திங்கள், 8 டிசம்பர், 2014

முருங்கை பூத்திருக்கு:)






கரும்பச்சைக் கூடாக  கண்பறித்த தும்பி  
கவனிக்கச் செய்தபின் தான்பார்த்தேன்-கொத்தாய் 
மலர்ந்திருக்கும் இம்முருங்கை காய்காய்க்க   சுற்றம் 
மகரந்தச் சூழ்த்தரிக்கும் நட்பு!!


அண்டை அகங்கள் அடுக்களை எங்கும்நல் 
பண்டம்  சமைக்க, முருங்கை மணம்வீச 
 
அன்பை பரிமாறி நிற்கிற தெம்மகம்
முன்பு வளர்ந்த தரு!!

48 கருத்துகள்:

  1. ஆஹா அருமை மைதிலி!
    முருங்கை பூக்கிறதோ இல்லையோ வெண்பா பூக்கிறதே ..வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. எங்கோ போய்விட்டீர்கள் என்பது மட்டும் தெரிகிறது!
    வாழ்த்துகள்!
    த ம 4

    பதிலளிநீக்கு
  3. ஆஹா ....முருங்கை வெண்பா பாட வைத்துவிட்டதே மா..வாழ்த்துகள்...விரைவில் காய் காய்க்க..

    பதிலளிநீக்கு
  4. இயற்கையைக் கவனித்த விதம் - இனிமை..
    முருங்கையை முன்னிறுத்திய கவிதை - அருமை!..

    பதிலளிநீக்கு
  5. பூப்பூவாய் பூத்திருக்கும் வெண்பா பூவையும் சேர்த்து ரசித்தோம் தோழி
    மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  6. முருங்கையில் மொட்டவிழ்ந்த முத்துக் கவிதை
    சுருங்காமற் தந்த சுவை!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  7. முருங்கை வெண்பா அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. கொத்துக் கொத்தாய் முருங்கை பூக்க... முத்து முத்தாய் வெண்பா பூத்ததே... அருமை மைதிலி.

    பதிலளிநீக்கு
  9. வெண்பா முயற்சியா? அருமை! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  10. முருங்கை ‘’பூ’’
    பார்த்ததுண்டு
    முருங்கை ‘’பா’’
    இதுதானோ ?
    அருமை.

    பதிலளிநீக்கு
  11. தும்பி கவனிக்கச் செய்த பின்
    பிறந்த பா அப்பப்பா...அருமை டீச்சர்,

    பதிலளிநீக்கு
  12. #முருங்கை பூத்திருக்கு:)#
    பூத்திருக்கு சரி ,அதற்கு ஏன் ஸ்மைலி ? பாக்கியராஜின் முருங்கைக் காய் நினைவுக்கு வந்து விட்டதா :)
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ்!! அம்புட்டு பெரும் ரோசா பூத்திருக்கு, மல்லிகை பூத்திருக்குனு சந்தோசமா சொல்வாங்க! பஞ்ச காலத்தில் பசி போக்கும் முருங்கை ஏழைகள் நண்பர்கள் என்பார்கள்! அதுனால சொன்னேன். இப்படி கோக்குமாக்கா கேட்கலாமா??
      தமவுக்கு நன்றி !

      நீக்கு
  13. நான் புரிந்து கொண்டது என்னவென்றால் வார்த்தைகளை அழகாக கோர்த்து என்ன சொல்கிறோம் என்பது படிப்பவனுக்கு புரியாமல் ஆனால் அதை வெளியில் சொல்லமுடியாமல் அதில் என்னமோ மிகப் பெரிய கருத்து சொல்லிருக்காங்க என்று நினைத்து ஆஹா மிக அருமையான வெண்பா என்று சொல்லிக்கிட்டு போய்க் கொண்டே இருப்பது போலிருக்கிறது. சரி சரி தப்பா எடுத்துகாதீங்க எனக்கு வெண்பா என்றால் என்னவென்றே புரியவில்லை அதனால்தான் இந்த கருத்து. நான் நிறைய தடவை சொல்லி இருக்கிறேன் நான் அறிவு ஜீவி இல்லை என்று எனவே அதை ஞாபகத்தில் வைத்து இந்த கருத்தை படிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்பா கத்துகிறதுக்கு முன்னால் நானும் இப்படி டரியல் ஆனதுண்டு சகா! ப்ரீயா விடுங்க:)

      நீக்கு
  14. இந்த கவிதையை படித்த பின் பகவான்ஜீ சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது .ஆனால் அதை நான் சொன்னால் நன்றாக இருக்காது என்று நினைத்தால் எங்க ஊர்கார் நகைச்சுவையாக நைஸ்சாக சொல்லி சென்று விட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர்காரருக்கு பதில் சொல்லிட்டேன் பாத்துகோங்க:)

      நீக்கு
  15. தும்பினாலே பயம் எனக்கு!

    இது என்ன கசக்கிதுனு சொல்லும்போதெல்லாம், மற்ற கீரைகளைவிட இதுதான் வயிற்றுக்கும் உடலுக்கும் நல்லது னு என் அம்மா அறிவுரை வழங்குவாங்க. :) அதனால முருங்கைக்கீரை, அகத்திக்கீரை எதையும் விடமாட்டேன் நான்!

    ஆமா எங்கே படத்திலே அந்த முருங்கைப் பூவையே காணோம்?

    வெள்ளையாக இருக்கும்னு ஞாபகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **தும்பினாலே பயம் எனக்கு!** அப்டியா!!!!!!!!!!!
      **என் அம்மா அறிவுரை வழங்குவாங்க. :) ** இப்படி பச்சை குழந்தை மாதிரி பேசுறீங்களே எப்படி பாஸ்!!
      **ஆமா எங்கே படத்திலே அந்த முருங்கைப் பூவையே காணோம்?** படத்தை மாத்திட்டேன்:)) இப்போ பார்த்தாச்சா:)

      நீக்கு
  16. முருங்கைப்பூக்கள் போன்றே
    முத்தான வெண்பா..

    பதிலளிநீக்கு
  17. முருங்கையை வைத்து ஒரு வெண்பா சூப்பர்

    பதிலளிநீக்கு
  18. " முருங்கை இருக்கும் வீட்டில் கறிப் பஞ்சம் கிடையாது "

    என்பார் என் பாட்டி.

    அப்படிப்பட்ட முருங்கையை போற்றும் முத்தான கவிதை !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தான் அண்ணா நான் சொல்லவந்ததும்:)) நன்றி அண்ணா!

      நீக்கு
  19. அருமையான முருங்கப் பூ! அதன் வழி வெண்பா பூத்திருப்பது...ஸோ விஜு ஆசானுக்கு ஏற்ற மாணவியாகிட்டீங்கப்பா.....நாங்க கடைசி பெஞ்சுப்பா.....ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு