புதன், 25 பிப்ரவரி, 2015

கைப்பை-6 நட்பும் நட்பின் நிமித்தமும்.

                 ரொம்ப நாள் கழிச்சு வரேன். நான் பிளான் பண்ணிட்டு வந்தது வேற. ஆனா இந்த பத்துப்பதினைஞ்சு நாளில் நம்ம வலையுலகம் மகிழ்ச்சி, துயரம்,கோபம் என ஒரு மசாலா பட அனுபவத்தை எனக்கு இந்த நாட்கள் தந்திருக்கிறது.
    தோழி இளமதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அறிந்து மனம் மிகுந்த வேதனை அடைகிறது. சென்று பார்த்துவரும் தொலைவில் அவர் இல்லை எனும் எண்ணம் இந்த மெய்நிகர் உலக நட்பின் ஒரே சாபமாக இப்போது தெரிகிறது. விஜூ அண்ணாவின் இந்த கவிதையையே இளமதி நலம்வேண்டி வழிமொழிகிறேன்.

       
காதல் போயின் காதல்


                 இன்று வெங்கட் அண்ணாவின் பகிர்வில் தான் இந்த குறும்படத்தை பார்த்தேன். டைட்டில் கார்ட்போடும்போதே அசத்தத் தொடங்குகிறார்கள். we என தொடங்கி ஆவி டாக்கீஸ்  வருவதே அருமையாக இருக்கிறது.  அப்போது வரும் பாடலும் அருமை. ஆவி சும்மா டி.ஆர் மாதிரி ஆல் ரவுண்டரா அசத்திருக்கார். பாட்டு எழுதி, பாடி,  அழகா, ரசனையா இயக்கி......ஆவிக்கு  ஒரு ஸ்பெசல் பொக்கே. கூடவே வரும் பெண் குரல் என்னால் மட்டும் தான் இப்படி பாடமுடியும் என்கிற என் தலைகனத்துக்கு வேட்டுவைப்பதாக இருக்கிறது.

           சுப்பு தாத்தா என்றவுடன் சுப்பு தாத்தாவை தான் காட்டப்போகிறார்களோ  என நினைத்தேன். அந்த கேரக்டரில் துளசி அண்ணா:) நம்ம சகாக்கள் எல்லோருமே நல்ல நடிச்சுருக்காங்க. நம்மள கலாய்க்க விடாம, அவங்களே பொதுஇடத்தில் குப்பை போடாதீர்கள் என ஸ்மார்ட்டாக காட்டிவிடுவது சூப்பர். படத்தின்  still ளில் மதுவதனி சாக்லேட் சாப்பிடுவதை (ரொமாண்டிக் லுக் காமாம்) பார்த்தபடி இருக்கும் சீனியை ஒருவாரம்,பத்து நாள் வச்சு வச்சு கலாய்க்கலாம். என்னம்மா இப்பிடி பண்ணறீங்களேமா. பாவம் சின்ன புள்ள தானே, சீனிக்கு கொஞ்சம் சாக்லேட் கொடுத்திருக்கலாம்ல:)))))  

ஜோக்ஸ் அபார்ட். உண்மையில் ஷைனிங் ஸ்டார் முதற்கொண்டு எல்லோரும் நன்றாக நடித்திருந்த போதும், அந்த படத்தில் என்னை கவர்ந்த மூணு அட்டகாசமான விஷயங்கள். நம்ம ஸ்கூல்பையன்  சரவணன் சகாவின் ஜூனியர் அட! BORN ACTOR ங்க அவன். சூப்பர்! அப்புறம் அந்த பொண்ணு மது ! செமையா பண்ணிருக்காங்க. அழகான எக்ஸ்ப்ரசன்ஸ். long way to go மது. வாழ்த்துகள். இவங்க ரெண்டு பேருக்கும் சாக்லேட் ஷவர்!

last but not LEST ! பத்து நிமிடம் ஓடக்கூடிய படத்தில் கிடைக்கிற இடத்தில எல்லாம் தங்கள் ரசனையை, திறமையை, சிம்பாலிக்கா காட்டுகிற (காகிதக்கப்பல், புளியமரத்தின் கதை) இந்த நண்பர்கள் பட்டாளத்திற்கு ஒரு hats off:) WELL DONE CREW !! உங்கள் இந்த பணி மேலும் வளரவும், மென்மேலும் சிறப்படையவும் என் மனமார்ந்த வாழ்த்துகள் சகாஸ்:)

58 கருத்துகள்:

 1. நானும் பார்த்தேன் அருமையாக இருந்தது
  தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர் அண்ணா !!!! இப்டி ஸ்பீடா வந்து ஸ்வீட்டா கருத்துச்சொன்னதுக்கு நன்றி:!!! நன்றி!!!

   நீக்கு
 2. சகோ சின்ன கருத்து
  //விஜூ அண்ணாவின் இந்த கவிதையையே இளமதி// இந்த இடத்தில் கவிதையையே என்ற இடத்தில் கோடிட்டு காட்டி இருக்கலாம் அல்லது அந்த இடத்தை கலர் கொடுத்திருக்கலாம் காரணம் எலியை அங்கு கொண்டு போனால்தான் லிங்க் காண்பிக்கிறது எல்லோரும் எலியை அங்கு கொண்டு போவதில்லையே...
  சொன்னது அதிகப்பிரசிங்கத்தனம் என்றால் நீக்கி விடவும் நன்றி. அண்ட் Sorry

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரி எல்லாம் பெரிய வார்த்தை அண்ணா!!! இந்த தங்கையிடம் அது தேவையில்லை:) சரிபண்ணீட்டேன்:))

   நீக்கு
 3. சகோ இளமதி அவர்கள் விரைவில் நலம்பெற எனது பிரார்த்தனைகளும்......

  படம் நன்றாக வந்திருக்கிறது. இன்று வெங்கட் அண்ணா பக்கத்தில் பார்த்தீர்களா! மகிழ்ச்சி.... :) கருத்துரை இடாததால் நீங்கள் வந்தது தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.....ஹா....ஹ.... மன்னியுங்கள் வெங்கட் அண்ணா:)) இப்போ நானும் கருத்துப் போட்டுவிட்டேன்:) மிக்க நன்றி:)

   நீக்கு
 4. அந்த டைட்டில் பாடல் எனக்கும் மிகமிக பிடித்திருந்தது . ஒருசிலர் அதை குறையென்று சொல்லியிருந்தார்கள் . ஆனால் படத்தின் இருதியில் கீதா மேடம் வாய்ஸில் மென்சோகம் கலந்த தொணியில் வரும் வரிகள் படத்திற்கு உயிராய் இருந்தது .

  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுங்க மெக்னேஷ் சகோ நமக்கு பாட்டு பிடிச்சுருக்கு அம்புட்டுத்தேன்:)) நீங்க சொன்ன மாதிரி கடைசி பாட்டு டச்சிங்:) மிக்க நன்றி சகோ!

   நீக்கு
 5. இளமதி அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்! ஆவி டீமின் குறும்படம் என்னையும் மிகவும் கவர்ந்தது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சுரேஷ் சார்! தோழியை விரைவில் வலையில் காண ஆவலாக உள்ளேன்!

   நீக்கு
 6. சர்வர் லிங்க் காலி... என்னாச்சு ... பாய்ஸ்..?
  இளமதியின் துயர் நீங்க பிரார்த்தனைகள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **சர்வர் லிங்க் காலி... என்னாச்சு ... பாய்ஸ்..?** அப்படியா!!! என்னாச்சுன்னு தெரியலையே பாஸ்!!
   **இளமதியின் துயர் நீங்க பிரார்த்தனைகள் ..** தோழி விரைவில் நலமடைய வேண்டும் என்பது தான் எனக்கும் பெருவிருப்பம்.

   நீக்கு
 7. இளமதிக்கு முடியலயா?தெரியாதும்மா..அவங்களே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும் போது இது வேறா?நீண்ட நாள் கழித்து வந்தாலும் கைப்பை சூப்பர்டா..வாழ்த்துகள்...நானும் பார்த்தேன் ஆவி..பேய் மாதிரி சூப்பரா படம் எடுத்துருக்காப்பல ..பிசாசு மாதிரி ஓடும்லபா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழியை நினைத்தால் எனக்கும் அதுதான் முதலில் நினைவு வந்தது:(( அவர் விரைவில் குணமடைய வேண்டும்.
   **ஆவி..பேய் மாதிரி சூப்பரா படம் எடுத்துருக்காப்பல ..பிசாசு மாதிரி ஓடும்லபா...** எப்டிக்கா!! கலக்கீடீங்க போங்க:)

   நீக்கு
 8. ***ரொம்ப நாள் கழிச்சு வரேன். நான் பிளான் பண்ணிட்டு வந்தது வேற. ஆனா இந்த பத்துப்பதினைஞ்சு நாளில் நம்ம வலையுலகம் மகிழ்ச்சி, துயரம்,கோபம் என ஒரு மசாலா பட அனுபவத்தை எனக்கு இந்த நாட்கள் தந்திருக்கிறது.***

  வலையுலகில் மூழ்கி இப்போத்தான் எல்லா "இன்பங்களையும்" அனுபவிக்கிறீங்க போல இருக்கு. குடும்ப வாழ்க்கையைவிட வலையுலக வாழ்வு "challenging" ஆக ஆவதுண்டு. நாட்கள் கடக்கக் கடக்கப் பார்த்து பழகிப்போயிடும். We would develop enough immunity to survive and stay healthy after a while! :-)

  -----------

  *** தோழி இளமதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அறிந்து மனம் மிகுந்த வேதனை அடைகிறது. சென்று பார்த்துவரும் தொலைவில் அவர் இல்லை எனும் எண்ணம் இந்த மெய்நிகர் உலக நட்பின் ஒரே சாபமாக இப்போது தெரிகிறது. விஜூ அண்ணாவின் இந்த கவிதையையே இளமதி நலம்வேண்டி வழிமொழிகிறேன்.***

  I am just waiting to see her coming back and say, "I am doing great now!" in her own "poetic way" of course!

  -------------

  நான் ரொம்ப "பிஸி"னு ஊருக்கே தெரியும். உங்களுக்குத் தெரியாதா என்ன? அதனால அவ்வளவுதான் இப்போ! :)

  -----------

  எல்லாரும் சுத்தமான தமிழில் பிழையில்ல்லாமல் எழுத முயலுறாங்க. என்னை மாதிரி"கழிவுகள்" நாளுக்கு நாள் ஆங்கிலக் கலவையையும் அதிகமாக்கிக்கொண்டு போகின்றன, பாருங்க! என்ன செய்றது? நம்ம பையன் "ஆங்கிலத்தில் பேசினால்த்தான்" படிச்சு முன்னேறியதாக நினைக்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவன் தானே நான்? அதனால். let me blame it on my culture for my "disobedience" too! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வருண்:) ** We would develop enough immunity to survive and stay healthy after a while! :-)** ஆனா உங்க தில்லு எனக்கு வராது பாஸ்!!

   **I am just waiting to see her coming back and say, "I am doing great now!" in her own "poetic way" of course!** அதே! அதே!

   **
   நான் ரொம்ப "பிஸி"னு ஊருக்கே தெரியும். உங்களுக்குத் தெரியாதா என்ன? அதனால அவ்வளவுதான் இப்போ! :)** அதுக்காக இப்டியா பாஸ்?? ஒரு மீள்பதிவாவது தட்டலாம்ல:(((
   ** நம்ம பையன் "ஆங்கிலத்தில் பேசினால்த்தான்" படிச்சு முன்னேறியதாக நினைக்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவன் தானே நான்? அதனால். let me blame it on my culture for my "disobedience" too! :))** வாஸ்தவமான விஷயம் தான், ஆனா இதில் ஏதாவது உள்குத்து இருக்குதா பாஸ்!? lol

   கொஞ்சம் டைம் கிடைக்கும்போது ஏதாவது போஸ்ட் போடுங்க பாஸ், பாருங்க விஜூ அண்ணா உங்களுக்கு tough fight கொடுக்க ஆரம்பிச்சுட்டார்:))))) j.k

   நீக்கு
  2. சகோ,
   என்ன ஆச்சு. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது...............!
   அப்பறம் என்ன?
   ஏதாவது கோபமின்னா அதைப் பேசித் தீத்துக்கலாம்.
   அதுக்காக இப்படியெல்லாம் நீங்க கோத்துவிடுறது..................................??????:)))
   ஓஓ j.k வா...!!
   அப்ப o.k..!

   நீக்கு
 9. வணக்கம்

  இளமதி அக்காவின் உடல் நலம் அடைய இறைவனை பிராத்திப்போம்

  படத்தைபார்த்தேன் நன்றாக உள்ளது நடிப்பு... படம்பற்றி எழுதிய விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன் சகோ:) உங்க வருகைக்கும்,கருத்துக்கும்:)

   நீக்கு
 10. இளமதி அக்கா இப்போ எப்படியிருக்காங்க... விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  காதல் போயின் காதல் ரொம்ப நல்லாயிருக்கு... அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழி இன்னும் உடைநிலை பாதிக்கபட்டே இருப்பதாக தெரிகிறது அண்ணா:( உங்கள் பிரார்த்தனைகள் அவருக்கு வலுசேர்க்கட்டும்

   ஆமா அண்ணா ! படம் நல்ல இருக்கு. நன்றி அண்ணா!

   நீக்கு
 11. இளமதி அவர்கள் விரைவில் நலம்பெற எனது பிரார்த்தனைகளும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகா! அவர் விரைவில் நலமடைய வேண்டும். மிக்க நன்றி!

   நீக்கு
 12. ரொம்ப ரொம்ப நன்றி மைதிலி. படத்தில் நுணுக்கமான விஷயங்களை கூட தேடிப்பிடித்து ரசித்திருக்கிறீர்கள். ஆனால் கலாய்க்க முயன்று தோற்றுவிட்டீர்கள். ஹஹஹா.. அடுத்த முறை இன்னும் சிறப்பாக முயற்சிக்கவும்.. ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **ஆனால் கலாய்க்க முயன்று தோற்றுவிட்டீர்கள்.** பொழைச்சுப் போகட்டும் நம்ம நண்பர்கள் தானேன்னு விட்டுருக்கேன்:))
   ** அடுத்த முறை இன்னும் சிறப்பாக முயற்சிக்கவும்.. ;) ** நீங்களே சொல்லீடிங்க, செஞ்சுட்டா போச்சு:))

   நெஜமாவே படம் நல்ல இருந்தது, வாழ்த்துகள் சகா!

   நீக்கு
 13. பகிர்வுக்கும் கருத்துகளுக்கும் குழுவின் சார்பில் என் நன்றிகள் ..

  பதிலளிநீக்கு
 14. இளமதி விரைவில் நலமடையட்டும்..
  காதல் போயின் காதல் பட விமர்சனம் அருமை..
  ஆமா..விஜய் டிவி ரொம்ப பாத்துட்டீங்களா டியர்? :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழி விரைவில்குணமடைய வேண்டும் டியர்!

   **ஆமா..விஜய் டிவி ரொம்ப பாத்துட்டீங்களா டியர்? :))))
   அவ்வ்வ்வ் !! தெரிஞ்சுடுச்சா!! நன்றி டியர்:) எல்லோரும் நலம் தானே?

   ஹா..ஹா...

   நீக்கு
 15. என்னங்க டீச்சரம்மா உங்க கைப்பையில் எதுவும் அதிகம் வைப்பதில்லையா ? எல்லோரும் சில்லறையா கைப்பை நிறைய அதிகமாக நிறைத்து வைத்து இருப்பார்கள் ஆனால் நீங்க சில்லறையாக வைக்காமல் காந்தி தாத்த நோட்டை போல 'அதிகம் மதிப்புள்ள விஷயங்களை மட்டும்" வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடிதோச்சி மெல்ல எறிதல் என்று நிலவன் அண்ணா சொல்லுவார். அதுபோல மேட்டர் கம்மியா இருக்கே என்று தொடங்கி, மெல்ல பாராட்டாய் முடித்திருக்கும் உங்கள் நட்புக்கு நன்றி சகா:)

   நீக்கு
 16. சகோதரி இளமதி அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும்...

  ஆவி அட்ட்ட்ட்ட்டகாசம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ! அவர் விரைவில் நலம் பெற வேண்டும் அண்ணா!
   ஆவி அட்டகாசம் தான்:)) மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 17. தாமதமாக வந்தாலும் நல்ல விவாதம். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 18. சகோ,
  வணக்கம். நீண்ட இடைவெளி ஆகிவிட்டதாலோ என்னவோ, திறந்த கைப்பைக்குள் மீண்டும் வலிமொழிவு...............!
  இளமதியார் நலம் பெறவேண்டும்.

  இவ்விடைவெளிகளில் புதிய பதிவுதான் இல்லையே ஒழிய பல தளங்களில் உங்கள் வருகைப்பதிவிற்கான சில சோற்றுப் பதங்களைத் தந்திருக்கிறது இடுகை.
  எப்பொழுதும் போலவே, விழிகள் விரியப் படிக்கத் தொடங்குவோர் முகத்தில் புன்னைகையை ஒட்டவைத்துப் போகும் எழுத்து.
  இவ்வெழுத்துகள் கண்ணாடியென்றால் அதை நிறையவே காணமுடியும் நீங்கள்.
  நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பதிவுக்கு கைப்பை என பெயரிட வேண்டாமோ என நினைத்தேன். கருதிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா!

   தோழி நலம் பெறவேண்டும்!

   **எப்பொழுதும் போலவே, விழிகள் விரியப் படிக்கத் தொடங்குவோர் முகத்தில் புன்னைகையை ஒட்டவைத்துப் போகும் எழுத்து.** இதுபோலும் கவி சிந்தும் பின்னூட்டங்கள் பதிவையே காலி செய்து விடுகிறது அண்ணா:))
   மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 19. பல நாட்களாக வலைப்பக்கம் வர முடியாமல் போனது....வந்தால் முதலில் பார்க்க நேர்ந்தது, சகோதரி இளமதியின் உடல் நலம் பற்றிய விஜு ஆசானின் கவிதை வரிகள். மனம் மிகவும் வேதனை அடைந்தது.....அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.....

  எங்கள் குழுவின்/ஆவியின் படம் பற்றிய விமர்சனம் ஹஹஹ் சூப்பர்...மிகவும் ரசித்தோம்.....மிக்க நன்றி சகோதரி! பகிர்ந்ததற்கு....நாங்கள் மிகவும் எஞ்சாய் செய்தோம் ஷூட்டிங்கில்....

  அப்போ நீங்களும் இத்தனை நால் வலையில் இல்லையா....உங்கள் பதிவுகள் நிறைய இருக்குமோ என்று வந்தால்....நேற்று எதுவும் கண்ணில் படவில்லை....நேற்றிலிருந்துதான் வருகை நாங்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகாஸ் !! நீங்க ரெண்டு பேருமே கலக்கி இருக்கீங்க!! தோழியின் பணியை சற்று தாமதமாகத் தான் தெரிந்துகொண்டேன். ஆனாலும் நான் கலாய்த்ததை ரொம்ப ஸ்போர்டிவ் வாக எடுத்துக்கொண்ட தோழியின் அன்புக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 20. ஹலோ நான் போட்ட கமெண்ட் என்னாச்சி காக்கா தூக்கிட்டு போச்சா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காக்கா கிட்ட சண்டை போட்டு, வாங்கிட்டு வந்துட்டேன்ல:)))

   நீக்கு
 21. இளமதி விரைவில் குணமடைய வேண்டும். விஜூ அவர்களின் பதிவில் அறிந்தேன். விரைவில் வந்து விடுவார்.

  வெங்கட் நாகராஜ் பதிவில் படம் கண்டேன். விமர்சனத்துடன் கைப்பை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தோழி! அவர் விரைவில் நலமடைய வேண்டும்
   மிக்க நன்றி!

   நீக்கு
 22. அன்புச் சகோதரி,

  கோவை ஆவியின் ‘காதல் போயின் காதல்’ ஓர் அருமையான குறும்படத்தைப் பார்க்க வைத்ததற்கு நன்றி.

  இளமதி விரைவில் சுகம் பெற வேண்டி...

  மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவர்கள் கூட்டணி அசத்துகிறது ,மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!
   த ம 9

   நீக்கு
  2. பதிவர்கள் மேலும் பல வெற்றிபெறட்டும்:)) நன்றி ஜேம்ஸ் அண்ணா! நன்றி பகவான் பாஸ்:))

   நீக்கு
 23. பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆவியின் குறும்படத்தை இன்று உங்கள் மூலம் பார்த்துவிட்டேன். நன்றி மைதிலி. நல்ல தேர்ந்த ஒளிப்படப் படைப்பு. மனத்தைத் தொடும் கரு. நடிப்பும் பாடலும் பிரமாதம். பாராட்டுகள் பின்னணியில் உழைத்த அத்தனை நண்பர்களுக்கும்.

  இளமதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்திதான் மனம் வருத்துகிறது. விரைவில் அவர் குணமாகி மீண்டுவர பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா அக்கா!
   தோழி விரைவில் நலமடைந்து நம்மை (நாமும்)காண வலைப்பூவில் வரவேண்டும்

   நீக்கு
 24. குறும்படம் நன்று! பார்த்தேன் இரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா! தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது:)

   நீக்கு
 25. நம்முடைய பிரார்த்தனை சகோதரியைகுணப்படுத்தும்.
  ஆவியின்குறும்படம் அருமை பாடல்கலிரண்டும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா டீச்சர் தோழி இப்போவருவார் என காத்திருக்கிறேன்.
   படத்தில் அவர்கள் உழைப்பு தெரிகிறது அல்லவா! நன்றி டீச்சர்:)

   நீக்கு
 26. குறும்படம் பார்த்தேன். உண்மையிலேயே மிகவும் நல்ல கதை! திரைக்கதையும் நன்றாகவே இருக்கிறது. பாடலும் நன்று. ஆனால், நடிப்பிலும் இயக்கத்திலும் முதிர்ச்சியின்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அடுத்த முறை அதைச் சரி செய்து கொண்டால், இன்னும் இன்னும் அருமையான படைப்புகளைக் குழு வழங்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது அவர்கள் முதல் படைப்பு சகா! எனவே இது சிறப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது. அனுபவம் மேலும் சிறந்த படைப்புகளை அவர்களுக்கு வழங்கும் இல்லையா:) நான் கொடுத்த வாக்கை காக்கவில்லை. மன்னியுங்கள். மிக்க நன்றி சகா:)

   நீக்கு
 27. குறும் படம் அருமை
  விமர்சனமும் அருமை சகோதரியாரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணா! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்:)

   நீக்கு
 28. அம்மாடி அம்முக் குட்டி நான் ஓட்டு போட்டிருkகேன்ல அம்மு ஜெயிக்கத் தான் ஹா ஹா .....கூடிய விரைவில் மீண்டும் எனைக் காணலாம்.ஆனாலும் இளமதி இல்லாமல் வலையே வெறிச்சோடிக் கிடக்கிறது வேதனையில் வார்த்தைகளும் வர மறுக்கிறதும்மா அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்கிறேன் விரைவில். எல்லோரது பிரார்த்தனையும் அன்பும் நிச்சயம் அவரை குணப்படுத்தும். ஐ மிஸ் யு ஆல் . கைப்பை கவனம் அம்மு கனத்திருப்பதால் யாரும் கையாடி விடப் போகிறார்கள். ஹா ஹா ....

  பதிலளிநீக்கு
 29. நானும் இந்த காணொலியை வெளியிட்ட போதே பார்த்து ரசித்து அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு