வெள்ளி, 4 ஜூலை, 2014

வரலாறு முக்கியம் பாஸ்! II
                                          மொகலாயர் வருகை. இது தான் எட்டாம் வகுப்பின் முதல் பாடம். எனக்கு ரொம்ப பிடிக்கும். மதனின் வந்தார்கள் வேன்றார்களின் தாக்கமாக இருக்கலாம். அதே நேரம் ஐரோப்பியர் வருகை பாடம் நடத்தவே

எரிச்சலாக இருக்கும். இதற்கான காரணங்களை யோசித்தபோது பெரும்பாலான மொகலாயர்கள் நம் நாட்டின் செலுத்திய அக்கறையும், பெரும்பாலான ஆங்கிலேயர்கள் சுயநலமும் தான் என்று தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் யோசித்தப்போது ஒன்று தோன்றியது மொகலாய ஆட்சியாளர்கள் தான் ஆட்சி செய்த நாட்டை தன் நாடு என்றும், மக்களை தம்மக்கள் என்று கருதினர். எனவே நாடும் தம் ஆட்சியையும் செழிக்கத் தேவையான முறையில் கவனம் செலுத்தினர். ஆனால் வெள்ளைகாரப்பிரபுக்களோ ராணி விரும்புகிற வகையில் செல்வத்தை சுரண்டிக்கொடுத்தாக  வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் ஆட்சி செய்யவில்லை. ஒரு மேற்பார்வையாளன் அல்லது கங்காணி போல் செயல்பட்டனர்.( இதை நானே யோசித்தேன் என்று கஸ்தூரியுடன் பகிர்ந்துகொண்ட போது ஏற்கனவே அருணன் இதை எழுதிட்டார்னு தெரிஞ்சது. ரைட்டு விடுங்க great people think alike)
                                             இதை வகுப்பில் விளக்க எனக்கு வேறு ஒரு எடுத்துக்காட்டு பயன்பட்டது. அரசுப்பள்ளியில் பணிசெய்யும் ஆசிரியர்கள் அதன் சுற்று வட்டாரத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் பட்டியலின் பெயர் சேர்த்தல் என்பன போன்ற வேலைகள் இதற்கு உதவுகின்றன. ஒரு அரசுப்பள்ளிமாணவன்குறிப்பேடு வாங்கவில்லை அவன் வீடுச்சூழலை அவன் ஆசிரியர் யோசிப்பார்கள். அவனை தன் பிள்ளை என்றே கருதுவார்கள். ஆனால் ஆங்கில பள்ளிகளில் வகுப்பு ஆசியர்கள் அவர்கள் தாளாளர்களுக்கு  கணக்கு கொடுத்தாக வேண்டும். நோட்டு வாங்கனும்ன வாங்கணும். மாணவர்கள் தங்கள் நிறுவனத்தின் கஸ்டமர்கள். (விதிவிலக்குகள் உண்டு).அவர்கள் எப்படியோ போகட்டும். இதில் நாம தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னு தான். நாளைய தலைவர்களாய் வரவிருக்கும் நீங்க(என் மாணவர்களிடம் சொன்னது) உங்களுக்கு வாக்களித்தவர்கள் உங்க மக்கள்னு நினைத்தால் மொகலாய அரசர்களை போல் நம் நாட்டை கலைப் பொக்கிஷம் ஆக்கமுடியும். சீட்டு கொடுத்த கட்சி  மேலிடத்திற்கு கப்பம்  செலுத்தும் பிரபு வாக நினைத்து கொண்டால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?
மாணவர்கள் யோசிக்க தொடங்கினார். அது தானே நமக்கு வேணும்:)


PART I

பி.கு
அடுத்த பதிவு எழுத பத்து நாள் ஆகலாம். வாழ்கையை புரிந்துகொள்ளவே முடியவில்லை. பதினைத்து நாளுக்குள் ஆழ்ந்த துயரில் இருந்து அதீத மகிழ்ச்சிக்கு...மே மாதம் முழுக்க என் இனிய தோழியான என் அண்ணி (கஸ்தூரியின் தங்கை) அவர்களோடு செலவிட்டேன். இதோ வெகு காலமாய் எங்களை காக்க வைத்த தேவதை இன்று பிறந்திருக்கிறாள் என் அண்ணியின் மகளாய். அடுத்த பத்துநாட்கள் அவளுக்கு டெடிகேசன். சந்திப்போம் நண்பர்களே !!

21 கருத்துகள்:

 1. அரசுப்பள்ளி- தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஓப்பீடும்! முகலாயர்- ஆங்கிலேயர் ஒப்பீடும் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்க வைக்கும் பதிவு

  பதிலளிநீக்கு
 3. 'மாணவர்கள் யோசிக்க தொடங்கினார். அது தானே நமக்கு வேணும்' - ஆமா...
  அதுதானே மைதிலியிடம் தமிழ்உலகததின் எதிர்பார்ப்பு.
  அப்புறம்... மறக்காமல் நம்ம குட்டி தேவதையின் வரவுக்கு என் இனிய மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகளைச் சொல்லு. கஸ்தூரியின் பதிவிலும் பார்த்தேன்.. அடடா.. ஒரு புதிய வரவில் இத்தனை பேர் மகிழ்கிறார்கள் எனில் அதுவல்லவோ இனிய வரவு! (அதுக்காக 10நாள் லீவெல்லாம் எதுக்கு? அப்பப்ப நினைக்கிறத எழுதிப் போடலாம்தானே? - 10நாள் லீவில் என் வாசகர்கள் ஏங்கிப்போயிட்டாங்கலாம்னு நினைச்சு நானா எழுதினது...எப்புடீ)

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோ.புதிய பூவிற்கு என் வாழ்த்துகள்.மொகலாயரும் அரசுப்பள்ளியும் ஒப்பீடு புதிய பார்வை வாழ்த்துகள்மா....

  பதிலளிநீக்கு
 5. தேவதைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்.
  ஒப்பிட்டு நீங்கள் நடத்திய பாடம் மிக அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 7. நாளைய தலைவர்களாய் வரவிருக்கும் நீங்க(என் மாணவர்களிடம் சொன்னது) உங்களுக்கு வாக்களித்தவர்கள் உங்க மக்கள்னு நினைத்தால் மொகலாய அரசர்களை போல் நம் நாட்டை கலைப் பொக்கிஷம் ஆக்கமுடியும். சீட்டு கொடுத்த கட்சி மேலிடத்திற்கு கப்பம் செலுத்தும் பிரபு வாக நினைத்து கொண்டால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?
  மாணவர்கள் யோசிக்க தொடங்கினார். அது தானே நமக்கு வேணும்:)
  //
  அருமையான பாயிண்டுங்க சகோதரி! பசங்க நிஜமாகவே அதிர்ஷ்டசாகள் தான் இப்படி ஒரு நல்ல டீச்சர் கிடைக்க.....

  தேவதைக்கு எங்கள் வாழ்த்துக்கள்! கஸ்தூரி அவர்கள் முகநூலில் பகிர்ந்து கொண்டதை மது அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். எங்கள் வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்! துன்பமும், இன்பமும் மாறி மாறித்தானே வரும் சகோதரி! என்ஜாய்!!!!!!

  பதிலளிநீக்கு
 8. மொகலாய மன்னர்கள் நம் தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள் அழிவதற்கு ஒரு காரணமாக இருந்தவர்கள் என்று கோபம் எனக்குண்டு. இந்த ஒப்பீடு நல்லா இருக்குது. தேவதையுடன் இனிமையான பொழுதுகள் கழிய மகிழ்வான நல்வாழ்த்துகள். (காலைலயே இந்த கமெண்ட்டு போட்டேன். எங்கயோ மாயம் ஆய்டுச்சு. அவ்வ்வ்வ்வ்வ்)

  பதிலளிநீக்கு
 9. குட்டி தேவதையின் வரவைக் கண்டு மகிழ்ந்திருக்கும் தங்கள் உள்ளம்
  புதுப் பொலிவுடன் மீண்டும் வலையுலகை நோக்கி வலம் வரட்டும்
  வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
 10. ஆஹா உங்களைப் போலல்லவா நாத்தனார் கிடைக்க வேண்டும் :)
  உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தந்த தேவதைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. முதலில் தேவதைக்கு வாழ்த்துக்கள் !

  " ஆனால் வெள்ளைகாரப்பிரபுக்களோ ராணி விரும்புகிற வகையில் செல்வத்தை சுரண்டிக்கொடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தனர்."

  மிகவும் உண்மை சகோதரி ! பாண்டிச்சேரியின் பிரெஞ்சு பிரபுக்கள் தங்கள் மனைவியரின் கட்டாயத்தினால் மக்களை கொடுமைக்கு உள்ளாகியதைபற்றிய விபரங்களை, அனந்தரங்கம் பிள்ளையின் டைரி குறிப்புகளை ஆதாரமாக கொண்டு, எழுத்தாளர் பிரபஞ்சன் தனது வானம் வசப்படும் கதையில் அழகாக விளக்கியிருப்பார்.

  ஆச்சரியம் ! தங்களின் " வனமாகும் சுவர்கள்!! " படித்தபோது எனது அடுத்த பதிவுக்கான ஒரு கரு கிடைத்தது... அதே போல இந்த பதிவை படிக்கும்போதும்... அந்த பதிவுகளில் நிச்சயம் உங்களுக்கான Courtesy உண்டு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr
  எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !
  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

  பதிலளிநீக்கு
 12. நல்லதொரு சிந்தனைக் கருத்தை மாணவர்களின் மனத்தில் விதைத்துள்ளீர்கள் மைதிலி. நிச்சயம் பலன் கிடைக்கும்.

  குடும்பத்தில் பிற தேவதைகளோடு இணைந்திருக்கும் குட்டிதேவதைக்கு என் அன்பும் ஆசிகளும்!

  பதிலளிநீக்கு
 13. சிந்திக்க வைத்த பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. இனிய புது வரவான தேவதைக்கும்,தங்கள் அண்ணிக்கும் என் (பிந்திய) வாழ்த்துக்கள்.
  மிக நல்லாசிரியர் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு

 16. வணக்கம்!

  எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட இன்னமுதைப்
  பொங்கும் தமிழைப் பொழி!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 17. சிந்தனை கருத்துகள் சிந்தை கவர்ந்தன..

  தேவதையின் வருகை மகிழ்வளித்தது..
  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு