ஒரு வாரம் ஆகிவிட்டது கயல் படம் பார்த்து. ஆனால் பிரபு சாலமன் இந்த முறை ஏனோ என்னை இத்தனை சங்கடத்துக்கு ஆளாக்கி இருக்கிறார்.
புலம்புவதற்கு முன் ஒரு டிஸ்கி; இந்த பதிவை சொடுக்கிபாருங்க. இதுவரை நான் இட்ட பின்னூட்டங்களிலேயே கடுமையான வார்த்தைகளை இதில் தான் பயன்படுத்தியிருக்கிறேன். இது என் நண்பர்கள் அல்லாதோர் தளத்தில் வந்திருந்தால் இப்படி பின்னூட்டம் இட்டிருப்பேனா என்பது சந்தேகமே:)
படம் தொடங்கும் போது thank you Jesus என்ற வாசகத்துக்கு பின் god எனும் லோகோ வுடன் கூடிய கம்பெனி பெயர் வருகிறது. தேனாண்டாள் பிக்சர், ராஜராஜேஸ்வரி பில்ம்ஸ், ஆபிராமி துணை என்பது போல இயல்பான ஒன்று தான். இன்னொன்றும் புரிந்தது. பிரபுசாலமனின் எல்லா படத்தையும் தியேட்டரில் பார்த்திருந்தாலும் இந்த நான்காவது படமான கயல் படத்தை தான் இப்படி பெயர்போடும் போதே பார்க்கிறேன் போல?? பொதுவாக கதை எழுதுபவர், தன்னை பாதித்த ஏதோ ஒரு அனுபவத்தை, அவரது மொழியில் பதிவு செய்கிறார். அதனால் கதை மாந்தர்கள் பேசும் மொழி பெரும்பாலும் கதை ஆசிரியரின் மொழியாகவும், கதையில் உலாவும் மனிதர்களின் பெயர்கள், எழுபவரின் சுழலில் வாழ்பவர்களின் பெயர்களாகவும் இருக்கும். நாஞ்சில் நாடனின் கதைகளில் கும்பமுனி, குற்றாலம் பிள்ளை, பூனைகண்ணன் என்றும், இந்திரா சௌந்தரராஜன் கதைகளில் அனந்தபத்மநாபன், ரங்கநாயகி என்றும் இன்னும் பற்பலவும் உங்கள் நினைவுக்கு வரலாம். அதுபோல தான் பிரபு சாலமன் தனது இந்த படத்தில் பெரும்பாலான இடங்களில் ஆரோன், ஆப்ரகாம் என்பது போன்ற பெயர்களை பயன்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன்.
இவ்வாறெல்லாம் என்னை நான் மாற்றிக்கொண்டு,தேற்றிக்கொண்டு, படம் பார்க்கத் தயாரானேன். முதல் காட்சி கழுத்தில் கிடக்கும் சிலுவையில் இருந்து நகர்கிறது கேமரா. தேங்காய் உடைத்தோ, கற்பூரம் காட்டியோ தொடங்கப்படும் மற்ற பல சினிமாக்களை நினைத்துக்கொண்டேன், என்றாலும் கிடைக்கிற சின்ன சின்ன சந்தில் எல்லாம் ஜீசஸ் படத்தையோ, சிலவையையோ கேமிரா படம்பிடித்த படி செல்கிறது என்றே எனக்கு தொன்றிக்கொண்டிருந்தது. சுனாமி பேரலை அடித்துசெல்கிற காட்சியில் கூட ஜீசுஸ் படம் கொண்ட காலேண்டர் அருகே நிற்கும் நபர் இழுத்துசெல்லப்படுகிறார்.
ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை. எனவே எனக்கு நன்கு புரிகிறது. நான் ஒரு இந்துவாக அந்த படத்தை பார்க்கவில்லை. எனக்கு இந்து சமய வழிபாடுகளில் நம்பிக்கையும் இல்லை. அதனால் படம் நெடுக இப்படி சிலுவையை காட்டுகிறவர், சாதிமுறைகளை பகடி செய்திருப்பது கேலிகூத்தாக இருக்கிறது என்பதை சொல்ல எனக்கு தகுதி இருப்பதாகவே உணர்கிறேன்.
கடந்த மூன்று படங்களிலும் இப்படி காட்சி அமைக்காத இயக்குனர், இந்த படத்தில் இப்படியான காட்சி அமைக்க காரணம், அவரது பக்தியா? படத்தின் வெற்றி, தோல்வி குறித்த பயமா? என்றெல்லாம் சிந்திக்கும் போது மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. சென்ற பத்து ஆண்டுகளாய் அந்நிய முதலீடு, பொருளாதார பின்னடைவு, தனியார் மயம் என பலவாறு சிந்தித்த மக்களிடையே, காணாமல் போயிருந்த இந்துத்துவா, மதசார்பின்மை போன்ற வார்த்தை சமீபத்தில் அதிகம் பயன்படுத்தப் படுவது என்னையும் இப்படி யோசிக்கவைத்து, பிரபுவையும் இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறதோ? சிறுபான்மை சமுதாயத்தினர் அனைவரையும் இப்படியான தற்காத்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை காட்டும் கண்ணாடியாக பிரபுசாலாமனின் கயல் இருக்கிறது. என்னால் இதுகுறித்து ஒரு தீர்வுக்கு வராமல் படத்தின் வேறு குறை,நிறைகளை பற்றி இப்போது பேசமுடியவில்லை. இது படத்திற்கு ஒரு நட்டமோ இல்லையோ, நாட்டின் பிற பிரச்சனைகளை பற்றி மக்களை சிந்திக்கவிடாமல் இப்படி அலைய வைத்திருப்பது கண்டிப்பாக மோடி அரசின் சாதனை தானே?
மற்றொரு டிஸ்கி;
என் முகமூடிகளை உரித்து உரித்து பார்த்துவிட்டேன். இது தான் எனக்கு தோன்றுகிறது. என்றாலும் மைதிலி தனக்கு தானே justify செய்து கொள்கிறாளோ என்றும் அவள் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பதிவின் இடையே ஏதேனும் முகமூடி தென்பட்டால் தயங்காது அதை என் முகத்துக்கு நேரே காட்டுங்கள். சிந்திய சொற்கள் தானே ஒருவரது அளவுகோள். என்னையே ஆய்ந்து ஆய்ந்து களைப்பாக இருக்கிறது. உங்களுக்கு ஏதும் புலப்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான். தவறென்றால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் இல்லையா? நன்றி நண்பர்களே!
தவறைத்தவறென்று சொல்லும் துணிவு எல்லோருக்கும் வருவதில்லை அது தங்களுக்கு இருக்கிறது பாராட்டுகள் சகோ புதிய பதிவு எ.எ.எ.
பதிலளிநீக்குநன்றி அண்ணா. என் தவறு இருந்தாலும் சுட்டிக்காட்ட சொன்னேன்:)
நீக்குகண்டிப்பாக சொல்வேன் அதற்கான பக்குவம் எனக்கு(ம்) வரட்டும் 80தை சொல்லிக் கொள்(ல்)கிறேன் நன்றி.
நீக்கு“சிறுபான்மை சமுதாயத்தினர் அனைவரையும் இப்படியான தற்காத்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை காட்டும் கண்ணாடியாக பிரபுசாலாமனின் கயல் இருக்கிறது” - என்பதுதான்மா சரியாகப்படுகிறது.
பதிலளிநீக்கு“ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை.“ - ஒரு வாசகம்னாலும் திருவாசகம்.
மைதிலியின் வழக்கமான கிண்டலைக் காணவில்லை என்பதைத் தவிர, ஆழ்ந்த சிந்தனைக் கட்டுரை. நுட்பமான பார்வை. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். அருமைடா.. தொடரட்டும்.
உங்களை போல முன் மாதிரி ஆசிரியர்கள் என் முன்னே இருக்கும் போது இப்படி சிந்தனைகள் வராவிட்டால் தானே அதிசயம்:) இது போலும் சீரியசான பதிவுகளில் , காமெடியை தவிர்த்து விடுகிறேன் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.
நீக்குஇந்த பதிலுக்கும் சேர்த்து த.ம.8
நீக்குபிறந்தவுடன் குழந்தையின் உடலில் எந்த வித மதத்தைக் குறிக்கும் குறியீடுகள் இருப்பதில்லை ..வளர வளர மதத்தைக் குறிக்கும் விதமாய் இயற்கையாகவோ ,செயற்கையாகவோ உடல்ரீதியாக காட்டுவதை நானும் வெறுக்கிறேன் ! மதம் வேண்டுமானால் மனதில் இருந்தாலே போதாதா?
பதிலளிநீக்குத ம 1
சரிதான் :) நன்றி பாஸ்:)
நீக்கு///கடந்த மூன்று படங்களிலும் இப்படி காட்சி அமைக்காத இயக்குனர், இந்த படத்தில் இப்படியான காட்சி அமைக்க காரணம், ////
பதிலளிநீக்குசிந்தனைக்கு உரிய கேள்விதான் சகோதரியாரே
அதுதான் சிந்தித்துகொண்டிருந்தேன் அண்ணா:)
நீக்குதம 3
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்கு//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை///
பதிலளிநீக்குடீச்சரம்மாவிற்கு ராயல் சல்யூட். இந்த மாதிரி எண்ணங்களால்தான் நீங்கள் மற்றவர்களின் மனதில் உயர்ந்து நிற்கிறீர்கள்.. பாராட்டுக்கள் மைதிலி
நன்றி mr.லைட்:)
நீக்கு////இதுவரை நான் இட்ட பின்னூட்டங்களிலேயே கடுமையான வார்த்தைகளை இதில் தான் பயன்படுத்தியிருக்கிறேன். இது என் நண்பர்கள் அல்லாதோர் தளத்தில் வந்திருந்தால் இப்படி பின்னூட்டம் இட்டிருப்பேனா என்பது சந்தேகமே:) ///
பதிலளிநீக்குநண்பர்கள் நண்பர்கள் அல்லாதோர் பற்றி கவலைப்படாமல் கருத்துகளை சொல்லுங்கள். நாம் எப்போதும் விமர்சிப்பது பதிவுகளைதானே அன்றி அதை எழுதியவரை அல்ல அதனால் எங்கும் தைரியமாக எழுதுங்கள். இந்த விஷயத்தில் நம்ம பாஸ் வருணை விரும்புகிறேன் & பாராட்டுகிறேன்
எல்லோரும் அதுபோன்ற பின்னூட்டங்களை வரவேற்பதில்லையே சகா:)
நீக்குஇல்லை சகோதரி! அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வதில் தவறில்லையே! எங்களுக்கு அது போன்ற பின்னூட்டங்கள் வருவதை வரவேற்கின்றோம். அப்போதுதான் நல்ல ஒரு ஹெல்தி விவாதம், கருத்துக்கள் வெளியாகும். நம் எழுத்துக்கள் அப்படி விமர்சிக்கப்பட்டால்தான் வளர்ச்சி இருக்கும். னீங்கள் தைரியமாகக் கொடுக்கலாம் சகோதரி!
நீக்குiஇதே போல் தங்கமீன்கள் படத்தில் வெகு குறைந்த நேரமே தெரிந்த சிலுவையையும் குறிப்பிட்டது நினைவில் வருகிறது.
பதிலளிநீக்குசில ஆண்டுகள் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்ததால் எனக்கு ஏனோ பெரிதாக வித்யாசம் தெரியவில்லை.
இது காவியின் மிரட்டலுக்கும் வெள்ளையின் பதிலாகக் கூட இருக்கலாம்.
இவற்றையெல்லாம் விட இன்னொரு காரணமும் எனக்குப்படுகிறது. அது சர்வதேச அங்கீகாரம். திரைவிழாக்களில் வெகு எளிதாக பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட இது ஒரு காரணியாக இருப்பதால் படைப்பாளர்கள் இப்படி செய்வதை நான் ஏற்றுக் கொள்வது நியாயம்தான். (இந்திய எல்லையை தாண்டினால் யார் மைனாரிட்டி? சிரிப்புவல்ல) எனவே இது சர்வதேச மார்கெட்டை குறிவைத்தும் கூட செய்யப்பட்டிருக்கலாம்.
இரண்டரை மணி நேரப் படத்தை மூன்று நாட்கள் யோசிக்க வைத்ததில் ஜெயித்து விட்டார் எனவே தோன்றுகிறது...
ஒரு மனம் திறந்த விவாதத்திற்கு நன்றி சகா:)
நீக்கு**இது காவியின் மிரட்டலுக்கும் வெள்ளையின் பதிலாகக் கூட இருக்கலாம்.** இதை தான் நான் பதிவின் இறுதியில் சொல்லியிருக்கிறேன்.
சர்வதேச விழாவிற்காக என்றால் ஓகே, அவர்கள் பிழைப்பை அவர்கள் பார்க்கவேண்டாமா? **(இந்திய எல்லையை தாண்டினால் யார் மைனாரிட்டி? ** ஆனால் அதன் காரணமாகத்தான் சில வெள்ளையும் ஆரியம் போல் நடந்துகொள்கிறதோ என்று தோன்றுகிறது.
**iஇதே போல் தங்கமீன்கள் படத்தில் வெகு குறைந்த நேரமே தெரிந்த சிலுவையையும் குறிப்பிட்டது நினைவில் வருகிறது.
சில ஆண்டுகள் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்ததால் எனக்கு ஏனோ பெரிதாக வித்யாசம் தெரியவில்லை.** என்ன ஒரு நகைமுரண். ஒரேயொரு ஆண்டு கான்வென்டில் படித்தத்தால் தான் எனக்கு இவ்வாறெல்லாம் தோன்றுகிறது.
அன்று சாம்பல் புதன். சர்ச்சுக்கு வெளியே படித்துகொண்டிருந்த என்னிடம் அந்த கன்னியாஸ்திரி விபூதியை நீட்டினார். என்ன சிஸ்டர் கோவில் மாதிரி விபுதிஎல்லாம் தருகிறீர்கள் என்ற நான் அப்போ ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார் "உங்க கோவிலில் தருவது போல் இது சாத்தானின் சாம்பல் அல்ல. தேவனின் சாம்பல்" எதையும் கேள்வி கேட்காமல் என்று கொள்ளாத என் இயல்பால் நான் அங்கு தொடர்ந்து படிக்கவில்லை. வாசிப்பு விரிவடைந்த பிற்காலத்தில் புரிந்தது அந்த கன்னியாஸ்திரிக்கும், திராவிடம் நசுக்கிய ஆரியருக்கும் ஒரே வேறுபாடு அவர்களது உடையின் நிறம் தான் என்று:)
***இரண்டரை மணி நேரப் படத்தை மூன்று நாட்கள் யோசிக்க வைத்ததில் ஜெயித்து விட்டார் எனவே தோன்றுகிறது... ** உண்மை தான். மையக்கருத்தான காதல், கடல் இவற்றை மறந்து தான் இடைசெருகிய மதகருத்தை பற்றி மூன்று நாள் சிந்திக்க வைத்து நல்ல வெள்ளை சிலுவை ஆரியரை அவர் வென்று தான் இருக்கிறார்:))
(ரெண்டு பதிவில் அஞ்சலினா ஜோலியை கலாய்ச்சியே, இப்போ பார் மைதிலி reply அடிச்சு தாவு தீருது:((
மோடியின் வரவால் நாட்டில் வளர்ச்சி ஏற்படுமா இல்லையா என்று தெரியாது ஆனால் அவர் வரவால் மற்ற மதங்களில் மட்டும் அல்ல இந்து மதத்திலும் கூட ஒரு பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது அது நல்லதற்கு அல்ல என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
பதிலளிநீக்குநான் தமிழகத்தில் வாழ்ந்த காலங்களில் மக்களின் மனங்களில் மதத்தால் களங்கம் இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது கலக்கமும் களங்கமும் தெரிய ஆரம்பிக்கிறது
நான் மதுரைத்தமிழன் என்ற புனைப்பெயரில் எழுதுவதன் காரணம் மத முத்திரை விழுந்துவிடக் கூடாது என்பதால்தான்
இந்த மாதிரி பதிவுகள்தான் என் மனதை கவர்கின்றன.காரணம் தப்போ சரியோ மனதில்படும் கருத்துகளை சொல்ல முடிகிறது. மேலும் மற்றவர்கள் கருத்துகள் சொல்லும் போது அதில் உள்ள கருத்துகளை படிக்கும் போது மேலும் நமது எண்ணங்கள் விசாலமாகிறது சில சமயங்களில் நம்மை திருத்தி கொள்ள முடிகிறது
பதிலளிநீக்குபடைப்பாளிக்கு அரசியல் மதம் எனத் தனிப்பட்ட கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கலாம்.
பதிலளிநீக்குஆனால் அவன் அனைவருக்கும் பொதுவான படைப்பொன்றை முன்னிறுத்தும் போது, அதன் சாய்வுகள் படைப்பில் முன்னிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அது பிரச்சாரமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில் அதை வெளிப்படையாகச் சொல்லி விட வேண்டும்.
இது இன்ன “கருத்து“ப் படம் அல்லது இன்ன “கருத்து“ இலக்கியம் என்று.
அதற்கென உள்ள ரசிகர்களுக்கு அது உகந்ததாக இருக்கும்.
தவிர்க்க நினைப்போர் தவிர்க்கலாம்.
பொதுவாக அதிகம் படம் பார்ப்பதில்லை.
இந்தப் படமும் பார்க்கவில்லை.
பதிவில் நான் புரிந்து கொண்ட விடயம் குறித்த என் கருத்து இது அவ்வளவே!
நன்றி.
உண்மைதான் மா தற்போதைய அரசின் செயல்பாடுகள் மதம் சார்ந்து அதிகம் உள்ளதன் வெளிப்பாடுதான் என்பதை உணர்கின்றேன்..மனம் வலியுடன் தான் பயணிக்கின்றோம் ஒவ்வொரு நாளும்..
பதிலளிநீக்குஹஹாஹா இதுக்கும் காரணம் மோடிதானா?
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசொல்லிய விதம் சிறப்பு நானும் அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை//"
பதிலளிநீக்குபொன்னால் பரிக்கப்பட வேண்டிய வரிகள் சகோ. உண்மையில் எத்தனை ஆசிரியர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்?
நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. இயக்குனர் தான் சார்ந்துள்ள மதத்தின் மீது பக்தி காட்டவோ அல்லது மதத்தைப் பரப்பவோ, ஒரு ஆன்மிக படத்தை அல்லவா எடுத்திருக்க வேண்டும்,அதை விட்டு, ஒரு படத்தில் இப்படிபட்ட காட்சிகளை வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?
படம் பார்க்க நேர்ந்தால் இவைகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்று மனதில் வைத்துக் கொள்கிறேன். :))
பதிலளிநீக்குலிங்காவைப் பார்த்தும் பார்க்காமலும் பொறுப்பாக அந்தப் படத்திற்கு மட்டமான விமர்சனம் கொடுத்தவர்களை, ரஜினியை வெறுப்பவர்கள் என்று அடித்துச் சொல்லலாம். ரஜினியை வெறுப்பது சரியா இல்லை தவறா என்கிற விவாதம் தேவையில்லைனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குமோடி/பி ஜே பி மைனாரிட்டிகளுக்கு ஒரு பயத்தையும், ஒரு இன்செக்க்யூரிட்டியையும் உருவாக்குகிறார்கள் என்கிறதென்னவோ உண்மைதான். அந்த உண்மையை சப்பைக்கட்டும் சில "பெரிய மனுஷர்கள்" பின்னூட்டங்கள், தன்னை ஒரு ஹிந்து மத வெறியர் என்கிற உண்மையை மறைத்து வாழும் ஏமாற்றுக்காரர்கள் என்று நான் சொன்னால் அது மிகை அல்ல!
மற்றபடி, பிரபுசாலமன் ஒரு பக்கா க்ரிஷ்டியன், மற்றும் மூடநம்பிக்கை உள்ளவர். ஜீசஸையு ம், சிலுவையையும் உயரப்பிடித்தால் ஜீசஸ் அருளால் படம் "ஹிட்" ஆகும்னுகூட நினைத்து இருக்கலாம் என்கிற பாசிபிலிட்டியை "ஓவெர்லுக்"பண்ணமுடியாது. :-)
ம்..ம்..ம்../////ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை. எனவே எனக்கு நன்கு புரிகிறது. நான் ஒரு இந்துவாக அந்த படத்தை பார்க்கவில்ல/////
பதிலளிநீக்குஆஹா அருமை அம்முகுட்டி இமயமளவு உயர்ந்து தோன்றுகிறீர்கள் என் மனதில் மரியதையும் கூடுகிறதடா முற்றிலும் நியாயமே. எவ்வளவு உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துள்ளீர்கள் உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது.
மற்றபடி நாட்டிற்கு நன்மை பயக்கும் படியான காட்சிகள் இருப்பதே சிறந்தது அது தவிர மதங்கள் மோதும் படியான மனதை காயப் படுத்தும் படியான காட்சிகள் அமைவது தவிர்க்கப் பட வேண்டியது தான். நான் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லைடா. ம்..ம்.. ஏனோ மனதை நெருடி இருக்கிறது இல்ல அம்மு நெருடல் எனக்கும் இருக்கவே செய்கிறது அம்மு அப்புறம் முடிந்தால் வருகிறேன். ஹா ஹா ....
கும்கி படம் வெளிவந்த புதிதில். புத்தகம் படிக்க வேண்டாம் என்னோடு வாருங்கள், மனிதர்களை படிக்க கற்றுக் கொடுக்கிறேன் என அவரது உதவி இயக்குனர்களிடம் கூறியதாக அவரே ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.
பதிலளிநீக்குகும்கியின் வெற்றி அவரை நிறைவாக குழப்பியிருக்க வேண்டுமெனத் தோணுது
வணக்கம் அக்கா
பதிலளிநீக்குஉங்களின் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன். நல்லதொரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமென்பதை சொல்லி யாரும் பதியத் தயங்கும் மதத்தைத் திணிக்கும் காட்சியைச் சுட்டிக் காட்டி விரிவான விவாதத்திற்கு வித்திட்டிருக்கும் உங்கள் துணிச்சலுக்கும் பாராட்டுகள் அக்கா. நான் படம் பார்க்கவில்லை. காட்சிக்கு தேவை என்று ஓரிரு இடத்தில் சிலுவை வந்தால் பரவாயில்லை. அதுவே திணிக்கப் பட்டிருந்தால் தவறு தான். அதற்கான காரணம் பிரபு சாலமனுக்கே வெளிச்சம். தன் மதத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக இப்படியொரு உத்தி என்றால் நேரடியாக மதப் பிரசாரம் செய்து விட்டு போகலாமே! நல்லதொரு பகிர்வுக்க் நன்றிகள் அக்கா..
நானும் படம் பார்த்தேன்... படம் முழுவதுமே ஆன்மீக அலைதான் போங்க... அவரது சமூகத்திற்காக ஒரு படம் போலும்... சினிமாவில் எங்கே வந்தது சமூகமும் சாதியும்...
பதிலளிநீக்குமோடி ஆட்சியில் சுபிட்சம் கிடைக்கும் என காங்கிரசை வீழ்த்தி அரியாசனத்தில் அமர வைத்தால் நாட்டுக்குள் மதச் சண்டைகளை கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது.
"//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை//"//
பதிலளிநீக்குயெஸ்! மிக மிகச் சரியே! இது ஆசிரியத் தொழிலுக்கு மட்டுமல்ல எந்த ப்ரொஃபஷனாக இருந்தாலும்சரி, இது வேண்டும். அங்கு ஆண், பெண் பேதமும் மனதில் இருக்கக்கூடாது என்பதே.
இன்னும் படம் பார்க்கவில்லை எனவே அதைப் பற்றிச் சொல்ல இயலவில்லை.