக்கிறீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே தான், ஆனா தமிழன் அளவு நெனச்சதை நச்சுனு சொல்ல மைதிலிக்கு வராது :((

   நீக்கு
 10. சிறுவயதிலிருந்து இப்போது வரை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் சம்மர் டையத்தில் பேக்யார்டில் என் மகளோட உட்கார்ந்து நான் சரக்கு அடித்தவாறும் என் மகள் கோக் குடித்து கொண்டும் வானத்தில் இருக்கும் மேகங்களை பார்த்து ரசித்து கொண்டிருப்போம் அது ஒரு இனிமையான அனுபவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளோடு சேர்ந்து ரசிப்பது!! உண்மையில் இந்த விசயத்தில் (ஜஸ்ட் ரசிப்பது not சரக்கு ஒகே?) நீங்க என் அப்பா மாதிரி:) பெரும்பாலான வீடுகளில் நம்ம இனியா சொல்லிருக்காங்க பாருங்க, அப்படிதான் நடக்குது:(((

   நீக்கு
 11. நானும் நீங்க கதையில் சொல்லியபடிதானுங்க எந்திர கதியில் பேக்யார்டில் என் குழந்தையோட விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து கொண்டிருந்தேன். அப்படி கொடுக்கும் போது அருகில் நின்ற ஆண்டிக்கும் சேர்த்து என்னை அறியாமல் கொடுத்துட்டேன் அந்த ஆண்டியும் வெட்கப்பட்டு ஒடிப் போயிடுச்சு ஆனா அதை பார்த்த என் மனைவி என்ன செய்து இருப்பார் என்று நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?

  இப்பவே உங்க கதையை பிரின்ட் செய்து என் மனைவியிடம் கொடுத்து படிக்க சொல்லப் போறேன்.. அதை படித்தாவது அவள் நான் தப்பு பண்ணவில்லை என்று புரிந்து கொள்வாள் என நினைக்கிறேன் ஹும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தோழி மதுரை தமிழன் மனைவிக்கு,

   மாமி , இந்த கதையை உங்ககிட்ட கொண்டுவந்து படித்து பார்க்க சொல்பவரை யாருன்னே எனக்கு தெரியாது!! அவர் என்னை தோழி என்றும் அதிலும் உங்கள் பூரிக்கட்டை பயந்து வயதான தோழி என்றும் சொல்லி உங்களை ஏமாற்ற கூடும். வழக்கம் போல அவரை நம்பாமல், நான் சொல்லவதை மட்டும் நம்புங்கள். காரைக்குடி நம்ம ஊரில் இருந்து ரொம்ப பக்கம் தான், நான் வேணா தேக்கில் செய்த அருமையான பூரிக்கட்டைகள் நம் நட்பின் பரிசாய் வாங்கி அனுப்பவா?

   நீக்கு
 12. தேவைதான் எதையும் தீர்மானிக்கிறது எனச்சொல்வார்கள்.ஓடவும் பணம் சேர்க்கச்சொல்வது அதுவாகத்தானே இருக்க முடியும்?சப்வே சப்வே சர்ப்ரைஸாக இருக்கமுடியுமா வாழ்க்கை என்பது தெரியவில்லை,வாழ்க்கை சுடும் நிஜங்களும்,யதார்த்தங்கள் பலவும் கலந்த தொகுப்புதானே,,,,,,,,,இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! ரொம்ப சுருக்கமா நான் சொல்ல நினைத்தத்தை சொல்லிடிங்க அண்ணா! மிக்க நன்றி !!

   நீக்கு
 13. தேவர்களாய் மாறி மேககளின் ஊடே நடக்கும் ஆசையைத்தூணொடுகின்றது படம்...உண்மைமா வாழ்வின் அற்புத கணங்களைத்தொலைத்தே ஓடிக்கொண்டிருக்கின்றோம்...நிலையாத பொருளை நோக்கி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

   நீக்கு
 14. வணக்கம்.!சகோதரி.! அந்த கூழாங்கல் கதை,ஓஷோவினுடையது.
  மேகங்கள்,என்றென்றும் அதிசயம்.
  "ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ..! ,
  "மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு"
  "மேகமே மேகமே வான்நிலா தேடுதே"
  "மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு" ....என்றெல்லாம் மேகங்கள் நம்மைக் கடந்து போகும்போது பாடத்தோன்றும்..ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால், வாழ்க்கை வானவில்லைப்போல் வண்ணமயமானது.
  நானும் தத்துவம் சொல்வதாக நினைத்து,எதோ தத்துபித்து என்று உளறிவிட்டேன்.
  வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! அப்படியா அண்ணா. இது தான் என் பிரச்சினையே! படித்த விஷயம் நினைவிருக்கும், ஆசிரியரும், நூல் தலைப்பும் மறந்து போய்விடுகிறது:(( உங்களை போல் தகவல்களை பெய் என பெய்யும் மழையாய் என்னால் அடுக்க முடியவில்லையே என பல நேரம் எனது நினைவாற்றலை நோந்துகொண்டதுண்டு:(((( தத்துபித்துவமா??? ரொம்பதான் தன்னடக்கம்:)) மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 15. ஒவ்வொரு நிமிடமும் வேண்டும் - திருப்தி...!

  பதிலளிநீக்கு
 16. என்னம்மா அம்மு ஒய்வு நிலையில் இருந்தால் இப்படியா தத்துவம் எல்லாம் வரும்.ம்...ம்..ம்...ம் அம்மு வந்தவுடன் களை கட்டுதே அடேங்கப்பா ! ஆஹா வானம் பார்ப்பதும் மகிழ்ச்சி தான் ஆனால் என்ன வானம் பார்த்துக் கொண்டிருந்தாயா என்று திட்டவும் செய்வார்கள் இல்லையா?
  ஆமா நான் பார்த்து தானே( வெள்ளி பனிமலைகள் விண்ணில் விளைகிறதே அதில் அந்த வெண்ணிலவு துள்ளி மகிழ்கிறதே ) என்று கவிதை போட்டேனே ஹா ஹா ...உண்மைதான் வேறு வேறு பார்வைகளில் கற்பனைகளும் காட்சிகளும் வெவ்வேறாகவே தெரியும்.
  அர்த்தமே இல்லாத ஒரு ஓட்டம் என்று தோன்றுகிறதா அம்மு ? உண்மை தான் எனக்கு பலதடவை தோன்றியிருகிறது.
  பூஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பார் ஞானத் தங்கமே அடிக்கடி நினைவுக்கு வரும். ஆமா அம்மு என்னதான் சொல்லவரீகன்னு ஆவலாயுள்ளது. பல திட்டங்களோடு வந்திருப்பீர்கள் போல் தெரிகிறது. ம்ம்..ம்.. கலக்குங்கம்மா. வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 17. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 18. உளம் தொட்ட கதை..!
  மிக அருமை!

  மேகக் கூட்டங்களோடு செல்லும் குட்டி மேகமாகமாய்
  என்னை நினைத்துப் பறப்பதுண்டு நானும்!..

  காலச் சகரத்தில் மாட்டிய வாழ்க்கை..!!
  காலை எடுக்கவும் முடியாது ஓடவும் முடியாத நிலையை
  என்னென்று சொல் தோழி?..

  பதிலளிநீக்கு
 19. அன்புள்ள சகோதரி,

  எனது வானுக்குக் கீழே!

  நீங்கள் பார்த்தைப் போல நமது கவிஞர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள் என்று பார்த்தேன்.
  வான்சிறப்பு:

  விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
  பசும்புல் தலைகாண் பரிது.
  -திருவள்ளுவர்.
  செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
  தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
  -பாரதி.

  வான் தந்த பாடம்:

  எத்தனை பெரிய வானம்!
  எண்ணிபார் உனையும் நீயே;
  இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
  நீஅதில், சிற்றெ றும்ம்பே
  அத்தனை பேரும் மெய்யாய்
  அப்படித் தானே மானே?
  பித்தேறி மேல்கீழ் என்று
  மக்கள்தாம் பேசல் என்னே!
  -பாராதிதாசன்.

  வானம் எனக்கொரு போதிமரம்
  நாளும் எனக்கது சேதிதரும்
  -வைரமுத்து.

  வானவில்:
  மானுடர்களின் ஆதமாவிற்கு
  வானத்தில் கண்ணி வைத்தது யார்?
  இது வண்ணங்களின்
  ஏழடுக்கு மாளிகையா?
  அழகின் ஒற்றையடிப் பாதையா?

  அடி நாட்களில்
  வானம் பறவைகளுக்க அமைத்த
  வரவேற்பு வளையமா?

  இயற்கை
  ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
  ஒரு ஓவியத்தைச் சிருஷ்டித்தது.
  -நா.காமராசன்.
  நீங்கள் கதை சொன்ன பொழுது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது...

  திரு.செல்வராஜ் அவர்கள் வானொலியில் சொன்னது நினைவிற்கு வந்தது...

  ‘ஒரு தாய் வறுமையின் கொடுமையோடு வட நாட்டிலிருந்து இரட்டைப்பிறந்த குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு புகைவண்டியில் பயணச்சீட்டு இல்லாமல் படிக்கட்டுக்கருகில் அமர்ந்தவாறு பயணம் செய்கிறாள்...தென் நாட்டிற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு மேலாகும்... வண்டி வந்து கொண்டிருக்கிறது...இரவாகி விடுகிறது. இரண்டு குழந்தைகளும் இரண்டு துணியில் போர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்கிறாள். என்ன கொடுமை... இரண்டு குழந்தையில் ஒரு குழந்தை இறந்து இருப்பதை அப்பொழுதுதான் பார்க்கிறாள்... அழுகிறாள்...வண்டி சென்று கொண்டே இருக்கிறது... இன்னும் அவள் போய்ச்சேருவதற்கு இரண்டு நாள் ஆகிவிடும்... செய்வது அறியாது அழுது கொண்டே வருகிறாள்... நீண்ட பாலம் வருகிறது...தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது... மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையைத் தூக்கி தண்ணீரில் போடுகிறாள்...புகை வண்டி சென்று கொண்டே இருக்கிறது...அழுது கொண்டே இன்னொரு குழந்தையைப் பார்க்கிறாள்...அய்யகோ! இறந்த குழந்தை வண்டிக்குள் இருக்கிறது!

  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 20. தொடக்கமே தொடரத் துர்ண்டுகிறது தோழி.

  மேகத்தை நிமிர்ந்து தான் பாரக்க வேண்டும் என்றில்லை.
  நம் வீட்டுக் கிணற்றில் பார்த்தாலும் தெரியும் தோழி.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிம்பமாக...... நான் சொன்னது மனக்கிணறு.

  பதிலளிநீக்கு
 21. வானத்தில் அவ்வப்போது தொலைந்து விடுவேன்.
  தோழியின் கதையிலும்..தொலைந்து விட்டேன்..

  பதிலளிநீக்கு
 22. வாழ்க்கையை பற்றி உங்களிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும் சகோ.
  வித்தியாசமாக ஆரம்பித்து வித்தியாசமாக முடிந்த ஒரு வித்தியாசமான பதிவு.

  பதிலளிநீக்கு
 23. ஓய்வு எடுத்து வரும்பொழுது குட்டீஸ் கதை வரும் என்று பார்த்தால் தத்துவமா? நானும் மேகங்களைப் பார்ப்பதுண்டு...
  குழந்தைகளிடம் இருந்து களவாடிய நேரங்கள் தான் வலைத்தளத்திலும், புத்தகங்களிலும்..நானும் உங்களைப் போல ஒரு ஓய்வு எடுக்க வேண்டும், பார்ப்போம்.
  இப்போதைக்கு கூழாங்கற்களை வீசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 24. சகோதரி தங்கள் உடல் நலம் தேறிவிட்டதா?! ம்ம்ம் அப்படித்தான் நினைக்கச் சொல்லுகின்றது தங்கல் கலக்கல் இடுகை!

  இப்போதும் கூட மேகங்களைக் கண்டு ரசித்து, அதன் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படும் வித்தியாசமான உருவ அமைப்புகளையும், வடிவங்களையும் கண்டு அதிசயித்துக் குதூகலிப்பது உண்டு! இந்த மேகங்கள் எங்கு செல்கின்றன? யாரைப்பார்க்க இப்படி வேகமாக ஓடுகின்றன என்பது போலவும் தோன்றும் பல சமயங்களில். புராணப் படங்களில் வருவது போல அந்த மேகங்களில் நாமும் உட்கார்ந்து பயணித்தால் எப்படி இருக்கும், இந்தப் பூபியைப் பார்த்துக் கொண்டே விண்ணையும் பார்த்துக் கொண்டே ஒரு டூர் அடிக்கலாமோ என்றும் தோன்றியதுண்டு. அப்படிச் செல்லும் போது அந்த பஞ்சு போன்ற மேகம் பிளவு பட்டால் நாம் அந்தரத்தில் தொங்குவோமா...இல்லை விழுந்து விடுவோமா...இப்படியப் பல கற்பனைகள்!

  கதை மிகவும் அழகான நச் என்று வாழ்வை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றது! ஆம் உண்மைதான் நாம் வாழ்க்கையில் எதையோ தேடி அலைவதால், நமது இன்றைய நொடியை அனுபவித்து ரசித்து சந்தோஷம் அடைய முடியாமல் தவிப்பது உண்மையே! நாமே இப்படி என்றால் நம் குழந்தைகள் பள்ளிச் சுமையால் பலவற்றை இழப்பது என்னவோ உணமை. அவர்களையும் நாம் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டியது நமது தலையாய கடமையே!

  நல்ல அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு