புதன், 30 செப்டம்பர், 2015

துறைதோறும் இணையத்தமிழ் !!





   பிழையின்றி பிழைக்கின்ற உயிர் அனைத்தும் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலை,பிழையின்றித் தொடர்கின்றன! கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாய் புதுப்பித்துக்கொள்கிறது! புதுப்பித்துக்கொண்ட குரங்கினம் தான் இன்று உலகையே நொடிக்குநொடி புதுப்பிக்கும் இனமாய் வளர்ந்திருக்கிறது. என்றும் எழில் குன்றா, இளைய தமிழுக்காக இந்த வித்தை தெரியாது?! நான்காம் தமிழாய் இணையத்தமிழும், ஆறாம் திணையாய் இணையமும் ஒருங்கே வளர்வது உலகறிந்ததே! சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என முரசுகொட்டிய முண்டாசுக்கவிஞனின் பாதையில் வீறுநடைபோட்டு சீறுகின்ற நம் தமிழ்ப் பட்டாளம் திசைதோறும் விரைந்து தொகுத்த, படைத்த செல்வக்களஞ்சியங்கள் உங்கள் பார்வைக்கு!
அறிவியல் தளம் 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று வள்ளுவன் பாடியதைத் தான் சாக்ரடீஸும் ஏன்? எதற்கு? எப்படி என கேள்வி கேட்குமாறு கூறுகிறார்.  அப்படி மெய்பொருள் காணும் அறிவியல்த்துறையில் தடம் பதித்த தமிழ்த்தளங்கள்  
களஞ்சியம்http://www.kalanjiam.com/science
   
அறிவியல் செய்திகளை சுமக்கும் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்த வலைத்தளம்.
சொல்வனம் -http://solvanam.com/?author_name=prakash_sankaran&paged=2கண்ணைக் கவரும் வடிவமைப்புடன், மாதம் இருமுறை இதழாக வரும் சொல்வனம், மாணவக் கண்மணிகள் மனங்களை கொள்ளைகொள்ளும் அறிவியல்வனமாகத் திகழ்கிறது.
இசை: இசை இன்னும் சொல்லுக்கு புகழ் என்ற பொருள் உண்டு. இசைந்து, ஒன்றிப்போதல் என்ற பொருளும் உண்டு. அப்படி இசையின் வசமான இதயங்கள், இணையம் வழியாகவும் இசை கற்க முடியும் என்றால் எத்தனை அதிசயம்!!
Musicschool
:http://themusicschool.co.in/about.php
 
 இந்த  வலைத்தளம் ஒரு முழுமையான மேற்கத்திய இசைவழிகாட்டியாக இருக்கிறது. பாடத்திட்டத்துடன், மேலைநாட்டு இசைமேதைகளின் இசைத்தொகுப்பும் இருக்கிறது.
http://www.ommachi.net/archives/2386 இது கர்நாடக இசைப்பாடங்கள், மரபிசை விவரிப்புகள், சங்கீத விழா பற்றிய தகவல்கள் என ஒரு அருமையான மரபிசைத் தளமாக விளங்குகிறது.
கர்நாடகசங்கீதம்:http://www.musicpadippu.blogspot.in வலைதளத்தின் பெயரே பொருள் சொல்வதை போல கர்நாடக சங்கீதத்தின் வெகு அடிப்படையானதகவல்களையும் எளிய மொழியில் அழகாக விளக்குகிறது.
மருத்துவம்: சித்த மருத்துவம்
இவ்விரு தளங்களிலும் மூலிகைகள், அன்றாடம் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் மருத்துவ குணம் என அறிய பல தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. நோய்களின் பட்டியலும் அவற்றிற்கான மருத்துவக் குறிப்புகளும் சீராக விவரிக்கப்பட்டுள்ளன. 
அக்குபஞ்சர்:http://rkacu.blogspot.in/2012/06/blog-post_6330.html நோய் என்றால் என்ன என்பதில் தொடங்கி, மருத்துவம் பற்றி விரிவாக கூறி, அக்குபஞ்சர் பற்றியும், அதன் செய்முறைகள் பற்றியும் கூட விரிவான தகவல்கள் கொட்டுகிறது தளம்.
புகைப்படக்கலை: கையடக்க கைபேசி ஒன்று  கால்குலேட்டர், கடிகாரம், நாள்காட்டி என எத்தனையோ பொருட்களின் இடத்தைத் தட்டிப் பறித்தாலும், கேமராவுக்கு இருக்கும் மதிப்பை அது குறைக்கவே முடியவில்லை. புகைப்படக்கலையை கற்றுதேரும் ஆர்வமும் நம்மிடம் குன்றவில்லை. இதோ வலையில் சில புகைப்படத்தளங்கள்.
http://blog.vijayarmstrong.com/2015/06/blog-post.html திரைப்பட ஒளிப்பதிவாளர் திருமிகு விஜய் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் எழுதும் இந்த வலைப்பூ ஒரு புடைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என மிகதேர்ந்த அனுபவத்தோடும், அழகியலோடும் எடுத்துக்கூறுகிறது.
http://photography-in-tamil.blogspot.in/ நுணுக்கம் தெரிந்த, புடைப்படக்காதலர்கள் ஒரு குழுவாக இணைத்து புகைப்பட நுணுக்கங்கள் மட்டுமல்லாது, போட்டிகளும் வைத்து வெளியிடும் படங்கள் காண்பவர்களை கட்டிப்போடுகின்றன.

https://visioncolourlab.wordpress.com/ வெகு சில பதிவுகளே உள்ள இந்த wordpress தளம் ஆனாலும் மிகப்பயனுள்ள, புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கவேண்டிய ஒரு வலைப்பூ.
 
கைவினை பொருட்கள்
http://priyasinterest.blogspot.in/2011/03/blog-post_11.html ரசிக்க ருசிக்க என்கிற இவ்வலைப்பூவில் எல்லாவிதமான எளிய, அழகிய கைவினைப்பொருட்கள் செய்முறையும் திருமிகு பிரியாராம் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
http://www.yarl.com/forum3/ இந்த வலைதளத்தில் கொட்டிக் கிடக்கும் கலைப்பொருட்களின் தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எல்லா தளங்களுமே வழக்கமாகக் கொடுக்கும் செய்முறைகளை விடவும் புதுமையான பல குறிப்புகள் இருப்பது இதன் தனி சிறப்பு.
பயணம்: பயணங்கள் தான் வாழ்வை, கல்வியை, அறிவை விரிவுபடுத்துபவையாகவும், முழுமை செய்பவையும் ஆகும். நான்கு சுவர்களுக்கு இருந்துகொண்டே உள்ளூர் முதல் உலக அளவில் வலம் வர இந்த தமிழ் பதிவர்கள் உதவுகிறார்கள். 
http://www.kadalpayanangal.com/2014/04/3.html திருமிகு சுரேஷ்குமார் அவர்கள் இந்த வலைப்பூவில் பயணத்தின் சாகசங்களையும், அங்கு கிடைக்கும் சிறப்பான பொருட்களையும் உணவுகளையும், அந்த இடத்தின் பெருமைகளையும் அழகுற எடுத்துசொல்வதில் நமக்குமே இந்த இடங்களுக்கு போய்வரவேண்டும் என்கிற ஆசை தொற்றிக்கொள்கிறது.
http://brawinkumar.blogspot.in/2015/04/44.html திருமிகு ப்ரவின் குமார் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த பயணங்கள் மிகவும் மாறுப்பட்டவை. இயற்கை சார்ந்தவை. உயிரியல் சார்ந்தவை. இந்த பதிவுகளை படிக்கும் போது திருமிகு ஆயிஷா நடராஜனின் டார்வின் ஸ்கூல் புத்தகம் தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது.
http://www.ustraveldocs.com/lk_tr/lk-svc-travelcoordinator.asp நீங்க இலங்கையில் இருக்கிறீர்களா? உங்களுக்கு அமெரிக்கா போக ஆசையா? இதோ இந்த தளம் வழிகாட்டுகிறது.
http://prakash-payanam.blogspot.in/2011/03/blog-post.html இந்தியா முழுக்க ரசனையாய் ஒரு சுற்றுலா அழைத்துச்சென்று விடுகிறார் திரு மிகு பிரகாஷ் அவர்கள். சிற்பங்கள் காண்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இருந்த இடத்தில் இருந்தே இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பங்களை பார்த்துவர முடிகிறது.
 http://venkatnagaraj.blogspot.com/ திருமிகு வெங்கட் நாகராஜ் அவர்களோடு ரயிலிலும், பேருந்திலும், மலையிலும், ஏரியிலும் பயணிக்க முடியும் ஒரு ஏகாந்த அனுபவத்தை தருகிறது இவரது பதிவு. ஏரிகள் நகரம் நைனிதால் எனும் இவரது அழகான பயணக்கட்டுரை பின் மின்நூலாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது.
 இயற்கை                  http://kurangumudi.blogspot.in/2009/04/birding-as-hobby.html இயற்கை நேசி எனும் பெயரில் பதிவிடும் இவரது தளத்தில் இயற்கையை நேசிப்பவர்கள் நாளெல்லாம் இருக்க முடியும். அத்தனை அழகாக படங்களுடன் கூடிய பதிவுகள் இங்கே இருக்கின்றன.
http://maramvalarpom.blogspot.in/2010/03/blog-post.html மரம் வளர்க்கவேண்டியதன் அவசியத்தை மட்டும் சொல்லாமல், எப்படி மரம் வளர்க்கலாம், அதற்கான அமைப்புகள் என்ன என்பதையும் பசுமைப்படையையும் பற்றி அழகாக விளக்குகிறது இந்த வலைப்பூ.
http://vithaikkalam.blogspot.in/2015/09/blog-post_13.html விதைக்கலாம் எனும் இந்த வலைப்பூவில் புதுகையின் தன்னார்வலர்கள், அதிலும் பெரும்பாலும் ஆசிரியர்கள் மேதகு கலாம் அவர்கள்   நினைவாக ஞாயிறு தோறும் காலை, பள்ளிக்கூடங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து மரக்கன்றுகள் நடுவதை பதிவு செய்கிறது.
http://geethamanjari.blogspot.in/2015/06/4.html ஆஸ்த்ரேலியா வாழ் திருமிகு கீதாமதிவாணன் அவர்கள் தன் கீதமஞ்சரி எனும் வலைப்பூவில் அரியவகை விலங்குகள், பறவைகள்   மற்றும் தாவரங்களின் பெயர், பண்பு மற்றும் புகைப்படத்தோடு எழிலுற படைக்கிறார்.
உளவியல்
psychologytamil.blogspot.in மனோத்தத்துவம் என பெயர் வைத்துக்கொண்டு ஏதேதோ குப்பைகளை கொட்டும் தளங்களுக்கு மத்தியில் சரியான புரிதலோடு, சரியான பாதையில் உளவியல் பதிவுகளை அழைத்துச்செல்கிறது தளம்.
http://dbs1205.blogspot.in/2013/12/1.html மருத்துவர் திருமிகு பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதுகின்ற வலைப்பூ. அவரது தெரிந்த அனுபவமும், தெளிந்த கல்வியறிவும் மனோத்தத்துவத்தை  சிறப்பாக விளக்கப் பயன்பட்டிருக்கிறது.
மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம்
http://www.suthanthira-menporul.com/ சுதந்திர மென்பொருள் தளத்தின் திருமிகு மென்பொருள் பிரபு அவர்கள் வலைதளங்களில் இயங்கவும், மேன்படுத்தவும், பயன்பாட்டை எளிமைபடுத்திக்கொள்ளவும் பல மென்பொருட்களை குவித்து வைத்திருக்கிறார்.
http://kaninithakaval.blogspot.in/ தமிழ் கணினி கடவுச்சொல் மறந்து போனால், ட்ரூபால் நிறுவுதல் எனஅரிச்சுவடி முதல் முனைவர் பட்டம் வரை மென்பொருள் தகவல்கள் கொட்டிக்கொடுக்கும் தளமாக இது திகழ்கிறது.
http://dev.neechalkaran.com/p/naavi.html#.VgbfJ32ZW9c திருமிகு நீச்சல்காரன் எனும் ராஜாராம் அவர்களுது பல இணைய சாதனைகளில் மேலும் ஒரு மகுடமாக சந்திப்பிழை திருத்தி(நாவி) மற்றும் சொற்பிழை திருத்தி வாணியும் திகழ்கிறது. http://dindiguldhanabalan.blogspot.com/search/ திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களது இந்த வலைப்பூ எப்படி வலைப்பூ தொடங்குவது என்பதில் தொடங்கி, அதனை மேம்படுத்தவும், பயன்பாட்டை எளிமைப்படுத்தவும், அதிக எண்ணிகையிலான பார்வையாளர்களை பெறும் உத்திகள் என பல அற்புதத் தகவல்களை மிக எளிமையாக, புரியும் விதமாக  கற்றுத்தருகிறது http://poocharam.net/viewtopic.php?f=27&t=2448 பல தொழில்நுட்பப் பதிவர்கள் இணைந்து பணியாற்றும் இந்த தளம், தமிழில் இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ள, அறிந்துகொள்ளவேண்டிய தளமாகும்.
http://rajamelaiyur.blogspot.com/2013/11/free-soft-ware.html என் ராஜபாட்டை எனும் தளத்தில் இயங்கும் திருமிகு ராஜா அவர்களது பதிவுகளில் எளியமுறையில் பல மென்பொருட்களை தரவிறக்கிக்கொள்ள முடிகிறது. இந்தத்தளம் கணினி பயன்பாட்டுக்கு மட்டும் அன்றி முழுமையான இணையப் பயன்பாட்டுக்கு மிக அவசியமான பல தகவல்கள்தருகிறது.
இந்த தளங்கள் மட்டுமல்லாது எது கேட்டாலும் கொட்டிக்கொடுக்கும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவும், மேற்கூறிய அனைத்துத் தலைப்புகளிலும் தமிழ் மொழி விழியங்களும் நிறைந்து கிடைக்கும் youtube பும் நிகழ்கிறது என்றால் தான் இந்த பட்டியல் சற்றே நிறைவு பெரும். இன்னும் பல தளங்கள் இருந்தாலும் அவற்றில் பல்சுவை பதிவுகளும் ஏராளம் என்பதாலும், சினிமா, அரசியல், கவிதை, இலக்கியத்தளங்கள் அறிமுகம் தேவையற்ற கொஞ்சம் கூடுதல் வெளிச்சத்தில் இருப்பதாலும் அவற்றை தொகுக்கவில்லை. 
  இந்த தொகுப்புக்கான வேலையில் தெரியவந்த ஒன்று, மிகவும் பயனுள்ள, அருமையான தளங்கள் பல அண்மையில் இயங்காமல் உள்ளன.  அவற்றுக்கு உரிய அங்கீகாரமும், பொருளுதவியும் தேவைபடுகின்றன என தோன்றுகிறது. இந்த ஆண்டு பதிவர் சந்திப்பு விழாவோடு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து போட்டிகள் அறிவித்துள்ளது தமிழ் இணையப் பயன்பாட்டாளர்களுக்கு புத்துணர்வும், புதிய நம்பிக்கையும் விதைத்திருக்கிறது. மேலும் இவர்களை போன்ற பதிவர்கள் தன் பதிவுகளை தொகுத்து நூலாய் வெளியிட பொருளாதாரம் தடுக்கலாம். அதனை மின்நூலாக வெளியிட்டாலோ அவர்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரமோ, பணம்பயனோ கிட்டுவதில்லை.  மின் நூல்கள் காகிதப் பயன்பாட்டை குறைப்பதை மூலம் சுற்றுபுரத்திற்கும் துணை செய்யும் என்பதிலும் ஐயமில்லை. எனவே இத்தகு வலைப்பூக்களுக்கும் அல்லது மின் நூல்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் அறிவிப்பட்டால் அது இணையpப்பயன்பாட்டில் தமிழுக்குச் செய்யும் அருந்தொண்டாக அமையும். இதன் மூலம் நாமும் திக்கெட்டும் தமிழ்க்கொடி பறந்திட வழிசெய்வோம் என்பதும் உறுதி!!
 வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது. (வகை 1)  கணினியில் தமிழ் வளர்ச்சி
இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்

12 கருத்துகள்:

  1. அன்புச் சகோதரி,

    ‘துறைதோறும் இணையத்தமிழ்!’ எல்லாத் துறைகளையும் விரிவாக விளக்கி அருகருகில் அதன் வலைத்தள முகவரியும் கொடுத்து அருமையாக கட்டுரை இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.



    பதிலளிநீக்கு
  2. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. அம்முக்குட்டி எமக்கு அவசியமான தளங்களை எல்லாம் தொகுத்தளித்தமைக்கு நன்றிம்மா ! போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. ஒரு கல்லுல இரண்டு மாங்காய் அக்கா. வலைத்தளங்களையும் அறிமுகம் படுத்தியாச்சு. போட்டிக்கு கட்டுரையும் எழுதியாச்சு. கடின உழைப்பு தெரிகிறது. வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமா இருக்கே வாழ்த்துகள்டா

    பதிலளிநீக்கு
  6. நல்ல முயற்சி. வலைச்சரம்!

    வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. துறை போகிய வலைத்தளங்களை அறிமுகம் செய்ததற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பல தளங்களை இங்கே குறிப்பிட்டது நன்று. எனது தளமும் இங்கே இருப்பதில் மகிழ்ச்சி....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அழகான தொகுப்பு மைதிலி... என்னுடைய தளமும் பயனுள்ள தளங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. வெற்றிபெற என் வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு
  10. அடடா கொட்டிக்கிடக்கிறது வலைத்தளங்கள் ஏதாவது
    சந்தேகம் என்றால் மைதிலியின்வலைப்பக்கம் வாருங்கள்,
    எத்தனை தேடுதல்கள்டீச்சர்...........!!!! வெற்றிபெறவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. ஆஹா! எப்படிப்பட்டத் தேடல்! அருமை டியர்..வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  12. என்னுடைய தளமும் பயனுள்ள தளங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது.

    பதிலளிநீக்கு