சிலநாட்களுக்குப்பின் நேற்று காலை திவ்யாவை
வழக்கமான இடத்தில் பார்த்தேன். சைக்கிளை நிறத்தி ஸ்டாண்ட் போட்டுக்கொண்டிருந்தாள்.
நான் ஸ்கூட்டியை மெதுவாக்கி என்ன திவ்யா என் நிற்கிறாய் என்றேன். நீங்க போங்க மிஸ்
நான் இதோ வந்துடுவேன் என்றாள். செயின் ஏதும் கழண்டு விட்டதா? பஞ்சரா என்றவாறே
வண்டியை நிறத்தி விசாரிக்கத்தொடங்கும்போது தான் கவனித்தேன், அவள் அருகே ஒன்றாம்
வகுப்பு படிக்கும் ரிபானா. வெட்கச்சிரிப்போடு திவ்யா சொன்னாள் இதுக்கு சைக்கிள ஏறத்தெரியாதில்ல,
அதான் மிஸ் சைக்கிள நிறுத்திட்டு ஏத்திகிட்டு வரேன், நீங்க போங்க என்றாள். நான்
கிளம்பிவிட்டேன், என் ரெவ்யூ கண்ணாடியில் தெரிந்த திவ்யாவிற்கு என் சாயல்
தெரிந்ததை போல் உணர்ந்தேன்.
அட... என்னைப் போல்...........
பதிலளிநீக்குஎவ்வளவு கவனமாக நாம் இருக்க வேண்டும் பார்த்தீர்களா. கயிற்றின் மேல் நடப்பது போல். நாம் இளையோருக்கு வழி காட்டிகள் அல்லவா. நீங்கள் நீட்டிய உதவிக் கரங்களை அவளும் நீட்டுகிறாளே. தொடருங்கள் உங்கள் சேவையை .
பதிலளிநீக்குஎன் தோழியை நினைத்தால் பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது தோழி ! நன்றி வாழ்த்துக்கள்....!
அந்த ஆடி பின்புறம் வருவதை மட்டும் காட்டவில்லை ,முன்பு நடந்ததையும் காட்டும் அதிசய ஆடியா இருக்கே !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
மிதிவண்டி போன்றே மதிவண்டி செல்லும்!
விதிவண்டி ஓடும் விரைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அட இது மாதிரி எழுதுவது கூட நல்லாயிருக்கே. சின்னச் சின்ன குறிப்புகள் 1 2 3 என்ற தொடர் போல எழுதலாமே?
பதிலளிநீக்குஇனிமையான மகிழ்வு.
பதிலளிநீக்குமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! - நல்லதும், கெட்டதும்... சரிதானே? அழகான ஒரு குறுங்கதைபோல அருமை பா! மதிப்பெண் தாண்டியும் இதுபோலும் திவ்யாக்களை வளர்த்துவிட்டால் போதும்.. நம் பணி அதுதானே?
பதிலளிநீக்குஅட்டா! நல்லாருக்கே! ஒரு சிறு நிகழ்வுதான் ஆனால் நல்ல ப்ரதிபலிப்பு தங்கள் ரியவ்யூவில் கண்டதுபோல.....அதாங்க நாங்களும் அதே! அப்படின்னு ........
பதிலளிநீக்குஉங்கள் மாணவியின் உதவும் பண்புக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநீங்கள் ஒரு நல்ல ஆசிரியை என்பதற்கான உதாரணம் இந்த திவ்யா. மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பிரதிபலிப்பு மனம் மகிழ்வித்தது..!
பதிலளிநீக்குஆஹா... அருமை...
பதிலளிநீக்குபிரதிபலிப்பு..
உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇனிமையான,மகிழ்ச்சியான பிரபலிப்பு
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்களின் இந்த பதிவு உங்களை நினைத்து பெருமை கொள்ள செய்கிறது. தங்களைப் போன்ற ஆசிரியர்களால் தான் இன்னமும் நமது ஆசிரியர் சமுதாயத்தின் மதிப்பு குறையாமல் இருக்கிறது. மதிப்பெண் தான் முக்கியம் என்று சிலபஸ்களைக் கட்டி அழும் சிலருக்கு மத்தியில் உங்கள் செயல்பாடுகள் வானத்து நட்சத்திரமாய் மிளிர்கிறது சகோதரி. தங்களின் பணிக்கும், இப்பகிர்வுக்கும் நன்றிகள் சகோதரி. என் அக்காவின் வழித் தடத்தில் நானும் பயணிக்கிறேன் என்பதும் பயணிப்பேன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி சகோதரி.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் மாணவி அல்லவா? அருமையான பிம்பமாக நீங்கள் இருக்க, பிரதிபலிப்பு அருமையாகத் தானே இருக்கும் :)
பதிலளிநீக்குவாழ்த்துகள் தோழி.
உங்களிடம் கற்றுக் கொண்ட நல்ல விஷயத்தினை உங்கள் மாணவியும் தொடர்கிறார்..... மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆசிரியரின் பாதிப்பு நிச்சயமாக மாணவர்களுக்கு இருக்கும் என்பதை உங்கள் மாணவி நிருபித்து விட்டாள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்கள் வரிகளில் தொணிக்கும் பெருமிதம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது. பாராட்டுகள் மைதிலி.
பதிலளிநீக்குநல்ல மனங்களை உருவாக்கும் விதம் அருமை..
பதிலளிநீக்கு