வெள்ளி, 18 ஜூலை, 2014

உறைந்து மீள்கிறது அங்காடித்தெரு!தாள்கள் தீர்ந்த பின்னும்
அட்டை தேய்த்தும் வாங்கியாயிற்று!
காது கிழிந்துவிடும் வாய்ப்போடு
கைவிரல்கள் அறுக்கத்தொடங்குகிறது
சில கனவுகளையும் புன்னகையும்
நிரப்பிய நெகிழிப்பைகள் !நான்காவது மாடியில்
மறுமுறை அட்டைதேய்க்கையில்
சலனமற்றிருந்தும் ஈர்த்துவிடுகிறது
ஒவ்வொரு முறையும் தாத்தாவை
பார்க்கும்போது மட்டுமே நினைவுக்கு வரும்
அவரது நடுக்கம்!

அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது
அன்றைய அங்காடிப்பொழுது
தாத்தாவின் புன்னகையை
பற்றியபடி நடக்கிறேன் !
பத்தில் எட்டுபேர்
திரும்பிப்பார்க்க
எட்டில் ஆறுபேர்
புருவம் உயர்த்த
ஆறில் நான்கு பேர்
நகைமுரண் சிந்த

கடந்துவிடுகிற நொடிக்குள்
வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்
விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது
தாத்தாவின் ஊன்றுகோல்
ஒரு நொடி உறைந்து மீள்கிறது
அங்காடித்தெரு!!


28 கருத்துகள்:

 1. வணக்கம்
  சகோதரி
  தாத்தாவின் சிறப்பை கவியில் கற்பனையாக தீட்டிய விதம் கண்டு மகிழ்தேன்...பகிர்வுக்கு நன்றி
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. கணையாழித் தரம் வாய்ந்த கவிதை
   பிளாஸ்டிக் பைக்கு நெகிழிப் பை என்ற வார்த்தையை பயன்படுத்தி புழக்கத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தமைக்கு பாராட்டுக்கள்

   நீக்கு
 3. அட்டகாசம்... வெகுவாக ரசிக்க வைத்த கவிதை.

  பதிலளிநீக்கு
 4. அட! எப்படி சகோ இப்படி கலக்குறீங்க!!!

  "//பத்தில் எட்டுபேர்
  திரும்பிப்பார்க்க
  எட்டில் ஆறுபேர்
  புருவம் உயர்த்த
  ஆறில் நான்கு பேர்
  நகைமுரண் சிந்த//"

  - சூப்பர். வாழ்த்த்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை.....

  தேர்ந்தெடுத்த படமும் மிக பொருத்தம்.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. முடியல அம்மாஆஆஆஆஆஆஆ முடியல

  பதிலளிநீக்கு
 7. நான் என்ன தப்பு பண்ணுகிறேன் மனைவி ஆ ஊ ந்னா
  பூரிக்கட்டையை எடுத்து அடிகிறா இங்கே என்னனா சகோக்களும் தோழிகளும் கவிதை போட்டு தாக்குறாங்க என்னால முடியல..


  கவிதை எழுதுங்க தப்புன்னு சொல்லலை ஆனா அதுக்கு கிழே அதுக்கு கோனார் தமிழ் உரையில் விளக்கம் சொல்வது மாதிரி விளக்கம் தந்திடுங்க என்னை மாதிரி உள்ள தற்குறிகளுக்கு ப்ளிஸ்

  பதிலளிநீக்கு
 8. அங்காடித் தெருவில் அந்தத் தாத்தாவும் சிறுமியும்
  கண்களில் வந்து போகின்றனர்.
  அருமையான கவிதை!

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 9. த.ம.7
  "வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்
  விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது
  தாத்தாவின் ஊன்றுகோல்.."
  என்ற வரிகள் மிக உயர்ந்த கவித்துவம் கொண்டவை. நிறைய எழுதுங்கள் நண்பரே! உங்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 10. //ஒற்றை சிறுமியின் விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது
  தாத்தாவின் ஊன்றுகோல்!..//
  தாத்தாவின் நினைவுகளில் மனம் நெகிழ்கின்றது.. அருமை..

  பதிலளிநீக்கு
 11. நடைமுறைவாழ்வை எடுத்துக்காட்டிய நல்லதொரு க(வி)தை

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. # எட்டுபேர்
  திரும்பிப்பார்க்க#
  அந்த எட்டு பேரில் நானும் ஒருவனாகி விட்டேன் ,த ம 8 போட்டு !
  நன்றி

  பதிலளிநீக்கு
 14. கடந்துவிடுகிற நொடிக்குள்
  வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்
  விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது
  தாத்தாவின் ஊன்றுகோல்
  ஒரு நொடி உறைந்து மீள்கிறது
  அங்காடித்தெரு!! ஆஹா அருமை அருமை படத்தை பார்த்து
  உணர்வுகளும் உடைந்து போகிறது. பெருத்தமான படமும் கவிதையும்.
  வர வர ரொம்ப மோசம் அம்மு ! ஹா ஹா சான்சே இல்ல அப்பிடி அசத்திறேடா. தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 15. கவிதையில் மிக சிறப்பான உணர்வு வெளிப்பாடு. நன்றி.

  பதிலளிநீக்கு
 16. கவிதையும், கவிதைக்கேற்ற படமும் அருமை

  பதிலளிநீக்கு


 17. அருமையான கவிதை சகோ.தொடரட்டும் உங்கள்

  கவிதைப் பயணம்.

  பதிலளிநீக்கு
 18. தாத்தாவின் புன்னகையை
  பற்றியபடி நடக்கிறேன் !
  பத்தில் எட்டுபேர்
  திரும்பிப்பார்க்க
  எட்டில் ஆறுபேர்
  புருவம் உயர்த்த
  ஆறில் நான்கு பேர்
  நகைமுரண் சிந்த

  கடந்துவிடுகிற நொடிக்குள்
  வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்
  விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது
  தாத்தாவின் ஊன்றுகோல்//

  மிகவும் ரசித்தோம் வரிகளை! இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் எங்கள் நட்பில் கிடைத்தமைக்கு மனம் மகிழ்கின்றோம்! அறிவு பளிச்சுடுதுப்பா......கண்ணு எங்களுக்கு கூசுதுப்பா.....!!!!

  பதிலளிநீக்கு
 19. “சில கனவுகளையும் புன்னகையும்
  நிரப்பிய நெகிழிப்பைகள் !
  தாத்தாவின் புன்னகையை
  பற்றியபடி நடக்கிறேன் !
  கடந்துவிடுகிற நொடிக்குள்
  வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்
  விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது
  தாத்தாவின் ஊன்றுகோல்
  ஒரு நொடி உறைந்து மீள்கிறது
  அங்காடித்தெரு!!“
  ............................
  மீளாமல் உறைகிறேன் நான்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 20. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  பதிலளிநீக்கு
 21. ஆழ்ந்த வரிகளில் தாத்தாவின் நினைவுகள்..

  பதிலளிநீக்கு
 22. நல்லா இருக்கு..
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. சிறந்த உணர்வு மிக்க பதிவு

  பதிலளிநீக்கு
 24. மனதை நெகிழச் செய்யும் அருமையான கவிதை.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு