ஞாயிறு, 23 நவம்பர், 2014

கத்தரி கைகள்

   கத்தரிக் கைகளை அவசரமாய் கத்தரிக்காய்கள் என படித்து சமையல் குறிப்புக்காக ஓடிவந்தவங்க அப்படியே எஸ்கேப் ஆகிடுங்க, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை.
   
          
    


           B.A ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த போது (என்ன படிச்சியா?? அட நெசமாவே அப்போ படிக்க ஆரம்பித்துவிட்டேன் ப்பா) இரண்டாம் தாளாய் தமிழும் உண்டு. அதில் ஒரு கட்டுரை இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது (எழுதினது யாருன்னு கொடுக்கலை. மொழிபெயர்ப்பு பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க). மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றபின் அவன் முகம் குரங்கில் இருந்து மாறுபட்டது அழகாக மாறியதற்கு கைகளின் பங்கு அதிகம் என்கிறார் கட்டுரையாளர். கைகளால் எடுத்து உண்ணவும், நுகரவும் பழகிய பின் அந்த பொருளை நோக்கி மூக்கை கொண்டு போகவேண்டிய அவசியம் குறையத்தொடங்கியதும், நீட்டிகொண்டிருந்த நம் முகம் இப்போ இருப்பது போல மெதுமெதுவாக மாறியிருக்கிறது என்கிறார். சரி கத்தரி கைகளுக்கு வருகிறேன்.
  
தோட்டக்கலையில் எட்வர்ட்

          கேபிள் டி.வி கள் கால் ஊன்றதொடங்கிய காலகட்டத்தில் ஒரு நாள் பின்மதியம் எல்லா தமிழ் சேனல்களிலும் மொக்கையாக ஏதேதோ ஓடிக் கொண்டிருக்க, வெறுத்துப்போய் ஸ்டார் மூவீஸ் பக்கம் அன்று தான் முதன்முதலாக போனேன். ஒரு ரோபோ போன்ற வஸ்துவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனாக மாற்றிக்கொண்டிருப்பார்  ஒரு சைன்டிஸ்ட். அந்த மனிதனாக்க படும் சிறுவனுக்கு கைகளுக்கு பதில் கத்தரிக்கோல்கள் இருக்கும் அந்த சிறுவனின்  கையை மாற்றவேண்டிய அந்த ஆபரேசன் தியேட்டரில் திடீரென நெஞ்சு வலி சைன்டிஸ்ட் வந்து இறந்து போவார்.  என்ன தான் நடக்குதுன்னு பார்க்கிற ஆவலில் நான் அந்த சேனல மாற்றாமல் கவனிக்கத் தொடங்கினேன்.( பல வருடங்களுக்கு முன் பள்ளிப் பருவத்தில் பார்த்த படம் என்பதால் கதை அத்தனை துல்லியமாய் நினைவில்லை. தெரிந்தவரை சொல்கிறேன்). அந்த சிறுவனை(எட்வர்ட்) அழைத்து கொண்டு போய் ஒரு அழகு சாதனப்பொருள் விற்பனைப்ரதிநிதி பெண் ஆதரவளிக்க தொடங்குகிறாள். அவள் தான் பெக்(Peg). பெகிர்க்கு  ஒரு அழகான பெண்ணும் (ஹீரோயின்) ஒரு மகனும் இருக்கிறார்கள். ஹீரோயின் பெயர் கிம்.

எட்வர்ட் வீட்டின் முகப்புத்தோட்டம்
           அந்த கத்தரி கைகளால் எட்வர்ட் வளரவளர தானே ஆக்ஸிடெண்ட் டாக செய்துகொள்ளும் காயங்கள் கொடுமையாக இருக்கும். கிம் சில ஆண்டுகள் கழித்து, வளர்ந்த பின்  ஒரு BOY FRIEND என அவர்கள் சொல்லிகொள்ளும் காதலன்(ஜிம்) என்பவன் கதையில் அறிமுகபடுத்த படுகிறான்.  எட்வர்ட் தனது கத்தரி கைகளால் செய்யும் தோட்டக்கலையும், ஹேர் ஸ்டைல் களும் அந்த ஏரியா மக்களின்  கவனமீர்கின்றன. எட்வர்டை பெக் இன் மகனும், ஜிம் மும்  திருட்டுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த திருட்டுக்கு எட்வர்ட் (கத்தரிக்கை) தண்டிக்கப்படுகிறான். கருணையே வடிவான அவனது கார்டியனான பெக்  அவனை மன்னித்து, கிறிஸ்துமஸ் கொண்டாடங்களில் அவனை ஈடுபடுத்துகிறாள். சுற்றிலும் பனி கொட்டி, உயர்ந்து நிற்க ,எட்வர்ட் தன் காதலியை நினைத்தபடி தன் கத்தரிக்கைகளால் பனியை செதுக்கி ஒரு அழகிய தேவதை பனி சிற்பம் செய்கிறான். அந்த சிற்பம் இன்னும் கூட என் நினைவிலேயே இருக்கிறது. அதன் அருகில் கிம் கிறிஸ்துமஸ் நடனம் ஆடுகிறாள். அதை பார்த்து வியந்த சுற்றத்தால் எட்வர்டுக்கு  லோக்கல் சேனலில் பேட்டிகொடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சிக்கு தன் கார்டியனோடு கலந்துகொள்ள போகிறான் எவர்ட்.  பேட்டியில் ஒரு யுவதி "இத்தனை அழகான தேவதை வடிவத்தை செதுக்கி இருக்கிறீர்களே, உங்கள் மனதில் இருக்கும் அந்த தேவதை யார்? "என கேட்பாள்.(அப்டி தான் அப்போ புரிஞ்சுகிட்டேன்) அவன் காதலி முகம் மனதில் தோன்ற தடுமாறி மைக்கை தொட்டுவிடுவான். அது short சர்க்யூட் ஆகி நிகழ்ச்சி பாதியோடு நின்றுவிடும். மொழி தெளிவாய் புரியாத, ஏன் காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், என் பள்ளிநாளில் அந்த காட்சியில் எட்வர்ட் காதலின் அவஸ்தையை  அத்தனை அட்டகாசமா தன் நடிப்பாலே உணர்த்துகின்ற அந்த காட்சி, சொல்லத் தெரியவில்லை. அத்தனை நுட்பமானது. 
எட்வர்டின் பனி சிற்பங்கள்

           எனக்கே அவ்ளோ புரிஞ்சப்போ, அந்த ஹிரோயின் பொண்ணுக்கு புரியாதா? அந்த சீனிலேயே boy friend க்கு டாட்டா காட்டிவிட்டு, அடுத்த சீனில் ஹீரோவிடம் சிம்ப்பதியும், ச்நேகனுமாய் பழகத்தொடங்குவாள். அப்புறம் என்ன எட்வர்ட் சட்டையை ஜிம் பிடிக்க, சிசர் ஹான்டால் எட்வர்ட் ஜிம்மை கொலை செய்துவிட்டு கூரையை உடைத்துக்கொண்டு எங்கோ சென்றுவிடுகிறார்.  கிம் தனது முதுமையில் இதையெல்லாம் தனது பேரனுக்கோ, பேத்திக்கோ கதையாக சொல்லிகொண்டிருப்பதாக கதை முடிகிறது.

இது எட்வர்ட்.
      நான் பார்த்த முதல் ஆங்கில படத்தை பற்றிய இந்த பதிவை எழுத எனக்கு கஸ்தூரி ஐடியா கொடுத்தபின், இப்போ தான் wiki அண்ணாவிடம் மேலும் சில தகவல்கள் பெற்றேன். படத்தை இயக்கியவர் Tim Burton. 20th century fox தயாரித்த இப்படத்தின் ஹீரோ  Johnny Depp. திரைகதை Caroline Thompson.

33 கருத்துகள்:

 1. எப்பவோ நடந்ததெல்லாம் ஞாபகம் இருக்கே... நானெல்லாம் உடனே மறந்து விடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிகம் நினைவில்லை. கொஞ்சம் விக்கிபீடியா பார்த்தேன்:)) நன்றி அண்ணா!

   நீக்கு
 2. ஆங்கிலத் திரைப்பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டது இனிமை..
  நானும் அந்தத் திரைப்படத்தைக் காண விழைகின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா! என் பரிந்துரையை நம்பி படம் பார்க்க போறீங்களா!!! ரொம்ப நன்றி அண்ணா!

   நீக்கு
 3. ஜானி டெப் எனது விருபதிற்குரிய நடிகர்களில் ஒருவர் ...
  இத்துணை சேட்டைகளுக்கு வாய்ப்பிருக்கும் கதையில் ஜானி கச்சிதமாய்ப் பொருந்தியிருப்பார் என்றே நினைக்கேன்.

  நான் இந்தப் படத்தை தவிர்த்தேன்..
  இனி பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Torrence போடும்போது chocolat படத்தையும் சேர்த்து down loadங்க சகா!. வருண் நல்லாயிருக்கும்னு பரிந்துரைத்த படம். சண்டே பார்க்கலாம்:)

   நீக்கு
 4. இவர் கத்தரி கை மாயாவியா :)
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூவை பூ னு சொல்லலாம் புய்பம் னு சொல்லலாம் ! நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்:)))

   நீக்கு
 5. முதல் பட விமர்சனம்...
  கத்தரி கைகள் - அருமையாக ஞாபகத்தில் வைத்து எழுதியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப எல்லாம் நினைவில் இல்லை அண்ணா, அந்த பெயர்களை மட்டும் விக்கிபீடியாவில் பார்த்தேன்>மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 6. ஹாலிவுட் பதிவராக புரோமோசன் பெற்ற மைதிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. ஒரம்போ ஓரம்போ
  ஹாலிவுட் பதிவரின் சினிமா பதிவுகள் வருகிறது
  ஒரம்போ ஓரம்போ

  பதிலளிநீக்கு
 8. ஏன்...? நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சி... மது மாதிரி எழுதிப்பாக்க என்ன ஆசையோ போ... நமக்கு இரும்புக்கை மாயாவி படக்கதைகள் தான் படிக்கக் கிடைச்சுது.. இருந்தாலும் நல்லாத்தான் அப்பப்ப “நாங்க இங்கிலீசு டீச்சராக்கும்“னு காட்டிக்கிட்டே இருக்கீங்க (அப்பறம் தமிழ் வாத்தியாருங்க காதுல பொகை வரும்ல?) நல்லா இருங்கப்பா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.....ஹா....ஹா....உண்மையில் இந்த படத்தை பற்றி கஸ்தூரியிடம் சொல்லிகொண்டிருந்த நாளில் என்ன நினைத்தாரோ மனிதர்(வேறென்ன என் வாயை மூடனும் என்று கூட நினைத்திருக்கலாம்) நீ ஏன் இதை பதிவா எழுதகூடாது என்று ஐடியா கொடுத்தார். நீங்க நல்ல இருக்குனு சொன்ன ரொம்ப சந்தோசம் தான்:)

   நீக்கு
 9. கத்திரிக்காய்னு படித்திருந்தாதான் நான் ஓடியே போயிருப்பேன் ;-)
  இந்தப் படம் பார்க்கணுமே, எனக்கு ஒரு மூணு மணிநேரம் பார்சல் பண்ணுங்க டியர் :))

  பதிலளிநீக்கு
 10. நிறைய முறை டி வியில் பார்த்து ரசித்த படம்..

  பதிலளிநீக்கு
 11. என்றோ பார்த்ததை
  இன்று பார்த்ததுபோல்
  எழுதியுள்ளீர்கள் சகோதரியாரே
  அருமை
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக , நான் தான் விரிவா எழுதலையோ:(( அதுக்கு wiki அண்ணாவும் ஹெல்ப் பண்ணினார் அண்ணா!! மிக்க நன்றி!

   நீக்கு
 12. பரவாயில்லை எப்பொதோ பார்த்த திரைப்படத்தை நினைவு கொண்டு பகிர்ந்திருக்கின்றீர்கள்! சரி...ஹீரோவின் சட்ரையை ஹீரோயினின் முதல் காதலன் பிடிக்க அவன் கொலையாகின்றான். கத்தரிக் கைகளால்....அப்போ எப்படி ஹீரோயினை மணந்து.......பேரன் பேத்தி....இடிக்குதே....ஹஹஹ ம்ம்ம் சரி விடுங்க சுபம் ....இதுதானே பெரும்பாலான திரைப்படங்களின் இலக்கணம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க என்னைவிட குழந்தையா இருப்பீங்க போலவே!! காதலன் தான் தாஜ்மஹாலை கட்டனும், காதலி அப்பா சொல்லற மாப்பிளைய கட்டனும் இல்லையா:))) ஜஸ்ட் kidding .அந்த பொண்ணு ரெண்டு பேருக்கும் டாட்டா காட்டிட்டு வேற யாரையோ கட்டிகிது. ஹா...ஹா...ஹா,,,நன்றி சகாஸ்!

   நீக்கு
 13. அடாடா, என்னது இது, முத்து நிலவன் ஐயா சொல்ற மாதிரி நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு. மது சார் தான் ஆங்கிலப்படங்களையா தேடிப் பிடிச்சு விமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, இப்ப நீங்களுமா?

  பதிலளிநீக்கு
 14. ரசிக்கும் படியான விமர்சனம். எவ்வித தடங்கலும் இன்றி சிறப்பான நடையுடன் படிக்க நன்றாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 15. ஆங்கில இலக்கியம் படித்தது, பரிணாமம்- அழகான குரங்கு முகத்திலிருந்து விகாரமான மனிதமுகமாக மாறிய கதை, கத்திரிக் கைகள் (தமிழாக்கமாக்கும்!), ஜானி டெப் இப்படி பலவற்றை தொட்டு அலசி இருக்கீங்கபோல இருக்கு.

  *****************

  ***எனக்கே அவ்ளோ புரிஞ்சப்போ, அந்த ஹிரோயின் பொண்ணுக்கு புரியாதா?***

  அதென்ன ஹீரோயின் பொண்ணு??? "redundancy" பத்தி எல்லாம் உங்க மாணவ மாணவிகள் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லையா?! (மாட்டினீங்களா இந்த பதிவுலக நக்கீரரிடம்! :))) )

  ************************

  இந்தப்படம் பார்க்கவில்லையே! அளவுக்கு அதிகமான "காதல்" நிரம்பி வழியும்போல இருக்கு. (படம் பார்க்காம்லே தியரி!! :)) )

  சரி நமக்கு தெரிந்ததையும் சொல்லிடுவோம்.. "chocolat" னு ஒரு ஜானி டெப் படம் பார்த்து இருக்கேன். அந்தப்படம் பார்க்கலைனா பாருங்க. வித்தியாசமான ஒரு படம் அது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **அழகான குரங்கு முகத்திலிருந்து விகாரமான மனிதமுகமாக மாறிய கதை,** இதை நான் நம்ம தமிழன் கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்.ஏன்னா ஒவ்வொரு முறை நன்றி போடும்போதும் அதில் குரங்கு படம் போடுவது அவர் ஸ்டைல். அதனால் என்ன நண்பருக்காக நீங்க குரல் கொடுத்திருகிங்க:))
   ---------
   லேட்டேர்மேன் நடத்து லேட் நைட் ஷோ பத்தி சுஜாதாவின் புத்தகமொன்றில் படித்தேன்
   டாப் டென் மொக்கை காரணங்கள் என அவர் சொல்வது ரொம்ப பிரபலமாமே??
   நானும் ட்ரை பண்ணுறேன்
   1. நீங்க அலெர்ட் டா இருகீங்களான்னு செக் பண்ணினேன்(இது பல ஆசிரியர்கள் சொல்லக்கூடியது.விஜூ அண்ணா கூட ஒருபதிவில் இதுபற்றி சொல்லி இருப்பார்)
   2.ரைமிங்க இருக்கே னு தெரிஞ்சு தான் போட்டேன்.
   3.கருத்தை வலியுறுத்த இப்படி நடு சென்டர் போடுவது நம்ம கலாசாரம் அல்லவா?
   4.இன்னும் இருக்கு but நிறுத்திக்கிட்டு உண்மையா சொல்லுறேன். அதை நான் கவனிக்கலை பாஸ்:))))))))))
   -----
   சாக்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சாப்பிடுற சாக்லேட்டை சொன்னேன். இதை அவசியம் பார்கிறேன்:)

   நீக்கு
 16. gothic பிலிம் வரிசையில் ஆங்கில பாட வகுப்பில் மகள் மூன்று வாரத்துக்கு முன்பு ஸ்கூலில் பார்த்தா இந்த படத்தை .
  இங்க ஸ்கூலில் வாரம் ஒரு நாள் ஆங்கில வகுப்பில் இப்படி படங்கள் போட்டு காட்டுவாங்க .genre ,plot என்று எல்லாவற்றையும் பிள்ளைங்க எழுதணும் .ரொம்ப சிலாகிச்சா இந்த படத்தை பார்த்து விட்டு வந்து .இப்போ எனக்கும் உங்க பதிவை படிச்சதும் அந்த படத்தை பார்க்க ஆசையா இருக்கு ..

  பதிலளிநீக்கு