வியாழன், 5 மார்ச், 2015

பெண்மையை நான் மதிக்கிறேன்.

       





           இந்தியாவின் மகள் என்கிற டாக்குமெண்டரி, பெண்கள் தெய்வம், நதிகள்,பூமி எல்லாமே பெண் தெய்வம் தான் என இதுவரை நம் நாட்டில் பலர் அணிந்தது வரும் மூகமூடியை கிழித்தெறிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியால எல்லா ஆண்களும்  அப்படித்தானா என்கிற எண்ணம் உலக அளவில் தோன்றத்தானே செய்யும். இப்படியான ஒரு சூழலில் எனது அன்பு அண்ணன் நிலவன் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த தொடர்பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த மகளிர் தின ஜோதியை ஏந்தி இந்த பதிவை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.


புதன், 4 மார்ச், 2015

கடலைமன்னன் -part 2

                   



                   இவரை பற்றிய முதல் பதிவு எழுதி, சற்றேறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. பபிதா தொடர்ந்து வாசித்தாள். இனி  கார்வரின் கதை. 

புதன், 25 பிப்ரவரி, 2015

கைப்பை-6 நட்பும் நட்பின் நிமித்தமும்.





                 ரொம்ப நாள் கழிச்சு வரேன். நான் பிளான் பண்ணிட்டு வந்தது வேற. ஆனா இந்த பத்துப்பதினைஞ்சு நாளில் நம்ம வலையுலகம் மகிழ்ச்சி, துயரம்,கோபம் என ஒரு மசாலா பட அனுபவத்தை எனக்கு இந்த நாட்கள் தந்திருக்கிறது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மனிதம் பேசும் விளம்பரங்கள்

       
  சமீப காலமாக இயல்பாய் படமெடுக்கிறேன் பேர்வழின்னு மூணு மணி நேரமும், டிக்கெட் காசும் தண்டமோ என நொந்து போக செய்யும் படங்கள் பல. கொஞ்சம் ஊன்றி கவனித்தால், கதையை தப்பான ட்ரீட்மென்டில் படமாக்கி இருப்பார்கள். அல்லது சுமார் கதையை திரைக்கதையால் தூக்கி நிறுத்துகிற படங்களும் உண்டு.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

வயலின் - என் நிறைவேறாத காதல்.

               



       உடலும் , மனமும் சோர்ந்து போயிருந்த ஒரு மாலையின் முடிவில், இரவின் தொடக்கத்தில் எப்போதடா இரவு உணவை முடித்து, படுக்கையில் சாயலாம் என சமையல் முடித்து,இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். ஹாலுக்கு போனவளை, அங்கேயே நிறுத்தி வைத்தது அந்த இசை. செல்பேசிக்கு அந்த பாடலை தரவிறக்கி பாட கத்துகொடுத்தேன். அன்று தூங்க வெகு நேரமானது.