செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஆதரவுக்கு நன்றி சகாஸ்!

       



    
          
வணக்கம் நட்புகளே! சென்ற பதிவு ஓர் உளவியல் பரிசோதனை என்றால் நம்புவீர்களா:)  ஆம். ஒரு முறை ரீடர் டைஜஸ்ட் புத்தகத்தில் self-estimation பகுதியில் பத்து கேள்விகளும், இது அல்லது அது பாணியில் இரண்டு விடைகளும் கொடுத்திருப்பதை முயன்று பார்த்தேன். இது நடந்து பல வருடங்கள் ஆன பின்னாலும் அதில் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் நினைவிலேயே தங்கிவிட்டன.


         ஒன்று தண்ணீரில்  தவறி விழுந்துவிட்ட சிறுபூச்சிகளுக்காக மிகவும் வருந்துவீர்களா? ஆம் என்றால் நீங்கள் ஒரு பெண் என்றது விடை. பதின்மத்தின் இறுதியில், வாழ்க்கை எனும் சுழலில் சிக்கும் அல்லது முகம் கொடுக்க துணியும் முன், இதை படித்தபோது எனக்கு தோன்றியது, அப்போ பசங்களுக்கு ஈவு இரக்கமே இருக்காதோ! அடுத்த வினா ஹோட்டலுக்கு சென்றால் உணவுபட்டியலில் இருக்கும் உணவு வகைகளில் புதிய பெயர்கள் ஆர்டர் செய்து முயற்சிப்பீர்களா? ஆம் என்றால் நீங்கள் பெண் என்றது. என்னென்றால் தான் சமைப்பதையே அங்கு ஆர்டர் செய்வது அவளுக்கு ஈகோ பிரச்சனை, மட்டுமல்லாது புதிய சுவைதேடும் ஆர்வமும், அதில் கொஞ்சம் கூடுதல் குறைதல் இருந்தாலும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டுவிடும் சுபாவம் பெண்களுக்கானதாம். 

           தெரியாத ஒன்றை ஆர்டர் செய்வது ரிஸ்க் என்றே ஆண்கள் பெரும்பாலும் நினைப்பார்கலாம். தெரியாத ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு ஏன் மாட்டிகொள்ளவேண்டும் என்ற எண்ணம் பழக்கப்பட்ட உணவுதாம்பா எனக்கு சரி என்ற எண்ணத்தை அவர்களுக்கு தரும் என்கிறது ஆய்வு. இதை என்னொரு இடத்தில apply செய்து பார்க்கலாம். திருமணம் ஆனபின் பெரும்பாலான ஆண் தன் சொந்த இடத்தில் இருக்க, பெண் புதிய இடத்தில் விரும்பி, அட்ஜஸ்ட் ஆகும் தன்மையையும் குறிக்கிறது இல்லையா? சற்றே பொங்கல் பணிகள் முதுகொடிய வைத்தததால் உடனே இதை தெரிவிக்க முடியவில்லை. மன்னிசூ!!! 

       சென்ற பதிவில் ஸ்ரீராம் சகோ, மற்றும் ஜீவன் சகாவை தவிர மற்ற எந்த ஆணும் இப்படியான கம்போ ரிஸ்க் எடுக்கவில்லை. ஜீவன் சகா அதிசயத்திலும் அதிசயமாக எப்போதுமே என் விருப்பு வெறுப்பு அலைவரிசையில் இதுவரை ஒத்துப்போகிறார். இருவரும் ஒரு வயதினர் ஒரே மாதிரியான கல்வி, மற்றும் புறச் சூழலில் வளர்ந்தது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றபடி தோழிகள் அனைவரும் போட்டிபோட்டு கம்போ பரிந்துரை செய்தனர். டி.டி. அண்ணா, கில்லர்ஜி அண்ணா எல்லோரும் பதிவை பார்த்து மெரிசலாக, வருண் மிக தெளிவாய் ரீடர்ஸ் டைஜெஸ்ட் எப்படி சொல்லியிருந்ததோ அதையே கூறி, அந்த புத்தகத்தின் சைகாலஜிஸ்ட் க்கு பூங்கொத்து கொடுத்துவிடலாமா என யோசிக்க வைத்திருந்தார். சென்ற பதிவையும் படிச்சுட்டு உங்க கருத்தை தட்டுங்க. தெரிஞ்சுக்க ஆவலாய் இருக்கிறேன். சென்ற பதிவில் நடந்த ஜாலியான சின்ன ஆய்வில் கலந்துகொண்டு , ஆதரவளித்ததற்கு நன்றி சகாஸ்:)

22 கருத்துகள்:

  1. விரைவில் இது போல் ஒரு போட்டி வைத்து விடுவோமா...?

    பதிலளிநீக்கு
  2. ஆஹா!! இப்படி ஒரு விசயமா அந்தப் பதிவில்!! :)
    அப்போ என் வகுப்புத் தோழர்கள் செய்தது?!!
    விதம் விதமா கலக்குறீங்க டியர்...

    பதிலளிநீக்கு
  3. சென்ற பதிவு படிக்கவில்லை... படித்து விடுகிறேன்.....

    பதிலளிநீக்கு
  4. தண்னிரில் இன் லா விழுந்து விட்டால் சந்தோஷப்படுவீங்களா?

    ஆமாம் என்றால் அது பெண் இல்லையென்றால் ஆண் சரிதானே?

    பதிலளிநீக்கு
  5. ஹோட்டலுக்கு சென்றால் உணவுபட்டியலில் இருக்கும் உணவு வகைகளில் புதிய பெயர்கள் ஆர்டர் செய்து முயற்சிபீர்களா? ஆம் என்றால் நீங்கள் பெண் என்றது.

    ஏன்னென்றால் உணவு சரியில்லை என்றால் கணவன் தலையில் கட்டிவிடலாம். அதுமட்டுமல்ல அவன் நிச்சயம் நல்ல உணவைதான் ஆர்டர் பண்ணி இருப்பான் அதை அவனிடம் இருந்து தட்டிப்பறித்து விடலாம் அல்லவா

    பதிலளிநீக்கு
  6. சகோதரி! அது ஒரு உளவியல் ஆய்வா இருக்குமோனு கீதாவும்,துளசியும் பேசிக் கொண்டு......முதலில் கருத்திட்டு பின்னர் அந்த உளவியல் ரீதியான கருத்து ஒன்று இட அது செல்லாமல் சுற் றி சுற்றி வர.....அலுப்பாகி போடாமல் போயாச்சு...

    சரி இப்ப விஷயத்துக்கு வர்ரோம்....தண்ணீரில் தவறிப் போய் பூச்சி விழுந்தால் ஆம்! துடிப்பது உண்டு - கீதா. ஸோ நான் பெண் என்பது நிரூபணம்!! ஹஹாஹ்ஹ்ஹஹ்

    அடுத்து ஹோட்டலில் வித்தியாசமாகப், புதிதாக இருந்தால் கண்டிப்பாக ஆர்டர் செய்வதுண்டு. அதே சமயம் வீட்டில் செய்வதையும் ஆர்டர் செய்வதுண்டு ஹோட்டலில் அதே டிஷ்ஷை எப்படிச் செய்கின்ரார்கள் என்று தெரிந்து கொண்டு வீட்டில் செய்ய. புதியது ஆர்டர் செய்வது என்பது..வீட்டில் செய்து போரடிப்பதால் இல்லை.....புதிய புடிய டிஷ்களைத் தெரிந்து கொண்டு மகனுக்குச் சமைத்து போட...அவனும் புதிதாய் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுபவன் என்பதால்.....நானும் அவனும் சேந்தால் புதிதாய் என்ன இருக்கு என்று பார்ப்போம்...எங்களின் கோம்போ லிஸ்ட் பெரிது அதனால்தான் சொல்லவில்லை....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாளாகிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    சரி பொங்கலுக்கு(சர்க்கரைப் பொங்கல்) உங்கள் ஸ்பெஷல் கோம்போ என்னங்க?!!!! அஹஹ்ஹ்

    பதிலளிநீக்கு
  7. இன்று கீதா உங்கள் அன்பு அண்ணன் கவிஞர் முத்துனிலவன் ஐயாவைச் சந்திப்பதாக உள்ளார் சென்னையில் புத்தகக் கண்காட்சியில், மாலையில்.

    பதிலளிநீக்கு
  8. அடிக்கடி ஹோட்டலுக்கு போறதை எப்படி இவ்வளவு நாசூக்கா சொல்றீங்க சகோ.

    பதிலளிநீக்கு
  9. :) மறுபடி ஒரு முறை போன பதிவைப் படிச்சுட்டு வந்து கமெண்ட்டறேன்ங்க! :) நீங்க சொன்ன கேள்விகள்ல முதலுக்கு பதில் வருத்தப்படுவேன், ஸோ நான் பெண் என்பது தெரிந்துடுச்சு. ஆனா ஹோட்டலுக்குப் போனா புதிய உணவுகள் ஆர்டர் செய்வேனா என்பதுக்கு என் பதில், "நோ வே!!" தெரிந்த உணவையே சாப்பிட்டுக்கலாம் என்பதே என் சாய்ஸ்! அப்ப...இதுக்கு என்ன அர்த்தம்?? ஙே..ஙே...! ;) :)

    இப்பவும் அப்பப்ப முகப்புத்தகத்தில வரும் இந்த மாதிரி 10 கேள்விகளை நானும் என் கணவரும் மாற்றி மாற்றி கேட்டு எஸ்டிமேஷன் போட்டுக்கொள்வதுண்டு..என்ன ஒண்ணு, எனக்கு அடுத்த நிமிஷமே அந்த எஸ்டிமேஷன்/ரிஸல்ட் எல்லாமே மறந்துரும்! ஹிஹி... :)

    பதிலளிநீக்கு
  10. நாம் ஹோட்டல் லுக்கு போனால் கொஞ்சம் பயம் தான் எப்படி இருக்குமோ என்று என் கணவர் பார்த்து பார்த்து புதிது புதிதாக ஓடர் பண்ணுவார் நான் கொஞ்சம் பயந்த சுபாவம் ஹா ஹா ....இல்லை சாப்பிட்டு விட்டு அதை முடிந்தால் ட்ரை பண்ணுவேன் எங்க ஸ்டைல் லுக்கு( எங்கள் முறையில் ) இப்போ எல்லாம் இல்லை கொஞ்சம் தூரமாகவே நின்று கொள்வோம்.மற்றபடி எனக்கு சுகர் தோசை பிடிக்கும். ம்..ம்.. சரி புதிது புதி தாக கலக்குங்கள் அம்மு !

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மு தங்களுக்கும் குடும்பத்தோர் அனைவருக்கும்....!

    பதிலளிநீக்கு
  11. அதுசரி நீங்க மனோதத்துவம் படிக்க நாங்கதான் கிடைச்சோமா ?

    எனது பொங்கல் பதிவு - மோதகமும், அதிரசமும்.
    தமிழ் மணம் - 4

    பதிலளிநீக்கு
  12. போனபதிவுக்கு கருத்துப்போட்டுவிட்டு
    அவசரமாக அடுத்தது போய்டேன் பிறகுதான்
    தெரிந்தது கருத்துகள் போய்ச்சேரவில்லை
    என்பது , எப்ப்டிப்பா முடியுது கருத்துக்கள்
    ஒவ்வொருவருக்கும் போட்டுவிட்டு
    பதிவும் போடமுடியுது.எண்ணத்த பாத்தீங்ளா?
    சுத்திப்போட்டுக்கோங்க.

    பதிலளிநீக்கு
  13. ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆர்ட்டிக்கிள் எழுதியவர், ஏதாவது ஒரு ஆண்கள், பெண்களிடம் எடுத்த "டேட்டா கலக்சன்" வைத்துத்தான் இதை எழுதி இருப்பார்னு நினைக்கிறேன். அதனால்தான் நம்ம மக்களிடமும் அவர் சொன்னதுபோலவே "IIIr trend" இருக்கு. In general this is the trend. There are exceptions of course for anything- we do see that here too. எப்படியோ உங்க சோதனை வெற்றியடைந்ததுக்கு வாழ்த்துக்கள், மைதிலி! :-)

    பதிலளிநீக்கு
  14. ஓ... போன பதிவில் நாங்கள் வெள்ளை எலிகளா!!

    :)))))))

    ஹோட்டலுக்குப் போனால் நானும் புதிய ஐட்டங்கள் முயற்சி செய்வேன்.

    இனிய பொங்கல்நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அவ்வப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பது வழக்கம்.ஒரு முறை ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஒரு புகைப்படம் தொடர்பாக குறை இருப்பதாகக் கூறிக் கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள் தெளிவான பதிலைத் தந்து அது குறை இல்லை என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். மிகவும் கவனமாக, பிழையின்றி வெளிவருவது ரீடர்ஸ் டைஜஸ்ட். அவ்விதழிலிருந்து நீங்கள் நினைவுகூர்ந்து பகிர்ந்தமை ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  19. மதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்...

    நலமா? மதுரையில் சந்தித்தது. இன்றுதான் வர முடிந்தது.

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு