செவ்வாய், 21 மே, 2013

மகி குட்டியின் பேரங்கள் !


ஒரு மிட்டாய்க்கு
ஒரு எச்சில் முத்தம்
உயரே கிடக்கும் பொம்மையை எடுக்க
எப்போதேனும் ஒரு செல்ல கடி -என
அவள் சின்ன பேரங்களில்
லாலிபாப்பை விட்டுத்தரும்
பெரும் லாபங்கள் -கேட்காமலே வாய்க்கும்
என் விழியோரம் நீர் நிறையும் கணங்களில் !
                                                                    கஸ்தூரி 

5 கருத்துகள்:

  1. ஒரு நல்ல கவிதை, இன்னொரு நல்ல கவிதையை உருவாக்கும் என்பார்கள்.

    “பட்டாம் பூச்சி பிடித்துத் தந்தேன்,
    சிறகு முளைத்தது
    மகளுக்கு” என எழுதிய தங்கம் மூர்த்தி நினைவுக்கு வருகிறார்.

    நல்லா இருக்கு கவிஞரே!
    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  2. மகி குட்டி அழகு..கவிதை அவளைவிடக் கொஞ்சம் கம்மி அழகு :)

    பதிலளிநீக்கு
  3. அன்பின் மைதிலி - மகி குட்டியின் பேரங்கள் நன்று - ஆமா எதுக்குப் பேரம் பேசுகிறீர்கள் - கேடடதை கொடுக்க வேண்டாமா - செல்ல மகி குட்டிக்கு நல்வாழ்த்துகள் - கவிதை எழுதிய தங்களுக்கும் தான் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. மகிகுட்டி ரொம்ப அழகு குட்டியின் பேரங்களும் அழகு தான்.ஆமா மகி அம்மா மாதிரியா அப்பா மாதிரியா .
    வித்தியாசமான கவிதைகளும் கற்பனைகளும் அதன் அழகும் அப்படி தான்.
    வாழ்த்துக்கள் மா ....!

    பதிலளிநீக்கு