திங்கள், 6 மே, 2013

வாதிகள் (வியாதிகள் )

அடி வாங்கும் இனத்தில்
பிறந்தவள் நான்
வலிக்கிறது என்றேன்
வாய் திறந்து
நான் பெண்ணியவாதியாம் !
வலித்திருக்கும் என்ற
என்  அண்ணன்
தீவிரவாதியாம் !
நான் அடி வாங்குகையில்
அண்டை வீட்டாருடன்
அயலான் போல் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த என்
பங்காளிகள் தன்
தேசியவாதிகளாம் !!!!!
                                கஸ்தூரி


1 கருத்து:

 1. அன்புத் தங்கைக்கு, அழகியல் கவிதை எழுத ஆயிரம்பேர் இருக்கிறார்கள். அந்தப் பயிற்சி கவிதைக்கு அவசியம்தான். அடுத்த கட்டம், தன் புறம்சார்ந்த உணர்வுகளைப் பொதுமைப்படுத்தி அழகாக வெளியிடப் பயில்வது. இந்த வகையில்தான் இப்போது பெண்ணியக் கவிகள் வளர்ந்து மேலோங்கி வருகிறார்கள். நம் ஊரிலேயே, ஆலங்குடி நீலா, புதுக்கோட்டையில் கீதா டீச்சர் எனச் சிலருண்டு. இத்தோடு,எனது இந்தக் கட்டுரையையும் படிக்கவும்...
  http://valarumkavithai.blogspot.in/2011/03/blog-post.html மற்றும் -
  அன்புத் தங்கைக்கு, அழகியல் கவிதை எழுத ஆயிரம்பேர் இருக்கிறார்கள். அந்தப் பயிற்சி கவிதைக்கு அவசியம்தான். அடுத்த கட்டம், தன் புறம்சார்ந்த உணர்வுகளைப் பொதுமைப்படுத்தி அழகாக வெளியிடப் பயில்வது. இந்த வகையில்தான் இப்போது பெண்ணியக் கவிகள் வளர்ந்து மேலோங்கி வருகிறார்கள். நம் ஊரிலேயே, ஆலங்குடி நீலா, புதுக்கோட்டையில் கீதா டீச்சர் எனச் சிலருண்டு. எனது இந்தக் கட்டுரைகளையும் படிக்கவும்...
  http://valarumkavithai.blogspot.in/2011/03/blog-post.html
  மற்றும் -
  http://valarumkavithai.blogspot.in/2011_02_01_archive.
  அடுத்த உங்களின் புறத்திணைக் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. அன்புடன், அண்ணன், நா.மு.

  பதிலளிநீக்கு