இது தான் அந்த புத்தகம் |
இருபதாம் தேதி ஆனாலே என் பிரியத்திற்குரிய மாணவச்செல்வங்கள் கொஞ்சம் டரியல் ஆகிவிடுவார்கள். ஆங்கில வாசித்தல், எழுதுதல் திறன் சோதனை மாதத்திற்கொருமுறை நடத்தப்படும் அந்நாட்களில் சின்ன பதட்டமும், பரபரப்புமாகவே இருப்பார்கள்.
அவர்கள் டென்ஷனை குறைக்க அவ்வபோது தமிழ் புத்தகங்களும் கொடுத்து படித்து வரசொல்லுவேன். சென்ற ஆசிரியர் தினத்தன்று கஸ்தூரி எனக்கு அன்பளித்த புத்தங்களில் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின் வாழ்கை வரலாறும் ஒன்று. பிளான்ட் டாக்டர் என அழைக்கப்பட்ட கார்வரின் சாதனைகள் எண்ணில் அடங்காதது. அதில் முக்கியமானது கடலையை கொண்டு அவர் தயாரித்த ஆயிரக்கணக்கான பொருட்கள்(அப்பா ! டைட்டில் ஓகே ஆகிடுச்சு) கற்றல், கற்பித்தல், கண்டுபிடித்தல் அனைத்திலும் நம்பர் ஒன் என்று அட்டையில் இருந்த ஸ்லோகன் கஸ்தூரியை கவர்ந்திருக்க வேண்டும். பெரும்பாலும் வாழ்கை வரலாறு என்றாலே ஒன் ஸ்டேப் back என ஜெர்க் அடிக்கும் நான், கார்வரின் புத்தகத்தை கண்டதும் அத்தனை சந்தோசப்பட்டேன். ஏனென்றால் கார்வர் ஏழாம் வகுப்பு பாடத்தில் வருகிறார். ஆஹா! அந்த பாடத்துக்கு அட்டகாசமான extensive ரீடிங் மெட்டிரியல் கிடைத்துவிட்டது.
ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று மாணவர்கள் எல்லோரையும் ஒன்றாக அமரவைத்து பபிதாவை அழைத்து , அந்த புத்தகத்தை சத்தமாக வாசிக்கச்செய்தேன். அவள் தமிழ் வசிப்பதை கேட்டுகொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக, உணர்ச்சியோடு படிக்கக்கூடியவள். அவள் அழகு குரலில் வாசிக்கத் தொடங்கினாள். 'மேரியை கொள்ளையர்கள் கடத்திக்கொண்டு செல்ல வந்துவிட்டனர். மோசஸ் மேரி தப்பி ஓடிவிடு என கதறுகிறார். ஆனால் மேரி தன் கை குழந்தையான ஜிம்(கார்வர்) குளிர் தாங்காத நோஞ்சான் குழந்தை அல்லவா? அவனுக்கு போர்த்த ஒரு துப்பட்டியாவது கிடைக்குமா என தேடுகிறாள். இந்த வரியை பபிதா வாசிக்கையில் வகுப்பு முழுவதும் உச்சு உச்சு உச்சு:(((((((
கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பற்றிவந்த கார்வருக்கு உயிர் இருக்கிறதா என பார்க்க, மோசஸ் கிச்சுகிச்சு மூட்டினார். இந்த வரியை வாசித்தவுடன் வகுப்பே ஏதோ தனக்கு தான் கிச்சுகிச்சு மூட்டியதை போல சிரித்தது. இந்த பிள்ளைகள் தான், ஒவ்வொரு விசயத்தையும் எவ்வளவு ரசிக்கிறார்கள். இத்தனை நாள் என்போலும் வாயை இறுக மூடியபடி படிக்கும் சூழலில் சிக்கித்தவித்த அந்த புத்தகவரிகள், அந்த உன்னதமா, மாசற்ற இளம் ரசிகர்களிடம் தானும் கலந்து இளைப்பாறி இருக்கும் போல. எனக்கும் கொஞ்சம் இளைப்பாறல் போலவே இருந்தது. என்னது கடலை மன்னன் கார்வரை பற்றி தெரிஞ்சுக்கணுமா ?? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, பபிதா இன்னும் முழுசா வாசிக்கலை:) so அடுத்த பதிவில் பார்க்கலாம்.
முழுசும் படிச்சுப் ''புட்டு'' சொல்லுங்கோ.....
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
அவசியம் சொல்றேன் அண்ணா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்கு
பதிலளிநீக்குஉங்களின் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைச்சவர்கள்
நீங்கவேற சகா! அவர்களோடு இருக்கும் நான்தான் கொடுத்துவைத்தவள்:)
நீக்குஅப்ப பபிதாவை விட்டே வாசிக்கச் சொல்லுங்க... :)
பதிலளிநீக்குஹா... ஹா....
குழந்தைகள் ரசனை மிகுந்தவர்கள்...
அவர்களின் உலகம் தனியானது...
கார்வரைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்...
நிஜம் தான் அண்ணா! குழந்தைகள் ரசனைமிக்கவர்கள்:) மிக்க நன்றி!
நீக்குகரெக்ட்மா... எனக்கும் கடலை கார்வரைப் பத்தி நிறையத் தெரிஞ்சுக்கணும்னு இப்ப ஆவல் வந்துட்டுது. பபிதாவை இங்கயும் வாசிக்கச் சொல்லேன்.... கேட்டு ரசிக்கலாம்.
பதிலளிநீக்குசொல்லிடுவோம்:)) மிக்க நன்றி அண்ணா!
நீக்கும் ... டீச்சர் சீக்கரமா பபிதவை வாசிக்க சொல்லுங்க
பதிலளிநீக்கு;))) அவசியம் சொல்கிறேன் தோழி! மிக்க நன்றி!
நீக்குகடலை மன்னன் கார்வார் என்று படித்தவுடனே, யார் இந்த கடலை மன்னன்னு தெரிஞ்சுக்கணும்னு படிச்சா, அவரைப்பற்றி சொல்லாமல், நீங்கள் வகுப்பறையில் இளைப்பாறியதைப் பற்றி சொல்றீங்க.
பதிலளிநீக்குஅருமையான மானவர்களுக்கு அருமையான டீச்சர்.
அதே சகோ:)) அப்போதான் வருவீங்கன்னு வைத்த கிளிக் பைட் அது:))) நன்றி சகோ:)
நீக்குஅடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
தம +1
மிக்க நன்றி அண்ணா:)
நீக்குஒரிஜினல் கடலை தானா ,அப்படினா ஏழாம் வகுப்புக்கு சரிதான் ....நான் அந்த 'கடலை' மன்னன் ன்னு நினைச்சுட்டேன்:)
பதிலளிநீக்குத ம 4
ஹா....ஹா...அஹ்ஹ்ஹா:) அப்டி நினைபீங்கன்னு தானே வைச்சதே:) நன்றி பாஸ்:)
நீக்கு..தொடரும்.. போடுற அளவுக்குப் போயி இப்படி “சஸ்பென்ஸ்“ வச்சாலும் அடுத்த பதிவில் பார்க்கிறவரை... வாண்டுமாமா கதையில் அந்த ராஜகுமாரி மேல பறந்துகிட்டு இருக்கும்போது பறக்கும் ஜமக்காளத்திலிருந்து கீழே விழுந்தாளா... தொடரும்...னு போட்டு விட்டது -ஏழாம்ப்பு படிக்கும்போது கண்ணன் பத்திரிகை படித்த அனுபவத்தைக் கொடுத்தது..
பதிலளிநீக்கு“ஆசிரியர் தினத்தன்று கஸ்தூரி எனக்கு அன்பளித்த புத்தங்களில் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின் வாழ்கை வரலாறும் ஒன்று.“ -ஆகா.. நீங்கள் இருவரும் ஆதர்ச தம்பதிகள் மட்டுமில்ல ஆதர்ச ஆசிரியர்களும் கூட நம்ம ஆசிரிபயப் பேரினமே! கொஞ்சம் தேதியையும் நூல் அன்பளிப்பையும் கவனிங்கப்பா.. வாழ்த்துகள் டா- கஸ்தூரிக்கு.
அப்படா! இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. அண்ணா ! பபிதா அளவுக்கு இதை சுவாரஸ்யமான சொல்லமுடியலையோ னு கொஞ்சம் கவலைப்பட்டேன்:)
நீக்குஉண்மை தான் அண்ணா! எனக்கு என் பணி மிகமிக பிடிக்கும். passion என்பேன். அவ்ளோதான். ஆனா கஸ்தூரி அதை வெகுவாக மதிக்கும்போழுது மகிழ்ச்சியாகவும், அதிசயமாகவும் இருக்கும். வாழ்த்தபடவேண்டியவர் தான் கஸ்தூரி:) மிக்க நன்றி அண்ணா:)
நாங்களும் வகுப்பறையில் இருப்பதைப்போல உள்ளது. எங்களுக்காகவும் சேர்த்துப் படிக்கச் சொல்லுங்கள். நாங்களும் கேட்டுக்கொள்கிறோம்.
பதிலளிநீக்குசொல்லிட்டா போச்சு:) மிக்க நன்றி அய்யா!
நீக்குஅடடா கண்ணு படப் போகுதில்லை அம்மு சுத்திப்போடும்மா. ஹா ஹா ...உங்க கஸ்தூரிக்கும் சேர்த்து தான். ம்..ம்.. மிக்க மகிழ்ச்சி சும்மா சொல்லக் கூடாது மாணவர்களுக்கும் போர் அடிக்காம என்னமா கிளாஸ் எடுக்குது அம்முக்குட்டி ம்..ம்.. சீக்கிரம் பாபியை வாசிக்க சொல்லுங்கம்மா. அதிகம் எல்லாம் வெயிட் பண்ணமுடியாது...ok வா ....
பதிலளிநீக்குமுதலில் மது/கஸ்தூரிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்! இது போன்று புத்தகங்கள் பரிசாக அளிக்கவும் பெறவும்...ஆசிரிய தம்பதிக்குள்...அருமை மனதார வாழ்த்துகின்றோம். மிகவும் பெருமையுடனும், சந்தோஷத்துடனும்., பிரார்த்தனைகளுடனும் (தங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை எனினும்)
பதிலளிநீக்குதுளசி: பாடத்திட்டத்தில் இருந்ததால் அறிவேன்....
கீதா: அக்ரிகல்ச்சுரல் எக்கனாமிக்ஸ் பாடத்திலும், பி.ஏ படித்துக் கொண்டிருந்த போது ஐசிஏஆரின் விவசாயப் ஃபெல்லோஷிப் சேர, தேர்விற்காகப் புத்தகங்கள் தேடித் தேடிப் படித்த போது இந்தத் தாவரவியலாளரைப் பற்றி படித்தது....நினைவுக்கு வந்தது..ஒரே அளவில் பருத்திப் பயிர் செய்துமண்ணின் வளம் குன்றியதாலும் பருத்திப் பயிருக்கு ஒரு வண்டு...அதன் பெயர் இப்போது நினைவில் இல்லை...வந்து அதை அழித்த போது பருத்திக்கு மாற்றாக கடலைச் சாகுபடி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீன் சாகுபடியும்) ப்ரிந்துரை செய்தார். கடலையை உபயோகித்து பல உணவுப் பொருட்கள், பல தொழில்களின் அதன் உபயொகம் இவரது சிந்தனைகளினால் உருவானவை....மண்ணின் தரம் அது கெடுவது பற்றிப் படித்த போது இவரை அறிந்து கொள்ள முடிந்தது. இத்தனையும் படித்தது ஐசிஎ ஆரின் ஃபெல்லோஷிப் தேர்விற்காக....இறுதியில் என்ன ஆச்சுனு கேக்கறீங்களா...ஹ்ஹஹ பரீச்சைக்கு ஹால் டிக்கெட் (ரகசியமாக அப்ளை செய்திருந்தேன் என் ஆசிரியையின் உதவியினால் அவர் என் ஆர்வம் கண்டு உதவியது...) எல்லாம் வந்தும் என்னை என் வீட்டார் அனுமதிக்க வில்லை...இப்போது உங்களின் இந்த இடுகையின் மூலம் இவை எல்லாம் நிழலாடியது மனதில்....
எங்கள் பள்ளி நினைவுகளும் வந்தது...வகுப்பில் வாசித்தல், வாசித்தலில் இருந்து கேள்விகள் கேட்பது எல்லாம்...மிக்க நன்றி
பதிலளிநீக்குInteresting Post. Congrats.
பதிலளிநீக்குMadam,
Good Morning !
You may like to go through this Link:
http://gopu1949.blogspot.in/2015/01/12-of-16-71-80.html
This is just for your information, only
With kind regards,
GOPU [VGK]
gopu1949.blogspot.in
ஜார்ஜ் வாஷிங்டன்னா அமெரிக்க ப்ரெஸிடெண்ட் தான் தெரியும். கார்வர் பற்றி ஒண்ணுமே தெரியாது.
பதிலளிநீக்குகடலை மன்னர் கார்வர்? சாண்ஸே இல்லை!
கடலை மன்னர்னா பொண்ணுங்களோட விரும்பிப் பேசுபவர்னு அர்த்தம்னு நினைக்கிறேன். அரேஞிட் மேரேஜ் இல்லாத கலாச்சாரத்தில் கடலை போடத்தெரியாதவனுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது! :( What a pity! :( அதனால்தானோ என்னவோ western culture la சிங்கிளாவே பலர் வாழ்ந்து முடிச்சிறாங்க. இந்தியாவில் பிறந்திருந்தால் இவர்கள் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். :)))
அன்புச் சகோதரி,
பதிலளிநீக்கு‘கடலை மன்னன் கார்வரும், என் ஏழாம் வகுப்பு மாணவர்களும்’ செல்வி.பபிதாவை அழைத்து , அந்த புத்தகத்தை சத்தமாக வாசிக்கச்செய்ததை வாசித்து அறிந்தேன். அவள் தமிழ் வசிப்பதை கேட்டுகொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக, உணர்ச்சியோடு படிக்கக்கூடியவள். மாணவர்களை இவ்வாறு ஊக்குவிப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. அவர்களது திறமையை வளர்த்தெடுக்கும் என்பதில் நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். அவள் நாளை அவளின் இதயத்தில் நீங்கள் நிச்சயம் இடம் பிடிப்பீர்கள் என்பதில் அய்யமில்லை.
கார்வர் கதை கேட்டேன்... நன்றாக இருக்கிறது... தொடருங்கள்... தொடர்கிறோம்.
நன்றி.
த.ம. 7
பதிலளிநீக்குகுழந்தைகள் குதூகலத்துக்கும் அளவற்ற அன்புக்கும் சொந்தக்காரர்கள்.
பதிலளிநீக்குஅவர்களை வாசிப்பில் குதூகலப்படுத்தும் நீங்களும் குழந்தை ஆகி இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்
Madam,
பதிலளிநீக்குGood Morning !
You may like to go through this Link in which your NAME / BLOG is appearing :
http://gopu1949.blogspot.in/2015/01/13-of-16-81-90.html
This is just for your information, only
With kind regards,
GOPU [VGK]
gopu1949.blogspot.in
மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும் தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு