வியாழன், 9 அக்டோபர், 2014

பெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்!

               ஒரு படத்தை ரிலீஸ்க்கு முன்னமே ப்ரிவியு ஷோ ல பார்க்கும் பரபரப்புக்கும், சுவரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாது இருந்தது நிலவன் அண்ணாவின் நூல்கள் வெளியிடப்படும் முன்னரே வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு. அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். நூல்களை விமர்சிக்கும், அதுவும் நிலவன் அண்ணாவின் நூல்களை விமர்சிக்கும் அளவு நம்ம பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. எனவே இது நூல் அறிமுகம் தான். 


முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!!









         ஒரு ஆசிரியாராக எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. தலைப்பில் சொல்லப் பட்டிருக்கிற கட்டுரை தான் இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய ஆசிரியர்கள் தவறாது படிக்கவேண்டிய கடிதத்தைப் போல், நேரு தன் மகளுக்கு எழுதியதைப் போல கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு கட்டுரை. மார்க்கு மாயை ஆட்டிப்படைக்கும் தமிழகப் பெற்றோர்கள் தவறாது படிக்க வேண்டிய கட்டுரை. எனவே தயவுசெய்து பெற்றோர்களே தாங்கள் இதை  படித்து குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க, நடத்தப் பழகுங்கள். பாவம் அந்த மொட்டுகள் அவை மலர வாய்ப்புக் கொடுங்கள். இந்த கட்டுரை மட்டும் அல்லாமல் இந்த தொகுதி முழுக்கவே கல்வியியல் கட்டுரைகளால் நிரம்பித் ததும்புகிறது. பாடத்தைப் புகட்டலாமா? ஆசிரியர் உமா படுகொலை குறித்த கட்டுரை, கோடை விடுமுறை தேவையா ? போன்ற கட்டுரைகள் ஆசிரியர்ப் பணி குறித்த, பள்ளிகுறித்த, இன்றைய கல்வி நிலை குறித்த, ஒரு ஆழமான அலசலாக இருக்கிறது. விண்ணப்பித்து வாங்குவதா விருது? எனும் கட்டுரை நல்லாசிரியர் விருதுகளை வாங்கிய(!?) சிலருக்குக் கண்டிப்பாய் மனசாட்சி உறுத்தும் படி அமைத்திருக்கிறது. கட்டுரைகள் அண்ணாவின் வலைப்பூவில் வெளிவந்தவை என்பதால் அதன் இறுதியில் வாசகர்கள் இட்ட கருத்துக்களையும் சேர்த்துப் பகிர்ந்திருக்கிறார். தமிழ் கற்பித்தல் தொடர்பான அற்புதமான அலசல்களும் இதில் அடங்கியுள்ளன. மொத்தத்தில் ஆசிரியர்கள் தவறவிடக்கூடாத அற நூலாக இருக்கிறது இந்த புத்தகம்.

மற்ற இரண்டு நூல்களைப் பற்றி வேற்றொரு பதிவில்ப் பகிர்கிறேன். ஏனெனில் தண்ணீரையும், தேநீரையும் ஒன்று போல அருந்த முடியாதல்லவா? தேனாய் இனிக்கிற மற்றொரு மிடறு தேநீர் போல் அண்ணாவின் புதிய மரபுகள் கவிதை தொகுப்பின் அறிமுகத்தோடு உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

நூல் கிடைக்கும் இடம் -
அகரம் பதிப்பகம்,
எண்-1, நிர்மலா நகர்,
தஞ்சை-7 தொலைபேசி-04362-239289

30 கருத்துகள்:

  1. விரவில் அறிமுகம் செய்யுங்கள்.
    என் போன்றோர்கள் படித்துமகிழ்கிறோம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக அறிமுகம் செய்கிறேன் அண்ணா! மிக்க நன்றி!

      நீக்கு
  2. சுருங்கச் சொன்னாலும் நிறைவாய் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி....
    ஐயாவின் புத்தகத்தை படிக்க ஆவலாய் இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகத்தில் உள்ளதை எல்லாம் சொல்லிவிட்டால் வாங்கும் ஆர்வம் போய்விடும் அல்லவா:) நன்றி அண்ணா!

      நீக்கு
  3. இணையத்தில் அந்த கட்டுரைகளை நான் படித்தது கிடையாது, புத்தகமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. சகோதரி அவர்கள் இப்போதெல்லாம் வலைப்பதிவில் ரொம்பவே ஸ்பீடாகவே இருக்கிறார்கள் போலிருக்கிறது. அய்யா கவிஞர் முத்துநிலவனின் புத்தகத்தை பற்றி மற்றவர்கள் விமர்சனம் எழுதுவதற்கு முன்னரே சகோதரியின் விமர்சனம். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணனின் புத்தகம் அல்லவா? அந்த ஆர்வம் தான் அண்ணா! மற்றபடி பேசிக்கலி நான் ரொம்ப சோம்பேறி:)
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      நீக்கு
  5. பாராட்டறேன்னு தவறான உவமையை சொல்லிட்டீங்களே டீச்சர்! தண்ணீர்- தேநீர் ஒப்புமையைத்தான் சொல்றேன்! இந்த புத்தகத்தை தண்ணீர்னு சொல்லிட்டீங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் சார்! ஏனென்றால் இப்போது நீங்கள் சுவைத்திருப்பது இந்த தேநீரின் முதல் மிடறைத்தான்:) (ஆம் மொத்ததொகுப்பையும் தான் நான் தேநீர் என்றேன்:)
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. அந்தக் கட்டுரையை ஐயாவின் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன் உண்மையிலேயே பல கேள்விகளுக்கு நேரடியான பதிலை பட்டென்று அடிப்பது போல இருந்தது. மதிப்பெண் எடுக்கும் எந்திரமாகத்தானே நாங்கள் இன்றும் திகழவேண்டியுள்ளது... மற்றவற்றை நூலில் படித்துவிடுகிறேன் .சிம்பிளாக நூல் பற்றிய அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள் சகோ, நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ! அது எனக்கு மிகவும் பிடித்த பதிவு!! வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  7. கலக்கிட்டீங்க மைதிலி..நானும் எழுத வேண்டும் என்று நினைத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறேன். அண்ணாவின் கட்டுரைகள் அருமை..ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பாடுபடும் நல்ல ஆசிரியரின் சிறந்த எண்ணங்களும் செய்கைகளும் புத்தகத்தில் தெரிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பயணம் செய்த களைப்பு முதலில் தீரவேண்டும் அல்லவா டியர்!!
      மிக்க நன்றி டா!

      நீக்கு
  8. #பெற்றோர் 'தவற விடகூடாத' ஒரு நூல்!#
    படிப்பதற்கா ,வாங்கியபின்னா)
    த ம 2

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு பெற்றோரும் அவசிய்ம் பயில வேண்டிய நூல்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  10. இப்படி நாங்க நினைக்கிறத எல்லாம் நீங்க முந்திக்கிட்டுப் பதிவா போட்டிங்கன்னா அப்பறம் நான் என்ன பண்றதாம்....?
    எப்படியோ நல்லத யார் சொன்ன என்ன...??
    இந்தப் புத்தகத்தை “எழுத்தெண்ணி“ வாசித்திருக்கிறேன்.( எதுக்கு வேலைவெட்டி இல்லாம அதெல்லாம் எண்ணிகிட்டு ..... என்று கேட்டுடாதிங்க)
    என்ன பிரயோஜனம்...???
    “ஆசிரியர்கள் தவறவிடகூடாத அற நூல்“ என்று ஒற்றை வரியில் சொல்லத் தெரியலையே!
    அருமையான பகிர்வு
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை போன்றோரின் உற்சாகமூட்டல் தான் அண்ணா மகிழ்வே!! மிக்க நன்றி!

      நீக்கு
  11. நூல் தலைப்பே ரொம்ப நல்லாயிருக்கு! :)

    ***மார்க்கு மாயை ஆட்டிப்படைக்கும் தமிழகப் பெற்றோர்கள் தவறாது படிக்க வேண்டிய கட்டுரை. எனவே தயவுசெய்து பெற்றோர்களே தங்கள் இதை படித்து குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க, நடத்தப் பழகுங்கள். ***

    திருந்தீர்வார்களா பெற்றோர்கள்??? எனக்கு என்றுமே அவ்வளவு (அவ)நம்பிக்கை! ஆனால் ஒண்ணு, "நம்பர் ஒன்" பைத்தியம் பிடித்த பெற்றோர்களால் இன்றைக்கு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும் மாணவ மாணவிகள் நாளைய பெற்றோர் ஆகும்போதாவது திருந்தினால் சரிதான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்றுமே அவ்வளவு (அவ)நம்பிக்கை! ஆனால் ஒண்ணு, :)))
      நன்றி வருண்:)

      நீக்கு
  12. கலக்கல்ஸ் போங்க சகோதரி! பெற்றோர்களுக்கு மிகவும் முக்கியமான நூல்! மிக்க நன்றி அறிமுகப்படுத்தியதற்கு!

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு விமர்சனம். சீக்கிரம் மற்ற இரண்டு விமர்சனங்களையும் எழுதுங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  14. உண்மையானவரை நான் வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  15. சுருக்கமாக சொன்னாலும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அம்மு ஆசிரியர்களும் தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் நிறைய இருக்கும் போல் இருக்கிறதே ஏனைய வற்றையும் அறிய ஆவலாயுள்ளேன். அம்மு. மிக்க நன்றி அறிமுகத்திற்கும்மா வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப ரொம்ப நன்றிடா. சாராம்சத்தைச் சரியாகவே சொல்லிவிட்டாய். பெற்றோர்கள் படுத்தும் பாட்டில்தான் ஆசிரியர்களும் அந்தநிலைக்கு மாற வேண்டியிருக்கிறது என்பதால, ஓர் ஆசிரியனாக என் மாணவர்க்குச் சொன்னதை ஒரு பெற்றவனாக என் மகளுக்குச் சொன்னேன். மாணவர்கள் எல்லாருமே நாம் பெறாத பிள்ளைகள் தானே? இரண்டுக்கும் பொருந்தும என்பதால் இந்தத் தலைப்பே சரியென்று பட்டது. பிழைகள் வந்துவிட்டன. நண்பர் விஜூ எழுத்தெண்ணி -மெய்ப்புத் திருத்தித் தந்தார். அவற்றை அப்படியே அச்சகத்திற்கும் அனுப்பியிருந்தேன்..ஆனால் திருத்தப்படவில்லை என்பது நிரந்தரமான வருத்தமாகிவிட்டது...(கேட்டபோது, திருத்தம் செய்த கோப்பை சேமிக்காமல் விட்டுவிட்ட தவறு என்று அறி்ந்தேன்.. விஜூவிடம் இதைச் சொல்ல வெட்கப்பட்டேன்) “அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழந்திருக்கும் கவியுளம் காணாத“ தற்காலத்தில், எனது நூலின் உயிர்ப்பைப் புரிந்துகொண்டு சொன்ன சுருக்க அறிமுகம், ரொம்ப ரொம்ப அருமைப்பா. (நூல் கிடைக்கும் இடம் -அகரம் பதிப்பகம், எண்-1, நிர்மலா நகர், தஞ்சை-7 தொலைபேசி-04362-239289 என்பதே சரியானது) உனது நூல் எப்போ வருகிறது? வலையுலகும் தமிழுலகம் கேட்கிறதே! விரைந்து வர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. பொருத்தமான திருத்தத்தைச் செய்திருப்பதைப் பார்த்தேன் நன்றிடா.

    பதிலளிநீக்கு
  18. அழகா அறிமுகப்படுத்தியிருக்கம்மா....அடுத்த நூல்கள் எப்போ?

    பதிலளிநீக்கு