செவ்வாய், 23 டிசம்பர், 2014

என் வாசலில்.....


                என்ன இப்படி திடீர்னு கோலம் எல்லாம் அப்புடீன்னு தோணுதா சகோஸ் அண்ட் சகாஸ்???  ஒரு வாரமாஇந்த படந்தான் ஓடிக்கிட்டிருக்கு என அதிகம் பேர் பார்த்த பதிவுகள் பட்டியல் வலப்பக்கம் இருக்கு பார்த்தீர்களா......



                       கோலம் பற்றிய  என் அனுபவத்தை சொன்ன ஒருபதிவை இந்த மார்கழி  தொடங்கியதில் இருந்து நிறைய பேர் பார்த்திருகிறார்கள். எனக்கு கோலம் வேண்டாம் எனும் நண்பர்கள் இங்க சொடுக்கி அந்த பிளாஸ்பேக் பார்க்கிறதுன்ன பார்க்கலாம். so இந்த முறை நட்புகளை ஏமாற்றாமல் என் வீட்டில் நான் வரைந்த கோலங்களை இந்த மாதத்தில் அவ்வவ்போது (இந்த வார்த்தையை டைப் பண்ண எம்புட்டு கஷ்டமா இருக்கு:(( பகிர்ந்து கொண்டு ஆதி அண்ணி மற்றும் வெங்கட் அண்ணாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடிவு செய்துள்ளேன்.







மார்கழியை வரவேற்க வரைந்த முதல்ரங்கோலி:)








இந்த மயில் வரைந்த அன்று மழை வந்துவிட்டது. so இப்போ பேப்பர்ல:)





வெள்ளி, செவ்வாய் இப்படி தான் வரையும்னு அம்மா சொல்லித்தந்தாங்க






இது  கிறிஸ்துமஸ் காக என் தோழிகள் பயன்படுத்திக்க ஸ்டார்ஸ்:)





ஒரு சோம்பலான நாளில் வரைந்த சின்ன ரங்கோலி;)


32 கருத்துகள்:

  1. ஆஹா...அழகா..இருக்கு கோலங்கள். இதை பார்க்கும் போது ஏக்கமா இருக்கு...இங்கு போடமுடியாதே..அதான்...அங்கு இருக்கும் போது விதவிதமா போடுவேன். 5 கோலங்களும் அசத்தல் சகோ. பாராட்டுக்கள். என் பக்கம் எட்டிப்பார்க்க....தாய்வீடு அழைக்கிறது


    பதிலளிநீக்கு
  2. ஆஹா,

    முதல் கோலம் வெள்ளிக்கிழமை வெள்ளையம்மா போட்டது மாதிரி இருக்கு

    இரண்டாவது கோலம் மறு வெள்ளிக்கிழமை வள்ளி மயில் போட்டது மாதிரி இருக்கு (மழை வந்தது உண்மையாகத்தான் இருக்கனும்)

    மூன்றாவது கோலம் செவ்வாய்க்கிழமை செல்லம்மா போட்டது மாதிரி இருக்கு

    நான்காவது கோலம் வியாழக்கிழமை நாகம்மா போட்டது மாதிரி இருக்கு

    ஐந்தாவது கோலம் புதன்கிழமை ஐயன் பெருமாள் போட்டது மாதிரி இருக்கு

    இருப்பினும் எல்லாமே ஸூப்பர் காரணம் ஏதும் அலங்கோலமாக இல்லை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பொண்ணுங்கலாம் யாருண்ணா???? ஹா....ஹா...ஹா....மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  3. அழகான கோலங்கள்..
    கண்களைக் கவர்கின்றன..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க மார்கழி கோலம் வேற ரேன்ஜ் இல்லையா அய்யா:)
      மிக்க நன்றி!

      நீக்கு
  4. அழகான கோலங்கள்! புள்ளிக்கோலம் இடத் தெரிந்தவர்களுக்கு ரங்கோலியும், ரங்கோலி இடத் தெரிந்தவர்களுக்குப் புள்ளிக்கோலமும் தெரியாது. உங்களுக்கு இரண்டும் தெரிந்திருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  5. கோலத்தில் கலர் மட்டுமில்லே ,உங்க பொறுமையும் தெரியுது :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  6. இங்கு விறைக்கும் குளிரில் கோலம் போட முடியாத போதும், உங்களது கோலங்களை கண்டதும் மனம் மிகவும் மகிழ்ச்சி கொண்டது. அழகான கோலங்கள்,எடுப்பான வண்ணங்கள்.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால என்ன ?? இனி உங்களுக்கும் சேர்த்து கோலம் போட்டா போச்சு:) நன்றி தோழி:)

      நீக்கு
  7. ***என்ன இப்படி திடீர்னு கோலம் எல்லாம் அப்புடீன்னு தோணுதா சகோஸ் அண்ட் சகாஸ்??? ஒரு வாரமாஇந்த படந்தான் ஓடிக்கிட்டிருக்கு என அதிகம் பேர் பார்த்த பதிவுகள் பட்டியல் வலப்பக்கம் இருக்கு பார்த்தீர்களா...***

    உங்களுக்கு காமெடி கலந்த எழுத்து சரளமா வருது! :))))
    -------------------

    அடடா உங்க வீட்டு முற்றம் கோலம் நிறைந்து ரொம்ப நல்லாயிருக்கு! மார்கழி மாதம்னா பக்கதிலே லவ்ட் ஸ்பீக்கர்ல ஒரே பக்திப்பாடல்களா ஒலிக்குமே? "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்" அப்படி இப்படினு? ஒரு வேளை உங்க நவீன இந்தியாவில் நான் சொல்லும் " இந்த மார்கழி சூழல்" எல்லாம் இப்போ இல்லையா? :)

    ரொம்பத்தான் முன்னேறிட்டிங்கப்பா நீங்க எல்லாம் உங்க "செல் இந்தியாவுல"! நல்லாயிருங்க! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thanks பாஸ்:)
      ---------------------
      இது கொஞ்சம் posh ஏரியா...தப்பித்தவறி என் மாமனார் அந்த காலத்திலே வாங்கிவிட்ட இடத்தில எங்கள மாதிரி ஆட்கள் குறைவு..எக்ஸ் மினிஸ்டர்...டாக்டர்ஸ் , பிசினெஸ் பீபள் இப்படி :) அப்புறம் பல கோவில்கள் சூழ இருக்கும் பெரியார்நகர் என்னங்க ஏரியா:)))))
      ஆனாலும் அதிகாலை பக்கத்து த்தெரு பாடல்கள் மெல்லிசாய் காதில் விழவே செய்கின்றன:) இன்று காலை """காலமெல்லாம் காத்திருந்தாலும் காணக்கிடைக்காதவள் "எல்.ஆர்.ஈஸ்வரி:) நீங்க அந்த பழைய போஸ்டை
      படிக்கலையா?? there you can get something like tat..
      --------------
      ** "செல் இந்தியாவுல"! * அப்டின??
      **நல்லாயிருங்க! :)** blessings க்கு தேங்க்ஸ் வருண்:)

      நீக்கு
  8. கண்ணிற்கும் மனதிற்கும் நிறைவையும் மகிழ்வையும் தரும்
    மகிழ்நிறைக் கோலங்கள் மிக அருமை!..:)

    ஒவ்வொன்றும் பளிச் பளிச் என வர்ணமாய் ஜொலிக்கிறது தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஆஹா, கண்ணைக் கவரும் கோலங்கள். அழகு. அருமை சகோ.
    "//ஒரு சோம்பலான நாளில் வரைந்த சின்ன ரங்கோலி//" - இதைப் பார்த்தால் சோம்பலாக நாளில் வரைந்த கோலம் மாதிரியே தெரியலையே...

    பதிலளிநீக்கு
  10. அத்தனையுமே அழகா இருக்கு. கண்களைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. ஆகா...! அட்டகாசம் போங்க...! பொறுமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. அட அட அட சகலகலாவல்லியோ எல்லாமே அசத்தல் தானா அழகோ அழகுடா அம்மு!
    அசத்து அசத்து புது வருட வாழ்த்துக்கள்ம்மா .....!

    வண்ணக்கோ லம்வரைந் தேவளர்த்தாய் நீதிறனை
    எண்ணுந்தோ றும்சித்தி ரங்கள் எளிதாய்வந்
    தேசேரா தேசிறப்பாய் கோலமும் தேன்கவியும்
    தேசம்வி யக்குமே காண !

    பதிலளிநீக்கு

  13. நீங்க சகலகலா வில்லி சாரி வல்லி என்பதை அறிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  14. போகிற போக்கில் இந்த தளத்தில் நீங்க கற்ற வித்தையெல்லாம் இறக்கி விட்டுடூவிங்க போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  15. நீங்க கோலம் அழகாக போட்டு இருக்கலாம் ஆனா அதை அழகாக படம் பிடித்து அதை இங்க போட உதவிய எங்க அண்ணைன் பேரை போடாமல் விட்டது குற்றமே

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள சகோதரி,

    வாசலில் வண்ணக்கோலங்கள்...
    வாலிபத்தில் எண்ணக்கோலங்கள்...
    வானத்தில் வின்மீன்கோலங்கள்...
    மார்கழியில் பனியின் கோலங்கள்...
    மாதமோ ஆண்டின் கோலங்கள்
    மயிலின் சிறகில் கோலங்கள்
    மயிலே வரைந்த கோலங்கள்...!
    இராகத்தில் பாட்டுக் கோலங்கள்
    சோகத்தில் அழுகைக் கோலங்கள்
    சுகத்தில் மகிழ்ச்சிக் கோலங்கள்
    பஞ்சில் ஆடை... கோலங்கள்
    நெஞ்சில் அழியாத கோலங்கள்...
    அழகான வண்ணக் கோலங்கள்...
    அதனால்...
    என் எண்ணக் கோலங்கள்...!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. முதல் ரங்கோலி, கிறிஸ்துமஸ், சின்ன ரங்கோலி மூணுமே கண்ணை அசைய விடலைம்மா தங்கச்சி... பின்னிட்ட....

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு