வியாழன், 17 செப்டம்பர், 2015

சிற்பமே உன்னை செதுக்கிக்கொள்!

 

                 அது காலைநேர சாலை. உங்கள் அகநுட்ப விழியால் பார்க்கமுடிந்தால் புலப்படக்கூடும் ராக்கெட்டுகளை போல சைலன்சர்களில் புகையோடு நெருப்பும் கக்கும் வாகனங்களை. அந்த சாலையில் ஒரு ஆண் தன்னை முந்திச்செல்கையில், அவர் பணி, அவர் அவசரம் என பெரும்போக்காய் விட்டுவிடும் ஆண்கள், முந்தியது பெண் என்றால் அவளுக்கு ஒரு அடியேனும் முன்னே செல்லும்வரை அமைதியிழந்து போகிறார்கள். ஒரு சாலையில் ஒரு நொடிகூட தனக்கு முன்னே ஒரு பெண் செல்ல அனுமதிக்காத எத்தனையோ ஆண் ஈகோக்களை கடந்தே விரைந்துகொண்டிருக்கிறது  எங்கள் வண்டிகள்!
             

                  
                                
நிஜப்போராளி இரோம்!


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!   

என்று பாரதி கும்மி கொட்டிகொண்டிருக்க, ஒளி ஊடங்கங்களும், வெள்ளித்திரையும் பெண்களை வைத்து கொட்டும் கும்மிகள் இருக்கிறதே!! அப்பப்பா!! கருப்பு நிறத்தழகி என்று அடைமொழியோடு காட்டப்படுகிற கதாநாயகிகள், வள்ளுவன் சொன்னது போல் தெய்வம் தொழாமல் குடிகார கணவனை தொழும் பதிபக்கி,,,, மன்னிக்க பதிபக்தி மிக்க பத்மினி தெய்வங்களாக, மறுபடியும் மன்னியுங்கள், பத்தினி தெய்வங்களாக இருக்கிறார்கள்! போராளியாக காட்டப்படுகிற பெண்கள் கூட புருவம் திருத்தி, மஸ்காரா போட்டு மயக்குகிறார்கள். (நீங்க மேதா பட்கர், தீஸ்தா செதல்வாட், இரோம் சர்மிளா, ஆங் சாங் சூகியை எல்லாம் பார்த்ததே இல்லையா இயக்குனர்களே) அதிசயிக்கத்தக்க விதமாக ஒப்பனையற்ற போராளி ஒருத்தியும் அறிமுகப்படுத்தப்பட்டால், அவள் அடுத்த காட்சியிலேயே கதாநாயகனாலேயே துகிலுரித்துக்காட்டப்படுகிறாள்!!!! 
            
     
      
காலங்காலமாய் சிவப்பழகு களிம்பு பூசியபின் தான் தன்னம்பிக்கை பெறுகிறார்கள் விளம்பர நங்கைகள்! முன்பெல்லாம் வாசனைத்திரவியங்கள் பூசிய ஆண்களிடம் மயங்கி ஒட்டிய பெண்கள், இப்போதெல்லாம் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் இளைஞனை கண்டவுடன் மணப்பெண் என்பதை கூட மறந்து அவன் பின்செல்கிறார்கள். அந்த புதுரக செல்பேசியில் தன்னை கதாநாயகன் புகைப்படம் எடுக்காத காரணத்தால், நீரூற்றுக்குள் தாவி தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது விளம்பர உலகில் பெண் நிலை என்றால், பெண்களுக்காக பெண்களே, பெண்களை மையப்படுத்தி எடுக்கும் நெடுந்தொடர்களை போல பெண்களை கேவலபடுத்த, மனுதர்மமே வாழ்வென்று வாழும் ஆண்கள் சிலரால் கூட முடியாது!          
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து விடுதல் முயற்கொம்பே என்ற பாரதிதாசனின் சொற்கள் இந்த சின்னத்திரைக்கு எப்படிப்புரிந்ததோ!! கதாநாயகிகள் புடவையில் தான் இருப்பார்கள். வில்லிகள் சுடிதார் போடலாம்.அப்பாவியாக இருக்கும் ஆண்கள் மனைவியை வாங்க போங்க என மரியாதையாக நடத்துவார்கள். அவர்களே ஆண்மை மிடுக்கை பெற்றபின் மனைவியை அடித்து, ஆண்மையை நிரூபிப்பார்கள். ஆனால் கணவன் தீயவழியில் செல்பவன் என்றால், மனைவி அவனை திருத்த, விரதம் இருக்கலாம், மண்சோறு சாப்பிடலாம், கை ஓங்குதல் என்ன, குரலைக்கூட உயர்த்த முடியாது!

   
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் என்றெல்லாம் பாரதி மெய்சிலிர்த்துக் கொள்கிறார். ஆனால் மாநிலத்தின் மாண்புமிக முதல்வரே கூட பெண் என்பதால், மேன்மைதாங்கிய பிரதமருடன் அரைமணிநேரம் பேசுகிற வேளையில், ஆணும் பெண்ணும் மூடிய அறைக்குள் என்ன பேசினார்கள் எனும் வக்கிர புத்திக்காரர்களிடம் பட்டம் வாங்கவேண்டிய நிலை தான் இன்று!                எங்கிருந்தாலும் வாழ்க!! அவள் இதயம் அமைதியில் வாழ்க!! என கண்ணதாசன் தன்னை கைவிட்ட காதலியை வாழ்த்தியதெல்லாம் அந்தகாலம். அடிடா அவள!!! உதடா அவள! வெட்ற அவள! அவ தேவையே இல்லை என கதாநாயகர்கள் உசுப்பேத்த சூடுபறக்கின்றன ஆசிட் ரணங்கள்! மேற்கத்திய ஆடைகளால் பெண்கள் ஆண்களை திசைதிருப்புகிறார்கள் எனும் குற்றசாட்டை எப்படி ஏற்பது பத்துவயதுக்கும் குறைவான சிறுமிகள் சீரழிந்து மாள்கையில். வன்புணர்வுகளுக்கு குறையாமல் செய்திதாள்களில் இடம்பிடிகின்றன கௌரவகொலைகள்!

 “முதலில் உங்கள் பெண்களுக்குக் கல்வி அளியுங்கள். பிறகு என்னென்ன  சீர்திருத்தங்கள் தங்களுக்குத் தேவை என்பதை அவர்களே கூறுவார்கள்” என்கிறார்  சுவாமி விவேகானந்தர். நண்பர்களே! பெண்ணை தாயாக போற்றும் ஆண்களுக்கு என் வணக்கம். நான் அப்படித்தான், நீ சொல்லித் திருத்திக்கொள்ள மாட்டேன் என்பவர்களுக்கு உங்கள் நேர்மைக்கு என் நன்றி! சொல்லுங்கள் சகோதரி, தோழி! என்னால் இயன்றதை செய்ய முயல்கிறேன் என்பர்களுக்கு என் செய்தி "பெண்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தரவேண்டாம். அவர்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்களே கையாளட்டும். அவர்கள் உங்களை விட உயர்ந்தவர்களும் அல்லர். உங்களுக்கு இணையானவர்கள் பெண்கள்.


பெண்களுக்கும் ஒரு செய்தி உண்டு. தோழிகளே!  திருமணத்திற்கு முன் தாஜ்மஹால் தூணை போல இருந்த என் மனைவி இப்போது தாஜ்மகால் போலவே மாறிவிட்டாள் என நிலைதகவல் இடுவது ஆண்கள் பிழையல்ல. ரெண்டுபிள்ளை பெற்றபின்பு எப்படி இருந்தால் என்ன ? என உடலை மட்டுமா கவனிக்க மறுக்கிறீர்கள்! குடும்பத்துக்கே நேரம் சரியாய் இருக்கிறது என்று உங்கள் அத்தனை ஆர்வங்களும் குழிதோண்டி புதைக்கிறீர்கள். எடை கூடுகிறது, உலக அறிவு குறைகிறது. இந்த தியாகிப்பட்டங்கள் காலாவதியாகத் தொடங்கிவிட்டன. சோம்பலை உதறி, சுடர்விட்டு எழுக!

யுவதியான தங்கைகளுக்கு ! கண்ணுக்கு மையெழுதி, குழல் வளர்த்து, வளையணிந்து வலம் வருதல் ஆண்களை கவரும் பிற்போக்குத்தனம் எனும் பெரியாரியம் பேசுகிறவர்களுக்கு என் பாராட்டுக்கள்! ஆனால் அதற்கு சற்றும் குறையாதது மட்டுமல்ல, அதைவிட கீழ்மையான ஒன்று இருக்கிறது. அது தன் அறிவால், சிந்தனையால், செயலால் அன்றி ஆடையால் ஆண்களை கவரும் அவலம். குறைந்த ஆடைகள் வளர்ந்த நாகரிகம் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அது ஆதிமனிதனின் வாழ்வியலை நம் சக உயிரான ஆண்களுக்கு நினைவு படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்! நீங்கள் ஏவாளின் பேத்திகளாய் உடுத்தினால் அவர்கள் ஆதாமின் பேரன்கள் என்பது நினைவுவராதா?அற்பங்கள் தவிர்த்து- பெண்
சிற்பமே உன்னை செதுக்கிக்கொள் !!

பின்குறிப்பு:
 இந்த கட்டுரையை என்றெழுத காரணமாய், எனக்கு சிந்திக்க சிறகுதந்த அப்பாவுக்கும், ஆசானுக்கும், அன்பு கஸ்தூரிக்கும், மைதிலி என்பவள் மைதிலி மட்டுமே என உணர்த்திக்கொண்டிருக்கும் சகோக்களுக்கும், சகாக்களுக்கும் என் நன்றிகள்!


யுகயுகமாய் இருள்குடித்து, இருள் உண்டு, இருள் உடுத்தி, இருள் வாழ்ந்த பெண்மைக்கு ஒளிதந்த பகுத்தறிவுப்பகலவன் பெரியாரின் பிறந்தநாளில் இந்தகட்டுரையை சமர்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!!


வலைப்பதிவர் திருவிழா-2015

மற்றும்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

நடத்தும்

மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது.(வகை 3) பெண்கள் முன்னேற்றம்

இதற்கு முன் வெளியான படைப்பல்ல, மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.

55 கருத்துகள்:

 1. பெண்மை வெல்க!..

  சிறப்பாக இருகின்றது.. நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 2. நன்றி...

  நம் தளத்தில் இணைத்து விடுகிறேன்...

  மேலும் தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள சகோதரி,

  பெண்ணியம் பற்றிய சிந்தனைக் கட்டுரை நன்று. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  த.ம. 3.

  பதிலளிநீக்கு
 4. அருமை
  வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 6. முழுவதும்படிக்க நேரமில்லை..வேலைக்கு சென்று வந்து படித்து பாராட்டுகிறேன்...பாவம் கஷ்டப்பட்டு எழுதி இருக்கீங்க அதனால கலாய்க்க மனது இல்லை.

  பதிலளிநீக்கு
 7. பழைய பேனரை போடவும் அது கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது, இந்த பெரியார் பட கருத்தை சைடில் போடவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியார் படம் மாற்றுகையில் அந்த வயல்வெளியை எங்கோ தொலைத்து விட்டேன் சகா:)

   நீக்கு
 8. சிறப்பான கட்டுரை....

  போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. உள்ளந் தொட்ட அதி அற்புதமான கட்டுரை தோழி!

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 10. பெண் சமத்துவம் மிளிர நீங்கள் வேறொன்றும் செய்ய வேண்டாம் . அவர்கள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கிக் கொண்டு கல்வியைக் கொடுங்கள் போதும் என்று சொன்ன பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பிறந்தநாளில் பதிவிட்டுள்ள பெண்ணியக் கட்டுரை மிகப் பொருத்தமானது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டுரை அருமையாக இருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

   நீக்கு
  2. அய்யாவை இங்கே முதன்முதலாய் பார்த்தது மிக்க மகிழ்ச்சி!! மிக்க நன்றி அய்யா!

   நன்றி நேசன் சகோ!

   நீக்கு
 11. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், மைதிலி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வருண்:) கட்டுரையைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே!!! மொக்கையா இருக்கோ!!

   நீக்கு
 12. முதலில் சொல்லியிருப்பது ஆயிரம் சதவிகிதம் உண்மை! எனக்குத் தெரிந்த பெண் காரோட்டினாள் என்பதற்காகவே காரை உரசுவது போலப் பக்கத்திலேயே முறைத்துக் கொண்டே வந்திருக்கிறான் ஒரு ஆட்டோக்காரன். நிதானமிழக்காமல் எப்படியோ காரை ஓட்டிக்கொண்டே போலிஸ் ஸ்டேசன் சென்றுவிடலாம் என்று நினைத்துப் போய்க்கொண்டிருந்த வேளை ஆட்டோ ஒரு திருப்பத்தில் நிலைதடுமாறி சாய்ந்துவிட்டதாம். கேட்கும் பொழுது எப்படி இருந்தது தெரியுமா!!
  //பதிபக்கி// ஹாஹா நல்லா சிரிச்சாச்சு! நம் படங்கள் ஒன்று கூட பிடிக்காமல் போகிறது பத்தினித் தெய்வங்களால்! பாடல்கள் கூட மைதிலி..
  எல்லோருக்கும் செய்தி சொல்லி அருமையாய் முடித்திருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள் டியர்!

  பெரியார் பிறந்த தினத்தன்று வெளியிட்டது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் தினம் இதுபோல ரகம்ரகமாய் மனிதர்களை சந்திக்கிறேன் டியர்!! இன்டிக்கேட்டர் போடாமல் ஆண் திரும்பலாம், sudden break போட்டு நாம் நிறுத்தினாலும் இந்த பொண்ணுங்க வண்டியோட்ட வந்து ரோட்டில் கூட நம்ம நிம்மதி போச்சி என அங்கலாய்த்துகொள்வார்கள்:((

   *எல்லோருக்கும் செய்தி சொல்லி அருமையாய் முடித்திருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள் டியர்!* மிக்க நன்றி டியர்!!:)

   நீக்கு
  2. ஆமாம், தன் திறமையில் இருக்கும் நம்பிக்கையைவிட சில ஆண்களுக்கு பெண்களின் திறமையில் பொறாமையும் அதனால் வெறுப்பும் வருவது அதிகம்..என்ன செய்வது...

   நீக்கு
 13. அருமை. இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டோம் என்று மறுக்கக் கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. இது போன்ற அபத்த விளம்பரங்களைக் கண்டாலே எரிச்சல்தான் வரும்.

  த ம ​+1

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கு போட்டியா கட்டுரை பாதி எழுதிவிட்டேன் ஆனால் அது போட்டிக்கு அனுப்ப அல்ல என் தளத்திற்கு மட்டுமே

  பதிலளிநீக்கு
 15. இன்றைய கல்வி பெண்களை அவர்களின் சுயம் சுதந்திரம் பற்றி சிந்திக்க வைப்பது கிஞ்சித்து தான். வீட்டைத் தாண்டி உங்களைப்போல் சிந்திப்போர் குறைவு என்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. "பெண்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தரவேண்டாம். அவர்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்களே கையாளட்டும். அவர்கள் உங்களை விட உயர்ந்தவர்களும் அல்லர். உங்களுக்கு இணையானவர்கள் பெண்கள்.

  இந்த தியாகிப்பட்டங்கள் காலாவதியாகத் தொடங்கிவிட்டன. சோம்பலை உதறி, சுடர்விட்டு எழுக! எத்தனை உண்மை இல்ல அம்மு ....wow

  ஆஹா அம்மு! நல்ல கருத்துக்கள் எல்லாம் முன் வைத் துள்ளீர்கள் நன்று நன்று நகைசுவையோடு சீரியஸ்சும் கலந்து அசத்தி விட்டீர்கள். வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மு ...!

  பதிலளிநீக்கு
 17. ஹாய் குட்டிம்மா! என்னை ஸ்பீட்டு சொல்லிட்டு நானும் முதல் முயற்சியா கட்டுரையை தயார் செய்து முடிப்பதற்குள் நீங்க வெளியிட்டாச்சி... அசத்தல் வாழ்த்துக்கள் டா.
  நானும் விரைவில் பதிவிடுகிறேன். உங்களவுக்கு இருக்குமா படித்து சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 18. பெண்மனம் குறித்த பல கருத்துகளையும் எண்ணங்களையும் ஒருபக்கமிருந்து பேசாமல் ஒரேநோக்காகப் பார்க்காமல், நாளா பக்கங்களிலிருந்தும் நோக்கி பல்பரிமாணங்களில் அலசியமை பாராட்டுக்குரியது. வெற்றி பெற இனிய வாழ்த்துகள் மைதிலி.

  பதிலளிநீக்கு
 19. அட்வான்ஸ் வாழ்த்துகள்,போட்டியில் வென்றதற்கு !

  பதிலளிநீக்கு
 20. பெண்ணியம் சார்ந்த கட்டுரை!!! சூப்பர் அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்...)

  பதிலளிநீக்கு
 21. வார்த்தைத் தேர்வுகள் அசத்தல்..
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 22. சிறப்பான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள்டீச்சர்அசத்திட்டீங்க.

  பதிலளிநீக்கு
 24. சகோதரி! இதே கருத்துகளைத்தான் கீதா அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரைப் போட்டியில் நாம் எழுதலாம் என்றேன் ஆனால் என்னவோ அவர் மறுத்துவிட்டார். . உங்களுக்கும் அவரது கருத்துகள் எண்ணங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் சொல்லி இருக்கிறார் உங்களுடன் பேசியது பற்றி...

  இருவருமே கொஞ்சம் தாமதமாகிவிட்டது இதை வாசிக்க....அருமையான கட்டுரை சகோதரி....வாழ்த்துகள் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள். வெற்றிக்கு

  பதிலளிநீக்கு
 25. மைத்தூ....கை கொடுங்க.....எதற்கு? எனது மனதைப் ப்ரதிபலித்து, அந்த பிம்பத்தை அழகான இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வார்த்தைகளால் அழகுற வெளிப்படுத்தியமைக்கு.....என் கருத்துகள் டிட்டோ....

  நான் உங்களிடம் அடிக்கடி சொல்லுவது ...அன்றும் நாம் பேசிய போது சொல்லியதுதான்...என்று நினைக்கின்றேன்...

  ஒரே ஒரு கருத்தையும் சேர்த்திருக்கலாமோ என்றும் தோன்றியது...பெண் குழந்தைகளை நம் சமூகம் வளர்ப்பதே திருமணம் எனும் ஒரு எண்ணத்தை ஊடுருவச் செய்து. திருமணம் தவறில்லை..ஆனால் அந்தத் திருமணம் என்பதால் பல பெண் குழந்தைகளின் திறமைகளும், அறிவும் மழுங்கடிக்கப்படுகின்றது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கருத்து அவர்கள் மனதில் வேரூன்றப்படுகின்றது. அதை விட கல்வி, அறிவு, ஆராய்ச்சி என்று அதில் பெண்களும் முன்னிருத்தப்பட்டு அதிலும் அவர்கள் சுடர்விட இளம் வயதிலிருந்தே பெற்றோர்களால் தைரியமான இந்த சமுதாயத்தை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட வேண்டும். திருமணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல...என்று...அதுதான் வாழ்க்கை என்று வளர்க்கப்படக் கூடாது...என்னைகு இருந்தாலும் இன்னுரு வீட்டுக்குப் போறவதானே என்று சொல்லப்பட்டு வளர்க்கப்படக் கூடாது....ஏதோ எனது உள்ளக் கிடைக்கையை வெளியிட்டுவிட்டேன்...தவறாக இருந்தால் மன்னிக்கவும்...

  உங்கள் கட்டுரை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் எல்லா பெண்களும் வாசிக்க வேண்டும் என்றும் எனது அவா....வாழ்த்துகள் மைத்தூ!!

  பதிலளிநீக்கு
 26. “முதலில் உங்கள் பெண்களுக்குக் கல்வி அளியுங்கள். பிறகு என்னென்ன சீர்திருத்தங்கள் தங்களுக்குத் தேவை என்பதை அவர்களே கூறுவார்கள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். நண்பர்களே!
  என்ற எடுத்துக்காட்டுடன் நன்றாக அலசி உள்ளீர்கள்!

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 27. நன்று. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. அருமையான கட்டுரை. மைதிலி போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
 29. செம கட்டுரை! இடையிடையே நெருப்பு சிதறியதாக நினைவு. அதிலும் பின்குறிப்பு அட்டகாசம்!

  பதிலளிநீக்கு
 30. இப்போது தான் முதல் தடவையாக உங்கள் படைப்பை வாசிக்கிறேன். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பெண்களைக் கேவலப்படுத்துதலைச் சாடியிருக்கும் விதம் ரசிக்கத் தக்கதாயிருக்கிறது.
  மிகவும் வித்தியாசமான தேர்ந்த நடையில் அமைந்த சிறப்பான பதிவு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் மைதிலி! பதிவர் விழாவில் உங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. மரியாதைக்குரியவரே,
  வணக்கம். தங்களது கட்டுரை சமூகத்திற்கு விழிப்புணர்வைத்தரும் வகையில் அமைந்துள்ளது.உதாரணமாக,"பெண்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தரவேண்டாம். அவர்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்களே கையாளட்டும். அவர்கள் உங்களை விட உயர்ந்தவர்களும் அல்லர். உங்களுக்கு இணையானவர்கள் பெண்கள். என்று தாங்கள் ஆண்,பெண் இருவருமே சமமானவர்கள் கூறியிருப்பது போற்றத்தக்கதுங்க.வாழ்த்துக்களுடன் அன்பன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்-638402

  பதிலளிநீக்கு
 32. நல்ல கட்டுரை! பதிவிடப்பட்ட புதிதிலேயே பார்த்தேன். ஆனால், பொறுமையாகப் படித்துக் கருத்திட வேண்டும் என்பதற்காக அப்புறம் வரலாம் என்று போய் விட்டேன். ஆனால், இப்படி அப்படி நகர முடியாமல் இடையில் பெரிய வேலை ஒன்றில் மாட்டிக் கொண்டதால் வர முடியவில்லை. இன்னும் அந்த முடியவில்லை என்றாலும், போட்டியில் முடிவு அறிவிக்கப்படும் முன்னரே கருத்திட வேண்டும் என்பதற்காக இன்று அவசரமாய் வந்தேன்.

  தனி மனிதர்கள் தொடங்கி, திரைப்படம், விளம்பர உலகம் என ஊடகங்கள் வரை பெண்களை நடத்தும், காட்டும் விதத்தைச் சுளுக்கெடுத்தது அருமை! ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி தங்களுக்கே உரிய பாணியில் ஆழமான கனமான கருத்து ஒன்றிரண்டை எதிர்பார்த்தேன். இல்லையே! :-(

  ஆனால், எல்லா வகைப் பெண்ணியப் பிரச்சினைகளையும் ஒரே பதிவில் சொன்ன வகையில் இந்தக் கட்டுரை நல்ல பதிவுதான்!

  பதிலளிநீக்கு