திங்கள், 6 அக்டோபர், 2014

நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்திப்புகூட்டம்

                         
தமிழ் இளங்கோ அண்ணா,கரந்தை அண்ணா,மைதிலி மற்றும் மகி,நிறை,கிரேஸ் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் வினோத் அவர்கள்.
                                நேற்று 5-10-2014 கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதுகையில் ஐந்து மணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை சீரும், சிறப்புமாக நடந்தது. விழாவை பற்றி தெளிவா, சுருக்கமா தெரிஞ்சுக்க தென்றல் கீதா அக்காவின் இந்த பதிவை பாருங்க. இன்னும் பலரும் இந்த விழாவை பற்றி பல்வேறு கோணத்தில் எழுதுவாங்க. so,நேற்று நான் சந்திக்க வாய்ப்புகிடைத்த அன்பு நட்புகளையும், சகோகளையும் பற்றி இங்க சொல்லப்போறேன்.


                          மூணு மணிபோல தன் அம்மாவீட்டில் (மதுரையில்) இருந்து கிளம்பிவிட்டதாக கிரேஸ் டியர் செல்பேச விழா அங்க களைகட்ட தொடங்கியது. ஐந்து மணிக்கு கிரேஸ் நகர்மன்றம் வந்துவிட, நான் மற்றும் பதிவர் மது(பின்ன மினி பதிவர் கூட்டம்னு டைட்டில் கொடுத்திருக்கோம்ல) மற்றும் மகிகுட்டி எல்லாம் தென்றல் கீதா அக்காவின் செல்ல அதட்டல் கேட்ட அடுத்த நிமிடம் அங்க இருந்தோம். அண்ணி மல்லிகா நிலவன் அதுவரை கிரேஸ் க்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்தார்.
வலமிருந்து இடம் இளங்கோ அண்ணா,மது(கஸ்தூரி ரெங்கன்),மகி,மைதிலி,தென்றல் கீதா அக்கா,கவிஞர் R.நீலா அக்கா, முத்துநிலவன் அண்ணா,மற்றும்திரு கவிவர்மன் .

                          கிரேஸ் ரொம்ப கிரேஸ்புல்லா இருந்தார். அவரை பார்த்த நொடியில்  உற்சாகம் தொற்றிக்கொள்ள பேச வார்த்தையே வரவில்லை. (கிரேஸ் இதை படித்து அதிர்ச்சியாக வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்). நினைவே பரிசாக இருப்பினும், ஒரு நினைவுப்பரிசை பகிர்ந்து கொண்டோம். உடன் கிரேஸ்ன் கணவர் திரு.ஆல்பர்ட் வினோத் வந்திருந்தார். அண்ணா மிக இனிமையாய் பழகினார். சற்றைக்கெல்லாம் மதுவும் அவரும் நல்ல நண்பர்களாகி இருந்தனர்.

                        ஸ்டாலின் சரவணன் சகோ, மகாசுந்தர் அண்ணா, சுவாதி அக்கா, அய்யா திருஞானசுந்தரம், மாலதி டீச்சர், ஜெயம்மா(எ.இ.ஒ) என எங்களூர் பதிவர்களை கண்டு ரொம்ப உற்சாகமாக உரையாடிகொண்டிருந்த போது தமிழ் இளங்கோ அண்ணா வந்தார். வந்த நொடியில் போட்டோ எடுக்க ஆரம்பித்தார் (இந்த விசயத்தில் இவர் கஸ்தூரிக்கு டப் கம்பட்டீசன்). அண்ணனை நான் சந்திப்பது இது இரண்டாவது முறை. பாண்டியன் சகோ திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதன்முதலாக பார்த்தது.

                     அடுத்து கரந்தை ஜெயகுமார் அண்ணா வந்தார். கீதா அக்கா ரொம்ப ஆர்வமா கரந்தை அண்ணாவிடம் அண்ணியை பற்றி விசாரித்தார். எப்டி அண்ணா இவ்ளோ டீடைல எழுதுறீங்க என நான் வியந்தபோது, எல்லா புத்தகத்தில் படிப்பது தான் என ரொம்ப தன்னடக்கத்தோடு சொன்னார். அவர் பதிவுகளை போலவே எளிமையாக, ஆனால் ஆழமாக இருந்தது அவரது பேச்சு!!,  டி.டி.அண்ணா வலைபதிவர் சந்திப்பில் பிசி போல. ரைட்டு பாண்டியன் சகோ எங்க காணோம் என பலரும் தேட, விடுங்கப்பா புதுமாப்பிள்ளை என சமாதானக்குரலும் கேட்டன.

                     விழா முடிந்து கூட்டம் கலையும் வேளையில் (ஆம், கடைசிவரை அன்பால் சேர்ந்த அந்த கூட்டம் கலையாமல் இருந்தது) மணவை ஜேம்ஸ் அய்யாவை கஸ்தூரி அறிமுகம் செய்த போது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஊர்காரர்கள் என்றபோதும் இந்த வலைப்பூ தான் எங்களை சந்திக்க வைத்துகிறது. அவர் என் அன்பு ஆசான் அண்ணா ரவியின் நண்பர் என தெரிந்து. அவர்க்கு பின்னால் அமர்திருந்த ஜோசப் விஜூ அண்ணா உற்சாகமாக எழுந்து தன்னை என்னிடம் அறிமுகம் செய்துகொண்டார். அதுக்கு அப்புறம் விஜூ அண்ணா  நாலு முழு வாக்கியங்கள் பேசினார்!!!!!!!!! அதற்கு நான் கிட்டத்தட்ட நாற்பது வாக்கியங்கள் பேசி வாயில் இருந்து வார்த்தைகள் வாங்குவதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு.  இப்போ தெரியுது அவர் பதிவுகள் எப்படி அவ்ளோ ஆழமாய் இருக்குனு. 

                   மொத்தத்தில் நிலவன் அண்ணா தயவால் புதுகையிலேயே ஒரு மினி பதிவர் சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியாய் அரங்கேறியது. என்ன இளமதி மற்றும் இனியாவை ரொம்ப மிஸ் செய்தோம்.

படங்கள் தமிழ் இளங்கோ அய்யா அவர்களின் தளத்தில் இருந்து சுட்டவை.

56 கருத்துகள்:

 1. ஆஹா வழக்கம் போல் கலக்கிட்டம்மா..அன்பான நட்புகள் சூழ வாழ்வது வரமே..நான் வரம் பெற்றவளாக உங்கள் மத்தியில்...கிரேஸின் அன்பு களங்கமற்ற நீரோடையாய் மனதில் சலசலக்கின்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா ,இது என்ன இத்தனை நெகிழ்ச்சியை ஒரு பின்னூட்டம்:)) மிக்க நன்றி அக்கா!

   நீக்கு
  2. உங்களை எல்லாம் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி மைதிலி..என்னை அன்புடன் வரவேற்று நன்கு கவனித்து அனுப்பி வைத்தீர்கள் நீங்கள், கஸ்தூரி அண்ணா, நிலவன் அண்ணா,அண்ணி மற்றும் கீதா. ஜெயகுமார் அண்ணா, ஸ்டாலின் சகோ மற்றும் உங்கள் ஊர் பதிவர்களையும் நட்புகளையும் சந்தித்தது மகிழ்ச்சி. நிறையும் மகியும் ரொம்ப ஸ்வீட் குட்டீஸ்..

   நீக்கு
  3. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நீங்க இங்கேயும் வாங்க நல்ல உபசரிப்பு செய்து அனுப்புகிறேன்,,, சரி சரி பயப்படாதீங்க பூரிக்கட்டை உபசரிப்பு உங்களுக்கு கிடையாது

   நீக்கு
  4. வரேனே.. பூரிக்கட்டை உபசரிப்பு நல்லா இருக்குமே, பூரியும் கிழங்கும்தானே சொல்றீங்க :)

   நீக்கு
 2. உங்கள் அண்ணனின் அடுத்த புத்தக வெளியிடு அமெரிக்காவில்தான் இருக்க வேண்டும் சொல்லிப்புட்டேன் அதைவிட்டு விட்டு ஊருக்குள்ளே வைத்து வெளியிட்டு அண்ணன் தங்கையுமாக ஆட்டம் இட்டுக் கொண்டிருக்கீறீர்கள் அது சரியல்ல சொல்லிபுட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க புத்தகம் வெளியிடுங்க சகா , அப்படியே ரெண்டு டிக்கெட் (எனக்கும், கஸ்தூரிக்கும்) போட்டு அனுப்பிடிங்கன்ன உடனே வந்து விழாவை சிறப்பித்துவிடுகிறோம்:)

   நீக்கு
 3. உங்கள் அண்ணனின் புத்தக வெளியிட்டு விழாவில் நடிகை சரிதா அவர்கள்தான் கலந்து கொண்டார் என் சிறிது நினைத்தேன் ஆனால் அவருக்குதான் அதிகம் வயதாகி இருக்குமே நிச்சயம் சரிதாவாக இருக்காது என்று பார்த்தால் அந்த 'தங்கமங்கை' நீங்கதான் என அறிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலாய்ச்சுட்டாரமா____ ஓகே.நாளைக்கு சிரிக்கவா???

   நீக்கு
  2. சொல்ல மறந்துட்டேன் சகா, சரிதா அளவு எனக்கு இனிய குரல் வளம் இல்லை...இல்லை...இல்லை:)))

   நீக்கு
 4. உங்கள் அண்ணனின் புத்தக வெளியிட்டு விழாவில அமிர்தாப்பச்சந்தான் தமிழர் வேடம் போட்டு வந்திருக்கிறார் என்று பார்த்தால் அது உங்கள் கணவர் மது என்று அறிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் ஒரு நல்ல கண்மருத்துவரை பார்க்க பரிந்துரைக்கபடுகிரீர்கள். அமிதாப் என்ன கஸ்தூரி அளவுக்கு கலையாவா இருக்காரு?????

   நீக்கு
 5. பல பதிவர்களுக்கு பட்ட பெயர் உண்டு அது போல

  இன்று முதல் உங்கள் கணவர் மதுவிற்கு "தங்கமகன்" என்ற பட்ட பெயரையும் உங்களுக்கு தங்கமங்கை என்ற பட்டப் பெயரையும் வழங்குகிறேன். இனிமேல் மற்ற பதிவர்களும் அப்படிதான் அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் இடுகிறேன்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படா! கொஞ்சம் நிறைய jewels போட்டுகிட்டதுக்கு இப்போதான் பலன் கிடைச்சுருக்கு. all பீபுள் நோட் பண்ணிக்கங்க:)

   நீக்கு
 6. புகைப்படம் எல்லாம் போட்டுக் கலக்கீட்டீங்க, மைதிலி! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வருண்:) ஆனா பதிவை பற்றி ஒண்ணுமே சொல்லலையே:(

   நீக்கு
  2. இங்கே Monday morning! அவசரமாக ஒரு பின்னூட்டம் எழுதிவிட்டு வேலை செய்யலாம்னு போனேன். விடமாட்டீங்களே? ::)
   ---------------------
   ஃபேமிலி கெட் டுகெதெர் மாதிரி இருக்கு மைதிலி. நாடுவிட்டு நாடு போய்விட்டதால் நான் ஏதோ ஒரு அன்னியன் போல்தான் உணர்வு வருது.

   மகி, நிறை, மது, கிரேஸ், அவர் கணவர், உங்களை எல்லாம் படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி! நிலவன் அவர்கள் ஃபேமிலி மெம்பர்கள் படங்களும் இப்போத்தான் பார்க்கிறேன். மற்ற அனைவருடைய படங்களும் ஏற்கனவே பார்த்து இருக்கேன்னு நினைக்கிறேன் (பதிவர் சந்திப்புப் படங்களில்).

   "குடும்பப் பதிவு" என்பதால் வேறெதுவும் விமர்சிக்கத் தோனவில்லை!

   இனியாவும், இளமதியும் இந்த கெட்-டுகெதர்ல இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைதான்!

   உங்கள் விஜு அண்ணா ரொம்பப் பேசமாட்டார்னு நான் நினைக்கவில்லை! ஊமைக்கனவுகள் என்று எழுதுவதால்..it does make sense. எல்லாவற்றையும் கவிதைவடிவில் பேசிவிடுவதால் இங்கு பேச வார்த்தைகளுக்குப் பற்றாக்குறையாக இருக்கலாம்.

   நான் எல்லாம் பொதுவா யாரையும் பேசவிடமாட்டேன். :)))) எனக்குப் பேசத்தான் பிடிக்கும், கேக்கப் பிடிக்காது! :)))

   நீக்கு
  3. நல்லதா போச்சு வருண் நீங்க போகாதது. ஏனா... நீங்க பேச விட்டிருக்க மாட்டீங்க இல்ல யாரையும் அதான்.

   நீக்கு
  4. இங்க என்ன flip cart sale லயா பதிவுபண்ண போறீங்க:)) உடனே கமெண்ட் போட்டனும்னு என்ன அவசியம். டைம் கிடைக்கும் போது வந்து பொறுமையா, உங்க வழக்கமான பாணியில் கூட பின்னூட்டம் இடலாம். ஆனா this blog wont entertain such a short comment from one of its sweetest friends:)
   --------------------------------------
   வருஷம் முழுக்க புதுகையில் விழாக்களுக்கு பஞ்சம் இருக்காது வருண். இங்க பதிவர்கள் எல்லோருமே குடும்ப நண்பர்கள் தான்.so நீங்க இங்க வரும் போது அப்டி ஒரு family கெட்-டு-கெதர் இல்லாமையா போகபோது (இப்போ கூட உங்க அட்ரெஸ் எல்லாம் கேட்கலை:)
   ______
   விஜூ அண்ணா பத்தி சொன்னது fact தான்:) அப்புறம் சாரி உங்க monday scheduleளை டிஸ்டர்ப் பண்ணுனதுக்கு:((
   have a great week Varun:))

   நீக்கு
 7. நாலு முழு வாக்கியங்கள் பேசிவிட்டேனா!
  அடடா கொஞ்சம் கூடப்போயிடுச்சோ..?!
  கலாய்ப்பதற்கு அளவில்லையா...?!
  எப்படியோ ஊமையைப் பேசவைத்து விட்டீர்கள்.
  உண்மையில் கூட்டத்தைப் பார்த்து அதிசயித்துப் போய்விட்டேன்.
  மது அவர்களைப் பார்ப்பது இது இரண்டாவது முறை !
  முதல் முறை பார்த்த போது அவரைப் பற்றித் தெரியாததால் அதிகம் பேச வில்லை.
  இரண்டாம் முறை பார்த்த போது அதிகம் தெரிந்ததால் பேசமுடியவில்லை.
  உங்களைக் குறித்து நண்பர்களிடம் ( ஒரு நாலுபேர் இருப்பாங்க அவ்வளவுதான்) நிறைய பேசி இருக்கிறேன். கொஞ்சம் முன்னதாக வந்திருக்க வேண்டும்.
  முத்துநிலவன் அய்யாவின் புத்தகவெளியீட்டு விழாவிற்காக வருவது கடைசி நேரம் வரை உறுதிப்படுத்த முடியாததாகத்தான் இருந்தது.
  வந்ததும் உங்களையெல்லாம் பார்த்ததும் மகிழ்ச்சிதான்!
  இப்போது உங்களின் பதிவுகள் நேற்றில் மீண்டும் கொண்டென்னை இருத்துகின்றன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலு முழு வாக்கியங்கள் பேசிவிட்டேனா!
   அடடா கொஞ்சம் கூடப்போயிடுச்சோ..?!***
   அண்ணா உங்கள் இனிய புன்னகையோடு இந்தவரிகளை படிக்கமுடிகிறது:)))
   கலாய்ப்பதற்கு அளவில்லையா...?!** நம்ம அண்ணா தானே என்கிற உரிமைதான்:)
   இரண்டாம் முறை பார்த்த போது அதிகம் தெரிந்ததால் பேசமுடியவில்லை.**எப்டி னா!!! செம!! நானெல்லாம் பேசிப்பேசி ஓய்கிற ஆள்:((( அப்டி பார்த்த உங்க முன்னாடி நான் ஒரு வார்த்தை பேசியிருக்க கூடாது:)
   நிறைய பேசி இருக்கிறேன்.** அப்படியா!!! பேசுனேன் சொல்லுங்க நம்புறேன், ஆன நிறைய!! ஓகே இத்தோட கலாய்க்கிறதா நிறுத்திக்கிறேன். சாரி அண்ணா! மிக்க நன்றி!
   ஆமாம் அண்ணா! உங்களையும், மணவை அய்யாவையும் நானும் கஸ்தூரியும் மீண்டும் ஒருமுறை பார்க்கையில் சரியாக உபசரிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை :) மீண்டும் சிந்திப்போம் அண்ணா!

   நீக்கு
  2. சகோதரி கலாய்க்காவிட்டால் பின்யார் கலாய்க்க..?!
   ம்ம்!
   தொடருங்கள்!
   நிறுத்திவிட்டீர்கள் என்றால் அப்புறம் உங்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வதாம்?!
   நிச்சயமாய் வருந்தவில்லை.
   நீங்கள் தவறாக நினைத்துக்கொள்ளதீர்கள்!
   தொடர்வீர்கள்தானே!
   நன்றி!

   நீக்கு
  3. விஜூ அண்ணாவைப் பார்க்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்..மதுரையில் சந்திப்போம் என்று நினைக்கிறேன்

   நீக்கு
  4. அம்மு நானும் வந்திருந்தால் உங்க விஜுஅண்ணாவை இன்னும் கல்லாய்ச்சிருக்கலாம் இல்ல அம்மு. ம்..ம்..ம்.. அய்யய்யோ சகோதரர் கோவிக்கப் போகிறார் அம்மு எஸ்கேப்.

   நீக்கு
  5. அண்ணா ,
   ஒரு வலைப்பூவில் படித்தேன்.
   ** தண்ணியை வச்சி மோர் னு எழுதி இருந்தாலே நாங்க மொண்டு

   மொண்டு குடிப்போம்.. தாளிச்சு வச்சா குடிக்க மாட்டோமா..? **
   வாலன்டரியா வந்து உங்கள கலாய்க்க சொல்லிருகீங்க :) நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா:))))))))

   நீக்கு
  6. ஹப்ப்பா சகோதரி மைதிலி விஜு ஆசான் பற்றி இத்தனையாவது தெரிஉந்து கொண்டோமே! தங்கள் பதிவின் மூலம், திரு மணம்வை ஜேம்ஸ் அவர்களின் பதிவின் மூலம்!!! மிக்க நன்றி!

   நீக்கு
 8. ஹையோ!.. இத்தனை அமர்களமாவா உங்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்கு!
  கேட்க மகிழ்ச்சி தாங்கலை மா!..

  படம் போட்டிருக்கீங்க யார் யாருன்னு எல்லாரையும் தெரியலயே...

  இடமிருந்து வலம் இல்லை வலமிருந்து இடம் என்றாவது சொல்லியிருக்கலாம்... சரி ஊகிச்சுக்குவோம்!...:)

  விழா சிறப்பாக நடை பெற்றிருக்கும்!
  இதற்குள் என்னையும் நினைத்தீர்களே உங்கள் அன்பு கண்டு உள்ளம் நெக்குருகிப்போனேன் மா! இன்னொரு முறை இப்படிக் கிட்டாமலா போகும்!
  நான் அங்கு வந்து உங்களையெல்லாம் நிச்சயம் பார்ப்பேன்!..
  காலம் வரட்டும்!

  அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ இப்பவே பெயர்களை சேர்த்துவிடுகிறேன் தோழி:))
   நான் அங்கு வந்து உங்களையெல்லாம் நிச்சயம் பார்ப்பேன்!..
   காலம் வரட்டும் என நானும் காத்திருக்கிறேன் தோழி!!

   நீக்கு
 9. அம்மு வாயடைத்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன் சில நிமிடங்கள் என்னால் என்ன சொல்வதென்றே புரியவில்லை. தங்கள் அன்பில் உருகி கண்ணீர் பெருகியது. அந்த மகிழ்சிகரமான சந்தர்பத்திலும் எங்களை மறக்கவில்லை என்பதை நினைக்கும் போது நாம் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இப்படி ஒரு நட்பு வட்டம் கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியமே. இந்த மகிழ்சிகரமான நேரத்தில் இல்லாமல் போனதை இட்டு மிகவும் மிகவும் மனம் வருத்துகிறேன். நாம் சீக்கிரம் சந்திக்க ஆண்டவன் அருள் புரிவானாக.
  புகைப் படத்தில் அனைவரையும் பார்த்தது நேரில் கண்ட திருப்தியே. அதிலும் என் அம்முகுட்டியையும் பிள்ளைகளையும் பர்த்ததில் பரம சந்தோஷம். பிள்ளைகள் so cute கோவிக்காதம்மா என் அம்முவும் மங்களகரமான சேலையில் அமர்க்களமாகவே இருந்தீங்க செல்லம் கிரேஸ்சும் உண்மையில் கிரேஸ் புல் ஆகத் தான் இருக்கிறார். முகம் தெரியாத போதே இத்தனை அன்பு நமக்குள். இப்பொழுது இன்னமும் கூடி விட்டதே.ஹா ஹா ...
  சகோதரர் நிலவன் அண்ணா அண்ணி ,தோழி கீதா ,சகோதரர் மது, கரந்தை ஜெயா அண்ணா எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். இந்தப் பதிவில் அருகில் இருந்தது மாதிரியே பீல் பண்ணுகிறேன். நிகழ்ச்சி களை கட்டியமைக்கும் சிறப்பாக நடந்தமைக்கும் என் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள மறக்க முடியுமா செல்லம்:)
   மஞ்சள் கட்டினால் மங்களமா!! ஓகே டா. ரொம்ப thanks:))
   காலம் வரட்டும் சீக்கிரம் சந்திப்போம்:))

   நீக்கு
 10. இதென்ன, மதுரை பதிவர் விழாவிற்கான முன்னோட்டமா!!!

  கலக்குங்க!! வாழ்த்துக்கள். விழாவைப் பற்றி எழுதாம தப்பிச்சுட்டீங்க!!! கில்லாடி தான் சகோ நீங்க. உங்க கிட்டே இருந்து நான் ஆங்கிலத்தை தான் கத்துக்கணும்னு நினைச்சா, இந்த மாதிரி தில்லாலங்கடி வேலைகளையும் கத்துக்கணும் போலயே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. (இவரு மட்டும் எப்படி தான் மேட்டரை கரக்டா கண்டுபுடிகிறார்:((

   வாங்க சகோ!! நீங்க வந்தது ரொம்ப சந்தோசம். அப்புறம் ஒரு விஷயம் என் மைன்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்கலை தானே:))

   நீக்கு
 11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிவில் நீங்கள் சொன்னது சரி... அன்று மதுரையில் முடிக்க வேண்டிய பல வேலைகள் இருந்தன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா வை பற்றி தெரியாதா? நேரம் வாய்த்தால் நிச்சயம் வந்திருப்பீர்களே:)) மிக நன்றி !!

   நீக்கு
 12. மிக்க மகிழ்சி சகோ, வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. சிறப்பாக புத்தகவெளியீட்டுவிழா நன்றாக நடைபெற்றிருக்கின்றது. உங்கள் அனைவரது முகத்தில் தெரிகிறது. படத்தில் காண்பதையிட்டு சந்தோஷம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. றப்பாக புத்தகவெளியீட்டுவிழா நன்றாக நடைபெற்றிருக்கின்றது. உங்கள் அனைவரது முகத்தில் தெரிகிறது.** அப்படியா??? மிக்க மகிழ்ச்சி தோழி!!


   நன்றி தோழி!!

   நீக்கு
 14. அட மினின்னு ஒரு பெரிய பதிவர் சந்திப்பையே தான் நடத்தி இருக்கீங்க. சென்னை தவிர்த்து மற்ற இடங்களிலும் இதுபோல் சந்திப்பு நடப்பது சந்தோசமாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க பதிவர்களாக ஆவதற்கு முன்னரே இப்படி சந்தித்துகொள்வது வழக்கம் தான் சகோ!! நீங்களும் மகிழ்ச்சி அடைவது மகிழ்ச்சி!!

   நீக்கு
 15. மணவை ஜேம்ஸ் அவர்களின் வலைப்பூவினை படித்த போது எழுந்த எண்ணமே இங்கும்...

  உங்களுடன் என்னால் அங்கிருக்க முடியவில்லையே !

  இதனை நான் வார்த்தைகளுக்காக சொல்லவில்லை சகோதரி, அந்த சமயத்தில் இந்தியாவில் இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன் !

  ஆனாலும் உங்களின் பதிவுகளையெல்லாம் படித்தபோது அந்த குறை நீங்கிவிட்டது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா,
   முதலில் தாமத பதிலுக்கு என்னை மன்னியுங்கள். புத்தகம் முன்பே திட்டமிட்டபடி வெளியிடபட்டிருந்தால் நீங்கள் அந்த விழாவிற்கு வந்திருக்க முடியும் அல்லவா? அது எனக்குமே வருத்தமாகத்தான் இருக்கிறது அண்ணா! மீண்டும் நீங்கள் இந்தியா வருகையில் அவசியம் அனைவரும் சிந்திப்போம் அண்ணா!

   நீக்கு
 16. நேற்றே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன். இருந்தும் உடன் உங்கள் பதிவின் பக்கம் கருத்துரை எழுத இயலாமல் போய்விட்டது.

  நேர்முக வர்ணனை போன்று சுவைபட எழுதி இருக்கிறீர்கள். பதிவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து உள்ள மகிழ்நிறைவுடன் உரையாடியது மகிழ்ச்சியான தருணம்தான். மணவை ஜேம்ஸ் அங்கிருந்தும் என்னால் அவரை சந்திக்க இயலாமல் போய்விட்டது.
  த.ம.5 (உங்கள் பதிவில் மட்டும் தமிழ்மணம் ஓட்டு எண் சரியாகத் தெரிவதில்லை. ஏன் என்று தெரியவில்லை)


  பதிலளிநீக்கு
 17. முதலில் வாழ்த்துக்கள்! கவிஞர் முத்துனிலவன் ஐயாவிற்கு!

  சகோதரி மைதிலி மிக்க நன்றி தங்களையும், நண்பர் மதுவையும், க்ரேஸ் அவர்களையும், குட்டிச் சுட்டியையும் காண முடிந்ததற்கு! மிக்க நன்றி! நல்ல அருமையான ஒரு சந்திப்பு! மிஸ்ஸிங்க் இட்!

  பதிலளிநீக்கு
 18. விஜு ஆசான் இருக்கின்றாரா? புகைப்படத்தில்?

  பதிலளிநீக்கு
 19. முத்து நிலவன் ஐயா புத்தக வெளியீட்டில் நட்பின் சந்திப்புக்கள்...
  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 20. அப்போதே படித்துவிட்டு, பதிலிடாமல் என் பக்கத்தில் மட்டும் பகிர்ந்துவிட்டேன். உண்மையில் இதுபோலும் நண்பர்களைச் சந்திப்பதுதானே நெகிழ்வும் மகிழ்வும் கலந்துகட்டி அடிக்கிறது? அந்த உணர்வை அப்படியே பதிவில் கொண்டு வந்துவிட்டாய்மா. எல்லாரிடமும் தனித்தனியே இருந்து அமர்ந்து நெடுநேரம் பேசநினைத்தும் முடியாத சூழல்... ம்...? சரி..அதற்கென்ன மதுரையில் முழுநாளும் உட்கார்ந்து பேசித் தள்ளிவிட வேண்டியதுதான். கிரேஸ் வந்து நம்மோடு கலந்துகொண்டதுதான் சிறப்பு. நீ சொன்னதுபோல டிடிஅய்யா, இனியா, இளமதி போன்றவர்களும் -உண்மைத்தமிழனும், வருணும் என இந்தப் பதிவையே பின்னூட்டங்களால் கலக்கியிருக்கும் அனைத்து நண்பர்களும் எப்போது சந்திப்பது என்னும் ஏக்கத்தினை ஏற்படுத்தி விடடார்கள். பார்க்கலாம் மதுரைக்கு வந்த சோதனையை1க நன்றிடா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் பார்க்க ஆசைப்படும் அந்த நால்வருமே மதுரைக்கு வரமுடியாத அயல்தேசத்து அன்பு இதயங்கள் அண்ணா!

   நீக்கு
 21. சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி. வர நினைத்தும் தவிர்க்க இயலாத காரணத்தால் வர இயலவில்லை. எல்லாரையும் சந்திக்கும் வாய்ப்பை விட்டுட்டேனே :(

  பதிலளிநீக்கு