வியாழன், 16 மே, 2013

மறதி


மழை தூறத் தொடங்கியதும்
நினைவுக்கு வரும்
மொட்டை மாடி வடகம்
கொடியில் காயும் துணிகள்
சாத்தபடாத சாளரங்கள்
துண்டிக்க வேண்டிய
கேபிள் வயர் !
மறந்து போனது ஒன்றைத்தான்
கற்பனை ஊற்றெடுக்க
கவிதை புனையும் கலை !
                      கஸ்தூரி 

3 கருத்துகள்:

  1. தம்பி கஸ்தூரி,
    ஒரு கவிஞனிடம் இப்படிக் கேட்கக் கூடாதுதான்...
    ஆனாலும் நல்ல கவிஞர்கள் ஆரம்பத்தில் இந்தக் கேள்விகளைத் தாண்டித்தான் வரணும் (என்னை என் ஆசிரியர்களே 11ஆம் வகுப்பில் கேட்டதும் நினைவிற்கு வருகிறது)

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சி ஆகணும்.
    முதல் கவிதையைப படிச்சப்பவே இந்தச் சந்தேகம் முளை விட்டிருச்சு...
    இப்ப வளர்ந்து பூத்து, காய்ச்சிருச்சி...

    இது நீங்கள் எழுதியது தானா?
    அலலது, என்தம்பி மனைவி எழுதியதா?
    ஆனாலும் கவிதை அருமையாக வந்திருக்கிறது...
    ஒரு பெண்ணுக்குத்தான் மாடி வற்றல் எல்லாம் உடன் நினைவுக்கு வரும்.
    ஒருவேளை, மனைவிக்கு உதவும் நல்ல மனமுடைய இன்றைய ஆணுக்கு அந்த நினைவு வந்திருந்தால் அது கூடுதல் சிறப்பு! மொத்தத்தில் கவிதை அருமை!
    தொடர்ந்து தொடர்நது எழுதவும். வாழ்த்துகள் கவியே!

    பதிலளிநீக்கு
  2. அண்ணா,
    தங்களது மதிநுட்பம் எழுத்துக்களில்கூட ஆணையும் பெண்ணையும் இனம்காணமுடியும் என நிறுவுகிறது.நான் தங்கள் தம்பி மனைவிதான்.ஆசான் அண்ணா ரவியின் மாணவி என்று தங்களுக்கு அறிமுகபடுத்தபட்டவள்.குறள் எண் 643 இலக்கணமாய் திகழும் அண்ணனிடம் ஒரு வேண்டுகோள். இந்த பகுதியில் இருக்கும் நிலவோடு ஒரு ரயில் பயணம் கவிதையை(??!) படித்து கருத்து சொல்லமுடியுமா?சொற்பிழை எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும் .

    பதிலளிநீக்கு
  3. அய்... நா நினைச்சது சரிதான் என்பதில் இரட்டை மகிழ்ச்சி. ஒன்று நாம சரியாத்தான் யூகிச்சிருக்கோம் என்பது. இரண்டு - “ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால்தான் ஒரு பெண் இருப்பாள் என்பதை மாற்றி, ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்க முடியும் என்று காட்டியிருக்கும் என் தம்பியின் நல்ல மனசு! என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
    இப்பவும் சொல்கிறேன். இந்தக் கவிதைகள் மிகச்சிறப்பான இடம் பெறத் தக்கவையாக வந்துள்ளன. தொடர்ந்து எழுத வேண்டும். ஒரு பரிசு வாங்கி வைத்திருக்கிறேன். தம்பியிடம் தந்துவிடுவேன்.. பரிசை நல்ல விதமாகப் பயன்படுத்தினால் இன்னும் இன்னும் உயரம் சிகரம் உறுதி. மீண்டும் வாழ்த்துகளம்மா! அன்புடன், நா.மு.
    (பி.கு. இப்படி மாசம் ஒன்றிரண்டு என்றில்லாமல், வாரம் ஒன்றிரண்டு கவிதைகளாவது எழுதவும். நீள்கவிதைகளையும் எழுதுமாறு வேண்டுகிறேன்)

    பதிலளிநீக்கு