திங்கள், 1 டிசம்பர், 2014

லிங்கா ப்ரோமோ-கே.எஸ்.குமார்-டி.அர்.பி கண்ணீர்!

                                      ரஜினியின் லிங்கா படத்திற்காக ப்ரோமோ சன் டி.வி யில் ஒளிபரப்ப இருகிறார்கள். அதற்கான விளம்பரத்தில் கண்ணை கசக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.





                                       தமிழின் முதல் emotional intelligence (உணர்வுகளை சரியாக கையாள்வதில் புத்திசாலிதான். சரியா?)  என்ற விளம்பரத்தோடு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் வந்த புத்தகம் சோம.வள்ளியப்பன் எழுதிய இட்லி இருங்கள் என்றொரு புத்தகத்தை வாசித்து, அதனை பின்பற்றி நிறைய நிம்மதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்(கண்ணு போட்டுடாதீங்கப்பா:)) வாசிப்பதை விட எதையும் பின்பற்றினால் தானே பயன். பதின்ம வயதில் இருக்கும் இருபாலருக்கும் சரியான வழிகாட்டியாக அந்த நூல் இருக்கும். இப்போ அது தொடர்ப்பா பலநூட்கள் வந்துவிட்டன. ஆனா நான் பேச வந்த விஷயம் என்னன்னா, அந்த புத்தகத்தின் தொடக்கத்தில் உணர்வுகளை கையாள்வதன் அவசியம் பற்றி நடைமுறை எடுத்துக்காட்டு சொல்ல,  வள்ளியப்பன் பயன்படுத்திய நிகழ்வுகளில் என் நினைவில் இருக்கும் இரண்டு. மைக் டைசன் தன் சக போட்டியாளரை காதை கடித்தது. ஏதோ ரகசியம் சொல்லிருப்பர்னு நினைக்காதீங்க, நெசமாவே காதை கடிச்சுத்துப்பிட்டார். நிகழ்வு இரண்டு வைகோ மேடைக்கு மேடை அழுவதையும் குறிப்பிட்டிருந்தார்.

                         உணர்வுகளை கையாளத் தெரியாதவர்கள் தான் பொதுவெளியில் அழுவார்கள் என்று முன்பு நம்பப்பட்டது. எங்கள் பள்ளி நாட்களில் என் தோழிகள் யாரேனும் அழுதால் வேணுகோபால் சார்"கண்ணை துடை, இப்படியா ஆண்பிள்ளை போல் அழுவது" என்பார். உடனே அந்த பெண் சிரித்துவிடுவாள். தோற்றபின் அழுவது கோழைத்தனம். தோல்வியின் வலியை உன்னால் தாங்க முடியவில்லை என்பதை விட இனி நீ வெல்லவே முடியாது என நம்பிக்கை இழந்துவிட்டதாக அது காட்டும் என்றெல்லாம் என் அப்பா சொல்லியபடியே இருப்பார். இப்போ காலம் மாறி போச்சு. 

                     உணர்வுகளை சரியாக கையாளத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருகிறார்கள். எப்போ கண்ணீர் விடவேண்டும், எப்படி கண்ணீர் விடவேண்டும், எத்தனை பேருக்கு முன்னால் கண்ணீர் விடவேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு டி.அர்.பி. கண்ணீர் என புதுவகை பெயரே இருக்கிறது. அதை பார்க்கிற மக்கள் விடுகிற கண்ணீர் இருக்கிறதே அதை பார்த்து இவர்கள் அட, work out ஆகிடுச்சே என்றெல்லாம் சந்தோசம் பட முடியாது. ஏனென்றால் இந்த கண்ணீர் எல்லாம் டி.அர்.பி மட்டுமே எகிறும். ஆனாலும் கே.எஸ்.இதற்கெல்லாம் கண்ணீரை வீணாக்க வேண்டியதில்லை. ரஜினி தான் வழக்கம் போல 'நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்குகிறேன்" என்று அரசியல் திரிகிள்ளி இருக்கிறாரே!

24 கருத்துகள்:

  1. "//வாசிப்பதை விட எதையும் பின்பற்றினால் தானே பயன். //"

    ரொம்ப சரியா சொன்னீங்க சகோ. வாசிக்கிறது சுலபம். ஆனால் அதை பின்பற்றுவது?
    நான் எல்லாம் கொஞ்சம் நுனிப்புல் மேய்கிறவன். இந்த பழக்கத்தை மட்டும் எப்படியாவது மாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நாடகக் கண்ணீர் சிந்தி
    நாட்டலாம் என நினைக்க
    காரியம் சாதிக்கலாம்....
    உண்மை வரும் பின்னே
    உன் தோலுறித்து காட்ட
    உன்னை விட்டார் நம்பினோர்...
    நிஜம் நிற்கும் தலைநிமிர்ந்து...!!!

    இந்த மாதிரி நாடகம் போடுறவங்களைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வரும்.

    அதுல வந்தது தாங்க மேலே உள்ள கவிதை..

    பதிலளிநீக்கு
  3. டி.ஆர்.பி கண்ணீர் - நல்லாயிருக்கே இந்தப் பெயர்...:))

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது மிகச் சரி
    இப்போதெல்லாம் ரஜினி அரசியல் குறித்துப் பேசுவது
    எரிச்சலூட்டக் கூடியதாகத்தான் இருக்கிறது
    இனிமேல் வருவேன் எனச் சொன்னாலும்....

    பதிலளிநீக்கு
  5. ஆஹா தெளிவான அலசல்...இவ்ளோ இருக்கா ...இதுல...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அக்கா
    வாசிப்பதை விட எதையும் பின்பற்றினால் தானே பயன். கண்டிப்பாக அக்கா வாசித்தலின் வெற்றியே பின்பற்றுவதில் தான் இருக்கிறது. டி.ஆர்.பி கண்ணீர் புதுவகையான கண்ணீராகத் தெரிகிறதே! இப்படி பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு நம்ம ஆளுங்க விட்ற கண்ணீரை எல்லாம் சுத்திக்கரித்து தமிழ்நாட்டுக்கு சப்ளை பண்ணினா தண்ணீர் பஞ்சமே வராது. சினிமா காரங்க மக்களைக் கவர்வதற்கு ரூம் போட்டு யோசிப்பாங்க போல. பகிர்வுக்கு நன்றிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  7. இட்லியாக இருங்கள் என்பதுதான் தலைப்பு என்று நினைவுக்கு வருகிறது ,சரியா ?
    த ம 2

    பதிலளிநீக்கு
  8. ஆடு நனையுதுன்னு Oநாயி அழுதுச்சாம்... என்னத்தச் சொல்ல வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  9. அட இது என்ன ட்ராமா? படம் ஓட்ட எப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு! :)

    பதிலளிநீக்கு
  10. "டி ஆர் பி கண்ணீர்" புதுசா இருக்கே.

    பதிலளிநீக்கு
  11. வாம்மா வா... இப்படித்தான் சகலமும் எழுதணும். சிலர் நான் சினிமாவே பாக்குறுதில்ல னு சொல்லும்போது, “நீங்க நாட்டவிட்டுப்போயி எத்தன நாளாச்சு?”னு கேட்கணும்னு தோணும். நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி, மக்கள் எதிலெல்லாம் ஈடுபடுகிறார்களோ அதில் நாமும் - ஈடுபாடு இல்லாவிட்டாலும்கூட -கவனம் செலுத்தத்தான் வேண்டும். நீ இதுபோல பொது மேடையில் நடக்கும் (சினிமாவிற்கு அப்பாற்பட்ட) நடிப்பை உன் பாணியில் எழுதியிருப்பது பெருமகிழச்சியளிக்கிறது. அன்பு கூர்ந்து தொடரவும். வாழ்த்துகள்.. வணக்கம்..நமஷ்கார்..ஆய்புவான்.

    பதிலளிநீக்கு
  12. திரைக்கு வெளியேயும் ஒரு திரைப்படம்

    பதிலளிநீக்கு
  13. ரஜினி இனி அரசியல் கட்சி ஆரம்பிக்கறேன்னு அறிக்கை விட்டாலும்கூட ஜனங்க ‘தமாஷ் பண்ணாதீங்க தலைவா’ன்னு சொல்லிருவாங்க. ஹா... ஹா.. ஹா... ‘வழியறது’ன்னு ஒரு காலத்துல சொல்லப்பட்டது ‘ஜொள்ளு விடறது’ன்னு பின்னால மாறின மாதிரி ‘முதலை கண்ணீர்’ இப்ப டிஆர்பி கண்ணீரா மாறினது ரொம்ப அழகும்மா.

    பதிலளிநீக்கு
  14. லிங்கா டி வி ரைட்ஸை வாங்கியது ஆளுங்கட்சி ஆதரவில் நடத்தப்படும் ஜெயா டி வி!


    *****Rajinikanth starrer `Lingaa' satellite rights has been acquired by Tamil channel Jaya TV for Rs 32 crores, a record for any South Indian film***

    பெரிய படங்கள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான டிவிக்கே விற்கப்படுகின்றன.

    அப்படி ஆளுங்கட்சி ஆதரவிலிருக்கும் டி விக்கு ரைட்ஸ் விற்கப்படவில்லை என்றால்?

    விஸ்வரூபம் ரைட்ஸ் முதலில் ஜெயா டி விக்கு விற்கப் பட்டு பின்னால், பின்வாங்கப்பட்டு, விஜய் டிவிக்கு விற்கப் பட்டதால்தான் விஸ்வரூபம் ரிலீஸின்போது பிரச்சினகள் வெடித்தபோது தமிழ்நாடு அரசிடம் எந்த உதவியும் பெறமுடியாமல் அடி வாங்கியது என்கிறார்கள்..ஜெயா டி வி இடம் ரைட்ஸ் விற்கப்பட்டு இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. சட்டம் விஸ்வரூபம் ரிலீஸ்க்கு ஆதரவாக நின்று இருக்கும் என்கிறார்கள்.

    ஆக, சட்டம் எப்படி செயல்படும் அல்லது செயல் படுத்தப்படும்? என்றால் டிவி ரைட்ஸ் யாருக்கு விற்கப்படுகிறதோ அதைப் பொறுத்து..

    இதில் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதி/அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல!

    ஜெயா டி வி க்கு கொடுப்பதால் ரஜினிக்கு என்ன ஆதாயம்? லிங்கா படத்திற்கு வரி விலக்கு வழங்கப்படலாம்! நாளைக்கு ஏதாவது ஒரு கோஷ்டி பிரச்சினையை கிளப்பினால் சட்டம் லிங்கா பக்கம் நிற்கும்.

    ஆக, அ இ அ தி மு க ஆட்சி நடக்கும்போது, ரிலீஸ் ஆகும் லிங்காவை வைத்து சம்பாரிக்கப் போவது ஜெயா டி வி தான், சன் டி வி அல்ல என்பதுதான் உண்மை நிலவரம்.

    கே எஸ் ரவிகுமார் இதுவரை பொதுமேடையில் நடிச்சு நான் பார்க்கவில்லை. பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

    சிவகார்த்திகேயன் அவர் அப்பாவை நினைத்து அழும்போது எல்லாரும் "நடிக்கிறான் பாரு"னுதான் சொன்னாங்க! அதுவும் டி ஆர் பி கண்ணீர்தானா? இல்லைனா உண்மையிலேயே அழுதாரா? என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

    அதேபோல் இங்கே கே எஸ் ரவிகுமார் கண்ணீருக்குக் காரணம் என்னனு இன்னும் தெரியலை. தான் எடுக்க முயன்ற ஜக்குபாய், ராணா னு ஒவ்வொரு படமா எடுக்க முடியாமல்ப் போகுதேனு தன் "கெட்ட நேரத்தை" நினைத்து நொந்துபோயிக் கூட உண்மையிலேயே அழுது இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கண்ணீர் உண்மையா பொய்யா என்பது ரெண்டாவது விஷயம். but வருண் முன்னெல்லாம் பொது இடங்களில் ஆண்கள் அழுக கூடாது என்ற கருத்து இருந்தது. பெண்ணுமே இப்படி பொதுஇடத்தில் அழுவது அவளது வீக்னெஸ்சை காட்டுவதாக உளவியல் சொல்கிறது. இப்போ எல்லோரிடமும் நேர்மை, கொள்கைபிடிப்பு இதுபோன்ற வார்த்தைகளே பிழைக்கத் தெரியாத தனம் என்கிற எண்ணம் பரவி இருக்கு. அதனால் தான் அப்படி நடப்பவர்கள் மென்மையானவராக இருந்தால் பிழைக்கதெரியாதவன் பட்டமும், கொஞ்சம் கடுமையானவராக இருந்தால் திமிர்பிடித்தவன் பட்டமும் சுமக்க வேண்டியதாக இருக்கிறது! எல்லோருமே நான் உட்பட நீங்க நீங்கலாக தேர்ந்த நடிகர்கள் ஆகிவிட்டோம்!

      நீக்கு
  15. அந்த அழுகைக்கும் ஒரு விலை உண்டு. சொந்த வீட்டிலாவது நடிக்காமல் இருப்பார்களா தெரியவில்லை.
    அருமையான அலசல் சகோதரி

    பதிலளிநீக்கு
  16. அக்கா செம்ம்ம்மமயாாா கலக்குறீங்க போங்க...

    பதிலளிநீக்கு
  17. டி.ஆர்.பி. கண்ணீர் !! அருமை மைதிலி..கே.எஸ். ரொம்ப விஜய் டிவி பாத்துட்டாரோ :P

    பதிலளிநீக்கு
  18. டி ஆர் பி க்ண்ணீர்தான் இப்ப எல்லா சேனல்களிலும், ஊடகங்களிலும் ஃபேமஸ் ஆகியுள்ளதே! விஜய் டிவி ஆளுங்க ஆரம்பிச்சதுதான்....

    பதிலளிநீக்கு
  19. இதுவும் ஒரு மார்கெட்டிங்க் டெக்னிக்....சகோதரி இப்படி எல்லாம் பிசிசனஸ் பண்ண டெக்னிக் இருக்கும் போது எதுக்குங்க தொழிலதியர் பயிற்சி எல்லாம் பள்ளிகளில் ஹஹ்(உங்க இதுக்கு அப்புறம் உள்ள ப்திவை படிச்சுட்டு வந்த பாதிப்புதான் ஹாஹ்ஹ)

    பதிலளிநீக்கு