செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கொஞ்சம் ENGLISH !!-Part iv

இதோ மீண்டும் English class.
கம்யுனிசம் ,மார்க்ஸ்சிசம் தெரியும். இன்னும் கொஞ்சம்  இசம் தெரிஞ்சுக்கலாமா?

Malapropism -Mal-approp(root word) என்கிற  பிரெஞ்சு வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் இதனை பரவலாக பயன்படுத்துபவர்கள் R.B.Sheridanனின் The Rivals நாவலை தான் மேற்கோள் காட்டுவார்கள்.இந்த நாவலில் மாலப்ராப் எனும் பெண் பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவாள். நாகேஷ் கூட ஒரு எம்.ஜி.யார் படத்தில் மேனேஜர் என்பதை டேமேஜர் என்பாரே அது போல. இப்படி அவசரத்தில் தப்பா பேசுவது மாலப்ரோபிசம் என்று அந்த ஷெரிடன் புகழ் பெற்ற நாவலால் பெயர் பெற்றது.
எ.கா My sister has extra century(sensory) perception.

Sadism -பிறரின் துன்பத்தால் அல்லது கொடிய நிகழ்வை கண்டால் மகிழ்ச்சி அடையும் மனநிலை. sad- துன்பம்இதுதான் ரூட் வேர்ட் அப்டின்னு நினைப்போம். ஆனால் Marquise de Sadeகிறவர் தன் கதைகளில் தனது  கஷ்டத்தை ரசித்துரசித்து எழுவாராம். So இந்த வார்த்தையை அவர்க்கு டெடிகேட் பண்ணிடாங்க. என்ன ஐ நோ,ஐ நோ ரகுவரன் நினைவுக்கு வருகிறாரா? கரெக்டு அந்த கேரக்டர் ஒரு சாடிஸ்ட்.

Masochism -ரூட் வோர்ட் அதே அதே. Masoch என்கிற ஒரு ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளர் தன்னோட துயரத்தை அனுபவிச்சி that means தானே ரசிச்சு எழுதுவாராம். அதனால் தன்னை விரும்பி தண்டனைக்கு உட்படுத்திகிறவங்கள மசகிஸ்ட் னு சொல்ல அரம்பிசுட்டோம்.
அது மொக்க படம்னு தெரிஞ்சுகிட்டும் டிக்கெட் புக் பண்ணுறியே. நீ என்ன masochistஆ?எ .கா  Still worrying about it? Are you some type of masochist?

Enthusiasm -அதாங்க ஆர்வகோளாறு.ரூட் வேர்ட் ரொம்ப ஆச்சர்யமானது.en+theos
possessed by god என்று அறிஞர் Platoவால் பயன்படுத்தப்பட்ட சொல். இந்நாளில் பெரு விருப்பம் எனும் அர்த்தத்தில் பயன்படுகிறது. இந்த  emotionனோட சிறப்பு என்னவென்றால் மகிழ்ச்சி, துக்கம் போல இறந்தகால தொடர்பு இல்லாமல் இந்தநோடியில் உங்க moodஐ குறிக்கும்.
எ.கா She never lost her enthusiasm for teaching(மைதிலியோ!?). ஒரு என்து(enthu)ல எழுத ஆரம்பிச்சேன். படிக்கையில டர் ஆகுதா?       

உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம் னுஅப்டினா சொல்றிங்க? ரைட்டு அபீடாகுறேன். படிச்சுட்டு கமென்ட் களத்தில் Start the music!
 

பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று 








  

26 கருத்துகள்:

  1. எனக்கு Enthusiasm - மட்டும் தான் தெரியும் (ஏன்னா நான் எப்பவுமே கொஞ்சம் ஆர்வக்கோளாறு உள்ள பயபுள்ள)
    நீங்க என்னனமோ சொல்றீங்க?
    "//உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம்//" - இந்த மாதிரி ஈஸியா விளங்குற மாதிரி சொன்னீங்கன்னா, என் மண்டையில ஏறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "//உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம்//" - இந்த மாதிரி ஈஸியா விளங்குற மாதிரி சொன்னீங்கன்னா, என் மண்டையில ஏறும்.
      இப்படியே சொன்னா !? ஏன் இந்த கொலைவெறி ?
      வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ .

      நீக்கு
  2. இங்கு நீங்கள் விளக்கியுள்ள சொற்கள் அனைத்துமே எனக்கு புதிய சொற்கள் தோழி. அறிந்து கொண்டேன். அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முகில்

      நீக்கு
  3. எளிமையான அருமையான விளக்கம்
    பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரமணி சார்

      நீக்கு
  4. பதில்கள்
    1. DD அண்ணா ,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. malapropism, masochism அறிந்துகொண்டேன்..பகிர்விற்கு நன்றி மைதிலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கிரேஸ்

      நீக்கு
  6. கிளாமரான டீச்சர் கிராமர் சொல்லி தருவாங்கன்னு பார்த்தால் Tenseக்கு அப்புறம் இசம் போட்டு நம்மளை டென்சன் ஆக்குறாங்கப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாபிக் சொல்லுங்க,ட்ரை பண்றேன் சகோ. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  7. இனிய வணக்கம் சகோதரி...
    இசத்தில் ஆங்கிலத்தின் மொழியாளுமை
    மிக அழகான விளக்கம் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  8. //உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம் னுஅப்டினா சொல்றிங்க? ரைட்டு அபீடாகுறேன். படிச்சுட்டு கமென்ட் களத்தில் Start the music!//

    எல்லா ism மும் அருமை! நாங்களும் enthusiasm நு எழுதனும்னு நினைச்ச வேளையில் சொக்கன் அவர்கள் எழுதி விட்டதால் அதையே இங்கு சுட்டி... நாங்களும் சொல்ல விழிகின்றோம்

    பகிர்வு அழகு....நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிலீஷ் சார் சொன்னா சரிதான். தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
  9. பல புதிய தகவல்கள். இப்படி வேரிலிருந்து வார்த்தைகளை அறிந்துகொள்ளும்போது எளிதில் மறக்கமுடியாது. நன்றி மைதிலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மேடம்

      நீக்கு
  10. 'உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம் '
    இது புதுசா இருக்குதே... உண்மயா இருக்குமோ

    அனால் எல்லமுமே தெரிந்து கொள்ள வேண்டியவை...
    good post..

    இது என்னுடைய வலைப்பக்க முகவரி... நேரமிருந்தால் வந்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் !
    http://pudhukaiseelan.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்கிறேன் சகோ.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்.

      நீக்கு
  12. சகோதரிக்கு வணக்கம்
    தெரியாத பல புதிய தகவல்களைத் தங்கள் பாணியில் (அழகான நடை) அனைவரும் அறிய தந்தமைக்கு அன்பான நன்றிகள். அனேகமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழி படைப்புகளில் கலக்கும் பதிவர் நீங்களாகத் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொடருங்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் தானே சகோ?
      தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  13. ஷேக்ஸ்பியர் மச் அடோ அபௌட் நத்திங் லேயும்
    மலப்ரொபிசம் ஏகத்துக்கு இருக்கு.

    மச் அடோ எனக்கு இரண்டாவது வருடம் கல்லூரியில் படித்தேன்.in 1957
    அதை ப்ரொபசர் சிக்வீரா மலா ப்ரொபிச்ம் என்றால் என்ன என்று விவரித்தபோது ஒன்றும் புரியவில்லை. பின்னால் தான் அதை பற்றி நன்றாக அறிய வாய்ப்பு கிடைத்தது.
    twelfth night also நமக்கு நிறைய இடத்துலே இந்த மலப்ரொபிச்ம் இருக்கிறது. தெரியறது.
    நிற்க.
    sadism is a little away from being sadistic which is gaining a presumed pleasure out of it.
    hope u will illustrate it.

    BTW, have u read WAITING FOR GODAT . BY T.S.ELIOT ?
    u get a lot there.
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரி சார் ஷேக்ஸ்பியர் பாணியில் சொல்வதென்றால் that's dogberryism .
      ஏனென்றால் மச் அடோ வில் officer Dogberry இப்படி பேசுவார். ஆனால் ரெண்டையும் சொன்ன முதல் முறை படிக்கிறவங்களுக்கு கன்பியுஸ் ஆகுமின்னு தவிர்த்துவிட்டேன்.exam காக படித்த T.S.ELIOTடை மற்றும் ஒரு முறை படித்துவிடுகிறேன்.

      நீக்கு