இவரை பற்றிய முதல் பதிவு எழுதி, சற்றேறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. பபிதா தொடர்ந்து வாசித்தாள். இனி கார்வரின் கதை.
மோசஸ் தென் அமெரிக்க மாகாணத்தச்சேர்ந்த ஒரு பண்ணை முதலாளி என்றாலும், மற்ற பண்ணை முதலாளிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறார். அங்கே பலரும் அடிமை வேலைகளுக்காக பல அடிமைகளை வைத்துக்கொள்ள, மோசஸ் மட்டும் தன் மனைவியின் தனிமை போக்கும் துணைக்காக மட்டும் மேரியை நியமிக்கிறார். மேரிக்கு நான்கு குழந்தைகள். அடிமைகளை கொள்ளையடிக்கும் slave riders மேரியையும் அவளது மூன்று குழந்தைகளையும் கொள்ளையடித்துச் சென்றுவிட, எஞ்சிய ஜிம் என்கிற குழந்தையை தவிர மற்ற குழந்தைகளை மீட்க மோசஸ் முயற்சி செய்கிறார். அவரால் ஜார்ஜை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.
ஜார்ஜும், ஜிம்மும் குழந்தையற்ற மோசஸ், சூசன் தம்பதியரால் தன் சொந்தக் குழந்தை போல வளர்க்கப்படுகிறார்கள். வளரும்போதே மிக திறமையான குழந்தையாய் ஜார்ஜ் வளர்கிறார். சூசன் தனக்குத் தெரிந்தவற்றை ஜார்ஜுக்கு கற்பிக்கிறார். எல்லா வீட்டு வேலைகளையும், தோட்டவேலைகளையும் மிக சாமர்த்தியமாக செய்யும் ஜார்ஜை அந்த வட்டாரத்தில் பலருக்கும் பிடித்துப்போகிறது. ஜார்ஜ் அப்போதே எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக அவரிடம் இருந்த ஒரு அசாத்திய திறமை அவருக்கு உதவியது, அது தோட்டக்கலை. அவர் அந்த வயதிலேயே plant doctor (தாவர மருத்துவர்) என அழைக்கப்பட்டார். அப்படி ஒரு வீட்டுத் தாவரத்துக்கு வைத்தியம் பார்க்கச் சென்றிருந்த போதுதான், அங்கே அலங்காரத்துக்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாவரங்களின் ஓவியங்கள் அவரை பள்ளி நோக்கி இழுத்தன.
அப்போது தான் தன் வாழ்நாளில் முதல் முறையாக இனத்துவேசத்தை உணர்ந்துகொள்கிறார் கார்வர். கார்வர் கருப்பர்களை சேர்த்துக்கொள்ள கூடிய பள்ளிக்காக எங்கெங்கோ தேடி, தன்னை பிள்ளைபோல வளர்த்த மோசஸ் கார்வர் தம்பதியரை பிரிந்து, முசௌரி செல்லவேண்டி இருந்தது. கறுப்பின மக்களை பார்த்தால், ஒரு பொழுது போக்குக்காக போகி போல் அவர்களை எரித்துக் கொண்டாடும் காட்டுமிராண்டிகளிடம் இருந்து தப்பி, கூலி வேலையும் செய்தது, ஒற்றை அரைப்பள்ளியில் படித்து, பட்டப்படிப்பு வருவதற்குள் உயிர் போய், உயிர் திரும்புகிறது ஜார்ஜுக்கு. இவரது அட்டகாசமான மதிப்பெண்கள் ஹை லான்ட் பல்கலைக்கழகத்தில் அவருக்கு இடம் தேடித்தருகிறது. அனுமதி கடிதத்துடன் நேரில் சென்ற ஜார்ஜ், கறுப்பர் என்ற காரணத்துக்காக அவமானப்படுத்தி அனுப்பப்படுகிறார்.
பின் சிம்ப்சன் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அவரது அட்டகாசமான கிரேடுகள் அவருக்கு அங்கேயே விரிவுரையாளர் வாய்ப்பைப் பெற்றுத்தருகிறது. அப்படியான வாய்ப்பை பெற்ற முதல் கறுப்பர் அவராகத் தான் இருப்பார். ஆனால் அத்தோடு அவர் சாதனை முடிந்துவிடவில்லை. டஸ்கீஜி வேளாண் நிறுவனத்தில் இயக்குனர் பதவி பெறுகிறார். அப்போது தன் பேருக்கு பின்னால் கார்வர் என தன் வளர்ப்புத்தந்தை பெயரையும், மூன்று பெயர்கள் இருக்கவேண்டும் என்கிற அப்போதைய தேவைக்காக, தான் இருந்த வாசிங்டன் மாகாணத்தையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் என தன் பெயரை மாற்றிக்கொள்கிறார்.
என் வழக்கத்தை விட இந்த பதிவு நீண்டுகொண்டே செல்வதால், அவர் எப்படி கடலை மன்னன் ஆனார் என்கிற மீதிகதையை உங்க ரெஸ்பான்சை பார்த்துவிட்டு, அப்புறமா சொல்லுறேன். கார்வரின் கதை தொடரும், நீங்க கல்லைக்கில்லை எடுக்கலேன்னா:)
முதல் பாகம் படிக்க இங்க சொடுங்க.
முதல் பாகம் படிக்க இங்க சொடுங்க.
ஒரு பதிவை இரண்டாக மாற்றுவது எப்படி என்று சொல்லித் தாருங்களேன்... ஹா... ஹா...
பதிலளிநீக்குஎன்னது உங்களுக்கு நான் சொல்லித்தருவதாக!!!??? ஆத்தி!! கலாய்க்காதீங்க அண்ணா:)))
நீக்குஎன் வழக்கத்தை விட இந்த பதிவு நீண்டுகொண்டே செல்வதால், // ஹஹஹஹஹ சகோதரி,....எங்க பதிவுகள் பெரும்பாலும் நீ...............ளமாகிப் போயிடும்.....பரவாயில்லை சகோதரி இது போன்ற நல்ல விஷயங்கள் கொஞ்சம் அப்படி இப்படிப் பெரிதாகிப் போனால் பரவாயில்லை. தொடருங்கள். இவரைப் போன்று வித்தியாசமாகச் சிந்தித்து செயல்பட்டு வெற்றியடைந்தவர்கள் குறித்து பலரும் அறிய வேண்டும். அப்படியாவது நாமும் வித்தியாசமாகச் சிந்திக்க ஒரு உந்துதல் வராதா?!!! லேட்டரல் திங்கிங்க்.....அவசியம்....
பதிலளிநீக்குநல்ல பதிவு தொடருங்கள்...நாங்க கல்லெல்லாம் தூக்க மாட்டோம்....ஹஹஹ (ஆனா அதை விடக் கொடுமை பின்னூட்டமே பெரீ.........சா போட்டுருவோமே...!!!!!)
உங்க பின்னூட்டம் கொடுமையானது அல்ல சகாஸ், அதுவே தோழி அனிதா சொல்வது மாதிரி பெரிய கிப்ட் தான்:)
நீக்குமிக்க நன்றி சகாஸ்!
இந்த கதை எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. அவர் எப்படி கடலை மன்னன் ஆனார் அப்படிங்கிறதை மட்டும் சீக்கிரம் சொல்லுங்க.
பதிலளிநீக்குஆக நீங்க முதல் பதிவை படிக்கலை போல அதான் புள்ள ஆர்வமா கேட்குது:))) சொல்லுறேன் சகோ சொல்லுறேன்:)
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குபதிவுநன்றாக உள்ளது அறியாத தகவல் தங்களின் பதிவு வழிஅறியக்கிடைத்துள்ளது காரணப்பெயர் வருவதற்கான காரணத்தை அறிய காத்திருக்கோம் பகிர்வுக்கு நன்றி த.ம2
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் சகோ, அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேன்!
நீக்குகடலை மன்னனுக்காக தமிழ் மணம் 3
பதிலளிநீக்குகடலை மன்னன் சார்பாக நன்றி அண்ணா!:)
நீக்குசீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்கள்.ஆவலோடு காத்திருக்கிறோம்.கல் எல்லாம் வேண்டாம்.ஒரு பூங்கொத்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.ok வா?
பதிலளிநீக்குபொக்கே!!! எனக்கே எனக்கா!! மிக்க நன்றி தோழி!!
நீக்குகல் இல்லை நல்ல சொல் பல தேடுகிறோம் இந்தச் சுவையான மொழிபெயர்ப்புக் கதைக்காக.
பதிலளிநீக்குபதிவின் நீளம் பற்றிக் கவலைப்படாதீர்கள்! அந்தக் கவலையால் பல இடங்களை நீங்கள் குறைந்த அளவு சொற்கள் கொண்டு வேகமாகக் கடந்து போவது தெரிகிறது. எனவே, அப்படிச் செய்யாமல், நிறுத்தி நிதானமாக வளர்த்தி எழுதுங்கள்! அப்பொழுதுதான் இது நல்லதொரு படைப்பாக அமையும்! இவ்வளவு சிரம்பபட்டு மொழிபெயர்க்கிறீர்கள் இல்லையா? அது வெறும் எழுத்துப் பதிவாக இல்லாமல், நாளை சேர்த்து வைத்துப் படிக்கும்பொழுது நல்லதொரு மொழிபெயர்ப்புப் படைப்பை நுகர்ந்த துய்ப்பைத் (அனுபவத்தை) தர வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
**கல் இல்லை நல்ல சொல் பல தேடுகிறோம் இந்தச் சுவையான மொழிபெயர்ப்புக் கதைக்காக.** அம்மாடி!! சந்தோசம் தாங்கமுடியல:))
நீக்குசகா! இதன் முதல் பாகத்தைப்படித்தீர்களா? நான் படித்த, என் ஏழாம்வகுப்பு மாணவர்களுக்கு நான் நடத்த ரெபரன்ஸ்ஸாக (உசாத்துணை!?) பயன்படுத்திய ஒரு நூலின் சுருக்கம் தான் இது. அதை முழுவதுமாக சொல்லாமல், என் பாணியில் சொல்லிக்கொண்டிருகிறேன். ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன். பதிவு நீள்கிறதோ எனும் பதட்டத்தில் சொற்களை வெகுவாக குறைத்துத்தான் பயன்படுத்துகிறேன். அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்!!!! அடுத்த பதிவில் அந்த தவறை திருத்திக்கொள்கிறேன் சகா:)
கூர்ந்து வாசித்து, சுட்டிக்காட்டிய உங்கள் என் நன்றிகள் பல:)
//கூர்ந்து வாசித்து, சுட்டிக்காட்டிய உங்கள் என் நன்றிகள் பல// - :-)
நீக்குமுதல் பாகத்தையும் வெளியிட்டவுடனேயே படித்தேன்.
அன்புச் சகோதரி,
பதிலளிநீக்குஜார்ஜ் வாசிங்டன் கார்வர் இனத்துவேசத்தை எதிர்த்து எப்படி வெற்றி கொண்டார் என்பதை அறிந்து வியந்தேன்...தொடருங்கள்... தொடர்கிறோம்.
நன்றி.
ஒவ்வொரு திருப்புமுனை வெற்றிக்குப் பின்னாலும் எவ்வளவு கண்ணீரும், வேர்வையும், இருக்கிறது என்பதை கார்வாரின் கதையிலும் அறிய முடிகிறது. உன் நடை படிக்கததூண்டுகிறதுப்பா. (ரீடபிளிட்டி) அது இல்லாமல்தான் ஏராளமான நல்ல பிறமொழிப் படைப்புகள் தமிழில் வேர்கொள்ள விலலை! நீ வெளுத்து வாங்கு. (ஆனா அந்த வெள்ளையர்கள் படுத்திய பாட்டுக்கு அவர்களைத்தான் வெளுத்து வாங்க எங்க கல்லு,சரி விடு நீயே சொல்லால் அடி! தொடர்க
பதிலளிநீக்குஎன்ன கருத்து போடலாம் இந்த பதிவிற்கு.......??????ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குபதிவு நீளமாக வருவதை பற்றி கவலைப்பாடாதீர்கள் சொல்ல வருவதை அழகாக நிறுத்தி நிதானமாக சொல்லுங்கள் அதுதான் நல்லது ஆனா எனக்கு மட்டும் பதிவை 10 வரிகளில் சுருக்கமா எழுதி மெயில் அனுப்பிவிடுங்கள் ஹீஹீ எப்படி நம்ம கருத்து...
பதிலளிநீக்குகல்லை தூக்க ஆசைதான் ஆனால் அதற்கு என் உடம்பில் வலு இல்லை அதுமட்டுமல்ல தூக்கி எறிந்தா அதை தாங்கும் சக்தியும் உங்களுக்கு இல்லை என்பதால் பூங்க்கொத்தை தூக்கி விசுகிறேன்
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகப் படித்தேன். சுருக்கமாகவே இருக்கிறது பதிவு.
பதிலளிநீக்குகல்லை எடுக்கமாட்டோம். தொடருங்கள்.
பதிலளிநீக்குநீளமா படிக்காத நானே படிக்கிறேன்.... :)
பதிலளிநீக்குநேடிவ் அமெரிக்கர்களை வெள்ளையர்களும் முழுவதுமாக அழித்து விட்டார்கள். எந்த ஒரு நாட்டிலும் பூர்வகுடிகளை அழிப்பதென்பது அரிது.அதை சாதித்த ஒரே நாடு "எங்கள் அமெரிக்கா"தான் என்று வெட்கப்படும் அமெரிக்கர்களும் உண்டு. ஆனால், What's the bottom line? We destroyed them all! Yeah, In God we trust!
பதிலளிநீக்குஅதேபோல்தான் கருப்பர்களை அடிமைகளாக வைத்து தன் வாழ்க்கையை, தன் நாட்டை (களவாடிப் பெற்ற நாட்டை) வளப்படித்தியவர்கள் நாங்கள். இன்றைய தினத்தில் கருப்பு இன இளைஞர்கள் சிறு தவறுகள் செய்தாலும் "சட்டம் காப்பதாக"ச் சொல்லி சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். மைக்கேல் ப்ரவ்ன், டேவான் மார்ட்டின் என்கிற இரு சிறுவர்கள் வெள்ளையர்களால் கொல்லப்பட்டார்கள். வெள்ளையர்களையே அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட "ஜூரிகள்" அவர்களைக் கொன்னது சரி என்று "நியாயம்" வழங்கினார்கள்.இதுதான் இன்றைய அமெரிக்கா! கருப்பு இனத்தவர் ப்ரசிடெண்டாக உள்ள அமெரிக்காவில் கருப்பு - வெள்ளை பிரிந்தே சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் வெறுத்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்..இதுதான் இன்றைய நிலவரம்.
கார்வார் வாழ்ந்த காலத்தில் வெள்ளையர்கள் எப்படி நியாயம் பேசியிருப்பார்கள்??
What I learn is white people are always feel insecure- just like brahmins in India. Insecure people are never happy although they are in high positions or even rulers. They come up because they are insecure and opportunists. By hook or crook they find a way to come up.They always worry about themselves and for their survival. They care less about people those who suffer more than they are. They hardly dedicate their life for poor people. They get rid of such people (eg Gandhi) who care about others too! They justify that in their own crooked way! Sankar raman was gotten rid of because someone was "insecure"! They NEED GOD as they are INSECURE! They pretend to be superior as they have the inferiority complex. They are being clever or intelligent because they are insecure and unhappy and they are not much philosophical in the short life they live.
This is the theory I came up with recently. :-)
இன்றைய தலைமுறைக்கு வரலாற்றை மிக எளிதாகக் கொண்டுசேர்க்கும் சிறப்பான முயற்சி. பாராட்டுகள் மைதிலி.
பதிலளிநீக்குகருப்பு அடிமைகள் குறித்து சில புத்தகங்கள் படித்து உள்ளேன். இன்றைய அமெரிக்காவின் அடித்தளத்தில் உள்ள இரத்தக்கறை தோய்ந்த வரலாற்று நிகழ்வுகள். சில பதிவுகளில் ஏற்கனவே அதைப் பற்றி எழுதியுள்ளேன்.
பதிலளிநீக்கு