எங்கள் வீட்டில் முற்றமில்லை
எம் பிள்ளைகள் நிலவாய் உலவுவதால் !!
மலர்ச்செடி ஏதும் வளர்க்கவில்லை
எங்கள் மனங்கள் இங்கே மலருவதால்!!
கூண்டுக்கிளிகள் எதுவும் இல்லை
சுதந்திரம் தன்னை மதிப்பதினால்!!
சரவிளக்கெதுவும் ஒளிரவில்லை
அன்பே அழகாய் ஒளிர்வதனால்!!
இல்லைப் பட்டியல் பற்பலவும்
எங்கள் வீட்டில் இருந்தாலும்,
இருக்கும் எங்கள் வீட்டினிலே
இன்பம் சேர்க்கும் பற்பலவும்!
செல்லக்கோபம், சிறு ஊடல்
பொல்லாக் குறும்பும், புன்னகையும்!!
பி.கு
நம் தோழிகள் பாணியில் ஒரு சந்தக்கவிதை. எத்தனை கல்லடி வரபோகுதோ:)
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி.
சொல்வீச்சும் கருத்து வீச்சும்
செப்பிய வரிகளில் கண்டு மகிழ்ந்தேன்..
கல்லடி ஏது சொல்லடிதான் வந்து சேரும்
பகிர்வுக்குநன்றி...தொடருங்கள் முயற்சியை.
த.ம2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடனடி கருத்துக்கு நன்றி சகோ!!
நீக்குஎங்கள் வீட்டில் முற்றமில்லை-எம்
பதிலளிநீக்குபிள்ளைகள் நிலவாய் உலவுவதால் !!
மலர்ச்செடி ஏதும் வளர்க்கவில்லை-எங்கள்
மனங்கள் இங்கே மலருவதால்!!
கூண்டுக்கிளிகள் எதுவும் இல்லை- .........( உயிரின்?)
சுதந்திரம் தன்னை மதிப்பதினால்!!
சரவிளக்கெதுவும் ஒளிரவில்லை - .............( தூய?)
அன்பே அழகாய் ஒளிர்வதனால்!!
இல்லைப் பட்டியல் பற்பலவும் - ........ ( இப்படி?)
எங்கள் வீட்டில் இருந்தாலும்,
இருக்கும் எங்கள் வீட்டினிலே - .......( நெஞ்சில் ?)
இன்பம் சேர்க்கும் பற்பலவும்!
செல்லக்கோபம், சிறு ஊடல் - .........(செய்யப் ?)
பொல்லாக் குறும்பும், புன்னகையும்!!
அதிகப்பிரசங்கித்தனம் தான் நான் செய்வது.....!
ஏற்கனவே இருக்கும் வரிகளில் சிறு மாற்றமும்,
தனிச் சொல்லாக்கச் சில சொற்களும் ( பரிந்துரை தான் .. இன்னும் கூடப் பொருத்தமாகச் சொல்தேர்வு அமையலாம்) சேர்த்து விட்டால் ஓசை சிறக்குமோ?
சகோதரியாரின் மரபுப் படைப்பினுக்கு வாழ்த்துக்கள்
இதை வெளியிட வேண்டியதில்லை.
மீண்டும் வருவேன்!
நன்றி!
இதை வெளியிட்டதற்கு மன்னிக்கணும் அண்ணா!
நீக்குரொம்ப அருமையா இருக்கு நீங்க சொன்ன திருத்தம்
மரபின் இசை பற்றி மத்தவங்களும் தெரிந்து பயன்படுத்தட்டுமேன்னு தான் நினைத்தேன், அப்புறம் இந்த முறை ஒரு எழுத்துப்பிழை கூட இல்லையா?! ஹை!! ஜாலி!! நன்றி அண்ணா!
இதுதான் அறுசீர் விருத்தம் மைதிலி (சரியான ஓசைப்படி நண்பர் விஜூ திருத்தியிருக்கிறார், எனினும் உன் அடிப்படையே அவரை அப்படி எழுதத் தூண்டியிருக்கிறது) எளிமையாகச் சொல்லணும்னா..
நீக்குதானா தானா தனனனா -தன
தானா தானா தனனனா இதையே அடிப்படை ஓசையாகக் கொள்க.
அல்லது மரபுச்செய்யுள் இலக்கணப்படி எழுதணும்னா -
அந்தத் தனிச்சொல்லை எடுத்துவிட்டு,
மாச்சீர் மாச்சீர் காய்ச்சீர் என இரண்டு அடுக்கு வரவேண்டும்.
ஓசைக்கான இலக்கிய உதாரணம் வேண்டும் எனில்,
தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
எனும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பார்க்க,
திரைப்பாடலே இந்த ஓசையில் வேண்டுமெனில்,
நீலக் கடலின் ஓரத்தில்...(அன்னை வேளாங்கண்ணி) பாடுக.
புதுக்கவிதையிலேயே வேண்டுமெனில் கந்தர்வனின் புகழ்பெற்ற “கயிறு“ கவிதையினை வாய்விட்டுப் படிக்கவேண்டும்.
எப்படியோ... நீயும் கவிஞர்தான் அதனால்தான் ஓசை உனக்குள் படிந்தே இருக்கிறது னு சொன்னா நீ நம்ப மாட்ட..உண்மை அதுதான்.
தொடர்ந்து இதுபோல மாறுபட்ட ஓசையில் கலக்கு பா! வாழ்த்துகள்.
அருமையா இருக்குங்க! ஒரு வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆஹா! அப்படியா?! நன்றி சார்!
நீக்குமலர்செடி செல்லக்கோபம் கொண்டு தங்கள் வீட்டின் கூண்டை விட்டு சரவிளக்காய் நிலவை நோக்கி பறக்கிறது போலிருக்கிறது க(வி)தை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி.
இதை கதையாய் மாற்றிய அண்ணாவின் திறமையை மெச்சிதான் ஆகவேண்டும்!! நன்றி அண்ணா!
நீக்குசந்தக் கவிதைன்னாலும் சொந்தக் கவிதையா எழுதி அசத்தியிருக்க தங்கையே. சந்தோஷமா இருக்கு. கவிதைக்கு முக்கி முக்கிப் பார்த்தும் வராத எனக்கு வர்றது பெருமூச்சுதான். பிள்ளைகளை நிலவாகப் பார்த்து ரசிக்கும் மனதை நான் ரசிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா! உங்க ஏரியா வேற.:) அதுல நீங்க பின்னுவீங்க:) காமெடி யை சொன்னேன்!!
நீக்குhey அம்முக்குட்டி அப்பப்ப்ப்ப்பபா.......இந்தக் கவிதை எனக்கு என்ன எல்லாம் சொல்லுது தெரியுமா அம்மு wow அம்முவோட அளவில்லாத அன்பு ,மகிழ்ச்சியின் தன்மைகள் தன்னடக்கம், இருப்பதை வைத்து திருப்தியாய் வாழ்வது எவ்வளவு அத்தியாவசியம். மற்றவர்கள் சுத்திரத்தில் தையிடாதிருப்பது பற்றி எல்லாம் கற்றும் கொடுக்கிறது. பெண்ணுக்கே உரிய அனைத்தும் குணங்களும் என் அம்முவுக்கு இருக்கிறது. என்பதையும் புலப் படுத்துகிறது வாழ்க்கையை அழகா புரிந்தும் வைத்திருகிறீர்கள். சிந்தனைகளும் அபாரம் கவிதையும் அபாரம் அம்மு. சூப்பர் சூப்பர் சூப்பர் தொடருங்கள் அம்மு வாழ்த்துக்கள் .....!
பதிலளிநீக்குஇதெல்லாம் உங்க அன்பின் மிகுதி டா செல்லம்:)) மிக்க நன்றி தோழி!@!
நீக்குநல்லவற்றை நாக்கோணாமல் உரக்கவே சொல்லணும் தீயவற்றை யாரும் அறியாமல் காதினில் சொல்லணும். உள்ளதை உண்மையை தான் சொன்னேன். அன்பு மிகுதியால் பொய் சொல்லலைடா அம்மு சந்தேகம் வந்துடுச்சா ... சும்மா சொல்லியிருப்பா என்று ஹா ஹா ...
நீக்குஉங்க வீடு ரொம்ப நல்ல வீடுதான்! :)
பதிலளிநீக்குஎல்லோர் வீடுகளும் உங்கவீடுபோல் இருந்தால், தமிழ்நாடு என்கிற "வீதி' உலகில் தலைசிறந்த வீதி என்று எல்லோராலும் போற்றப்படும்!
இன்னும் 20 வருடத்திற்குப்பிறகு உங்க குழந்தைகள் இக்கவிதையை மறுபடியும் வாசித்து, அவர்களை அன்பாலேயே குளிப்பாட்டி சீராட்டி வளர்த்த உங்க இருவரையும் அன்பாலே உதைப்பார்கள்! :)
பிகு: "வீடு" னு ஜானகிராமன் எழுதிய ஒரு கதை இந்த நல்ல கவிதை வாசிக்கும்போது ஞாபத்துக்கு வந்து தொலைக்கிது! :(
தி.ஜா எல்லாம் படிக்கிறதுண்டா!!!!!
நீக்குநான் மரப்பசு, மோகமுள் ரெண்டும் தான் படிச்சிருக்கேன்:( but வீட்டு பாலு மகேந்திரா படமா எடுத்தாரோ? அந்த பிச்சர் பாத்திருக்கேன்.
**இருவரையும் அன்பாலே உதைப்பார்கள்! :)** என்ன அழகான ஆசி! நன்றி வருண்:))
மைதிலி: பாலு மஹேந்திரா வீட்டுக்கும் தி ஜா ரா வீடு விற்கும் சம்மந்தம் இல்லை. இது ஒரு குறுங்கதை. again, as usual one another "adultery-based" novel of him. கணவன் - மனைவி பிரச்சினை.. சண்டை சச்சரவு பத்தி..எழுதி இருப்பார்.
நீக்குமரப்பசு, அம்மா வந்தாள், நளபாகம், செம்பருத்தி எல்லாம் படிச்சு இருக்கேன்.. ஆனால் மோகமுள் பல முறை படிக்க முயன்று படிக்கப் பிடிக்கவில்லை! ஆமாம், படிக்கப் பிடிக்கவில்லை! நான் கொடுத்து வச்சது அவ்ளோதான்! :))) உலகமே மோகமுள் தான் ஜானகி ராமன் கதைகளில் "பெஸ்ட்"னு சொல்லுவாங்க. அது தெரிந்தும் என்னால மோகமுள் படிக்க முடியலை. என் உலகம் அப்படி! :))
ஜானகி ராமன் சிறுகதைகள் நாவல்களை விட நல்லா இருக்கும்.
***தி.ஜா எல்லாம் படிக்கிறதுண்டா!!!!!***
அவர் கதைகள் படிச்சு அவரையே "ரிசேர்ச்" பண்ணி இருக்கேன். ஒரு பெண்ணியவாதியாக (நாந்தான் அது) ஜானகி ராம்னை கடுமையாக விமர்சிச்சும் இருக்கேன். அவர் உருவாக்கிய வித்தியாசமான "பெண் கேரக்டர்களெல்லாம்" பெண்மையைப் புரியாத ஆண்களின் வசதிக்காக "ஆண்களால்" (தி ஜா ரா) படைக்கப் பட்ட "உலகில் காண முடியாத கற்பனைப் பெண்கள்" என்பது என் தாழ்மையான கருத்து. :))
சரி போதும். எல்லாரும் முறைக்கிற மாதிரி இருக்கு. நான் வர்ரேன்! :)
அருமை தோழி..மகிழ்நிறை இல்லம் என்றும் இப்படியே மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குத.ம.3
thanks டியர்!!
நீக்குத.ம.3
பதிலளிநீக்குமுயற்சி திருவினைக்கும் ! வாழ்த்துக்கள் என் தோழியே .
பதிலளிநீக்குஎல்லாம் உங்களை போன்றவர்கள் கவிதைகளை படித்து வந்த ஆசை தான்! நன்றி தோழி!
நீக்கு
பதிலளிநீக்கு///எங்கள் வீட்டில் முற்றமில்லை
மலர்ச்செடி ஏதும் வளர்க்கவில்லை//
அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறீர்களோ?
இல்ல சகா! தனி வீட்டு தான்:) நிறைய பூச்செடிகள் இல்லை:(
நீக்கு//சரவிளக்கெதுவும் ஒளிரவில்லை
பதிலளிநீக்குஅன்பே அழகாய் ஒளிர்வதனால்!!///
யாரப்பா அங்கே இவங்க வீட்டில் பவர் கட் நேரத்தை அதிகரிக்கவும்
ரொம்ப சந்தோசம்!! இன்னிக்கு இந்த பிட் போதுமே:))
நீக்கு///செல்லக்கோபம், ///
பதிலளிநீக்குசெல்லக கோபம் கொள்ளும் நேரத்தில் வீட்டில் என்ன பறக்கும் என சொல்லவில்லையே
அட! கோபப்படுறது மகியும், நிறையும் தானே!! so பார்க்கிறது பில்லோஸ் தான்:))
நீக்குஎங்கள் பள்ளியில் இனி தமிழ் டீச்சருக்கு இடமில்லை-காரணம்
பதிலளிநீக்குஆங்கில டீச்சர் தமிழ் டீச்சராக மாறி கவிதைகள் படைப்பததால்
டீச்சரம்மாவின் கவிதைகளை படித்ததால் இங்கு ஒரு மாணவன் புலவனாக மாறுகிறான்...
அப்டியா சொல்லறீங்க !! அப்போ அடுத்த பதிவு கொஞ்சம் இங்கிலீஷ் தான்:))
நீக்கு
பதிலளிநீக்குஇப்படி அருமையான மரபு கவிதைகளை எழுதிய உங்கள் கைகளுக்கு தங்கம் மற்றும் வைரத்தால்தான் வளையல் செய்து போட வேண்டும். ஆனால் அதை மற்றவர்கள் செய்தால் நன்றாக இருக்காது என்பதால். இதை செய்ய கஸ்தூரி சாரை அழைக்கிறோம்
கஸ்தூரி சார் வளையல்களை வாங்கி கொடுத்து அதற்கான பில்லை எனக்கு அனுப்பி வைக்கவும்.
ஆஹா இந்த மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவன் போல இதற்கான பணத்தை அனுப்பி வைக்கப் போகிறான் என்று மட்டும் நினைக்கவேண்டாம். நான் பில்லை கேட்டது இந்த கவிதையால் உங்களுக்கு எவ்வளவு டெமேஜ் ஏற்பட்டுள்ளது என்று சும்மா தெரிஞ்சுக்கதான் கேட்டேன்
ஹாஹஹாஹஹ....
நீக்குசகோதரி ! சூப்பர்பா.....எப்படி இப்படி எல்லாம் கவிதை எழுதி அசத்தறீங்களோ? நாங்களும்தான் எழுதிப் பாக்கறோம்.....ஹூம் வர மாட்டேங்குதே!
நீக்குஒரு நாட்டுப்புறக்கதை நினைவு வருகிறது! ஒரு பெண்ணுக்கு வளையல் பரிசளிப்பான் ஒருவன், மற்றொருவன் புடவைகொடுக்க, அதில் கையை தொட்டு வளையல் போட்டவரை அண்ணன் என்றும் புடவை வாங்கிதந்தவர் கணவன் என்றும் விளக்கம் சொல்லுவாள் அந்த பெண்:)) என் பாட்டி சொன்னது!! @ தமிழன் சகா!
நீக்குநன்றி சகாஸ்!! பாலா அண்ணாவிற்கு சொன்னது தான்:)) உங்க ஏரியா வேற மக்கா:))) நீங்க short film எடுக்கிற big shots!!! @ தில்லையகம் :)
உங்கள் வீட்டுச் சூழ்நிலையை இதை விட அருமையாக விளக்க முடியாது.
பதிலளிநீக்குஓ! இதுக்கு பேர் தான் சந்தக்கவிதையா!! - என்னமோ போங்க, எனக்கு கவிதையை ரசிக்க மட்டும் தான் தெரியும்.
ஹா...ஹ...ஹா...
நீக்குநன்றி சகோ!!
நன்றாக எழுதியிருக்கிறீங்க. கவிவரிகள் என்றும் நிலைத்திருக்கட்டும் மகிழ்நிறைவாய். நன்றி.
பதிலளிநீக்குநன்றி தோழி!! மனம் நிறைகிறது உங்கள் வாழ்த்தால்:)
நீக்குநிலவோடு விளையாடவே ஆசைமா...அருமை...
பதிலளிநீக்குகவிதை அருமை...
பதிலளிநீக்குஇதற்கு கல்லடி எதற்கு...
இதயம் நிறைய எழுதிய கீதம்
பதிலளிநீக்குஉதயத்து அம்புலிதா னோ!
அத்தனை குளிர்மை! இனிமை!
இயல்பான கருத்தோடு அழகிய கவிதை தோழி!
மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!
சொந்தமாய்
பதிலளிநீக்குசந்தக் கவிதை
அருமை சகோதரியாரே
நன்றி
தம 7
பதிலளிநீக்குஆங்கில டீச்சரின் தமிழ் கவிதை உண்மையிலேயே அருமை. வாழ்த்துகள் தொடரவும் சகோ !!!
பதிலளிநீக்குசொல்லடிகள் இங்கே சுவையூட்ட ஏனிவளோ
பதிலளிநீக்குகல்லடிகள் தேடுகிறாள் கண்டீரோ - கில்லாடி
போலக் கிறுக்குகின்ற பாடல்கள் என்றென்றும்
சீலத்தை வெல்லும் சிறந்து !
அருமை வாழ்த்துக்கள்
வடிவத்தைப் பற்றியே பேசியதில் உன் கற்பனை அழகைச் சொல்ல மறந்துவிட்டேன் பார்..(கவிதையில் உருவத்தைவிட அதுதான் முக்கியம்)
பதிலளிநீக்கு“மலர்ச்செடி ஏதும் வளர்க்கவில்லை--எங்கள்
மனங்கள் இங்கே மலருவதால்!!“ என்ன அழகான சொல்-பொருள்?!!
அருமையமமா.. உன்
கவிதை ஒன்றும் அழகில்லை - இதைக்
காட்டிலும் கவிதை எதுவுமில்லை!
சொல்லில் பொருளில் பேரழகு -அதைச்
சொன்ன விதமோ நூறழகு! (மன்னிக்க நா.முத்துக்குமார்)
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட
முகவரி http://blogintamil.blogspot.com/2014/08/v-behaviorurldefaultvmlo.html?showComment=1407971958042#c8319385501671425565
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் கஸ்தூரி - படமும் குறுங்கவிதையும் அருமை - வலைச்சர அறிமுமும் உண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநல்ல குடும்பம்
பதிலளிநீக்குநல்ல கவிதை
நயமுடன் சொன்னீர்
நன்றி தோழி.
சிறந்த பாவடிகள்
பதிலளிநீக்குதொடருங்கள்