சனி, 26 செப்டம்பர், 2015

த்ரீ ரோஸஸ்!!

      இது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு!! roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அமைதிப்புறா!! 


   புதுகையில் எதிர்ப்படுபவர்களை எல்லாம் பதிவராக மாற்றும் சூறாவளி ஆள் சேர்க்கை நடைபெறுவதை நிலவன் அண்ணாவின் பதிவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள்! கடந்த இரண்டு மாதமாய் பதிவர் மாலதி டீச்சரின் மகளும் என் செல்ல மருமகளுமான சினேகா வை பதிவெழுது, பதிவெழுது என கஸ்தூரி, மாலதி டீச்சர், நான் என மும்முனை தாக்குதல் நடத்தி வந்தோம். பதிவர் விழா பரபரப்பில் நாங்களும் அதை மறந்துவிட, நேற்று டீச்சரின் வீட்டில் அவர்களது blog கில் சில gadgets சேர்த்துக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அங்கே வந்த வேலுநாச்சியார் (தென்றல்) கீதாக்கா வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சினேகாவை பார்த்து நீ பதிவராயிட்டியா? என கேட்க, எம்புட்டு நேரமானாலும் மைதிலி இந்த பொண்ணுக்கு நீ ஹெல்ப் பண்ணிட்டு கிளம்பு என ஒரு bitஐ போட்டுவிட்டு அக்கா கிளம்ப on the spot சினேகாவை பதிராக்கிடோம்ல.  நான் கிளம்பும்போது டீச்சர் கேட்டாங்க "டீச்சர்! இப்போ நானும், இவளும் எப்படி கணினியை பகிர்ந்துகிறது. விடுங்க டீச்சர் அவளுக்கு ஒரு tab வாங்கிகொடுங்க என்றேன். அடிப்பாவிகளா!! பதிவர் விழானா இந்த அட்டகாசமா பண்ணுவீங்க என்று கலகலத்து விட்டு கிளம்பினோம். சினேகா ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவி! அவள் மென்மேலும் வளர நாமும்  ஊக்குவிப்போம்.

இரண்டாமவர் அமிர்தா தமிழ் அக்காவின் மகள். பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டு தமிழ் தேசியம், கவிதை, ஈழம் என பேசும் படபட பட்டாசுக் குயில். அமிர்தா அக்காவை facebook கில் இருந்து நான் blog பக்கம் கடத்திகிட்டு வந்தபோ, அக்கா துணைக்கு அவர் மகளான என் செல்லகுட்டி எழில் ஓவியாவையும் பதிவர் ஆகிவிட்டார் அக்கா! அவளை நான் ஊக்குவிக்கலாம் முடியாது. அவள் எனக்கு உற்சாகம் அளிக்கிறாள்.

last, but not least!!! நம்ம நிறைக்குட்டி. நேத்து சினேகாவுக்கு வலைப்பூ தொடங்கும்போது குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த நிறைமதி இன்று தனக்கும் ஒரு blog வேண்டும் என கேட்டாள். அந்த வலைப்பூவுக்கு  பெயரும் அவளே சொன்னாள். பார்த்துவிட்டு அந்த பெயர் பற்றி அங்கேயே சொல்லுங்க. மேடம் இப்போ ஐந்தாம் வகுப்பு படிக்கிறாங்க. முதல் பதிவு முழுக்க என்னை ஸ்பெல்லிங் கேட்டுக்கேட்டு,  விஷயத்தை அவளாவே டைப் செய்தாள்.  மூணு பேரையும் பார்க்கும் மூணு டீ குடித்தது போல உற்சாகமா இருக்கு எனக்கு:) நீங்களும் அவங்க பேரை கிளிக் பண்ணி அவங்க blog போய் பார்த்து, உற்சாகமாகுங்க மக்களே!


23 கருத்துகள்: 1. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துகளுடன் புதுகை சென்னையை வெல்லவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள்
  உண்மைதான்
  மூன்று தளங்களையும் கண்டேன் மகிழ்ந்தேன்
  மூவருக்கும் வாழ்த்துக்கள்
  தம+1

  பதிலளிநீக்கு
 3. அட அம்மு உங்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் இங்கும் தொற்றிக் கொண்டது. நீங்கள் சொல்லி விட்டீர்கள் இல்ல. நிச்சயமா உற் சாகப் படுத்திடுவோம். வருங்கால மன்னிகளை. ரோம்ப busy pola ம்..ம் அனைத்தும் சிறப்புற வாழ்த்துக்கள் அம்முக் குட்டி !

  பதிலளிநீக்கு
 4. இளவரசிகளை வரவேற்கிறோம் அக்கா.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா மூன்று புதிய பதிவர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. குட்டி பதினாறடிதான்!
  புதுப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. இளையவர்கள் கலக்கட்டும்மா...வாழ்த்துகள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. மூன்று ரோசாக்களுக்கு நன்றி டியர்..அங்க போறேன் டாட்டா

  பதிலளிநீக்கு
 9. வாவ்..குழந்தைங்க கலக்குறாங்க..வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 10. aunty நான் படித்து கை தட்டிவிட்டுத்தான் கருத்துப் போட்டேன்.உங்களின் எதிர்பார்ப்புகளை நான் நிவர்த்தி செய்ய முயல்வேன்

  பதிலளிநீக்கு
 11. எனக்குஒருபாட்டுதான் ஞாபகம்வருது நன்றி சொல்ல உன(ங்களு)க்கு.........மூவருக்கும்(கீதா,மைதிலி,சகோகஸ்தூர)
  கடையும்வச்சுக்கொடுத்துவிளம்பரமும்செய்வது..............
  பெரியவிடயமாச்சே டீச்சர் இது உங்களால் மட்டுமே முடியும்.
  சாரும்(மது)ரெம்பநாளா சொல்லிக்கிட்டே இருந்தாங்க அது
  இப்பொழுதுதான்முடிந்தது.

  பதிலளிநீக்கு
 12. ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆள் சேர்க்கிறது மாதிரி வளைச்சிப் பிடிக்கிறீங்க போல சகோதரி... இவங்க வந்தாலே பதிவெழுது, பிளாக் ஆரம்பின்னு சொல்றாங்கன்னு எல்லாரும் பயந்துடாம...

  பதிலளிநீக்கு
 13. இளைய வரவுகளுக்கு வரவேற்பும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 14. ஆஹா அருமையான வேலையைச் செய்திருக்கீறீர்கள் அக்கா. செம ஸ்ட்ராங் ஆ மூணு பேரும் வலையுலகைக் கலக்க வாழ்த்துகள். நேரிலும் வாழ்த்த வருவேன்.

  பதிலளிநீக்கு
 15. புதுக்கோட்டை என்றாலே புதுமைதான் என்பதனை சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். மூன்று இளம் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது அவர்கள் வலைத்தளங்கள் வருகின்றேன்.

  பதிலளிநீக்கு
 16. மூன்று ரோஜாக்களுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. மூன்று ரோஜாக்களுக்கும் இனிய வாழ்த்துகள். பதிவுலகின் எதிர்காலத்துக்கான பதியன்களை நட்டுவைத்த உங்களுக்கும் கீதாவுக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. சூப்பருங்க! புதியவர்களை உற்சாகமாக வரவேற்போம். ரோஜாக்கள் தோட்டமாகட்டும் என் முயற்சியும் உண்டு.

  பதிலளிநீக்கு
 19. வருக வருக புற்றீசல் போலப் புதுகையிலே பதிவர்களைத் தருக நாளும் பெருக!

  பதிலளிநீக்கு
 20. ஆஹா மூன்று புது வரவுகள், வருக வருக, வாழ்த்துக்கள்,,

  பதிலளிநீக்கு
 21. //நீங்களும் அவங்க பேரை கிளிக் பண்ணி அவங்க blog போய் பார்த்து, உற்சாகமாகுங்க மக்களே!// - கண்டிப்பாக! இளைஞர்கள், அதிலும் பெண்கள், அதுவும் நீங்கள் பரிந்துரைப்பவர்கள் எனும்பொழுது அவர்களை ஊக்குவிப்பதை விட இந்தத் தமிழார்வலனுக்கு வேறென்ன வேலை? இதோ அடுத்து அங்குதான் போகிறேன்!

  பதிலளிநீக்கு