நேற்று என் அன்பு இளவல் நிஸாரின் உறவினர் வீட்டில் திருமணம். பொங்கல் அன்று என் தம்பி சரத்தும், நிஸாரும் அழைப்பு தந்து அவசியம் வரணும் என்று கூறி கிளம்பியபின், மதி அழைத்தாள் "அக்கா! நீ நிக்காஹ் க்கு போகப்போற தானே?." நல்லா ரைமிங்கா தான் கேட்கிற. பின்ன போகாம இருக்கமுடியுமா? நம்ம நிஸார் வீட்டு கல்யாணம் ஆச்சே" என சொல்லும்போதே சந்தானத்தின் பஸீர் பாய் கல்யாணம் ஜோக் நினைவு வந்துவிட, நான் சொல்லாமலே அவளுக்கு அந்த ஜோக் நினைவு வந்துடுச்சுபோல.
கல்யாணவீடு செம கலர்புலா, அந்த சூழலே வெகு அழகாய் இருந்தது. மண்டபத்துக்குள்ளே நுழைந்ததுமே, நிஸார் அம்மா என்னையும், மதியையும் பெண்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று விட, நிஸார் கஸ்தூரியையும்(மது), மதியின் கணவரையும் ஆண்கள் பகுதிக்கு அழைத்து போய்விட்டான். மறுபடி சாப்பிட்டு முடித்து மேடையில் தம்பதிகளை பார்க்கசென்ற போது தான் கஸ்தூரியை பார்க்கவே முடிந்தது. பெண்கள் மட்டுமே இருக்கும் தைரியத்தில் லேடீஸ் டாக் நிறைய இருந்தது. சில குட்டிகுட்டி பாப்பாவுக்கெல்லாம் KHIMAR அணிந்து அழகு தேவதைகளாக இருந்தனர். விதவிதமாய் தலையையும், உடலையும் மறைக்கும் அங்கிகள் அணிந்து பெண்களும் இருந்தனர். நான் அமர்நிஷா விடம் கேட்டேன். "என்னடா, இவ்ளோ நீளமா அங்கி போட்டிருகாங்களே, உள்ளே சாரி கட்டிருகாங்களா, நைட்டி போட்டிருகாங்களா னு கூட தெரியாதே ?'. அவள் சொன்னாள் 'அக்கா எங்க காலேஜ் வகுப்பில் கூட புர்கா போட்டுக்கணும். நான் ஒருநாள் நைட்டி போட்டு புர்கா போட்டுட்டு கிளாஸ் போய்டேன். மறுநாள் சுடிதார் போட்டுட்டு போனேனா, அன்னைக்கு திடீர்னு கிளாஸ் ல புர்கா வை கழட்ட சொல்லி செக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் தப்பிச்சுட்டேன். ஆனா நாலஞ்சு பேர் மாட்டிகிட்டாங்க"
இப்படி லேடீஸ் ஹாஸ்டலுக்கென்று ஒரு அழகான, ரகளையான நிறம் உண்டு. நான் படித்த கல்லூரி விடுதியில், அந்த வளாகத்தில் உள்ள பதினோரு கல்வி நிறுவங்களின் (தொடக்கப்பள்ளி, முதல் கல்வியியல், m.pharm வரை) மனைவிகளும் தங்கி இருந்தோம். அந்த ஹாஸ்டல் வாழ்க்கை தொடங்கி ஒருவாரம் கூட இருக்காது எம்.எஸ்.கவி தலைமையில் என்வகுப்பை சேர்ந்த ஒரு மினிகூட்டம் நோட்டிஸ் போர்ட் அருகே வெகு தீவிரமாய் ஆலோசனையில் இருந்தது. என்ன மேட்டர் என்றேன். இந்த ரெண்டு வருடத்துக்குள் நாம என்னென்ன செஞ்சு முடிக்கணும்னு பார்த்துட்டு இருக்கோம் என்றனர் கவியின் தோழிகள். அவர்கள் காட்டிய இடத்தில் do's and dont's என்ற பட்டியலில் என்னவெல்லாம் அந்த ஹாஸ்டலில் செய்யக்கூடாது என்ற பத்து கட்டளைகள். மெஸ் பணியாளர்களிடம் சலுகை பெற்று லஞ்ச் டைம் அல்லாத நேரத்தில் உணவு பெறுதல் என சில்லியாய் தொடங்கி வார்டன் அனுமதியின்றி ஹாஸ்டலை விட்டு வெளியேறுதல், சுவர்தாண்டி குதித்தல் என கில்லியாய் முடியும் கட்டளைகளில் கட்டம் கட்டி ஒன்பதையும் செய்துவிட்டுதான் படிப்பை முடித்தார்கள் என் தோழிகள்.
ஏதோ ஒன்னு விட்டு போன மாதிரி இருக்கா? அந்த விட்டுப்போன ஒரே ஒரு ரூலை நான் மட்டும் தான் பிரேக் பண்ணினேன். அது "ஹாஸ்டல் வளாகத்துக்குள் கல்லூரியின் லைப்ரரி புத்தகம் அல்லாத வேறு கதை புத்தகங்களோ, வாரப்பத்திரிகைகளோ கொண்டுவர கூடாது. நானோ எட்டாம் வகுப்பில் இருந்து விகடனை விடாமல் படித்து கொண்டிருந்தேன். எங்கள் கான்டீன் இஞ்சார்க் அண்ணாவும், அவர் மனைவியும் மட்டும் தான் ஹாஸ்டல் மாணவிகள் சந்திக்க முடிந்த வெளிநபர்கள். அப்போ விகடன் ஐந்து ருபாய். ஆனால் ஆறு ரூபாய்க்கு எனக்கு மட்டும் விகடன் வாங்கிவர சம்மதித்தார் அந்த அண்ணா. காலை உணவோடு ஜூனியர் விகடன், விடுமுறை மதியங்களில் நக்கீரன், இரவு முழு விகடன் தீர்ந்த பின்பு சுஜாதா, p.k.p, சிவசங்கரி, வாஸந்தி, பாரதியார் கவிதைகள் , மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என கலவையாய் வசித்தபடியே இருந்த எனக்கு விகடன் மட்டும் படித்தல் என்பது பம்பு செட்டில் குளித்து பழக்கப்பட்ட ஜீவனை பக்கெட் வாட்டரில் குளிக்க சொன்னது போல் இருந்தது.
சம்சா மடித்து கொடுக்க அந்த அண்ணன் பயன்படுத்திய குமுதம், கல்கண்டு, கும்குமம் இதழ்களை காண்டீனுக்கு வெளியே எடுத்துபோக எனக்கு மட்டும் சலுகை உண்டு (அந்த அண்ணனுக்கும் மணப்பாறை பக்கம். ஊர் பாசம்) சுற்றி இருந்த புங்கைமர நிழலிலோ, மாமர நிழலிலோ அமர்ந்து ரெண்டு புத்தகத்தையாவது முடித்துவிட்டு அறைக்கு திரும்புவேன். இரண்டாம் ஆண்டின் இறுதியில் ஒரு நாளில் வார்டனிடம் நான் விகடனும் கையுமாக சிக்கிக்கொள்ள அப்போ எனக்கும் அந்த மேடம் ரொம்ப நல்ல நட்பிருந்தாலும் , மற்றமாணவிகளுக்கு அது ஒரு தப்பான முன்னுதாரணம் ஆகக்கூடாது என நினைத்த வார்டன் எல்லோர் முன்னும் என்னை செம காட்டு காட்டிவிட்டு, அறைக்கு வருமாறு கர்ஜித்துவிட்டு போய்விட்டார். தயங்கியபடி அவர் அறைக்குசென்றேன். நான் படித்த விகடனையும், விடுதலை ஆண்டு மலர் ஒன்றையும் தந்து இனி இப்படி பப்ளிக்கா வராண்டாவில் உக்காந்து படிக்காதே என அறிவுறுத்தி அனுப்பினார். அம்புட்டு தாங்க நான் ப்ரேக் பண்ணினா ரூல்.
சுவையான நினைவுகள்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்குவணக்கம் டியர்...நலமா?
பதிலளிநீக்குநல்லா பிரேக் பண்ணிருக்கீங்க ரூல்ஸ... :)
என்ன ஒரு வாசிப்பு!!
த.ம.1
ஹா,,,ஹா..ஹா...நன்றி டியர்:)
நீக்குஆஹா அருமையான நினைவலைகள்..மறக்க முடியாதவை...முஸ்லீம் வீட்டு திருமணம் வித்தியாசமானது தான் ..என் தோழியின் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன்....மணமகளை மணமகன் தூக்கிச்சென்று காரில் அமர்த்த வேண்டும் செம கலாட்டா...மா அது
பதிலளிநீக்குஅப்படியா! எனக்கு இந்த வழக்கம் தெரியாதே:))வருகைக்கு மிக்க நன்றி அக்கா
நீக்குபசுமை நினைவுகளைச் சொல்லி பாஸ் மார்க் போட வச்சுட்டீங்களே அம்மணி!
பதிலளிநீக்குசுவர் ஏறி குதித்த குமரிகள் எல்லாம் யார்? விளையாட்டு வீராங்கனைகள்தானே?
நினைக்கத் தெரிந்த மனமே
உமக்கு நிகழ்வை வடிக்கவும்
வருகிறது! அழகுற!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஆஹா...அப்போதே விகடன் ரசிகை...
பதிலளிநீக்கு" பெண்கள் மட்டுமே இருக்கும் தைரியத்தில் லேடீஸ் டாக் நிறைய இருந்தது... "
பதிலளிநீக்குடீடெய்ல் இல்லையே சகோ ?!!!
" இப்படி லேடீஸ் ஹாஸ்டலுக்கென்று ஒரு அழகான, ரகளையான நிறம் உண்டு... "
உண்மைதான் ! ஒற்றை மலரைவிட மலர்த்தோட்டம் மிக அழகுதான் இல்லையா ?!
வாசிப்பை "திருட்டுத்தனமாக்கியது" நமது சமூகமாக மட்டும்தான் இருக்க முடியும் ?!!!!
நன்றி
சாமானியன்
சுவையான நினைவுகள்தான். புத்தகம் படிக்கக் கூட தடையா... அந்தத் தடையை மீறுவதில் தப்பே இல்லை!
பதிலளிநீக்குஇவ்வாறான நினைவுகளை அசைபோடும்போது மனம் மிகவும் மகிழ்ச்சியடையும். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅது எப்படி சகோ, நிறைய ரூல்ஸை பிரேக் பண்ணிட்டு, சும்மா பேருக்கு ஒண்ணை சொல்லிட்டு இது தாங்க நான் பிரேக் பண்ண ரூல்ஸ் அப்படின்னா, நாங்க நம்பிடுவோமா என்ன?
பதிலளிநீக்கு"//மறுபடி சாப்பிட்டு முடித்து மேடையில் தம்பதிகளை பார்க்கசென்ற போது தான் கஸ்தூரியை பார்க்கவே முடிந்தது.//" -வூட்டுக்கார் மேல இம்புட்டு பாசமா,கொஞ்ச நேரம் கூட பார்க்காம இருக்க முடியாதா!!!
ஹா... ஹா... நல்லாத்தான் ரூலை பிரேக் பண்ணியிருக்கீங்க...
பதிலளிநீக்குமலரும் நினைவுகள் அருமைடா. இயல்பான நட்பின் ஆழம் நெஞ்சைத் தொட்டது.. இது இந்தியநாடு முழுவதும் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் பா. வரும்.. வரணும்.
பதிலளிநீக்குபுர்காவுக்கு KHIMAR என்று பெயரா? இப்பத்தான் கேள்விப்படுகிறேன்.
அப்பறம் திருட்டு விகடனா? ரொம்ப நல்லாருக்கே? உன் எழுத்தின் இயல்புத்தன்மையின் ஊற்றுக்கண் புரிந்தது..
ஆமா.. அந்த டோன்ட்ஸ்ல சுவர் ஏறிக் குதித்து சினிமாவுக்குப் போனதை சொல்ல விட்டுட்டியே? (மகிக்கிட்ட கேட்டுக்கிறேன்)
ஆமா.. கவிதை என்னாச்சு டா? பேனா மை காஞ்சுடக் கூடாதுனு முந்தி சொல்வேன்.. இப்ப என்ன சொல்றது?
மலரும் நினைவுகள் அருமை
பதிலளிநீக்குதம 4
பதிலளிநீக்குவீட்டில் ஒரு தர அப்பாவிடம் புக் படிக்கும்போது பிடிபட்டதாக சொன்ன ஞாபகம். இப்போ வார்டனிடம் மாட்டி இருக்கீங்க. உங்களுக்குத்தான் புத்தகங்கள் படிப்பதில் எத்தனை ஆர்வம். பள்ளியில் படிக்கும்போது என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அப்துல் ரஹீம். அவனோட இருக்கும்போது சிரித்துக்கொண்டே இருக்கலாம். அந்த நட்பின் ஆழத்தாலோ என்னவோ, இஸ்லாமியர்கள் பற்றி எவனும் இஷ்டத்துக்கு விமர்சிச்சால் இப்போவும் கன்னா பின்னானு எனக்குக் கோபம் வரும்.
பதிலளிநீக்குநீங்க அப்பப்போ கொடுக்கிற விகடன் கமர்ஷியலுக்கு உங்களுக்கு வாழ்நாள் பூராம் ஃப்ரி சப்ஸ்க்ரிப்ஷன் கொடுக்கணும்.
நீங்க தகர்த்த ரூல் வித்தியாசமா இல்ல விசித்திரமா இருக்கு ;-)
பதிலளிநீக்குஆஹா! நல்லாவே மணப்பாறை வீடுகட்டி அடிச்சுருக்கீங்க லூட்டி ஸாரி முறிச்சுருக்கீங்க ரூலை....ம்ம்ம் புக் படிக்கக் கூட ரூல்னா ஆச்சரியமாத்தான் இருக்கு சகோதரி! சுவையான நினைவுகள்...
பதிலளிநீக்கு[நானும் வீட்டுலத் திருட்டுத்தனமா புக் எல்லாம் வாசிச்சதுண்டு..பாட புக்ஸ்க்கு இடையில வைச்சுக்கிட்டு, தமிழ், ஆங்கில நாவல்கள்...நல்ல புக்குதாங்க....பிடிபட்டா ...எங்களுக்கு ஸ்கூல்ல தமிழ்,இங்கிலிஷ் க்ளாஸ்ல திங்கட் கிழமை தோறும் ஒரு புத்தக விமர்சனம், தமிழிலும் இங்கிலிஷிலும் எழுத வேண்டும். அது நாவல் என்றில்லை, கிறுகதையாக இருக்கலாம், கட்டுரைகளாக இருக்கலாம். நான் இதை ஒரு சாக்காக வைத்து 3, 4 வாசித்துவிடுவேன். ஆனால் பாடபுத்தகத்தின் இடையில் ஒளித்து வைத்தும்...பின்னர் விட்டில் உள்ள பெரியோர் நான் சொல்வது உண்மையா என்று எனது மாமா மகளை (அவள் இங்கிலிஷ் மீடியம், நான் தமிழ் மீடியம்) விசாரித்தனர் என்பது தனிக் கதை. நானும் கசினும் ரொம்ப க்ளோஸ் என்றாலும் அவள் உண்மை விளம்பி யாதலால், அவளுடன் பல சமரசங்கள்....மாங்காய், குச்சி ஐஸ், கொடுக்காபுளி என்று பல.....செய்து....ஒப்பேத்தினேன்...பதிவா போடணும் என்று ஒரு எண்ணம் உண்டு...பார்ப்போம்....கீதா]
\\\\ஏதோ ஒன்னு விட்டு போன மாதிரி இருக்கா? அந்த விட்டுப்போன ஒரே ஒரு ரூலை நான் மட்டும் தான் பிரேக் பண்ணினேன்/////. அம்முக்குட்டியா கொக்கா அப்புறம் ஒரு ரூலைக் கூட பிரேக் பண்ணாவிட்டால் நன்றாகவா இருக்கும் இல்ல அம்மு ஹா ஹா ...
பதிலளிநீக்கு\\\அம்புட்டு தாங்க நான் ப்ரேக் பண்ணினா ரூல்.///// அந்த ரூலை பிரேக் பண்ணியதும் சரி அதைக் கூறியவிதமும் சரி செம cute டா ....
\\\\அம்புட்டு தாங்க நான் ப்ரேக் பண்ணினா ரூல்./// அட அட சின்ன அப்பாவிஸ்கூல் பொண்ணு ஒன்னு வந்து நின்று கண்ணையும் உருட்டிக் கொண்டு சொல்வது போலவே எனக்கு தோணிச்சு ஹா ஹா ... நன்றாக ரசித்தேன் அம்மு.
உங்களை மறைமுகம் ஊக்கப்படுத்திய வாடனுக்கு பதில் பரிசு உண்டா?
பதிலளிநீக்குநல்ல ரூல்ஸ்தான்,,,,
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
ஆமா! ஆமா :)
நீக்குநன்றி அண்ணா!