செவ்வாய், 18 நவம்பர், 2014

(ஹை) டெக் குறும்பா (4)

செல்பேசும் யுவன்கள் முகங்களில்
அழகு வெட்கம்
அல்லது ஆழ்ந்த துக்கம்!சொற்களின் ஆழமும்,நீளமும் கொண்டே
கணக்கிட்டு விட முடிகிறது
அவர்கள் காதலின் வயதை!

கைபேசி முகப்புத் திரையில் அல்லது முகபுத்தகத்தில்
தீபம்,மலர்களென படமிடும் இளைஞர்கள்
மாட்டிக்கொள்கிறார்கள் காதலிடமும்
பின் நண்பர்களிடமும்!!

இதழ் குவித்த பெண்களும்
முறைத்த படி இளைஞர்களும்
என்ன சொல்ல நினைகிறார்கள் செல்பிகளில்

அந்த சிட்டுகுருவி கொண்டு வந்த
விதையில் கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது
மற்றொரு குருவி!!

முன்னுச்சி முடிகளென
சில ஆப்ஸ்(APPS)களை உதிர்த்தபின்
அங்கிள் ஆகின்றன சில ஐ-போன்கள்!

குறும்பா 3

60 கருத்துகள்:

 1. ஹை டெக் கவிதையா நன்றாகயிருக்கிறது,
  //அந்த சிட்டுகுருவி கொண்டு வந்த
  விதையில் கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது
  மற்றொரு குருவி!!//
  பொதுவாக நட்ட விதையாயினும் தூவி விடப்பட்ட விதையாயினும் நன்றாக வளர்கிற பருவமிது என சொல்லிச்செல்கிறது கவிதை,தவிர இனி டெக்னாலஜியின் துணையும் அவசியமாகிப்போகிறது நடை பயில/

  பதிலளிநீக்கு
 2. மீண்டும் நீங்களாய் வந்து விட்டீர்கள்.
  அருமை!! அருமை!!
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான் சகோதரி.ஆன்ட்ராய்டு செல்லும் செல்பியும் அவர்களின் உயிர் மூச்சாக ஆகிவிட்டது.இந்த செல்பியில் என்ன இருக்கிறதென்று கேட்டால் நம்மை அற்பமாக பார்க்கும் இந்த தலைமுறை.அவர்கள் பொழுதுவிடிவதே வாட்சப்பில் தான்.நொடிக்கொருமுறை அந்த மெசேஜை பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும்.
  கவிதை அருமை.வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமளும் அப்டேட் ஆகணும் தோழி!! ஆசிரியர்கள் அல்லவா......மிக்க நன்றி தோழி!

   நீக்கு
 4. இன்றைய நாகரிகம்..
  ஒன்றும் புரியவில்லை..

  பதிலளிநீக்கு
 5. அந்த சிட்டுகுருவி கொண்டு வந்த
  விதையில் கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது
  மற்றொரு குருவி!! //
  ஆஹா..சூப்பர்..

  பதிலளிநீக்கு
 6. அட! அருமை சகோதரி! பின்னுரீங்க போங்க! சூப்பர்! அதுவும் படங்களுக்கு ஏற்ற!!! குறும்பா ட்வீட்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகாஸ்!! எல்லாம் உங்கள மாதிரி நண்பர்கள் தரும் உற்சாகம் தான்!!

   நீக்கு
 7. எப்படி எழுதறீங்கப்பா! இப்படியெல்லாம்!

  பதிலளிநீக்கு
 8. கடைசி குறும்பு கலக்கல் .... மூணு புரியலையே சார் ./...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இன்னொன்னும் புரியலை அரசன் சகோ, நான் சார் இல்ல, இல்ல,இல்ல:((((

   நீக்கு
  2. ஓ காட் .... தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் மேடம் .... இப்ப சொல்லுங்க அந்த மூணுக்குண்டான விளக்கத்தை ...

   நீக்கு
  3. ஓகே. டீல்! இப்போ சீனு அல்லது ஆவி f.b profile லா ஒரு குத்துவிளக்கு படத்தை வெச்சா என்ன கமென்ட் போடுவிங்க?? கலாய்ச்சுட மாட்டேங்க!! அதை தான் அந்த குறும்பா சொல்லுது:)))படிச்சுட்டு அப்டியே எஸ் ஆகிராதிங்க, என்ன கம்மென்ட் போடுவிங்கனு சொல்லிடு போங்க:)))

   நீக்கு
  4. விளக்கத்திற்கு நன்றிங்க மேடம் ... நீங்க ஆசிரியை என்று பதிவர் சந்திப்பில் சொன்னதாக நினைவு ... அதை உறுதி செய்துவிட்டிர்கள் ....

   அவர்களை எப்படியாவது அந்த படங்களை வைக்க சொல்லுங்கள் அப்புறம் இருக்கிறது கச்சேரி....

   நீக்கு
 9. ஹைடெக் குறும்பாக்கள் ரசிக்க வைத்தன! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. ஹைகூ ... ஹைடெக் ... அடுத்து எந்த வகை கவிதையைத் தரப் போகிறீர்கள்.
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்ளோ எதிர்பார்ப்பை தூண்டி இருக்கா!! மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 11. ஒவ்வொரு படத்துக்கு ஏற்ற மாதிரி சூப்பர் தான் போங்க.

  பதிலளிநீக்கு
 12. ஹைடெக் குறும்பா :) சிம்ப்ளி சூப்பர்ப் ..

  பதிலளிநீக்கு
 13. வெண் பா எழுதச் சொன்னா குறும் பாவா எழுதுகிறீர்கள் ம்...ம்..ம்...
  ரொம்பத் தான் குறும்.........பு ......உங்களுக்கு அம்மு. அப்போ குரு உச்சமா இப்போ
  என்ன குரு பேசாம நழுவிட்டாரு திரும்ப வருவாரோ.
  அசத்தல் ம்மா உண்மையில் எப்படித் தான் இப்படி யோசிக்கிறீங்களோ wow அம்மு வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா!! அவரே சும்மா போனாலும் இந்த செல்லம் போட்டுக் கொடுத்திருவாங்க போலவே!! juz kidding டா!! thanks ம்மா!

   நீக்கு
 14. அன்புச் சகோதரி,

  அந்த சிட்டுகுருவி கொண்டு வந்த
  விதையில் கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது
  மற்றொரு குருவி!!

  (ஹை) டெக் குறும்பா அரும்பிய கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 15. அறிவியலும் தொழில்நுட்பமும் கவிதையும் கலந்த நிலையில் வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. "சொற்களின் ஆழமும்,நீளமும் கொண்டே
  கணக்கிட்டு விட முடிகிறது
  அவர்கள்( காதலின்) வயதை!"...அருமையானவரிகள்..!
  குறும்பாக் கூட கரும்பால்ல இனிக்குது..!
  வாழ்த்துகள் சகோதரி..!
  'எண்ணப்பறவை'..யில் முத்துநிலவன் அய்யாவின் நூல் பற்றி கட்டுரை..!பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்பாக் கூட கரும்பால்ல இனிக்குது..!**கிடைக்கிற கேப்பில் எல்லாம் இப்படி நச், நச்னு பன்ச் அடிக்கிறீங்களே!!! சூப்பர் ணா!!

   நீக்கு
 17. உங்க அக்குறும்பு தாங்க முடியலே , (ஹை ) டெக் குறும்பாவில் :)
  த ம +1

  பதிலளிநீக்கு
 18. உண்மையைச் சொல்லணும்னா, செல்ஃபோன் சம்மந்தப்பட்ட விடயங்களில் உங்க சிந்தனைகள் மிகவும் முன்னோக்கி இருக்கு. I could not keep up with the "pace", Mythili

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடயங்களில்** இப்படி ஏதாவது வார்த்தைகள் பேசி, எனக்கு shock surprise கொடுக்குறீங்க வருண்!! :)

   நீக்கு
 19. ஹைடெக் கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு சகோதரி...

  பதிலளிநீக்கு
 20. நீங்க கலக்குங்க டியர்..சொல்லணுமா என்ன? அருமை அருமை :)

  பதிலளிநீக்கு
 21. விதையில் சிட்டுக்குருவி அருமைமா

  பதிலளிநீக்கு
 22. "அந்த சிட்டுகுருவி கொண்டு வந்த
  விதையில் கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது
  மற்றொரு குருவி!!" - இஃது எனக்குப் புரியவில்லை! :-(

  மற்றபடி, எல்லாப் பாக்களும் அருமை! அதுவும் கடைசிப் பா அட்டகாசம்! உங்களுக்கும் அதுதான் மிகவும் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன், அல்லது படிப்பவர்கள் அதைத்தான் மிகவும் விரும்புவார்கள் எனக் கணித்திருக்கிறீர்கள், சரியா? அதனால்தானே அதைக் கடைசியில் வைத்திருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ட்விட்டர்(அது ஒரு குருவி இல்லையா) நட்பு வட்டம் விரிந்துகொண்டே போவதை குறிக்கும் கவிதை. இப்போ புரியும்னு நினைக்கிறேன்.
   ___________
   அட! எனக்கு இது தோணவே இல்லை.கரெக்ட் தான்:)) நன்றி சகா:)

   நீக்கு
  2. கருத்து புரிகிறது. ஆனால், அதைச் சொல்லும் விதம், அந்த வர்ணனை புரியவில்லை. சரி விடுங்கள்! படைப்புப் பற்றி விளக்கும்படி படைப்பாளியிடம் கேட்பது அவரை இழிவுபடுத்துவதாகும். ஏற்கெனவே ஒருமுறை தெரியாமல் கேட்டு விட்டேன். மீண்டும் மீண்டும் விளக்க வேண்டா!

   நீக்கு
 23. குறும்பில் ஹைடெக்.....காரணம் நீ ஹைடெக்! ரொம்ப ரசிக்கிறேண்டா.

  பதிலளிநீக்கு