சென்ற வாரம் என் தங்கை மதியின் கணவர் பழநி, பழநி சென்றுவந்து (ஆமா first பழநி கோ-ப்ரதர் பழநிச்செல்வம்) பிரசாதம் கொடுத்திருந்தார். என் அத்தை பயபக்தியாய் திருநீர் எடுத்துகொள்ள, நானோ பஞ்சாமிர்தத்தை தேடினேன்.
ஆசையாய் எடுத்து வைத்துவிட்டேனே தவிர நான் விரும்பியபடி அதை சாப்பிட நாலைந்து நாள் ஆகிற்று. சப்பாத்தி, கிச்சடி, தோசை என நான்கு நாள் இரவு உணவு அமைந்து விட , காலையில் டிபன் பெரும்பாலும் என்றால் இட்லி தான். செஞ்சுட்டு ஸ்கூல் கிளம்புறது ஈசி இல்ல(எனக்கு தான் ). இப்போ ஏன் நீட்டி முழக்குகிறேன் பாக்குறீங்க. இது தான் விஷயம். எனக்கு சூடான இட்லியை பஞ்சாமிர்தத்தில் தோய்த்து சாப்பிடுவது பிடிக்கும். காலை நேர பரபரப்பில் என்னையே எனக்கு மறந்துவிடும். இந்த கம்போவா நினைவிருக்கும்! ஒருவழியா நேத்து இரவு அப்படி சாப்டுட்டேன்.
சமீபத்தில் வெங்கட் நாகராஜ் அண்ணா சப்பாத்தியை ஐஸ்க்ரீம் தொட்டு சாப்பிட்ட ஜவான் பற்றி ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த சூழல் அப்படி ஒரு காம்பினேஷனை ஏற்படுத்தி இருந்தது. ஆறுவருட ஹாஸ்டல் வாழ்க்கை இதுபோல என் பேச்சு வழக்கில் மட்டும் அல்லாது இப்படியான அரிய, எதிர்பார்க்கமுடியாத பல காம்பினேஷன்களையும் என்னிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஹாஸ்டல் சூழல் தான் அதற்கு காரணம் என்றாலும், இது போன்ற கம்போ பயன்படுத்தும் நம்மை பார்ப்பவர்கள் வேற்றுகிரகவாசி போல நம்மை நினைத்து விடுவதும் உண்டு.
தயிர் சாதத்தில் தேங்காய் துண்டுகளை கலந்து சாப்பிடும் பழக்கத்தை நான் எந்த தோழியிடம் கற்றுகொண்டேனோ அவளுக்கு சமூகம் இது தானே என சரியாய் கேட்டு ஒருமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என் அத்தை. பின்னர் தான் தெரிந்தது அவர்க்கும் அந்த சமூகத்தில் இப்படி சாப்பிடும் ஒரு தோழி இருந்தார் என்று! இதில் கூடவா சாதி இருக்கிறது!! இன்னொரு விசித்திரமான கம்போவை எனக்கு கடத்தியது காரைக்குடி ஹாஸ்டல். அங்கே ஞாயிற்றுக்கிழமை மாலை சிற்றுண்டியாக எப்போதும் தேன்குழல். தேங்காய் பாலில் செய்த முறுக்கை தான் அங்கு அப்படி சொல்வார்கள.மூன்றாம்,நான்காம்வகுப்பு படிக்கும் சிறுமிக்கு இனிப்பும், காரமும் இல்லாத அந்த சிற்றுண்டி சுவைக்குமா என்ன? நாங்கள் அந்த முறுக்கை நொறுக்கி சுடச்சுட அருகில் இருக்கும் பாலில் அதை கலந்து விட்டு கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருப்போம். பின் அப்படியே குடித்தால்சற்றேறக்குறைய பால் கொழுக்கட்டையின் சுவை போல இருக்கும். இன்னும் நிறைய இருக்கு. இதுக்கே நெறைய பேர் தலையில் அடித்துக்கொள்வதை பார்க்கமுடிகிறது. so நீங்க எப்படி ஏதாவது வித்யாசமான கம்போ வைத்திருந்தால் பின்னூட்டத்தில் தட்டுங்கள்.
இட்லிக்கு தொட்டுக்கிற பஞ்சாமிர்தமா ? காலக்கொடுமையடா கந்தசாமி.
பதிலளிநீக்குசாப்பாடு என்றால் போதும் அதிலும் இப்படி வேறு சுவைகளைக் கூட்டிக்
பதிலளிநீக்குகொண்டே போனால் உடம்பு என்னத்துக்கு ஆகும் அம்பாளடியாள் ?..பார்த்தது
தான் பார்த்த அப்படியே அந்தப் பக்கமா ஓடிப் போயிடு ஏற்கனவே உனக்கு உடம்பு
வேறு ஜாஸ்த்தி இதெல்லாம் ஆரோக்கியமான உடம்புக் காரங்க கலந்து பேசுற
பேச்சு உனக்கு வேண்டவே வேண்டாம் வாய்க்குத் தன்னடக்கம் வேணும் வீணி
வடிக்கக் கூடாது அம்புட்டுத் தான் சொல்லிப் புட்டன் :))))))))))))))))))))))))))
அருமையான சுவையான பகிர்வு தோழி வாழ்த்துக்கள் கண்டு பிடிப்புத் தொடரட்டும் :)
தங்களின் ஆக்கத்தினையும் தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .த.ம .1
’காம்போ` அருமை! நானும் ரசித்தேன்! ருசித்தேன்!..:)
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் தேன்குழல் - முறுக்கினை நொருக்கித்
சுடு பால்த் தேநீரில் இப்படி ஊறவிட்டு.. ஊ..ற விட்ட்ட்..டு.. ஸ்..
இப்பவே முறுக்குச் செய்ய வேண்டும்!..:).. வருகிறேன்!..:)
வாழ்த்துக்கள் தோழி!
அடடா இளமதி முறுக்கு சுட போய்டடானங்கப்பா கொஞ்சம் பொறுங்க என்ன.... எல்லோருக்கும் தான். ம்..ம்..ம்.
நீக்கு\\\இப்பவே முறுக்குச் செய்ய வேண்டும்!..:).. வருகிறேன்!..:)////
see நான் சொல்லலை முருக்கொட தான் வருவா.
ம்,,,அதுவும் அப்படியா,,,/
பதிலளிநீக்குசாப்பாடு மெயின் மெனுதான் மனித வாழ்க்கையில்/
பதிலளிநீக்கு"combo" வா?
பதிலளிநீக்குபாவம் ஹாஸ்டல்ல ரொம்பத்தான் காஞ்சி போயி இருந்து இருப்பீங்க போல. எனக்கெல்லாம் அப்படியொரு "பாக்கியம்" கிடைக்கவில்லை. :)
பொதுவாக நாம்(ன்) எல்லாம் சாப்பாட்டு விசயத்தில் சிறுவயதில் "கன்சர்வேட்டிவ்தான்". நம்ம அம்மா சமைப்பதுதான் நமக்கு "பெஸ்ட்". அப்படித்தான் நான் எல்லாம் வளர்ந்தேன்.
"நான்" "மால்ய் குல்ச்சா" சாப்பிடும் ஹோட்டல்ல போயி,இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிட்ட அனுபவம் எல்லாம் இருக்கு எனக்கு.
ப்ரெட்ல உள்ள ஈஸ்ட் ஸ்மெல் "வாம்மிட்" பண்ண வைக்கும். (ஒரு காலத்தில்.. இப்போ இல்லை)
புதுசா எதையும் ட்ரைப் பண்ண ஒரு பயம். எதுக்கு வம்பு? ஆர்டெர் பண்ணிட்டு நல்லாயில்லைனா என்ன பண்ணுறது?. நமக்கு தெரிந்த பழக்கப்பட்டதையே சாப்பிட்டுடுவோமே? என்கிற எண்ணம் தலைதூக்கும்.
இப்படியெல்லாம் ஒரு காலத்தில் வளர்ந்துவிட்டு, இருந்துவிட்டு.. அமெரிக்காலபோயி நாசமாப் போயாச்சு இப்போ. எதையும் விடுவதில்லை! :-)))
BTW, some combo we dont try because we are not used to it. When we try because of some friend's influence or so, most of the time we end up liking it (may be we tried that when we are extremely hungry?? I dont know). :-)
panjaamirtham is too sweet for me. Now you hear someone who does not like sweet too. Right? It is not "health reasons". I just dont like anything which is TOO SWEET! That's all. I believe the "sweetness" takes away the taste!
தோசைக்கு ரசம்! இட்லிக்கும் தோசைக்கும் மோர்! மோர் சாதத்துக்கும் ரசம்! ஊறுகாய்ப் போட்டுப் பிசைந்து சாதம்!
பதிலளிநீக்குஐயையோ சாமீ...
நீக்குஇட்லிக்கு பஞ்சாமிர்தமா
பதிலளிநீக்குஅரோகரா
தம 4
பதிலளிநீக்குநான் எப்போதும் இலையில் பாயாசம் போட்டு சாப்பிடமாட்டேன். தனியாக தம்ளரில் தான். பாயாசம் சாப்பிட்டுவிட்டு அதன்பின்னர் தயிர் சாதம் சாப்பிடுகையில் இலையில் ஒட்டியிருக்கும் கடைசி லேயர் பாயாசம் தயிர் சாதத்தின் சுவையையே மாற்றிவிடும் என்பதால் அப்படி. இட்லிக்கு பஞ்சாமிர்தமா, உவ்வே...
பதிலளிநீக்குமுருகா...! முருகா...!
பதிலளிநீக்குஅப்போதெல்லாம் கிராமங்களில் தை - மாசியில் கரும்பு ஆலை போட்டிருப்பார்கள். கரும்பைப் பிழிந்து சாறெடுத்து காய்ச்சும் போது - சுடச் சுட சர்க்கரைப் பாகு - சும்மாவே கிடைக்கும்.
பதிலளிநீக்குஇப்போது காசு கொடுத்தாலும் கிடைக்காது.
அதனால் - இட்லிக்கு சர்க்கரைப் பாகு தொட்டுக் கொள்வது உண்டு..
அதெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டது.
இன்றைக்கு ஒருபடி மேலாக இட்லி + பஞ்சாமிர்தம்!..
கணக்கு சரிதான்!.. வாழ்க இ + ப கூட்டணி!..
பாவம் புள்ள ஹொஸ்டல் ல இருந்து ரொம்பக் கஷ்டப் பட்டு படிச்சிச்சு இல்ல பஞ்சமிர்தத் தோட இட்லி சாப்பிட்டத்தை நினைச்சு கண்ணில தண்ணி வந்திடுச்சும்மா. ம்..ம். இருந்தாலும் பாலில தேன்குழலிய போட்டு ஊறவைத்து அடஇப்பவே வாயூறுதே சாப்பிட்டுத் தான் பார்க்கணும். அம்மு நன்றி! இப்படி வேறு ஏதாவது இருந்த சொல்லும்மா ட்ரை பண்ணுவோம். அட கடவுளே நமக்குத் தான் சாப்பாட்டை பார்த்தாலே ஆகாததே இந்த லட்சனத்தில சாப்பிட்டு வேற பாக்கனனுமாக்கும். மிகவும் ரசித்தேன் நன்றி அம்மு !
பதிலளிநீக்குகாம்போ" வித்தியாசமான சுவையாக(பதிவு) இருந்தது.!!
பதிலளிநீக்குபொரியில் பச்சை வெங்காயமும், தேங்காய் எண்ணெயும் கலந்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது சிறுவயதில். நேற்று தான் பக்கத்து வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் அண்ணி இப்படியொரு காம்பினேஷனில் சாப்பிடுவதாக, நானும் அதற்கு ஜால்ரா போட, கோவைக்காரங்களே இப்படித் தான் இருப்பாங்க போலிருக்கு என்ற பெயர் கிடைக்கப் பெற்றேன்....:))
பதிலளிநீக்குதோசைக்கு தயிரில் இட்லிப் பொடியும் சர்க்கரையும் கலந்து சாப்பிடுவது. தயிர்சாதத்துக்கு வெங்காயமும் இட்லி பொடியும் கலந்து தொட்டுக் கொள்வது என லிஸ்ட் ரொம்ப பெரிசு...:))
இதெல்லாம் டீடெய்லா சொன்னா “ எங்கேயிருந்து உன்ன பிடிச்சேன்னு தெரியலை” என்ற புலம்பல் என்னவரிடமிருந்து வரும்...:) அதனால் DOT.
தங்கள் அத்தை சொல்லியது சரியெ! சாப்பாடு வகைகள் அதுவும் சில அயிட்டங்கள் பேர் கேட்டால், சாப்பிடும் வழக்கம் கேட்டால் சமூகத்தை அறியலாம். உண்மையெ! ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு சாப்பாடு ஃபேமஸ் ஆக இருக்கும். கூட்டான்சோறு என்றாலே நெல்லை/ சமூகம் நினைவுக்கு வரும். அது போல்தான்...அதே போல் பால் பணியாரம், குழிப்பணியாரம் என்றால் செட்டினாடு நினைவுக்கு வரும்...
பதிலளிநீக்குதயிர்சாதத்தில் தேங்காய் கீற்றுகள் நன்றாக இருக்கும். நீங்களாவது இட்லியை பஞ்சாமிர்தத்தில்...சிலர் தயிர் சாதத்திற்கு பிஸ்கட், பாயாசம் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். இது எப்புடி?!!!!
அது போன்று பெசரெட்டு என்று ஆந்திராவில் பயத்தம்பருப்பு தோசையில் உள்ளே ரவை உப்புமா வைத்து மடித்துக் கொடுப்பார்கள். இது ஒரு கோம்போ. இப்படிப் பல கோம்போக்கள் வித்தியாசமாக இருந்தாலும்...சுவையாக இருக்கும் பிடித்தால், பழகியால்...
இட்லிக்கு பஞ்சாமிர்தம்... சாமி, நினைத்துக்கூட பார்க்க முடியலை.
பதிலளிநீக்குஆனால் உங்களுக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.
நான் பாயசத்தில்,அப்பளத்தை நொறுக்கி போட்டு சாப்பிடுவேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காம்போ.
அப்புறம் இந்த தேன்குழல் படத்தை எல்லாம் போட்டு,அதை விலாவரியாக விவரித்து என்னுடைய நாக்கில் எச்சில் ஊற வைத்ததற்கு தண்டணையாக, ஒரு கிலோ தேன்குழலை பார்சல் அனுப்பிவைக்கவும்.
போன வாரம் என் மனைவியின் பிறந்த நாளுக்கு நான் அவளுக்கு தேன்குழல் பண்ணி அதைத்தான் நான் பரிசளித்தேன்
நீக்குசரி, நண்பரே நீங்களும் எனக்கு ஒரு கிலோ பார்சல் பண்ணிடுங்க.
நீக்குஎப்படியோ ரெண்டு கிலோ தேன்குழல் வரப்போகுது.
நமக்கு எது ருசியாய் படுகிறதோ ,அப்படி சாபிடுவதில் என்ன தவறு ?பூரியைக் கூட ஜாம் தொட்டுச் சாப்பிடலாம் :)
பதிலளிநீக்குத ம 7
இட்லிக்கு பஞ்சாமிர்தம் வித்தியாசமான காம்போதான்! நான் தோசைக்கு ரசமும் பாயாசத்துடன் வடை அல்லது சிப்ஸ் கலந்து சாப்பிடுவது உண்டு
பதிலளிநீக்குமனச திடப்படுத்திக்கிட்டுதான் உள்ளே வந்தேன் ..பின்னே நீங்க செய்த முறுக்கு ரெசிப்பின்னு நினைசிக்க்கிடேன் :) hope it isn't :)
பதிலளிநீக்குplease don't break my heart :)
எனக்கு பிடிச்ச combo
இட்லி வித் மாங்கா தொக்கு
ப்ரெட் வித் மாங்கா தொக்கு
ப்ரெட் வித் இட்லி பொடி
சப்பாத்தி இட்லிபொடி
சப்பாத்தி வித் தயிர் பச்சடி
குழைய பிசைந்த தயிர் சாதத்தில் ஒரு கரண்டி வத்தக்குழம்பு அல்லது வெஜ் குருமா ..
மோர்குழம்பில் பொரிச்ச உடைச்ச அப்பளம் ஸ்பூனால் குடிக்கணும்
கொஞ்சம் புளி கொஞ்சம் மிளகாத்தூள் கொஞ்சம் சர்க்கரை ..இதை பிசைந்து சாப்பிடுவேன் ..
ஆஹா..எனக்கு ஒரு காம்போவும் இல்லை..ஹாஸ்டலில் படித்த உங்களை வணங்குகிறேன் டியர்..நானெல்லாம் வேலைக்கு பெங்களூரு வந்தப்போதான் ஹாஸ்டல்,,,அப்போ அழுத அழுகை இருக்கே!! அந்த வகையில் இன்னமும் நான் மாறவில்லை :)
பதிலளிநீக்குநான் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது ஒரு நாள், என் வகுப்பு பசங்க, காண்டீனில் கோக்கையும் தேநீரையும் கலந்து குடித்தார்கள்!! அவ்வ்வ்வ்
காபியில் மிக்சரைப் போட்டுச் சாப்பிடுவது...
பதிலளிநீக்குபாலில் முறுக்கை நனைத்துச் சாப்பிடுவது...
இப்படி நிறைய இருக்கின்றன...
எல்லாம் வெவ்வேறு சுவை...
பொதுவா பசிக்கு உணவு! அவ்வளவு தான்! மற்றபடி இப்படியெல்லாம் தோன்றியதே இல்லை
பதிலளிநீக்குசூடான இட்லி + பஞ்சாமிர்தம் = அமிர்தம் ...கேபிள் ஸ்லாங்க டிவைன் ...!
பதிலளிநீக்குதேன்குழல் - தேங்காய் பால் இல்லை தேங்காய் துருவலை மாவோடு சேர்த்து ஆட்டிவிடுவார்கள் . தேன்குழல் ... பேரே எவ்ளோ அழகா அர்த்தமா இருக்கு ... இப்பல்லாம் ஆனந்த விகடன் ஆறாம் திணையில் வாசிப்பதோடு சரி ...
நம்ம நண்பர் ஒருவர் சப்பாத்திக்கு ஊறுகாயை தொட்டுக்குவார் . வீட்டு தோசைக்கும் , இட்லிக்கும் விதம் விதமா தொட்டுக்கொள்ள பிடிக்கும் .
ஒரு தோசைக்கு துவையல்
அடுத்ததுக்கு இட்லிப்பொடி வித் நல்லெண்ணெய்
நெக்ஸ்ட் இட்லிப்பொடி வித் சீனி கலந்து
நெக்ஸ்ட் தோசை வித் பால்
அப்புறம் மதியம் வச்ச குழம்ப சுண்டவச்சு ஒண்ணு
அப்புறம் மறுபடி FIRST ல இருந்து :)
புளிப்புத் தன்மையைக் குறைப்பதற்காக தயிரில் தேங்காய் துண்டுகளைப் போடுவார்கள். இப்போது அனைத்து வீடுகளிலும் பிரிட்ஜ் இருப்பதால் அதற்கு அவசியம் இல்லை
பதிலளிநீக்குஇந்த பதிவு எப்படி என் கண்களில் இருந்து தப்பியது?
பதிலளிநீக்குஇது சரக்கு காம்போ
பதிலளிநீக்குரம் வித் கோக் + லெமன் துண்டு + ஐஸ்
வோட்க வித் க்ரான்பெரி ஜுஸ்
பழம்
ஆப்பிள் வித் சால்ட்
ஆர்ஞ்ச் வித் சால்ட்
ஸ்நாக்
மிக்ஸர் வித் பொடியாக நறுக்கிய ஆனியன் & பச்சைமிளகாய்
வடை வித் தேங்காய் சட்னி
பஜ்ஜி வித் பஜ்ஜி
கேரட் அல்வா வித் ஐஸ்க்ரீம்
தேங்குழல் வித் டீ
ஊறுகாய் வித் சாதம் ( அதாவது ஊறுகாய்க்கு சாதம் தொட்டு சாப்பிடும் ஆள் நான்)
சாம்பார் சாதம் வித் பொறியல்
வத்தகுழம்பு சாதம் வித் அப்பளம்
ரசம் வித் புடங்காய் கூட்டு
உளுந்து சாதம் வித் மீன் குழம்பு அல்லது புளிக்குழம்பு எனது பேவரிட்
பூரி வித் கிழங்கு
சப்பாத்தி வித் வெஜ் குருமா
இடியாப்பம் வித் வாழைப்பழம் தேங்காய் துருவல் நெய் சுகர்
சண்டே ஸ்பெஷல் கேப்பை ரொட்டிவித் உளுந்து துவையல்
இந்த காம்போ போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
இட்லி, தோசைக்கு பஞ்சாமிர்தம் தொட்டு சாப்பிட்டு இருக்கிறேன். இப்போ பஞ்சாமிதம் கிடைப்பதே....ரொம்ப அரிதாகிவிட்டது.
பதிலளிநீக்குதயிர் சாதம் -பஞ்சாமிர்தம்
தயிர் சாத - மாங்காய் இனிப்பு பச்சடி
தயிர் சாதம் - ரசம்
தயிர் சாதம் - அப்பளம் ( என் அக்கா)
தயிர் சாதம் - இட்லி பொடி
சப்பாத்தி - இட்லி பொடி
பிரட் - வெங்காய ஊறுகாய், தக்காளிஊறுகாய்
தயிர் சாதம் - மாம்பழம்
தயிர் சாதம் - புளியோதரை சாதம் ( ஓர்படியின் பெண் )
தோசை - ரசம்
இட்லி & தோசை- தயிர் ( மாமனார்)
ரசம் சாதம் - கருவடகம்
ஆஹா...போதும்டா சாமி...