திங்கள், 29 டிசம்பர், 2014

கைப்பை-5
     
 நோட் பேட்:

              வீட்டில் வளர்க்கும் செல்லக்கிளிகளுக்கு சாக்லேட் கொடுக்கக்கூடாதாம்.

              நத்தைகளால் மூனுவருடம் தொடர்ந்து தூங்க முடியுமாம்!

              தும்பலின் போது நம்மஇதயம் நின்றுவிட்டு பின் துடிக்குமாம்!
டைரி:
           கஸ்தூரியின் புது கீ-போர்டை பார்த்து மகி (u.k.g படிக்கிறாள்) கேட்டிருக்கிறாள்"எத்தனை கீ-போர்ட் தான் வாங்குவீங்க?? இது அம்மாவுக்கு தெரியுமா?? வாங்க அம்மாகிட்டே சொல்றேன்". ஹ்ம்ம் கஸ்தூரி  இந்த மேட்டரை சொல்றவரை நான் அந்த கீ-போர்டை பார்க்கவே இல்லை...நம்மல வச்சு இந்த பொண்ணு என்னமா பில்டப் பண்ணுது!!


டிக்-டாக்
          ஆய கலைகள் அறுபத்தி நாலில் இப்போ எத்தனை இருக்கோ தெரியல.  ஆன புதுபுது திறமைகள், கலைகள் தினமும் வளர்ந்துட்டே இருக்கு. food carving எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தாய் மண்ணில் , நம்ம தாய் மண்ணில் இல்லைங்க Thai மண்ணில் அதாவது தாய்லாந்தில்  தோன்றியது என்கிறார்கள்.
உலகமே உணவுக்கு தானே இந்த ஓட்டம் ஓடுது!
என்ன பொண்ணுடா!!
இது veg ஆ? non-veg ஆ??


புத்தாண்டு தீர்மானங்கள்

புத்தாண்டு அன்று மட்டுமே தீர்மானம் போட்டு, அதை முதல் ஒருவாரத்திற்கு தீவிரமாகவும், பின் ஒரு மாதத்திற்கு கொஞ்சம் பிடிவாதத்துடனும், பொங்கல் வரை வேண்டா வெறுப்பாகவும் கடைப்பிடித்து பிறகு போகி அன்று தீர்மானத்தையும் சேர்த்து  கொளுத்தி விடுபவரா நீங்க??? இந்த நிலையை போக்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். என்னை மாதிரி நீங்களும் பண்ணினால் இந்த நிலை நிச்சயம் மாறும். ஆமா என்னை போல நீங்களும் தீர்மானம் ஏதும் போடாமல் இருங்க மக்களே.


பென் டிரைவ்செம  மியூசிக்......வித்யாசமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் .....என்சாய்  :)


கைப்பை-4

43 கருத்துகள்:

 1. கைப்பை கனம் அதிகம்தான்!
  (இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் இந்த வெஜ்.கார்விங் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகி விட்டது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **கைப்பை கனம் அதிகம்தான்!** ரொம்ப நன்றி சார்:)
   **(இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் இந்த வெஜ்.கார்விங் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகி விட்டது)** ஆமா இப்போ இது பரவாலான கலையாகிவிட்டது:)

   நீக்கு
 2. தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா!!! மிக்க மகிழ்ச்சி!! மீண்டும்மீண்டும் நன்றி சார்:)

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாவ்!! உங்களை எதிர்பார்க்கல:))) நன்றி! நன்றி! நன்றி!

   நீக்கு
 4. எக்ஸ்ட்ரா தகவல், தும்மும்போது 100 கிமீ வேகத்தில் காற்று வெளிப்படுமாம்! :))))

  புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒ! நீங்க என்னை மாதிரி தானா!! முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 5. ஆஹா சூப்பர்டா...நம்மளயே குழந்தைகள் பிளாக் பண்ணுதுகல்ல...ஹா...ஹ்ஹா பாவம் என் தம்பி..

  பதிலளிநீக்கு
 6. அந்த மீனை உடனே எனக்கு பார்சல் அனுப்பி வையி.... சாப்ட்டுப் பாத்துட்டு சைவமா அசைவமான்னு சொல்றேம்மா... புள்ளைங்க அப்பா அம்மாவு (மட்டும்தான்) பயப்படுவாருன்னு என்னா தெளிவாப் புரிஞ்சு வெச்சிருக்குதுங்க...? ஹி... ஹி... ஹி... நான் எந்தப் புத்தாண்டுலயும் தீர்மானம் எதுவும் எடுக்கறதில்ல... இந்த வருஷம் மட்டும் ஒரு விஷயத்தை தீர்மானமா மனசுல ஏத்திக்கிட்டு செயல்படணும்னு தீர்மானம் பண்ணியிருக்கேன். அந்த தீர்மானத்தை மறந்துரக் கூடாதுன்னும் தீர்மானம் பண்ணி மனசுல ஏத்திக்கிட்டிருக்கேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைதிலி:எங்க இந்த மீனை எப்படி அண்ணனுக்கு அனுப்புறது ?? கேட்டுபோயிடாது??
   கஸ்தூரி:ஐஸ் வச்சு அனுப்பும்மா
   மைதிலி:அண்ணனை மாதிரி உண்டா!! அவரு நல்லவரு !! வல்லவரு!!
   கஸ்தூரி; மைதிலி மீனுக்கு ஐஸ் வைத்து அனுப்பினால் கெட்டுபோகாதுன்னு சொன்னேன்,இப்படி உங்க அண்ணனுக்கு ஐஸ் வைக்கிறியே மா...என்னம்மா இப்பிடி பண்ற:))))))

   நீக்கு
 7. உண்ணுவதும் ஒரு கலை!.. உணவு பரிமாறூவதும் ஒருகலை!..
  உண்ணும் பொருளைச் செதுக்கி வீணாக்குவதும் ஒரு கலை!..

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி செதுக்கிய காய்கறிகளை பின் உப்புநீரில் போட்டு கழுவிவிட்டு , சமைத்து விடுவார்கள் என படித்திருக்கிறேன் அய்யா. மிக்க நன்றி!

   நீக்கு
 8. ஆப்பிள் சில்க் கடிச்சு ஒரு லட்சத்துக்கு ஏலம் போனது மாதிரி இருக்கே...

  பொண்ணு தர்பூசனி மாதிரி இருக்காளே....

  காரட் வெஜ்தானே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா!! என்ன கற்பனை அண்ணனுக்கு!! மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 9. ஆப்பிளில் உலக்ம் அருமை சகோதரியாரே
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. //மூனுவருடம்//முத்து நிலவன் அவர்களின் சிஷ்யை என்பதை நிரூபித்து விட்டீர்கள்
  கஸ்தூரியின் புது கீ-போர்டை பார்த்து மகி கேட்டிருக்கிறாள்"எத்தனை கீ-போர்ட் தான் வாங்குவீங்க?? இது அம்மாவுக்கு தெரியுமா?? வாங்க அம்மாகிட்டே சொல்றேன்".
  கஸ்தூரி, "வாங்க சொன்னதே அம்மாதானே"
  ***************
  "மகி! இரண்டு பேரும் மாத்தி மாத்தி லொட்டு லொட்டுன்னு தட்டிகிட்டே இருந்தா கீபோர்ட் என்னத்துக்கு ஆகும். நீங்க வெளையாடுற கேம்ஸ் க்கு வாரவாரம் கீ போர்ட் மாத்தனுமே!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **முத்து நிலவன் அவர்களின் சிஷ்யை என்பதை நிரூபித்து விட்டீர்கள் **பின்ன தாக்கம்னு ஒன்னு இருக்கில:))
   நான் வேற லாப்டாப் ...கஸ்தூரி சிஸ்டம்..நிறை இப்போ தான் செல் கேம்ஸ் விளையாடுகிறாள்..மகி ரொம்ப குட்டி(u.k.g)...so அந்த எல்லா கீ-போர்டும் சார்தான் என்றாலும் அதில் மகி விசமங்கள் செய்வதுண்டு அண்ணா:)))

   நீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

   நீக்கு
 11. இந்த வெஜ் கார்விங் கம்பியூட்டர் கட்டிங் போலிருக்கே .இது ஆய கலைகள் பட்டியலில் வராதே:)இருந்தாலும் ரசிக்க முடிகிறது !
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல பாஸ் . இதுக்குன்னு டூல்ஸ் இருக்கு:) மிக்க நன்றி பாஸ்!

   நீக்கு
 12. புத்தாண்டு தீர்மானம் பத்தியை பட்டி பார்க்கவும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து. நலமா சகா?? பட்டி பார்த்துட்டேன்:) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகா:)

   நீக்கு
 13. நோட்பேட் தகவல் அருமை
  மகிகுட்டி.. ஹாஹா சமத்துக்குட்டி :))

  புத்தாண்டு தீர்மானம் நானும் எடுப்பதில்லை :))

  பதிலளிநீக்கு
 14. குட்டீஸை வைத்து நீங்க ரெண்டுபேரும் விளையாடுறீங்கனு எழுதாத டைரி சொல்லுது! (இதுல என்ன வச்சி வேற முரளி ஒரு போடு போட்டுவிட்டுருக்கார்...அன்பின் மிகையன்றி வேறில்லை!) த.ம.8

  பதிலளிநீக்கு
 15. * கிளிக்கு சாக்லேட் கொடுக்கிற பாஸிபிலிட்டியையே நான் யோசிச்சது இல்லை!

  * நத்தை மேல் எனக்கு பொறாமையா இல்லை! நத்தையை நினைத்தால் பரிதாபமா இருக்கு!

  * இங்கே, அதான் அமேரிக்காவிலே தும்மினால் "ப்லெஸ் யூ" சொல்லுவாங்க இல்ல? ஏன் இதுக்கெல்லாம் "ப்லெஸ்" பண்ணுறீங்கனு நான் கேக்காமல் விடுவேனா? அப்போ இதேபோல் ஒரு விளக்கம்தான் சொன்னாங்க. அப்பாட உங்களுக்கு தெரிந்த விசயம் ஒன்னு ரெண்டு நாங்களும் கேள்விப்பட்டு இருக்கோம். :)

  -----------------

  பழங்கள், காய்கறி எல்லாம் விரைவில் "டீகம்போஸ்" ஆயிடுமே? இப்படி கஷ்டப்பட்டு வேலைப்பாடு எல்லாம் செய்தபிறகு அதை உடனடியாக சாப்பிடுவது? என் கவலை எனக்கு! :)

  ----------------

  நியு இயர் ரெஸொலுஷன் எல்லாம் எடுப்பதில்லை! I certainly used to take some resolution but not on new year day. New year day is just another day, for me! :)

  பதிலளிநீக்கு
 16. இப்படியெல்லாம் கூடவா கார்விங் செய்யமுடியும்?
  புத்தாண்டு தீர்மானமா அப்படின்னா?

  சுட்டிப்பொண்ணின் சுட்டி சூப்பர்.
  என்னோட மடிக்கணினியில ஓவியா இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு கீயையே தனியாக எடுத்து விட்டாள்

  பதிலளிநீக்கு
 17. கிளி சாக்லேட் கேக்கும்னுதான் நான் கிளியே வளர்க்கல. புட் கார்விங் ரசிக்க வைத்தது. கடைசியில் அந்தப்பாடலின் நடனம் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா..! என்னவொரு வெட்டு..

  பதிலளிநீக்கு
 18. அன்புச் சகோதரி,

  ‘கைப்பை’ நோட் பேட் குறிப்பெடுக்க வேண்டியது.
  மகிக்கு தெரிந்தது இந்த மதிக்கு தெரியவில்லை... தாய் எட்டடி... குட்டி பதினாறு அடி...! அம்மாவிடம் எவ்வளவு பயம்?

  ஆப்பிள் உலகம் அழகாக!
  தர்பூசணியில் தரணியா? தாரணியா?
  பப்பாளியில்(?) டெலஸ்கோப் மீனா?
  அனைத்தும் அருமை!
  அனைத்தையும்விட புத்தாண்டு தீர்மானங்கள் நல்ல ஆலோசனை. நானும் தங்கள் கட்சிதான்.
  -நன்றி.

  பதிலளிநீக்கு
 19. டைரி அழகா எழுதுகிறாய் வாழ்த்துகள்டா. இனி புத்தாண்டு சங்கற்பம் செய்வதில்லை என்பதுதான் என் சங்கற்பம்.

  பதிலளிநீக்கு
 20. சகோ !

  எனக்கு தும்மவே பயமா இருக்கு ! ( நான் அலர்ஜி கேஸ் வேற !!! )

  கைப்பை சுவாரஸ்யம்... உங்களுடையது இல்லையா... ?!!!

  ஆயக்கலைகள் எத்தனை ?....

  சகோதரர் ஜோசப் விஜிக்கு நியூ அசைன்மென்ட் ?!!!!

  மத்தப்படி...இன்னைய வாழ்க்கையே " காசு பணம் துட்டுன்னு " தானே போயிடிச்சி !!!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 21. வீட்டில் வளர்க்கும் செல்லக்கிளிகளுக்கு சாக்லேட் கொடுக்கக்கூடாதாம்.இது குழந்தைப் பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் இடம் குடுக்கக் கூடாது என்பார்களே அது மாதிரியா?

  நத்தை தூங்குவது பொறாமையாகத் தான் இருக்கிறது. என்றாலும் வேஸ்ட் என்று கில்டியைதான் இருக்கும். இதயம் நிற்பதற்கு bless u
  சொல்லுவாங்க வருண் சொல்வது மாதிரி
  fruit கார்விங் அருமைடா மொத்தத்தில் அம்முவோட handbag is really
  worthfull என்று சொல்லலாமா usefull lஎன்பதை ஐ விடவும். ஹா ஹா ....அருமைடா அம்மு அசத்துடா அச்சத்துடா.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.அம்மு ...!
  எல்லா நலன்க்ளும் பெற்று இனிதே வாழ்க ...!

  பதிலளிநீக்கு
 22. கைப்பை அருமை!

  எந்த விலங்றிகுமே சாக்கலேட் கொடுக்கக் கூடாதுதான் சகோதரி!

  வெஜிடபிள் அரெஞ்ச்மென்ட்/கார்விங்க் கல்லூரிக் காலத்தில் போட்டிக்குச் செய்ததுண்டு. பாகர்காயில் முதலை வடிவம், புடலங்காஅயில் படகு, கோசில் அன்னப் பறவை, என்று பலவிதமாகச் செய்ததுண்டு - கீதா...

  பதிலளிநீக்கு
 23. தீர்மானம் ஏதும் போடாமல் இருங்க மக்களே என்று தாங்கள் போடுவதும் ஒரு தீர்மானம்தானே?

  பதிலளிநீக்கு