நடுங்குகிற தேநீர்க் கோப்பையை
இறுகப் பற்றுகிறது
முதிர்ந்த விரல்கள்!
----------------------
குடிமாறிவிட்ட
நண்பனின் பழையவீட்டில்
இடறுகிற புதுமுகமாய்
உன் சமீபத்திய புன்னகைகள்!
--------------------
நம்பிக்கைகள் மரணிப்பதை விட
கொடுமையாக இருக்கிறது -நம் மேல்
நம்பிக்கை வைத்தவர்கள் மரணிப்பது...
-------------------
எங்கே, எப்படித் தொலைக்கப்போகிறேன்
நீ கண்டெடுத்துத் தந்த
புதிய என்னை!
----------------
கவிதை, காதல், கற்பனை என
எல்லா ஒப்பனைகளையும் கலைத்தபின்
எத்தனை இயல்பாய் இருக்கிறது- இந்த மழை!
----------------
நான் என்னிடமே பேசுவதாய்
உணர்ந்த நாட்களை கடந்து
எனக்கு நானே பேசுவதாய்
உணரவைத்திருக்கிறாய் -நல்ல மாற்றம்
----------------
செவிவழிக் காதல்கதைகளென
சிலிர்ப்புக் குறைச்சலாய் தான் இருக்கிறது
சன்னல் மழையில்- என்கிறது
மழை நனைந்த மலர்!
டிஸ்கி;
குறும்பா என நான் எழுதிவந்த my style (என்பாணி) கவிதைகள் இனி மைக்கூ வாக. இதற்கு முந்தையதொகுப்பை க் காண இங்க க்ளிக்குங்க. தலைப்பிட உதவிய முரளிதரன் அண்ணாவின் ஐடியாவிற்கு நன்றி!
அருமை. நம்பிக்கை மரணம் கவிதையை மாற்றிச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்குமோ..
பதிலளிநீக்குஒரு மரணத்தின் தாக்கத்தில் எழுதியது! வேறென்ன செய்ய:) நன்றி சகா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஎல்லாம் இரசிக்கவைக்கு வரிகள் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் சகோ!
நீக்குகுறும்பா நீங்க எழுதியது கரும்பா இனிக்கிறது......
பதிலளிநீக்குதமிழனா சொன்னது!!!! நன்றி! நன்றி!!
நீக்குஉங்க வீட்டு பக்கம் டாஸ்மாக் திறந்துவிட்டார்களா காரணம் அதன் வாசனை இங்கே வந்திருக்கிறதே
பதிலளிநீக்குநடுங்குகிற கோப்பையை, குடிமாறிவிட்ட, இடர்கிற , கொடுமையாக இருக்கிறது -மரணிப்பது.தொலைக்கப்போகிறேன் எனக்கு நானே பேசுவது
அவ்வவ்வ்வ்வ். எப்படி தான் இப்படி எல்லாம் தோணுதோ!! செம:)
நீக்குஅருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குமைக்கூ நல்லாருக்கே டா
பதிலளிநீக்குஒ!! நன்றி அக்கா!
நீக்குமிகவும் அருமை. ரசித்தோம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குஎனக்கு நானாய் பேசவைத்தாய்,,,,,,,
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையாக இருக்கிறது.
நன்றி மேடம்:)
நீக்கு//எங்கே, எப்படித் தொலைக்கப்போகிறேன்
பதிலளிநீக்குநீ கண்டெடுத்துத் தந்த
புதிய என்னை!// - மிகவும் சுவைத்தேன்! சாளரச் சாரலை செவிவழிக் காதல் கதையாய் உருவகித்த கற்பனை அபாரம்! தானே காதலில் ஈடுபடுவது மூச்சுத் திணறத் திணற மழையில் நனையும் இன்பம் என இன்னொரு கவிதையைச் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன அந்த வரிகள்!
அசரடிக்கும் கற்பனைத்திறம் சகோ உங்களுக்கு!
ஆஹா! அகசிவப்பில் இப்படி ஒரு வார்த்தை கேட்பது எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு!!! மிக்க நன்றி சகா!
நீக்கு//இடர்கிற புதுமுகமாய்// - 'இடறுகிற' என இருக்க வேண்டுமோ?
பதிலளிநீக்குமாத்திட்டேன்:)
நீக்குகூ.. க்கூ.. மைக்கூ!..
பதிலளிநீக்குவாவ்!!! நன்றி அய்யா!
நீக்குஇது எல்லாம் எப்படி சாத்தியம் அம்மு ஐயோ ! எப்படி இப்படி எல்லாம் வருகிறது அசத்தலான சிந்தனைகள். அதிர்ச்சி ஆச்சரியம் இன்னும் என்னவெல்லாமோ அம்மு சொல்லமுடியலை wow wow. இப்ப இப்ப தான் என் அம்முவைக் காண்கிறேன் இதுவரை எங்கோ என் அம்முவை தொலைத்து விட்டேன் போல் இருந்தது. இப்போ என் பழைய அம்ம்முவை தேடித்தந்தமைக்கு நன்றிகள் ...!கரும்பான குறும்பாக்கள் அம்மு ......வாழ்த்துக்கள் தொடர ...!
பதிலளிநீக்குநான் எப்டி தொலைக்க என்று எழுதினேன். நீங்க கண்டுபிடிச்சதுக்காக சந்தோஷபடுறீங்க!!! இனியாச்செல்லம் னா இனியாச்செல்லம் தான்:) மிக்க நன்றி டா!
நீக்குஅன்புச் சகோதரி,
பதிலளிநீக்குஉதிரும் சருகு...மெதுவாய் பேசியது...!
இடர் வரும்...போகும்...!
மரணம்... மனிதன் கொல்ல முடியாதது...!
தொலைக்க... தொலைதூரத்திலா இருக்கிறேன்..!
மழை எதையும் கலக்கவிடாத... தூய்மை!
மாற்றத்தின் மறுமொழி...!
மலரினும் மெல்லியது காதல்...!
-மைக்கூ... தங்களின் ஹைக்கூவில் ...
//எங்கே, எப்படித் தொலைக்கப்போகிறேன்
நீ கண்டெடுத்துத் தந்த
புதிய என்னை!
-மிகவும் பிடித்தது.
அனைத்தும் அருமை...//
நன்றி.
த.ம. 5
உங்க மைக்கூ ஒரு வரி (இரு வார்த்தை) கவிதையா அசத்துதே!!! ஆஹா!!!
நீக்குநெஜமாவே ரசித்தேன் அண்ணா!
மிக்க நன்றி!
நான் சொல்ல வந்ததை துரை செல்வராஜு சொல்லி விட்டார்.!
பதிலளிநீக்குஇனிமை
ஆஹா! அப்படி அய்யா!!!! மிக்க நன்றி:)
நீக்குஸூப்பர் கூக்கூ... அருமை ரசித்தேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா!
நீக்குமைக்கூ எல்லாமே சிறப்பு!
பதிலளிநீக்குநல்ல கற்பனை! சிந்தனைக்கு நல் விருந்து!
சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!
ஆஹா!! எதசொன்னாலும் கவிதையா சொல்றாங்களே! நன்றி தோழி!!!
நீக்குமைக் வழி மைக்கூ!!!!!!
பதிலளிநீக்கு/எங்கே, எப்படித் தொலைக்கப்போகிறேன்
நீ கண்டெடுத்துத் தந்த
புதிய என்னை!// அருமை மிகவும் ரசித்தோம்....
கீதா: மைத்துவின் மைக்கூ அருமைப்பா...என் வழி தனி வழினு மைக்கூவுறீங்கப்பா...!!!!!
நெஜமாவா??? ஹாஹாஹா!!! நன்றி சகாஸ்!!!
நீக்குஅருமை அக்கா....
பதிலளிநீக்குநன்றி சகோ!
நீக்குமைக்கூ மிக அழகு!
பதிலளிநீக்குத ம 9
மிக்க நன்றி சார்!!
நீக்குஉங்கள் கற்பனை வளம் அதிரடிக்கிறதுஒன்றைக் குறிப்பிட்டுப்பாராட்டினால் மற்றவற்றுக்குக் கோபம் வரும் என்பதால் ஒட்டுமொத்தமாய்ப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்களின் இந்த வார்த்தைகள் மிகுந்த உந்துசக்தியாய் இருக்கிறது சார்! மிக்க நன்றி!!
நீக்குமைக்கூ எல்லாமே என் மனதிலே தைக்கூ :)
பதிலளிநீக்குபாஸ் ஸ்டைலே தனி தான்:) நன்றி பகவான் பாஸ்!
நீக்குஆஹா! மைக்கூ பிரமாதமாயிருக்கே டியர்!
பதிலளிநீக்கு//
எங்கே, எப்படித் தொலைக்கப்போகிறேன்
நீ கண்டெடுத்துத் தந்த
புதிய என்னை!// மிகவும் பிடித்தது.
வாழ்த்துகள் டியர்
ஏனோ பலருக்கும் அந்த கவிதை தான் பிடிச்சுருக்கு!!! தேங்க்ஸ் டியர்!!
நீக்குமைக்கூ..நல்லா சப்தமாகவேகேட்கிறதுஅருமை.ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎன் உளம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மு ....!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குநடுங்கும் முதியவரின் விரல்கள்...
எங்கே தொலைத்தேன்...
இரண்டும் இன்னும் சூப்பர்...
ரொம்ப ரசிக்கிறேன்......அழகுடா உன் வார்த்தைகளும் நீயும்
பதிலளிநீக்குஎப்படித் தொலைக்கப்போகிறேன் உட்பட எல்லாமே ரசிக்க வைத்த வரிகள். மைக்கூ என்னில் மையமிட்டது. வாழ்த்துக்கள் பா.
பதிலளிநீக்கு