செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றுத்தாள் புன்னகை








உனக்கான கவிதைகளில்
ஒரு பந்தயக்குதிரையாகவும்
உன்னோடான தருணங்களில்
நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள்


ஒரு புன்னகை தெளிக்கிறாய்
நமத்துப்போய்விடுகின்றன
நகரத்தின் எல்லா பரபரப்புகள்

இத்தனை முன் தயாரிப்புகளும் 
குறிப்புகளுமாய் கிளம்பியும்
சோதிடக்கிளி போல்
நான் சொல்லெடுக்கத் தடுமாற
இமை தட்டிப் புன்னகைக்கிறாய்
வெறும் கைத்தட்டலுக்கே சிலிர்த்துக்கொள்ளும்
என் சொற்கள் ஏனோ
வெடவெடத்து ஒண்டிக்கொள்கின்றன

தடுமாறும் குழந்தைக்கு
விரல் நீட்டும் தாயின் பரிவோடு
புருவம் உயர்த்தி என்னவென்பாய்
சொற்களை எல்லாம் கசக்கிப்போட்டுவிட்டு   
வெற்றுத்தாளாய் ஒரு புன்னகை நீட்டுகிறேன்!!

39 கருத்துகள்:

  1. "உனக்கான கவிதைகளில்
    ஒரு பந்தயக்குதிரையாகவும்
    உன்னோடான தருணங்களில்
    நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள் "

    ஆஹா ! அற்புதம் ! மிகவும் இரசித்தேன்.

    பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  2. தங்கமங்கை உங்கள் கவிதை மிக அருமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ! நீங்க சீரியசாவே அந்த பட்டம் கொடுத்து கலாய்க்கிறீங்களே:))
      மிக்க நன்றி சகா!

      நீக்கு
  3. உங்களுடைய ’வெற்றுத்தாளில்’ நிறைய இருப்பதாகத் தெரிகிறது!
    அந்த இடத்தில் ‘நமுத்துப்போய்விடுகின்றன/ நகரத்தின் எல்லா பரபரப்புகளும்’
    என்றிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது
    பொதுவாக நல்ல கவிதை;வாழ்த்துகள். மேலும் எழுதுக.

    -ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  4. செம சகோ, அதுலயும் அந்த கடைசி பாரா சான்ஸே இல்ல.. கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  5. வெற்றுத்தாள் புன்னகை கவிதையாய் புன்னகை பூக்கிறது.
    அருமை சகோதரி

    பதிலளிநீக்கு
  6. வெற்றுத்தா ளில்வரைந்த விந்தைக் கவி!உன்றன்
    சொற்தேனிற் குண்டோஓர் ஒப்பு!

    என்னவொரு கற்பனை! சொல்வளம்!
    திகைத்து நிற்கின்றேன்! மிகச் சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பின்னூட்டத்திலேயே கவிதை பாட எனக்கு தெரியாதே:) மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  7. சொற்களைக் கசக்கிப்போட்ட
    வெற்றுத்தாள் புன்னகையில்
    பிறந்த கவிதை
    பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்தோட
    பின்னுட்டம் என்ன எழுத
    என்
    விசைப்பலகையைத் தட்டிக்கொண்டிருப்பதென்னவோ
    அந்த நொண்டிக்குதிரைகள் தான்!
    நானெல்லாம் இன்னும் வெகுதூரம் வர வேண்டும் என்பதுமட்டும் தெரிகிறது!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! எசப்பாட்டு போல இது எசக்கவிதையா!!!
      நானெல்லாம் இன்னும் வெகுதூரம் வர வேண்டும் என்பதுமட்டும் தெரிகிறது!**
      திருச்சியில் இருந்து புதுகை வர வெகுதூரம் இல்லையே இந்த தங்கையின் வீடு:))

      நீக்கு
  8. என்னப்பா இது!!!? வெற்றுத்தாள் அதிகம் பேசுகின்றாதே! அதுவும் அந்த முதல் நான்கு வரிகளும், இறுதி வரிகளுமாய்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. wow ....உனக்கான கவிதைகளில்
      ஒரு பந்தயக்குதிரையாகவும்
      உன்னோடான தருணங்களில்
      நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள் "

      நொண்டிச் சாக்கு எல்லாம் சொல்லக் கூடாது. இது அதிக பிரியத்தினால் வந்தது என்று புரிகிறது.

      நான் சொல்லெடுக்கத் தடுமாற
      இமை தட்டிப் புன்னகைக்கிறாய்
      வெறும் கைத்தட்டலுக்கே சிலிர்த்துக்கொள்ளும்
      என் சொற்கள் ஏனோ
      வெடவெடத்து ஒண்டிக்கொள்கின்றன

      என்னம்மு இது வெற்றுத் தாள் சிரிப்பு மாதிரி தெரியலையே ஆத்மார்த்தமாக வந்த சிரிப்பு என்று எனக்கு செய்தி சொல்கிறது இக் கவிதை . ஹா ஹா... அருமையோ அருமைடா அம்மு எங்கேயோ போயிட்டீங்கம்மா. தொடர வாழ்த்துக்கள் .....!

      நீக்கு
    2. நன்றி இனியாச்செல்லம் :)) நன்றி சகாஸ்:))

      நீக்கு
  9. நல்லாப் படித்துவிட்டு, கவிதை நல்லா புரிந்தவுடன் பின்னூட்டமிடுகிறேன், மைதிலி :)

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை. பாராட்டுகள் மைதிலி.

    பதிலளிநீக்கு
  11. இமைதட்டி புன்னகைக்கிறான்

    புருவம் உயர்த்தி என்னவென்கிறான்

    இதுக்கே சொற்களை எல்லாம் கசக்கி எறிந்துவிட்டு வெற்றுத்தாள் புன்னகையா?

    Girls go crazy when they are in love, I guess! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஆண் பெண்ணுக்கு எழுதியதாவும் எடுக்கலாம் வருண், coz according to ஷேக்ஸ்பியர்"The lunatic, the lover and the poet
      Are of imagination all compact" :))) so, படிக்கத்தொடங்கும் போதே எந்த முன்முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். ஓகே வா?

      நீக்கு
    2. இல்லையே.. அப்ப்டி முடிவுக்கு வ்வரவில்லையே! :) நான் எளிதாக அந்த முடிவுக்கு வரவில்லை. பல மணிநேரம் இந்த "பால் பற்றி" யோசித்தேன்.

      ஏன் யோசிக்கணும்? ஆண் பெண் சரி சமானம்தான் என்றாலும் ஆண் வேறு பெண் வேறு- அகிலனின் பாவை விளக்கில் படிச்சதுனு நினைக்கிறேன்.

      It is important for me to make an assumption who it is ? A girl or a boy? Boys are stupid but girls are crazy! Here you go! I got the answer! Now I go back and read imagining it is a "girl's poem"! Not because it was written by mythily, ஒரு பொண்ணு. It is because a "crazy girl" fits better than "stupid guy" here.

      I cant write comments ஏனோ தானோ என்று. எனக்கு எல்லாமே புரியணும். யார் எழுதுவது? யாருக்காக எழுதுவது? மறுபடியும். இது என் உலகில் நான் "வாழ்வது" "நினைப்பது, இண்டெர்ப்ரெட்"!

      செய்வது. கவிஞை உலகு வேறு என்பது தெரியும். அவர் சிந்தனை என் சிந்தனையாக இருந்து இருக்கணும்னு அவசியம் இல்லை. :)))

      நீக்கு
    3. ஓகே புரியுது. சமாதானம்......சமாதானம்:)))) good night/ morning வருண் :-)

      நீக்கு
  12. //உன்னோடான தருணங்களில்
    நொண்டிக்குதிரையாகவும்//

    //நான் சொல்லெடுக்கத் தடுமாற
    இமை தட்டிப் புன்னகைக்கிறாய்//

    //புருவம் உயர்த்தி என்னவென்பாய்
    சொற்களை எல்லாம் கசக்கிப்போட்டுவிட்டு
    வெற்றுத்தாளாய் ஒரு புன்னகை நீட்டுகிறேன்!!//

    அழகாச் சொல்லிட்டீங்களே..காட்சி கண்முன் விரிய ரசித்தேன்...அருமையோ அருமை டியர்
    இதைப் படித்த பின்னும் நான் எழுதவேண்டுமா என்று எண்ணவைக்கிறது .. :)
    வாழ்த்துக்கள் டியர்!

    பதிலளிநீக்கு
  13. சோதிடக்கிளி இப்படி வெற்றுத் தாளை எடுத்து கொடுக்கலாமா )
    த ம 8

    பதிலளிநீக்கு
  14. அன்புச்சகோதரி,

    வெற்றுத்தாள் புன்னகையென்று
    உற்றுப்பார்த்தால் ...
    “புன்னகை பூக்கும் பூனைகள்“
    ‘சிற்பி’யாய்...
    சோதிடக்கிளி போல
    சற்றுமுற்றும் பார்ப்பது புரிகிறது...!
    தடுமாறும் குழந்தைக்கு...
    தாயின் பரிவு புரிகிறது...!

    அருமை.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா அது கவிஞர் சிற்பியின் ஒரு கவிதையின் சாயலில் இருப்பாதாக சொல்லுகிறீர்கள் என நினைகிறேன்:) உண்மையில் இப்படியான சாயல்களை தவிரவே நான் வெகுவாக கவிதை வாசிப்பை குறைத்துக்கொள்கிறேன்:) நன்றி அண்ணா!

      நீக்கு
    2. அன்புச்சகோதரி,

      சிற்பி கவிதையின் சாயல் இருப்பதாக நான் சொல்லவேயில்லை. கவிதையில் புன்னகை என்று வந்ததால்...நான் S.I.T. Polytechnical (1983-1984)திருச்சியில் படிக்கும் பொழுது சிற்பியின்‘ புன்னகை பூக்கும் பூனைகள்’ கவிதை புத்தகம் வாங்கினேன். அதில் ‘புன்னகை’ என்ற தலைப்பு நினைவுக்கு வர அதை எழுதினேன தவிர மற்றபடி தங்களின் கவிதையில் எந்தச் சாயலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
      கவிதை அருமை. வாழ்த்துகள்.
      சம்மந்தமே இல்லாமல் அதை எழுதியதற்காக மன்னிக்கவும். தாங்கள் கவிதை வாசிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
    3. அண்ணா மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை அண்ணா! ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க:((

      நீக்கு
  15. இந்த வெற்றுத்தாள் சொல்லாமல் சொன்னது பல அர்த்தம்.
    மிக அருமையான கவிதை...!வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ! இது குட்டி பையன் மணிகண்டன் ரொம்ப சின்ன குட்டியா இருந்தப்போ எடுத்த போட்டோவோ!! ரொம்ப அழகு:) மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  16. கவிதையின் முதல் பத்தியே படிப்பவரைக் கவர்ந்து அடுத்த பத்திக்குப் போகுமுன் அசைபோட வைக்கவேண்டும் என்பது என் கருத்து. உன் கவிதை அந்தவகையில் “நச்“னு வந்திருக்கு டா!
    (நான் முதலில் சொல்லிவிட்டால் அண்ணன் இப்படித்தான் புகழ்வான் என்னும் பழி வந்துடக் கூடாதேனுதான் முன்பே படித்துவிட்டாலும் உடனே எழுத மனமின்றி இப்போது எழுதுகிறேன். கடைசி வரியில் மொத்தக் கவிதையின் சுருக்கத்தையும் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டியதுபோல்” அமைத்தது அருமை பா! வெற்றுத்தாள் ஏகப்பட்ட செய்திகளுடன் இருக்கிறதே! “வெள்ளைக் காகிதம் / என் விலாசமிட்டு வந்தபோது / ஒன்றும் புரியாமல் நான் / ஒருமுத்தம் பதிக்கையிலே/ உப்புக்கரித்த சுவை / உன் எண்ணத்தைச் சொன்னதடி“ என்னும் -எழுதியவர் பெயர் தெரியாத ஒரு கவிதை என்னை வெகுநாளாய்த் துரத்துகிறது. இப்போது இந்த வெற்றுத்தாள்.. ஆனாலும் தலைப்பு, கவிதையளவுக்கு இல்லை்யோ என்று ஒரு சந்தேகம்... மொத்த்த்தில் கவிதை ஜெயிச்சுடுச்சுப்பா... தொடர்க.

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி அண்ணா! எனது புதிய கவிதைஉப்புமாவை பற்றி நீங்கள் ஏதேனும் சொல்லுவீர்கள் என காத்திருக்கிறேன் அண்ணா! உப்புமா ஆறிப்போவதற்குள் சுவைத்து பதம் சொன்னால் மகிழ்வேன் அண்ணா! நிறைய பேருக்கு புரிந்ததானே தெரியல:((

    பதிலளிநீக்கு