உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!
மழை முத்தத்தால் நாணி நின்ற
மரத்தின்நேசத்தை,
வேரைப்போலவே உணர்ந்த
கிளை மேவிய கிளி
சிறகுலுக்கும்சிலிர்ப்பாய்!!!
மழைத்திருநாளில்
கொடியேற்றமாய் தேநீர்
மழையோடு கரைந்து மழையாதல்
சொக்கப்பனை* !!!
ஒரு துளிக்கும் மறுதுளிக்கும்
இடையே சிந்துகின்ற உன்னையும்
மழை என்கிறார்கள் அவர்கள்!!
சொக்கப்பனை
தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் கொடியேற்றதுடன் தொடங்கும் திருவிழாக்கள் சொக்கப்பனை கொளுத்திய பின் தான் முடிவுறும்.
அருமை தோழி!
பதிலளிநீக்கு//மழை முத்தத்தால் நாணி நின்ற
மரத்தின்நேசத்தை,
வேரைப்போலவே உணர்ந்த
கிளை மேவிய கிளி// வாவ்
த.ம.2
நன்றி கிரேஸ்:)
நீக்குமழை என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும் ,அது பிழை என்று நீங்களாவது விளக்கமாய் சொல்லலாமே ?
பதிலளிநீக்குத ம 3
ஆஹா! கலக்குறீங்களே பாஸ்! விட்டா நம்ம பிழைப்பிற்கு போட்டியா வந்துடுவீங்க போல:)) நன்றி பாஸ்!
நீக்குமழையோடு கரைந்து மழையாதல்... அய்யோ...!
பதிலளிநீக்குகவிதையோடு கரைந்து கவிதையானவர்க்கே வசமாகக் கூடிய வரி
என்ன செய்ய வரவர எனக்குக் கற்பனை வற்றிவருகிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது.. (அதனால்தான் கவிதை எழுதுவதை விட்டு, கவிதைகளைப் பற்றிப்பேச ஆரம்பித்துவிட்டேன்..) உன் கவிதைகளில் நுரைபொங்க வழியும் கற்பனையின் அழகு பார்த்துச் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்...
இன்னும் கொஞ்சம் எழுதி இன்னும் கொஞ்ச நேரம் மழையில் நனையவிட்டு பார்த்திருக்கலாம்லடா...? (படிப்பவரையும்தான்)
சாரிப்பா.. புத்தக மெய்ப்புத் திருத்த வேலைகள்.. நாளையுடன் முடிகின்றன (நாளை மீண்டும் சென்னை நாளைமறுநாள் தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பதிவு..அடுத்த நாள் மதுரை..அடுத்தநாள் அழைப்பிதழ் வேலை..அடுத்தநாள் கோவை நிகழ்ச்சி..என ஓடிக்கொண்டே இருக்கிறேன்..) இப்போதுதான் இரவு-11.35 நேரம் கிடைத்தது..மீண்டும் வர 5,6நாள் ஆகும்..
அண்ணா,
நீக்குஎவ்ளோ நாள் ஆச்சு உங்களை இங்கே பார்த்து. மிக்க மகிழ்ச்சி அண்ணா! **என்ன செய்ய வரவர எனக்குக் கற்பனை வற்றிவருகிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது..** இந்த டகால்டி தானே வேண்டாங்கிறது:)) உங்களுக்கு எழுத நேரம் இல்லை. அவ்ளோ தான்:)
**சாரிப்பா.. புத்தக மெய்ப்புத் திருத்த வேலைகள்.. நாளையுடன் முடிகின்றன (நாளை மீண்டும் சென்னை நாளைமறுநாள் தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பதிவு..அடுத்த நாள் மதுரை..அடுத்தநாள் அழைப்பிதழ் வேலை..அடுத்தநாள் கோவை நிகழ்ச்சி..என ஓடிக்கொண்டே இருக்கிறேன்..) இப்போதுதான் இரவு-11.35 நேரம் கிடைத்தது..மீண்டும் வர 5,6நாள் ஆகும்.. ** இவ்ளோ பிசியான நேரத்தில் கூட இந்த பதிவிற்கு (தங்கைக்கு) நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி அண்ணா! நூல் வெளியீட்டு விழாவை ஆவலோடு பார்த்திருக்கிறேன்:)
இழையோடும் இன்பம் எனவே உணர்ந்து
பதிலளிநீக்குமழையோடு மாலையிட்ட மாது!
அசத்திவிட்டீர்களே தோழி!
வாழ்த்துக்கள்!
ஆஹா! தோழி மிக்க நன்றி!!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ!
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
நன்றி அண்ணா!
நீக்குஅருமையான கவிதை சகோ ! சொக்கப்பனை ? அறியாத வார்த்தை...
பதிலளிநீக்குஇப்போ விளக்கம் தந்திருக்கிறேன்:) நன்றி சகோ!
நீக்குஇந்தப்பதிவுக்கு வந்''தேன்''
பதிலளிநீக்குகவிதை மழையில் நனைந்''தேன்''
வார்த்தைகளில் குளிர்ந்''தேன்''
மழை முத்தத்தால் நாணி நின்ற
பதிலளிநீக்குமரத்தின்நேசத்தை,
வேரைப்போலவே உணர்ந்த
கிளை மேவிய கிளி
சிறகுலுக்கும்சிலிர்ப்பாய்!!!
சிலிர்ப்பான சிந்தனை!
செய்திடு மேலும்
மெத்திடும் மேதினியில்
மற்றவரும் மகிழ! ஆஹா என்னம்மா அருமையாக..... வெகுவாக கவர்கிறது அனைத்தும் அழகோ அழகு... அம்மு தொடர வாழ்த்துக்கள்.....!
ஆஹா! கவிதை பின்னூட்டம் :) நன்றி இனியாச்செல்லம் :)
நீக்குமழை குறித்த உங்கள் கவிதைகள் மழையைப் போலவே எனக்கு ரொம்பவும் பிடித்தது!
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட் அண்ணா!
நீக்குமழை முத்தத்தால் நாணி நின்ற
பதிலளிநீக்குமரத்தின்நேசத்தை,
வேரைப்போலவே உணர்ந்த
கிளை மேவிய கிளி
சிறகுலுக்கும்சிலிர்ப்பாய்!!!// யப்பா யப்பா.....
இப்போதுதான் விஜு ஐயாவின் தமிழருவியில் நனைந்து விட்டு அந்த அருவியிலிருந்து உங்களுக்கும் ஒரு சின்ன பதில் கொடுத்துவிட்டு இப்படி வந்தால் திரும்பவும் நீங்கள் எங்களை மழையில் நனைய வைத்துவிட்டீர்களே! ஜல்புதான் போங்க....அங்கு மரபு என்றால் இங்கு புதுக் கவிதை. இரு காலங்களையும் ரசிக்கும் நடுத்தர வாசிகளாகிகள்....
பரவாயில்லையே ! அங்க போய்ட்டுவந்து பார்த்த இது கவிதை மாதிரி தெரியிறதே பெரிய விஷயம் தான்:)) நன்றி சகாஸ்! அந்த கமெண்ட்டையும் படிச்சேன் சகா:)
நீக்குஏங்க இந்தக் கிண்டல் தானே வேணாங்கிறது!
நீக்குபுதுக்கவிதை எழுதுறது தாங்க ரொம்ப கஷ்டமான விஷயம் .
ரொம்ப நல்லா மழை வந்திருக்கு.
ஒரு கவிதை மனசில இருக்கத அப்படியே காட்சிப்படுத்தனுமின்னு நினைச்சா, இதைத் தனித்தனி paragraph ஆ வைச்சுத் தனித்தனி கவிதையாப் பாக்கலாம்.
அதே நேரம் ஒரே கவிதையாப் படிக்கும் போது தோணுற உணர்வுகள் “தான் கலந்து“ அனுபவிக்கக் கூடியதா இருக்கு.
“மனம்கொண்டபுரம்“ ன்னு ஒரு blog ல ஏதோ எழுதுறேன்.( உண்மையாகவே மரபுக்கவிதை மாதிரி புதுக்கவிதைல பரிச்சயம் இல்லங்க... )
வந்து பாத்திட்டு தேறுமான்னு சொன்னிங்கன்ன சந்தோசம்.
தேறாதுன்னா ரொம்ப சந்தோஷம்.
(மாயனூர்ல் சேதுபதின்னு ஒரு விரிவுரையாளர் இருந்தார் .
அவர் இப்படித்தான் சொல்வார் அடிக்கடி!)
அவசரம் இல்ல .
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாங்க!
மழைத் துளிகள் போல் வார்த்தைகளும் மனதில் இடம்பிடித்துக் கொண்டது !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தோழியே .