புதன், 4 ஜூன், 2014

கோச்சடையான்-மூணாவது ரஜினி படம்(rajini's summer treat)

முன்குறிப்பு:இது விமர்சனம் அல்ல. என் அனுபவம். கூட கொறைய இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மக்களே.
ஈவினிங் கோச்சடையான் போலாமா? கேட்டது கஸ்தூரி தானா?
என்னம்மா வேற பிளான் வச்சுருக்கியா? இல்லைங்க ரஜினி படத்துக்கு கூப்பிடுறீங்க. அதான் ஷாக் ஆகிட்டேன்(ராஷ்ஷா இருக்கும், சவுண்டா 
இருக்கும்). "நிறை கேக்குறா அதன் போலாம்னு பார்த்தேன்"இது கஸ்தூரி, ஹ்ம்  இப்படிதான்  நண்பர்களே  அப்பாவும் பொண்ணும் திடீர் கூட்டணி வைச்சு அப்பப்ப ஷாக் கொடுப்பாங்க.

       அமேஸிங் ஸ்பைடர்மேன் தொடங்கி வைத்த எங்கள்  விடுமுறையை கோச்சடையான் முடித்துவைத்தார். இது நான் தியேட்டரில் பார்க்கும் மூன்றாவது ரஜினி படம். முதல் படம் நான் மூணாவதோ, நாலாவதோ  படிக்கும் போது ஹாஸ்டலில் இருந்து லீவுக்கு வந்திருந்தேன். பாலு அண்ணா(பெரியப்பா பையன்) எங்க அம்மாவை கெஞ்சி கேட்டு என்னை மாப்பிள்ளை படத்திற்கு (கற்பகம் தியேட்டர்,மணப்பாறை)  கூட்டிப்போனது. என்ன ஓபனிங்!!!!! அவ்ளோ கலர் பேப்பர்ஸ். விசில். எனக்கு ப்ரம்மிப்பாய் இருந்தது.பென்ச்ல உட்கார்ந்து பார்த்த ஒரே படம். 
              ரெண்டாவது படம் திருச்சி சோனா, மீனா ல னு நினைக்கிறேன். தர்மத்தின் தலைவன்.அப்பாவும் நானும் மட்டும் போனோம். வழக்கம் போல படம் தொடங்கி ரெண்டு சீன் போன பின்னாடி தான் அப்பா கூட்டிட்டு போனாங்க. ஆனாலும் ரெண்டாவது ரஜினி திரையில் தோன்றும் போதும் அதே அலைபறை. பால்கனி சீட் என்பதால் அண்ணாவோடு பார்த்த feel வரலை. இப்போ மூணாவது படம் கோச்சடையான்.
         த்ரி டி க்ளாஸ் தருகிறார்கள் என்ற  உடனே பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் எங்களை வரிசையாக நிற்கவைத்து பள்ளிக்கு பக்கத்திலேயே இருந்த பாலகிருஷ்ணா தியேட்டருக்கு கூட்டிப்போய் மை டியர் குட்டி சாத்தான் பார்த்த கதையா நிறைகிட்டையும், மகி கிட்டயும் அளந்துவிட்டேன். நம்பர் சீட் அதனால மகி குட்டிக்கும் டிக்கெட் எடுக்கனும்னு சொல்லிட்டாங்க. சரி கண்ணாடி கிடைக்குதேன்னு டிக்கெட் வாங்கினோம். அவளோ கடைசிவரை சீட்டுலயும் உட்காரலை, க்ளாஸ் போடவும் இல்லை. தியேட்டர் ஹவுஸ்புல் ஆகவும் இல்லை. நாலு கல்லூரி மாணவர்கள் நாலு குட்டி பசங்களுக்கு டிக்கெட் போட்டு, பாப்கார்னுக்கும், ஐஸ்க்ரீமும்  வாங்கி கொடுத்து கொஞ்சம் வாய்ஸ் கொடுக்கவைத்திருந்தார்கள்.
      படம் தொடங்கிய போது கண்முன் மிதந்த பெயர்களும், முன்கதையில் முகத்திற்கு நேரே பாய்ந்த ஈட்டியும் தொழில்நுட்பத்திற்கு  நியாயம் செய்தன. ஆனா இன்ட்ரோ காட்சியிலே ரஜினி குதிரையோடு பெரும் பள்ளத்தை தாண்டும் போதே இது ஸ்பிரிட் அனிமேஷன் படக்காட்சி ஆச்சே என்றதுபுத்தி.
     அவ்ளோ தான், படத்தோடு ஒன்ற முடியாதபடி நெருடலான பல விஷயங்கள். ரஜினி, தீபிகா, ஷோபனா, நாகேஷ், நாசர் தவிர வேறு எல்லாரையும் யார் என கண்டுபிடிப்பதே சவாலாக இருந்தது. அட அப்படியே கொண்டுவர முடியலேன்னா அவங்களுக்கு தெரிஞ்சமாதிரி கொஞ்சம் அழகான வேற ச்கெட்சை  கொண்டு வந்திருக்கலாமோ? பாவம் சரத்துக்கு(குரலை வைத்து உறுதிப்படுத்திக்கிட்டேன்) ஜோடியா வந்த ருக்மணி. டி,பி நோயாளி போல இருந்தாங்க, இன்னொரு கதாபாத்திரம் ஆதியாமே? டி,வி பேட்டியில் பார்க்கும் போது தான் தெரிந்தது.
      படம் தொடங்கும் போதும், முடியும் போதும் மேகிங் காட்டினார்கள். ஜீன்ஸ் படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டில் ராஜூ சுந்தரம் உடம்பு முழுக்க ஒயர் ஒட்டி டான்ஸ் ஆடுவரே அதேபோல இருந்தது.( இதை பத்தி ஏன் எந்த கிரிடிக் கும்  மென்ஷன் பண்ணலை !?) ஷோபனா நடனக் காட்சி அளவிற்கு தீபிகா நடனகாட்சி அம்சமாய் அமையலை(இன்னது சட்டில இருந்தாதான் அகப்பையில் வருமா) ஆனால் அந்த வெள்ளை மயிலோடு நம்ம ஒல்லி மயில் ஆடுற காட்சி ஒன்றே போதுமே  தீபிகா தன் ரசிகக்கண்மணிகளிடம் லைக்ஸ் அள்ள.
       நம்ம தலைவரோட அதோ அந்த பறவை போல பாடலை நினைவுபடுத்தும் எங்கே போகுதோ வானம் பாடலை படம் பார்த்து நாலு நாள் ஆகியும் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் மகியும், நிறையும். 
        கடைசியா(அப்பா! முடிக்கப்போரியா) என்னை கவர்ந்த மூணு விஷயங்கள்
3D க்ளாஸ் அணிந்து நிறையும், மகியும் 

மகியும், நிறையும் படம் முழுக்க ரசிச்சுப் பார்த்தாங்க.

எதிரியின் படை சதுர வடிவில் முன்னேற, மழை வந்தாலும் மற்ற எந்த பறவையையும் போல் அன்றி கூடு திரும்பாமல் மேகத்திற்கு மேலே பறக்கும் கழுகின் வலிமையை காட்டும் விதமாய் ரஜினியின் படைகள் கழுகு வடிவில் முன்னேறுவதாய் காட்டிய குறியீடு.
ரஜினி பேசும் வசங்கள் தான் அவர் வீசும் கத்தியை விட ஷார்ப்பு. நண்பா எல்லாம் கொஞ்ச காலம் தான் என ரஜினி சொன்னால் அதுல ஏதோ மேஸ்மரைஸ் பண்ணுது. தண்டனைக்கு முன் ரஜினி தன் மகனிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நச் நச்!! உடல்நிலை சரியாய் இருந்து ரஜினி இந்தப்படத்தை ஒரிஜினலா பண்ணியிருந்தா இன்னும் மாஸ் ஸ இருந்திருக்கும்!





30 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி
    கோச்சடையான் பட அனுபவம் ரசிக்கும்படி அமைந்துள்ளது. மகிக்கும் நிறைக்குமாக எத்தனை தடவை வேணா பார்க்கலாம் போல. அவர்களின் முகத்தில் அவ்ளோ சந்தோசம். என்னது ரஜினியின் மூணாவது படமா என்று யோசித்துக் கொண்டே படித்தேன். நல்லதொரு அனுபவத்தில் எங்களையும் பயணிக்க வைத்தமைக்கு நன்றிகள் சகோதரி. மணப்பாறையில் படம் பார்ப்பது என்றால் சொல்லவா வேணும்! நான் சட்டையை கழட்டி பிழிஞ்சு படம் பார்த்த அனுபவம் எல்லாம் உண்டு. கூடவே பயணிக்க வைக்கும் பதிவிற்கு நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினியின் மூணாவது படம் என்று நினைத்துகொண்டீர்களா?
      நான் பார்த்த மூணாவது படம் னு சொல்லவந்தேன்:))
      மணப்பாறையில் நான் பார்த்தது வெகு சில படங்களே என்றாலும் நம் மண்ணிற்கு என்று ஒரு ஆசை இருக்கத்தானே செய்கிறது.

      நீக்கு
  2. குழந்தைகள் ரசித்தார்கள்.... அது போதும் நமக்கு...!

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு விமர்சனம்.

    அப்பாவும் பொண்ணும் கூட்டணிவச்சு உங்களுக்கு ஷாக் கொடுத்தாலும், நீங்களும் எப்படியோ அந்த கூட்டணியில் இடம்பிடித்து அனுபவிக்கிறீர்களே!!!!

    அந்த கண்ணடியோடு பார்க்க குழந்தைகள் இன்னும் அழகாக தோன்றுகிறார்கள்.
    அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களிடம் வாழ்த்தை தெரிவிக்கிறேன் சகோ,மிக்க நன்றி!

      நீக்கு
  4. சகோதரி அருமையான அனுபவம்தான்! என்னதான் இருந்தாலும் தலைவர் ரஜனியிடம் ஏதோ ஒரு மெஸ்மரைசிங்க் பவர் இருக்கத்தான் செய்கின்றது! அதனால்தானே இத்தனை மாஸ் அவர் பின்னே!

    உங்கள் பதிவை விட நாங்கள் மிகவும் ரசித்தது (மன்னிக்கவும் சகோதரி_) எங்கள் மெஸ்மரைஸ் செய்தது உங்கள் அருமையான முத்துக்கல் நிறை அண்ட் மகி கோ!!!!!!! chooooo......chweeeeeeeeeet! (இப்படித்தனேங்க இங்கிலிஷ் எல்லாம் புழங்குது! அதாங்க இந்த அரை கிழங்களும் choooo...chweeeet 16 க்கு போயிட்டோம்!!! ) அப்படியே மனதைக் கொள்ளை கொள்ளுகின்றனர்! திருஷ்டி சுத்துப் போடுங்க சகோதரி! மகி அப்படியே ரஜனி ஸ்டைல் போல!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயசு மனசுக்கு தான் சகா. மத்தவங்க ஜட்ஜ் பண்றது கெடக்கட்டும், நமக்கு வயசாகுதுங்கர மேட்டரை நம்ம மனசுக்கு மட்டும் தெரியப்படுத்தக்கூடாதுங்க்றது தோழியின் கருத்து. குட்டீசை ரசித்து வாழ்த்திமயைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. விமர்சனம் எழுதற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டீங்க. ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம்னா இது தானா ? நான் என்னமோ பெரிய விசயம்ணுல நினைச்சேன். அக்கா சொன்னா சரிதான்,போலாம் ரைட் ரைட்...:))

      நீக்கு
  6. குழந்தைகள் ரசித்த விதத்தை ஒரு அனுபவமாக எழுதியிருந்தால் அழகா இருந்திருக்குமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொருதடவை அப்படி முயற்சிக்கிறேன் சகோ,நன்றி!

      நீக்கு
  7. பரவால்ல வந்த சூட்டோட ரஜினி பட விமர்சனமா? (நாங்க எப்புடீ?)
    படுகோனை விட அழகு எங்க மகி-நிறை குட்டீஸ்தான்.-ஆகாகா.. ரஜினி என்ன பெரிய ஸ்டைல்..?கண்ணாடி அணிந்த முழியும்.. கைகளின் ஒய்யார சாய்வும்... சரி நிற்க..ஜீன்ஸ் படக்கடைசியில் வரும் மேகிங் காட்சிகள் ஏற்கெனவெ பல ஆங்கிலப் படங்களில் (டைட்டானிக் உட்பட) வந்த காட்சிகள் தானே என்று கொல்லாமல் -சாரி, சொல்லாமல் விட்டிருப்பார்கள்..
    அது யாரு ராஜி உன் விமர்சனத்திற்கு பின்னூட்டம் எனும் பெயரில் -கலாய்த்து காய்ந்திருப்பது? கவிதைமட்டுமல்ல சமகால உயர்தொழில்நுட்ப (?) படங்கள் வரும்போதும் அதுபற்றி எழுத ஒரு “இது” இருக்கணும்ல? நீ நல்லா எழுதுப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகிங் ஸ்க்ரோளை சொல்லவரவில்லை அண்ணா. சலனப்பதிவாக்கம் பற்றி அறிமுகத்தை ஜீன்ஸ் படத்ததிலேயே காட்டியிருக்கிரரே னு சொல்லவந்தேன். ராஜியக்கா சும்மா friendlyய கலாய்ச்சாங்க. அவங்க என் well wisher தான் அண்ணா. காணாமல்போன கனவுகள் என்ற வலைப்பூவில் சும்மா கலக்குவாங்க. என்னை மேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன் அண்ணா!

      நீக்கு
  8. தோழி ரஜனியின் குரலில் எல்லோரையும் கட்டக் கூடிய அளவுக்கு மந்திரசக்தி இருக்கத் தான் செய்கிறது . சுவாரஸ்யமாக எல்லாவற்றையும் ஒப்புவித்து விட்டீர்கள். எவ்வளவு உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனித்துள்ளீர்கள் தோழி. தட்ஸ் ரியல்லி கிரேட். அத்துடன் குட்டீஸ் இருவரும் செமை cute ரொம்ப ஹப்பியாக உள்ளார்கள். சகோதரர் துளசி அவர்கள் சொல்வது போல் சுத்திப் போடுங்கள் தோழி. நன்றாக என்ஜாய் பண்ணி இருப்பார்கள் போல், அதற்காகவே கூட்டிப் போகலாம் அடிக்கடி.
    ஆமா ஊரில் இருந்து வரும் போது சந்தோசமாக வந்தார்களா தோழி ! நிச்சயமாக இருக்காது இல்லையா உறவுகளை பிரிவது கஷ்டம் தான்.
    சரி தோழி மேலும் அசத்துங்கள் . வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரில் அவர்கள் அத்தை(கஸ்தூரியின் தங்கை) வீட்டில் இருந்தார்கள். அவர்கள் கன்சிவாக இருக்கிறார்கள். கொஞ்சம் உதவலாமே என்று போனேன். கிளம்பும்போது குட்டிஸ் க்கு மனசே இல்லை. தோழி என்ன அழகாய் கண்டுபிடித்திருகிறீர்கள். தோழியின் மனமார்த்த பாராட்டுக்கு மிக்க நன்றி செல்லம்.

      நீக்கு
  9. டிரெய்லரில் இருந்ததைவிடப் படம் பரவாயில்லை என்றுதான் கேள்வி. அதையே நீங்களும் சொன்னீர்கள். எம்ஜியார் படம், ரஜினி படம் எல்லாமே பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளுக்குத் தானே! நமக்கல்லவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாய் சொன்னீர்கள். குழந்தைகளோடு படம் பார்க்கச்சென்றால் நாமும் குழந்தையாகி விடவேண்டியது தான், தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சார்!

      நீக்கு
  10. படம் பார்க்கலை. உங்க அனுபவத்தின் முன் குட்டிதேவதைங்க தான் ஹைலைட் ஆ தெரிகிறாங்க.அழகு. அவங்க மகிழ்ச்சி முகம் முழுக்க.பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ப்ரியா மேடம். குழந்தைகளை ரசித்து கருத்திட்டமைக்கு.

      நீக்கு
  11. உன் பிளாக் பிரமாதம் தங்கச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அக்கா. எல்லாம் தங்களை போன்றோரின் ஊக்குவிப்பால்தான் சாத்தியமாகிறது.

      நீக்கு
  12. ஊரில் ரிலீஸ் சமயத்தில் இருந்தாலும் பார்க்கவில்லை.....

    பல பதிவுகளில் விமர்சனம் படித்துவிட்டேன். பார்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்தோடு பாருங்க அண்ணா. ரோஷனி கண்டிப்பா என்ஜாய் பண்ணுவா.

      நீக்கு
  13. கொஞ்சம் கேப் விட்டு வந்து பார்த்தா உன் தளமே செம அழகா ஆகியிருக்குதே மைதிலி... சூப்பர்.. கண்ணாடி அணிந்த மகியும் நிறையும் கொள்ளை அழகு. படத்தைப் பொறுத்தமட்டில் மைதிலி சொன்ன எல்லா விஷயங்களுமே எனக்கு உடன்பாடுதான். நாகேஷை கேரக்டராக்கறேன்னு அவரை கேவலப்படுத்திட்டாங்களோன்னு எனக்கு கூடுதல் கோபம். அவ்வளவுதான். மத்தபடி உணர்ந்ததை அழகா எழுதியிருக்கேம்மா...

    பதிலளிநீக்கு
  14. கோச்சடையான் படம் பார்த்த அனுபவத்தை அழகா சொல்லியிருக்கீங்க. 3டி கண்ணாடியோடு அழகா போஸ் கொடுத்திருக்கிற குட்டீஸ்க்கு என் வாழ்த்துக்கள்.

    தர்மத்தின் தலைவன் நானும் சோனா மீனாவில் என் தோழியரோடு பார்த்தேன். தோழிகள் என் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி என்னை அழைத்துப் போனார்கள். அழகான அன்றைய நினைவுகளை மீண்டும் மலரச் செய்துவிட்டீர்கள். நன்றி மைதிலி.

    பதிலளிநீக்கு
  15. மகியும் நிறையும் ரசித்திருக்கிறார்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. பார்க்க ஆவலைத் தூண்டிய விமர்சனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. Kids are So cuteeeeeeeeeeeee :) Kannu pattu irukum plz suthi potukonga :)

    பதிலளிநீக்கு