திங்கள், 23 நவம்பர், 2015

நாட்டு நலனுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்!!!!!!!!

                  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என ஒரு வசனத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதே தான்......
        
          நடிகர் சங்கதேர்தல் முடிந்தவுடனேயே நடிகர் சங்கம் என்பது நடிகர்கள் பிரச்சனைகளை தீர்க்கமட்டுமே என விஷால் அணி தெளிவாக கூறிவிட்டது. அப்போதே பலரும் கொந்தளித்தனர். தற்போது முதல்வரை பார்த்துவிட்டு வந்த திரைத்துறையினர் மழை நிவாரணம் குறித்து பேசுவது சங்கத்தின் பணியில்லை எனவும் பொட்டில் அடித்தது போல கூறிவிட்டது. நம் ரசிக மகா சனங்கள் அப்போ படத்தை தியேட்டரில் பாரு என சொல்லக்கூடாது என்றும் நாங்கள் திருட்டு சி.டி யில் தான் பார்ப்போம் என்றும் சூளுரைக்கிறார்கள். நான் தெரியாம தான் கேட்கிறேன் இந்த பரந்த தமிழ்நாட்டில் இன்னினதுக்குத்தான் சங்கம் என எந்த வரைமுறையும் கிடையாது. அத்தனை சங்கத்து ஆட்களிடமும் இதே சமூக அக்கறையை எதிர்பார்க்கிறோமா என்ன? ஒருவேளை வணிகர் சங்கத்தின் நடவடிக்கை பிடிக்கவில்லை எனில் நாங்க கடைக்கு வந்து பொருளே வாங்கமாட்டோம் என கர்ஜிப்போமா?

      இல்லை தானே. நடிகர்களும் மற்றவர்களும் ஒன்றா என்ன? என்றா கேட்கிறீர்கள். நீங்க டிக்கெட் வாங்கித்தான் அவங்க படம் ஓடுதுன்னா, நீங்க பொருள் வாங்கித்தான் கடைகளில் வியாபாரம் நடக்கிறது. நீங்க பயணித்தால் தான் பஸ் ஓடுகிறது. அட! நீங்க போகபோகதான் பல மரத்தடி கோவில்கள் பெருசாகுது. அப்போ உங்க பிரச்சனை அதில்லை. உண்மை என்னன்னா உங்க உணர்வோட நடிகர்களை இணைத்து வைத்திருக்கிறீர்கள். திரையில் சமூகநீதி காத்த நாயகர்கள் நிஜத்திலும் அப்படி இருப்பார்கள் என நம்பும் நீங்கள், அவர்கள் மருத்துவராக நடித்தபின் அவர்களிடம் வைத்தியம் செய்து கொள்வீர்களா? இல்லை அவர்கள் கலக்டராக நடித்தால் அவரிடம் மனு கொடுப்பீர்களா? அந்த புரிதல் ஏன் மற்ற இடத்தில் இல்லாமல் போகிறது?
      
    நாம் வளரும் வரை புடவைத் தலைப்பில் பண்டம் முடிந்து வைத்து நமக்குக் கொடுத்த  அப்பத்தாக்களும், நம்மை தோளில் தூக்கிவைத்து தேரில் வரும் சாமிக்கு நம்மை காட்டிய தாத்தாக்களும் பண்டிகை நாளில் மற்றும் ஒரு தீபம்  என வீட்டின்  ஏதோ ஒரு மூலையில் அமர்ந்தெறிய, நாமோ வரவேற்பறையில் பண்டிகைதின சிறப்புபேட்டிகளில் நடிகர், நடிகை முகம் பார்க்க தவமிருப்போம் . கண்முன் இருக்கும் முதியோர் மதிப்பே தெரியாத நமக்கா காமராசரையும், பெரியாரையும் தெரிந்து விடப்போகிறது. சுதந்திர தினம் என்றாலும் குடியரசுதினமென்றாலும் காந்தியையும், பாரதியையும் திரைபடமாகத்தான் பார்ப்போம். அதுவும் வழக்கொழிந்தே வருகிறது. நாம் தான் நடிகர்களை தலையில் வைத்துக்கொண்டாடுகிறோம். இனியாவது நம் வேலையே நாம் பார்ப்போம். அவர்கள் வேலையே அவர்கள் பார்க்கட்டும்.

32 கருத்துகள்:

  1. நடிகர்கள் நடித்து விட்டுமட்டும் போயிருந்தால் இவ்வளவு சவுண்டு எழுந்திருக்காது. இது வரை பொது பிரச்சனைகளில் குரல் கொடுத்தார்கள்( அவர்கள் குரல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பிரச்சனைகளில் மாற்றம் ஏதும் இருக்காது அப்படி என்றால் அவர்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்கிறீர்களா? நம்ம மீடியாக்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இவர்கள் குரல் கொடுத்தால் எல்லா மீடியாக்களிலும் அந்த பிரச்சனை பேசப்படும் என்பதால்தான்)எப்போது அவர்கள் காவிரி பிரச்சனைகள் மாதிரி உள்ள பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்களோ அப்போதில் இருந்து அவர்களை காறிதுப்பும் நிகழ்வு நடந்து வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்டர்டைனர்களை என்டர்டெயின் பண்ண மட்டும் வைத்திருந்தால் பிரச்சினையே இல்லை. அவங்கள எல்லா விசயத்திலும் கருத்துக்கேட்டு பெரிய ஆளைமாற்றியது நம்ம தப்பு தானே. மீடியா வை விடுங்க பாஸ். இந்த வரம் மழை ஸ்பெசல் போட்டு எந்த நடிகையையாவது நனைய விடலாமா என்றே அவர்களுக்கும் புத்தி ஓடும். ஹ்ம்ம் என்னமோ போங்க:(((

      நீக்கு
  2. மக்களை மட்டும் குறை கூற வேண்டாம் நம்ம தலைவர்களையும் குறை கூற வேண்டும் காரணம் தேர்தல் நேரத்தில் நடிகர்களும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சவில்லையா என்ன?

    நடிகர்களும் நாடாளும் நம் தமிழகத்தில் இப்படிபட்ட குரல் ஒலிப்பதில் அதிசயமில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நடிகனின் பேச்சை கேட்டு நாமும் தான் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்பதே என் கவலையும் சகா:((

      நீக்கு
    2. உங்களின் ஆதங்கம் பூரிகிறது ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? உங்களை போல உள்ள நல்லாசரியர்கள் போதித்தால் மட்டுமே சிறிதாவது மக்கலின் மனதை மாற்ற முடியும்

      நீக்கு
  3. மக்களுக்கு நல்ல அறிவு இருந்திருந்தால் இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்காது அதற்கு உங்களை போல உள்ள பல ஆசியர்கள்தான் மாணவர்களின் அறிவு கண்னை திறக்க வேண்டும் அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இப்படி பட்ட கோரிக்கைகள் எழாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் சகா. நான் என் மாணவர்களிடம் சொல்லியே வருகிறேன். இன்னும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும்.

      நீக்கு
  4. உடன்படுகிறேன் உங்கள் கருத்திற்கு ,,, அதேவேளையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் முகம் காட்டப்போகும் நடிகர்களிடம் இதே கொந்தளிப்பு எதிர்வினை காட்டுவார்களா? என்பது சந்தேகமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க சேது சார். ஓட்டளிக்கும் நேரத்தில் இதெல்லாம் ஞாபகம் வந்தாலாவது தேவலை.

      நீக்கு
  5. இவர்களைப் பற்றி பதிவு ஒன்று போடக்கூட அவர்களுக்கு தகுதியில்லை. விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு நடிகர்களுக்காக இல்லை சகா. நடிகர்களை நடிகர்களாக பார்க்கத் தெரியாத நம் அப்பாவி மக்களுக்காக தான். மிக்க நன்றி சகா

      நீக்கு
  6. உங்கள் கருத்துகள் எல்லாவற்றிற்கும் நான் உடன்படுகிறேன் தோழி.. ஆனால் நடிகர்கள் தங்கள் பாப்புலாரிட்டியை, நடிகர்கள் என்று மக்களிடம் பெற்ற செல்வாக்கை வைத்து அரசியலுக்கு வராத வரை இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறேன்.

    திரைப்படங்களை (புதிய திரைப்படங்களை) திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஏனெனில் திரைப்படம் என்பது அந்த ஒரு நடிகரோ, இயக்குனரோ அல்லது சங்கமோ சம்பந்தப்பட்டது கிடையாது.. அதில் பல நூறு ஜீவன்களின் உழைப்பு இருக்கிறது.. அதற்கான மரியாதை/ பலனை திரையரங்கில் நாம் சென்று பார்க்கையில் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது.

    மழையின் சீற்றம் எப்போதும் இப்படி இருப்பதில்லை. இந்த கொடூர வருடத்தில் மக்களுக்கு உதவ அரசாங்கம் மட்டும் நினைத்தால் நிச்சயம் போதாது. பல தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சங்கங்களும் முன்வர வேண்டும். வராதவர்களை ஏன் வரவில்லை என்று கேட்பது தவறு என்ற போதும் இப்படியான சிறு உந்துதல் கொடுக்கும் போது அவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள் என்றே எனக்கும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெடுநாள் கழித்து உங்கள் கருத்து. மிக்க மகிழ்ச்சி.* அரசியலுக்கு வராத வரை இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறேன்* நாம் கொண்டாடுவதால் தானே அவர்களுக்கு அரசியல் பேசும் துணிவே வருகிறது ஆவி!

      * அதற்கான மரியாதை/ பலனை திரையரங்கில் நாம் சென்று பார்க்கையில் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது.* திரைப்படம் ஒரு அற்புதமான கலைவடிவம். அதற்குரிய மரியாதையை நாம் தரத்தான் வேண்டும்.

      *இப்படியான சிறு உந்துதல் கொடுக்கும் போது அவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள் என்றே எனக்கும் தோன்றுகிறது* அப்படியா சொல்லுறீங்க!!! பார்ப்போம் தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் தருவது முறை அல்லவா? என மனமுருகிய தங்க தலைவர்கள், தளபதிகள் இதற்குப் பிறகு என்ன செய்யப்போகிறார்கள் என்று.

      நீக்கு
  7. அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்
    தெளிவற்று நிழலைக் கண்டு ஏமாறுவது நாம்தான்
    நமது இளைஞர்கள்தான்

    பதிலளிநீக்கு
  8. நிழல்களை நம்பும் __________ (நிரப்பி கொள்ளவும்)

    பதிலளிநீக்கு
  9. நம்ம மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சினிமாவை இணைச்சு ரொம்ப நாளாச்சு தோழி. அதான் இந்த எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு
  10. சரியாகச் சொல்லிட்டீங்க மேடம்.
    உணர்வோட நடிகர்களை இணைத்து வைத்திருப்பதன் விலைவுதான் அது.

    இன்றைய இளைஞர்கள்உக்கு பிடித்திருக்கும் மயக்கம் தெலிய வேண்டும். அதையும் தாண்டி பல விசயங்கள் இருக்கு தெரிந்தால்தான்
    நாடு உ.ரு.ப்.ப.டு.ம்:)

    பதிலளிநீக்கு
  11. நன்றாகக் கேட்டீர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி. மக்களுக்கு அறிவு வந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  12. அக்கா சூப்பர்... நல்லா சொல்லிட்டீங்க.. நானும் இதை தான் நினைச்சேன்...

    பதிலளிநீக்கு
  13. அன்புச் சகோதரி,

    நடிகர்கள் நமது நாட்டை ஆட்சி செய்யும் பொழுது... சினிமா மோகம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’

    நல்ல கருத்து... நச்சின்னுதான் இருக்கு... காதுள்ளவன் கேட்கக் கடவன்.

    த.ம.5

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்

    இந்த நம்பிகை அதிகம் இந்தியாவில்தான்... படம் ஓடாவிட்டால் தூக்கில் தொங்குவது நடிகர்கள் எல்லோரும் அவர்களிகன் வாழ்வுக்காக நடிக்கிறார்கள். நீங்கள் சொன்னது போல. நம்மட வேலையை நாம் பார்ப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. சரியானதொரு நேரத்தில் சரியானதொரு பதிவு.

    நீங்கள் சொல்வது சரிதான் சகோ .

    பதிலளிநீக்கு
  16. திரைப்படம் என்பது நம் வாழ்வோடு பொருந்திப் போயிற்று. அதாவது மக்கள் அப்படி மாற்றிவிட்டார்கள்..திரை உலகை அதன் எல்லைக்குள் வைத்திருந்திருக்கவில்லையே நம் மக்கள்.
    திரைஉலகிற்குள்ளேயே அரசியல். அரசியலுக்குள் திரை உலகம் என்றாகிப்போனது...
    அவர்களை மக்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் இருந்தாலே நல்லது நிறைய நடக்கும். சங்கம் அவர்களது பிரச்சனைகளை மட்டும்தான் தீர்க்கும் ...சரி அவர்கள்தனிப்பட்ட முறையில் மனித நேயத்துடன் செய்யலாமே....திரையில் மட்டும்தான் வீர வசனங்கள்...
    அவர்களின் தற்போதைய அறிக்கை...ம்ம்ம் ஒண்ணுமே புரியலைங்க..

    இதற்கு ஒரே வழி, இப்போது இருப்பவர்களைத் திருத்த் முடியாது. நமது அடுத்த தலைமுறையினரை மாற்ற வேண்டும். அவர்களது எண்ணங்களை நல்ல வழியில் திசைதிருப்ப வேண்டும். அது ஆசிரியர்களாலும், வீட்டில் பெற்றோர்களாலும் மட்டுமே சாதிக்க முடியும்...நினைத்தால் ஒரு நல்ல மாணவ சமுதாயத்தையே உருவாக்கி ஆட்சியிலும் அமர்த்த முடியும் ஆனால் அது அஸ்ஸாமில் ஏற்பட்டது போல ஆகிவிடாமல் நல்ல அடித்தளம் இட்டால் ஒரு புரட்சி வர வாய்ப்புண்டு...

    பதிலளிநீக்கு
  17. என்று தணியும் இந்த மோகம்...நன் சிறிது தப்பித்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  18. இதில் ஏமாறுவதும் ஏமாற்றபடுவதும்,,,,,,,,,,,,,,
    என்பதைத்தாண்டி இருக்கிற யதார்த்தம் சினிமாவும் அதன் நாயாக நாயகிகளும் நம் கலாச்சாரத்தின் பிரதி பிம்பமாக அல்லது பிரதிபலிப்பாக வருவதால்தான் நாம் அவ்வளவு மகிழ்ந்து போகிறோம்,
    சினிமாவைப்பார்த்துதான் வீர பாண்டிய கட்டபொம்மனைத்தெரியும்,
    சினிமாவைப்பார்த்துதான்,
    வா உ சி யை,பாரதியை இன்னும்,இன்னுமான தேசத்தலைவர்களை அவர்களது வாழ்க்கையை,
    தேச நடப்புகளை இன்னும் இன்னுமான பல விஷயங்களைத் தெரியும்,புத்தகங்களும் இருந்துக்கிறது அதுவும் சொல்லிக்கொடுத்திருக்கிறது என்றாலும் கூட ஒரு காட்சி ஊடகம் சொல்லிக்கொடுக்கும் பலன் புத்தகத்தில் இருப்பதில்லை.
    அதை சினிமா சொல்லிக்கொடுத்திருக்கிறது,
    தவிர சாலை என்றால் மேடு பள்ளம் இருப்பது போல் எல்லா இடங்களிலும் எல்லா நல்லதும் கெட்டதும்,,,,,,,,,/

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ !

    குப்பைகளைக் கோபுரமாய்க் காட்டும் சினிமாவும் கோபுரத்தைக் குப்பையாய்க் காட்டும் சினிமாவும் ஒன்றுதான்
    அவர்கள் நடிகர்கள் ஆனால் நாம் அவர்களுக்கு பாலாபிசேகம் செய்து கடவுள் ஸ்தானத்துக்கு மாற்றுகிறோம் அதுவே அவர்களது தலைக்கனத்துக்கு காரணம் . நாய் வளர்த்தால் அதுக்குரிய இடத்தில் அதைக் கட்டணும் வீட்டுக்குள் விட்டால் அது படுக்கையறையில் வந்து தூங்கத்தான் செய்யும் ....அதுபோல நடிகனை நடிகனாய்ப் பார்த்தால் அவர்கள் வார்த்தைகள் நமக்கு அவசியம் இல்லாமல் போய்விடும் ஆஹா மொத்தத்தில் கண்ணதாசன் சொன்னதுபோல் ''சினிமா என்பது சீனி மாப்போல '' வாயில போடும்போது மட்டுமே இனிப்பாக இருக்கும் மற்ற நேரத்தில் நினைப்பு இருக்கும் இனிப்பு இருக்காது ! இந்தக் கூத்தாடிகள் இம்சை தாங்க முடியலப்பா !

    பதிலளிநீக்கு
  20. திரைப்படத்தை திரை அரங்கில் பார்க்காமல் திருட்டு வி சி டி யில் பார்ப்பதற்கு காரணம் என்னனா..ஒரு பெரிய நடிகர் படம் புதுக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், ராம்நாடு, பரமக்குடிபோல் சிறிய ஊர்களில் ரிலீஸ் ஆகும்போது முதல் சில நாட்களில் டிக்கெட் விலை 400 ரூபாய் என்கிறார்கள். இதில் ரஜினி, விஜய், அஜீத் படங்கள் ரொம்ப மோசம். கமல் படங்கள் பத்தி தெரியவில்லை. சமீபத்தில் தீவாளிக்கு வந்த வேதாளம் இவ்வகையயே சேரும்.சட்டப்படி விற்க வேண்டிய விலை: 50-80 ரூபாய்தான். அப்படி விற்றால் ஒரு குடும்பமே இதே பணத்தில் படத்தைப்பார்க்க முடியும். இதனால் வீட்டில் உள்ள கொஞ்ச வயதுப் பசங்க மட்டும் அநியாயக் காசு கொடுத்து தியேட்டர்லபடம் பார்த்துவிட்டு வீட்டில் உள்ள வங்களுக்கு ஒரு திருட்டு வி சி டி வாங்கிக் கொடுத்துப் பார்க்கச் சொல்லுறாங்க. ஆக திருட்டு வி சி டி யை வளர்த்து விடுவதே நடிகர்களும், தியேட்டர் ஓனர்களும்தான். எங்க சொந்தத்திலேயே பலர் இப்படித்தான் பண்ணுறாங்க. தியேட்டர் எல்லாம் சுடுகாடாக யார் காரணம்? இதே நடிகர்கள்தான். இதை நடிகர் சங்கம் சரி செய்ய முடியுமா? சரி சரத்பாபு, ராதா ரவியால் முடியலை, அவர்கள் அயோக்கியர்கள். இப்போ வந்து இருக்கிற விஷால், நாசரால் இந்த் ஒரு சின்ன விசயத்தை சரி செய்ய முடியுமா? தியேட்டர்ல 60 ரூபாய்க்கு டிக்கட் வித்தால் வாங்க மாட்டேன்னு யாரும் சொல்லப் போவதில்லை. குடும்பதோட தியேட்டர்லபடம் பார்க்கவும் செய்வாங்க.

    Let me challenge Nazar and co.. Can you fix this problem? Can you sell the tickets at the govt suggested price in B and C center theaters? I am sure, Nazar can not fix the problem with or without government help. Corruption in our country crossed a limit and WE GOT USED to IT. We laugh at people who criticize such things!

    It looks hopeless to me!

    பதிலளிநீக்கு
  21. உதவி செய்கிறேன் நிவாரணம் வழங்குகிறேன் என்று பணம் வசூல் செய்வது கொள்ளை அடிப்பதை விட சும்மா இருப்பது மேலானது .விருப்பமும் இரக்கமும் பொருளும் உடையவர்கள் தனியாக தங்கள் உதவிகளை செய்யட்டும்
    சேவை செய்ய யாரும் சினிமாவுக்கு வரவில்லை. பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். கலைஞர்களை கலைஞர்களாய் மட்டும் மதிப்போம்.அவர்களை முன்னோடிகளாகவோ முன்மாதிரிகளாகவோ உத்தமர்களாகவோ இருக்கவேண்டும் என்று நினைப்பது நம்முடைய அறிவீனம்

    பதிலளிநீக்கு
  22. நீங்கவேற...நான் எம்சிஆருக்குத்தான் ஓட்டுப்போடுவேன்.

    உங்க மாணவர்கள் வந்துநல்ல மாற்றம் கொண்டுவரட்டும்.

    நடிகர்களைத் தூக்கிவைத்து ஆடவும் வேண்டாம், இப்படிக் கொந்தளிக்கவும் வேண்டாம். இந்த மக்களே பகுதிவாரியாக ஒன்றுசேர்ந்து நிவாரணப் பணிகளைச் செய்ய முன்வரலாம்..யாரோ செய்ய வேண்டும் என்று நினைத்து நாம் ஒதுங்கிப் போகும் மனநிலையும் மாறவேண்டும் டியர்..அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது பொருந்தாது..நான் சொல்றது உங்களுக்குப் புரிகிறதுதானே?

    பதிலளிநீக்கு