வியாழன், 19 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?-ii

அன்பு நட்புகளுக்கு,

          சென்ற பதிவில் மனமும், உடலும் சோர்ந்திருந்ததால் பத்து பேரை இணைக்க முடியவில்லை. இங்கு அந்த பத்து பேரை குறிப்பிட்டுருக்கிறேன். நண்பர்களின்  விடையை அவர்களது வலைப்பூவில் காண ஆவலோடு இருக்கிறேன்.


1.மது
 http://www.malartharu.org

2.நிலவன் அண்ணா
http://valarumkavithai.blogspot.com/

3.கீதா மற்றும் துளசி சகா
http://thillaiakathuchronicles.blogspot.com/

4.கீதா டீச்சர்
http://velunatchiyar.blogspot.com/

5.விமலன்அண்ணா
http://vimalann.blogspot.com/

6.கீதமஞ்சரி அக்கா
http://geethamanjari.blogspot.com/

7.இனியா செல்லம்
http://kaviyakavi.blogspot.com/

8.தோழி கிரேஸ்
http://thaenmaduratamil.blogspot.com/

9.ஜோதிஜி அண்ணா
http://deviyar-illam.blogspot.com/

10.ஜீவன் சகா
http://jeevansubbu.blogspot.com/

சென்ற பதிவில் மூன்று திருக்குறள் எண்களை குறிப்பிட்டுவிட்டு சென்றதால் இங்கே அதற்கான விளக்கங்கள் ( தமிழ் ஆசிரியர்கள் மன்னிக்க)

குறள் 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

போர் பயற்சி பெற்ற யானை உடல் முழுதும் போர்வை போல் அம்பு செருகி இருந்தாலும் கடைசி மூச்சு உள்ளவரை எழுந்து நின்று போராடுமாம். அதுபோல் மன உரம் (உறுதி) மிக்கோர் எத்தனை துயர் வந்தாலும்  செயல்படுவர்.

குறள் 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன் 

எது எது மேல் எல்லாம் ஆசை வைக்காமல் இருக்கிறோமோ அதனால் துயர் வருவதில்லை (ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதன் விரிவாக்கம்)

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

இதை சொல்வதால் எந்த பயனும் இல்லை என ஆராயத்தெரிந்த புத்திசாலிகள் தேவை இல்லா சொற்களை பேசமாட்டார்கள். (வேஸ்ட் of டைம் னு போயிட்டே இருக்கணும்)

தமிழ் வகுப்பும் எடுக்க வைத்துவிட்ட நட்புக்கு நன்றி :)

48 கருத்துகள்:

  1. 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
    நான் இல்லாமலே, நண்பர்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
    2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
    நன்றி மறவாமல் இருக்கவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும்.
    3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
    கடைசியாக..? இனிமேல் சிரிக்கமாட்டேனா என்ன? (இந்தக் கேள்வி பார்த்து)
    4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
    விசிறிக் கொள்வதுதான் – இன்வெர்ட்டர் அவ்வளவு நேரம் வராதே!
    5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
    வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு என்னைவிட நன்றாக வாழ்க

    6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
    அவரவர் உணவை அவரவரே சம்பாதிக்கும் சுயமரியாதை வளர்ப்பதை
    7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
    என் பேரப்பிள்ளைகளிடம் – வளரும் தொழில்நுட்பம் பற்றி.
    8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
    குறள்-510.
    9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
    இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்வேன்
    10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
    படிப்பு, எழுத்து, இசை, தொலைக்காட்சி, தொலைபேசி, அடுத்த வேலையைத் திட்டமிட்டுவிட்டு நிம்மதியான தூக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா இங்கு படிக்கும் முன் வலைப்பூவில் படித்துவிட்டேன். விடைகளில் தெரியும் தெளிவு அது தான் அண்ணா:))
      நான் தயங்கிய படி இருக்க தனி பதிவாய் இட்டு அசத்திய அண்ணா வாழ்க!
      மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
    2. முத்துனிலவன் ஐயா பதில்கள் ஹா....பிரமாதம்!

      நீக்கு
  2. என்ன பார்ட் 2 வா...... கலக்குங்க.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் என் தங்கையும் சிறு வயதில் இப்படி பேட்டி கொடுத்து விளையாடுவோம். நீங்க நெஜமாவே பேட்டி எடுத்துடீங்க:) தேங்க்ஸ்

      நீக்கு
  3. திருக்குறளுக்கு விளக்கம் நீங்களாகவே எழுதீனிங்களா அல்லது கோனார் நோட்ஸை காப்பி அடித்து எழுதியதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ...எல்லாம் சொந்த சரக்கு பாஸ்.(சே டங் ஸ்லிப்) சொந்த கருத்து தாங்க சகா:)

      நீக்கு
  4. //போர் பயற்சி பெற்ற யானை உடல் முழுதும் போர்வை போல் அம்பு செருகி இருந்தாலும் கடைசி மூச்சு உள்ளவரை எழுந்து நின்று போராடுமாம். அதுபோல் மன உரம் (உறுதி) மிக்கோர் எத்தனை துயர் வந்தாலும் செயல்படுவர்.///

    காலத்துக்கு ஏற்ப விளக்கம் தர வேண்டும் அதாகப்பட்டது . போர் பயற்சி பெற்ற மதுரைத்தமிழன்(யானை ) உடல் முழுவதும் போர்வை போல் பூரிக்கட்டையால் அடிவாங்கி உடம்பு வீங்கி இருந்தாலும் கடைசி மூச்சு உள்ளவரை எழுந்து நின்று போராடுவானான் மதுரைத்தமிழன். அதுபோல் மன உரம் (உறுதி) மிக்கோர் எத்தனை துயர் வந்தாலும் செயல்படுவர்

    பதிலளிநீக்கு
  5. எது எது மேல் எல்லாம் ஆசை வைக்காமல் இருக்கிறோமோ அதனால் துயர் வருவதில்லை//

    இதுக்குதான் திருக்குறளை இளம் வயதில் ஒழுங்காக படிக்கனும் இல்லையென்றால் என்னைப் போல கஷ்டப்பட வேண்டும்.. என்ன கஷ்டம் என் கிறீர்களா ? நான் என் மனைவி மேல் அதிகம் ஆசை வைச்சிட்டேனுங்க..... ஹும்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நீங்க சொல்லக்கூடாது. உங்க மேடம் சொல்லணும்.

      நீக்கு
    2. எங்க வீட்டு மேடமும் ஜெயலலிதா மேடமும் ஒன்றுதான் அவங்க இங்கெல்லாம் வந்து பதில் சொல்லமாட்டாங்க. அதுனாலாதான் அவங்க சார்புல நான் சொல்லிட்டேன்

      நீக்கு
  6. இதை சொல்வதால் எந்த பயனும் இல்லை என ஆராயத்தெரிந்த புத்திசாலிகள் தேவை இல்லா சொற்களை பேசமாட்டார்கள். (வேஸ்ட் of டைம் னு போயிட்டே இருக்கணும்)///

    ஆஹா ஆஹா என்னை புத்திசாலி என்று பாராட்டியதற்கு நன்றி...... அதானால்தானுங்க நான் எல்லாம் மொக்கை பதிவுகாலாக போடுவது திருக்குறளை பற்றி எழுதுவதே இல்லை அதனால் எந்த பலனும் இந்த காலியத்தில் இல்லைங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் எல்லாம் மொக்கை பதிவுகாலாக போடுவது திருக்குறளை பற்றி எழுதுவதே இல்லை அதனால் எந்த பலனும் இந்த காலியத்தில் இல்லைங்க// fact fact. மொக்கை பதிவா , கலிகாலமா எது fact னு லாம் கேட்டகூடாது. i'm பாவம்:))

      நீக்கு
  7. அற்புதமான குறள்கள் அருமையான
    எளிமையான விளக்கத்துடன்....
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சகோ, நான் ஏற்கனவே மாட்டிவிட்ட மூன்று பேரை நீங்கள் மறுபடியும் மாட்டிவிட்டிருக்கிறீர்களே. அவுங்க மேல அப்படி என்ன உங்களுக்கு கோபம்....

    ஒரு வேளை, அவர்கள் இரு மாதிரியாக பதில் கூறுவார்கள் என்பதாலோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நாம் சனங்க தானே. ப்ரீ யா விடுங்க சகோ!

      நீக்கு
  9. நண்பர்களின் பதில்களை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்...

    தமிழ் வகுப்பிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  10. ஆங்கிலம், வரலாறு, தமிழ், கற்பிக்கும் சகலகலாவல்லி என் தோழி :)
    பரிட்சையும் வச்சுட்டாங்களே...இந்த கேள்விக்கெல்லாம் பதில் எந்த நோட்ஸ்ல இருக்கும் மைதிலி? ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹ...நன்றி தோழி!
      நோட்ஸ் இல்லாமலேயே விடைகளில் கலக்கிய தோழி வாழ்க!:)))

      நீக்கு
  11. பகிர்வு கண்டு ரசித்தேன் அன்புத் தோழியே வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  12. அருமை தோழி!

    அனைவரின் பதில்களையும் அங்கங்கே காண ஆவலுடையேன்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கிரேஸ் கிட்ட மாட்டிருகீங்க ,விடையை ஆவலோடு எதிர்பார்கிறேன்:))

      நீக்கு
  13. உங்கள் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுகிறேன் மைதிலி. உங்கள் நட்பு வட்டாரத்தில் நானும் இருப்பதற்காய் பெருமை கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய வார்த்தை அக்கா! உங்கள் விடைகளை ஆவலோடு எதிர்பார்கிறேன்:))

      நீக்கு
  14. ஆகா ஆகா
    நண்பர்களின் பதில்களை
    பார்க்க ஆவலுடன்
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் சூழல் கருதி தங்களை குறிப்பிடவில்லை. என்னை பாராட்டியமைக்கு நன்றி அண்ணா!

      நீக்கு
  15. சமயம் வரும் போது எழுதுகின்றேன். நன்றி மைதிலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சமயத்திற்காக காத்திருக்கிறேன். இது அண்ணன் தங்கைக்கு கொடுத்திருக்கும் உறுதி அல்லவா:)

      நீக்கு
  16. அம்மா தாயே என்னையும் மாட்டியாச்சா வாழ்க பல்லாண்டு எக்ஸாம் என்றால் காத தூரம் ஓடும் என்னை போய்...... தப்பினோம் பிழைச்சோம் என்று இருந்தால்
    இப்போ ... இப்படி புலம்ப வச்சுட்டீங்களே. கொஞ்சம் பிசி தான் இருந்தாலும் முயற்சி செய்கிறேன். வேற வழி ... அம்மு இனியா செல்லம் பாவம் இல்ல. இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடைகளை படித்துவிட்டேன் . சூப்பர் டா செல்லம்:))

      நீக்கு
  17. ஆஹா கேட்டு மட்டுமே பழகியவளை பதில் கேட்டு திணற அடித்துவிட்டாயேம்மா.இனிய அனுபவம் தான் சுயபரிசோதனையாய்...
    1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?



    வேண்டாம்மா போதும்னு தோணுது இப்பவே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏதும் செய்து அவர்கள் என்னை நினைத்தால் போதும் அந்நாளில்...

    2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும் எக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் .செருப்பு தைக்கும் தொழிலாளியின் லாவகத்தை ரசிப்பேன்.தற்போதைய ஆசையாய் பறை அடிக்க,கீ போர்டு வாசிக்க பயில வேண்டும்.15 பேர் இருந்தால் பறை கற்று தர ஆள் ரெடி...

    3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

    எதிர் வீட்டு 8 மாதக் குழந்தையின் சேட்டை கண்டு காலையில்...



    4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

    பகல் என்றால் புத்தகத்துடன் தோட்டத்தில் இரவெனில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அல்லது மொட்டைமாடியில் நினைவுகளின் துணையுடன் பால்யங்களை அசைபோட்டுக்கொண்டு .

    5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

    என் வாழ்வில் நிகழ்ந்த தவறுகள் அவர்கள் வாழ்வில் நிகழாமல் நடக்க வேண்டுமென..



    6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

    மனிதநேயமற்று நடக்கும் செயல்களை



    7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

    .என் நெருங்கிய நண்பர்களிடம்



    8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

    அந்த அளவு என் வளர்ச்சி உள்ளதென எண்ணி மேலும் வளர்வேன்

    9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

    என்ன சொல்வது? வேறு துணை வேண்டும் என வலியுறுத்துவேன் உடனே அல்ல வலி மறைந்த பின்



    10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? புத்தகம்,பாட்டு,முகநூல்.....



    பதிலளிநீக்கு
  18. அக்கா, என் அழைப்பை ஏற்று பதில் தந்தமைக்கு மிக்க நன்றி! உங்களுக்கு நேரம் இருந்தால், முடிந்தால் இதை அப்படியே copy, பேஸ்ட் பண்ணி உங்கள் வலைப்பூவில் வெளியிடலாமே! உங்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அருமை! பறை மேட்டர் சூப்பர்! எனக்கு கூட அவர்கள் ஆடியபடி இசைக்கும் விதம் ஆச்சர்யமாக இருக்கும். முன்பெல்லாம் தமிழர் திருமண விழாக்களில் பறை தான் இசைக்கபட்டதாம். அத்தகு கலைஞர்கள் அதிகம் வாழ்ந்த ஊர் என்பதால் அது மணப்பாறை (மணப்பறை) என்று அழைக்கப்பட்டதாக எங்க ஊருக்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள், மொத்தத்தில் விடைகள் எல்லாம் அட்டகாசம்:) நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  19. அன்புச் சகோதரி,
    வணக்கம். உங்களின் பதிவுகளை முத்து நிலவன் அய்யாவின் வலைப்பூ வழியாகக் கண்டேன்.
    கருத்து பதிவிறுதியில் கண்ட மூன்று குறள் விளக்கத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த விதம் மிக அருமை.
    அவை குறித்து அவ்வளவு முக்கியத்துவம் இல்லா சில கூடுதல் தகவல்கள்..,
    1) இந்தப் பாட்டில் வரும் ஒல்காமை(தளராமை) என்பதை யானைக்கும்,
    பாடூன்றுதலை ( பெருமையை நிலைநிறுத்துதல்) மன உறுதி படைத்தோருக்கும் அடையை மாற்றிப் பொருள் கொள்கிறார் பரிமேலழகர்.

    2) ஒருவன் எல்லாவற்றிலிருந்தும் நீங்கி எதனோடும் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்தை விளக்க வந்த வள்ளுவர், இந்தக் குறளைப் படிப்போரின் உதடுகள் கூட ஒட்டக்கூடாது என்ற எண்ணத்தில் படைத்ததாகக் கூறுவர். படித்தால் உதடுகள் ஒட்டா! இலக்கணங்கள் இவ்வாறு பாப்புனைதலை நிரொட்டகம் என்னும்.
    பற்றை வலியுறுத்தும் ( எல்லாவற்றோடும் ஒட்டி இருக்கும்?) இதே அதிகாரத்தின் இறுதிக் குறளில்
    ( பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு)
    வள்ளுவர் அதன் ஏழு சொற்களையும் உதடு ஒட்டும் படி அமைத்துள்ளதால் இது எதேச்சையாக அமைந்தது எனக் கூறத் தடையுண்டு.
    3) மூன்றாவதாய்க் காட்டிய குறளின் மறுதலையாய் வளவள என்று பின்னூட்டமிடும் என்னைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
    வாய்ப்பில்லாத நம்மைப் போன்றோர் வாய்ப்புக் கிடைத்தால் தமிழ் வகுப்பும் எடுத்துவிட வேண்டியதுதானே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று தாமதமாய் நன்றி சொல்லுவதற்கு முதலில் பொறுத்தருள்க.தங்கள் விளக்கம் தங்களது அழ்ந்த, பரந்த வாசிப்பைக்காட்டுகிறது. தங்களது வருகையால் மகிழ்கிறேன். கஸ்தூரி(என் கணவர்) தங்களது எழுத்தாற்றலை பற்றி வெகுவாய் சிலாகிக்கக்கேட்டிருக்கிறேன். இப்போது நானே உணர்கிறேன். அருமையான தகவல்கள்:)
      //மூன்றாவதாய்க் காட்டிய குறளின் மறுதலையாய் வளவள என்று பின்னூட்டமிடும் என்னைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.// எங்க ஊரில் சொல்லுவாங்க, நம்மை எல்லாம் மூக்கை பொத்தி கொல்லமுடியாது, வாயை தான் முடனும்னு:)) விடுங்க டீச்சரா இருக்கிறதுக்கு இது நல்ல தகுதி தானே?

      நீக்கு
  20. குறள் விளக்கம் அருமை. பாராட்டுகள்.

    நானும் எழுத வேண்டும்.... மதுரைத் தமிழன் அழைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  21. என் பதில்கள் (கேள்விகளைஅனுப்பிய முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு நன்றியுடன்)

    1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
    வழக்கம்போல் நண்பர்களுக்கு நூல்களை அன்பளிப்பாகக் கொடுப்பேன்.

    2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
    கோபத்தைக் குறைக்கக் கற்பேன்.

    3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
    எப்போதும் சிரிப்பேன்.

    4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
    விசிறிகள் எங்களிடம் உள்ளன.

    5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
    என்னிடம் உள்ள நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்.

    6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால்
    எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
    பிரச்னை என்பது அவரவர் மனதைப் பொறுத்தது.

    7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
    என் மனைவியிடம்.

    8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
    திருத்தி சரி செய்ய முயல்வேன்.

    9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
    இதற்கு பதில் கூற மனம் ஒப்பவில்லை.


    10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
    வாசிப்பு, எழுத்து.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு